பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
கருத்து சுதந்திரம் என்ற பெயரில், ஜாதி மோதலை உருவாக்கும் வகையில், திரைப்படங்கள் தயாரிப்பது, வீண் பிரச்னையை கிளப்பத் துவங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில், சமீப காலமாக, கருத்து சுதந்திரம் என்ற பெயரில், சர்ச்சையான படங்களை இயக்குவதிலும், தயாரிப்பதிலும் சிலர் ஆர்வம் காட்டுகின்றனர். சர்ச்சைகுறிப்பிட்ட ஜாதி பற்றி பேசுவதாக சொல்லப்படும், கர்ணன் என்ற படத்தில், தனுஷ் நடித்துள்ளார். தாணு தயாரிக்கும் இப்படத்தை, மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.இப்படத்திற்கு சில ஜாதி அமைப்புகளிடம் இருந்து, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படம் வெளியானால், தென் மாவட்டத்தில் கலவரம் வெடிக்கும் என்றும், அவர்கள் எச்சரிக்கின்றனர். பழைய சம்பவத்தை, மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டும்போது, தேவையற்ற சர்ச்சை உருவாகும் என்கின்றனர்.படத்திற்கு எதிர்ப்பு இருந்தாலும், இறுதி கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதற்கு முன், மாரி செல்வராஜ் இயக்கிய, பரியேறும் பெருமாள் படம், பலரது பாராட்டையும், வரவேற்பையும் பெற்றாலும், சில வரம்பு மீறிய காட்சிகளுக்கு கண்டனமும் கிடைத்தது.
எதிர்ப்பு
அதேபோல, 1955ம் ஆண்டு எழுதப்பட்ட, ஹிந்து திருமணச் சட்டம் குறித்து பேசியுள்ள, திரெளபதி படத்தை, மோகன் இயக்கியுள்ளார். இப்படம், சமீபத்தில்வெளியானது. இதில், வட மாவட்ட மக்களின், வாழ்வியலை கதைக் களமாக வைத்து உள்ளனர். படத்தின், டிரெய்லர் வெளியானதில் இருந்தே, எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இப்படத்திற்கு மூட நம்பிக்கையை எதிர்ப்பவர்களிடம் இருந்து, பிரச்னை வர வாய்ப்பு உள்ளது என, இயக்குனர் கூறியுள்ளார். இப்படம் வெளியாகும் போது, சர்ச்சை வெடிக்கலாம் என்கின்றனர்.விஜய் இயக்கியுள்ள, தலைவி படத்திலும், ஜெயலலிதா, சோபன்பாபு குறித்த சர்ச்சை காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை விட, சினிமா தொடர்பான காட்சிகள், இதில் அதிகம் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. இப்படம் வெளியாகும் போது, அ.தி.மு.க.,வினர் கொந்தளிக்க வாய்ப்பு உள்ளது
சர்ச்சை
படங்கள் குறித்து, தமிழ் திரையுலகினர் கூறியதாவது: தங்களை பற்றி பெரிதாக பேச வேண்டும்; ஒரே நாளில், டிரெண்டிங் ஆக வேண்டும் என்பதற்காகவே, இதுபோன்ற படங்களை இயக்குகின்றனர்.
உண்மை
கமல் உள்ளிட்டோர் தொடங்கி வைத்த இப்பயணம், இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக, மக்களை பாதிக்கும் படங்களை எடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும். மக்களை மகிழ்விப்பதற்காகவே சினிமா. உண்மை சம்பவம் என்ற பெயரில், வரலாற்றை அவர்களுக்கு ஏற்றவாறு திரிப்பதை, அனுமதிக்க கூடாது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -