Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2020 ஜனவரி மாதத் திரைப்படங்கள் - ஆரம்பமே இப்படியா...

12 பிப், 2020 - 10:57 IST
எழுத்தின் அளவு:
january-month-movie-release-review

2019ம் ஆண்டில் 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்தன. அவற்றில் 10 படங்கள்தான் வெற்றிப் படங்கள் என்று சொல்லுமளவிற்கு நிலை இருந்தது. 2020ம் ஆண்டிலாவது அதில் மாற்றம் ஏதாவது வருமா என்று எதிர்பார்த்தால், அப்படியெல்லாம் ஏன் எதிர்பார்க்கிறீர்கள் என முதல் மாதமான ஜனவரி மாதமே நம்மை கேள்வி கேட்டுவிட்டது.


வருடத்தின் முதல் மாதத்தில் வரும் பொங்கல் நாளில் முன்பெல்லாம் 5க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவரும். அது காலப்போக்கில் குறைந்து இப்போது ஒரு படத்திற்கு வந்து நின்றுவிட்டது. அதிலும் ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படமென்றால் அதற்கு முன் வாரமும் படங்கள் வராது, அடுத்த வாரமும் படங்கள் வராது. இப்படியான ஒரு சூழல்தான் தமிழ் சினிமாவைத் தடுமாற வைத்துக் கொண்டிருக்கிறது.


2020ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் மொத்தம் 17 நேரடி தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. இவற்றில் ஒரு படம் கூட வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்பது சோகத்திலும் சோகம்.


17 படங்களில் பெரிய படம் என்று சொல்லப்பட்ட ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் ஆரம்பத்தில் பெரிய வசூலைக் கொடுத்தது என்றார்கள். ஆனால், வினியோகஸ்தர்கள் படத்திற்கு நஷ்டம் எனச் சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தினார்கள். அந்த சர்ச்சை இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு பெரிய படத்திற்கே அந்த நிலைமை என்றால் மற்ற படங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.


ஜனவரி 3ம் தேதி “ஆனந்த வீடு, அய்யா உள்ளேன் அய்யா, என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா, காதல் விழிகள், பச்சை விளக்கு, பிழை, தேடு, தொட்டுவிடும் தூரம்” என 8 படங்கள் வெளிவந்தன. இந்தப் படங்கள் எட்டு காட்சிகளாவது தியேட்டரில் ஓடியிருக்குமா என்பது சந்தேகம்தான். இம்மாதிரியான படங்களை எதை நம்பி இந்தக் காலத்திலும் செலவு செய்து தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அதற்காக ஆகும் செலவில் ஏதாவது பள்ளிக் கூடங்களைக் கட்டிக் கொடுத்தால் அவர்களுக்கு புண்ணியமாவது கிடைக்கும்.


ஜனவரி 9ம் தேதி தர்பார் படம் வெளிவந்தது. ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படத்தை முதன் முதலாக ஏஆர். முருகதாஸ் இயக்குகிறார் என படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவில் இல்லை என்பதுதான் உண்மை. ஆரம்பத்தில் 100 கோடி வசூல் என்றவர்கள் கூட அதன்பின் அமைதியாகிவிட்டார்கள். இப்போது பட நஷ்டத் தொகைக்காக அமைதியாக பஞ்சாயத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.


ஜனவரி 15ம் தேதி பட்டாஸ் படம் வெளிவந்தது. கடந்த ஆண்டில் அசுரன் என்ற தரமான படத்தைக் கொடுத்த தனுஷ், மீண்டும் அவருடைய பழைய ரூட்டில் பயணிக்க ஆரம்பித்து விட்டாரே என்ற பதட்டத்தைக் கொடுத்த படம்தான் பட்டாஸ். இனிமேல், இம்மாதிரியான கதைகளில் நடிப்பதை தனுஷ் குறைத்துக் கொண்டால் அவருடைய இமேஜுக்கு நல்லது.


ஜனவரி 24ம் தேதி “சைக்கோ, ராஜாவுக்கு செக், டாணா” ஆகிய படங்கள் வெளிவந்தன. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த சைக்கோ படம், பெயரைப் போலவே சைக்கோத்தனமாக அமைந்தது. ஒரு குறிப்பிட்ட ரசிகர்களை மட்டுமே இந்தப் படம் ரசிக்க வைத்தது. பெண்கள் இந்தப் படத்தைச் சென்று பார்க்கவேயில்லை என்பது அதிசயமான தகவல். மற்ற இரண்டு படங்களும் ஒரு வாரத்தைக் கூட கடக்காமல் போய்விட்டது.


ஜனவரி 31ம் தேதி “டகால்டி, மாயநதி, நாடோடிகள் 2, உற்றான்” ஆகிய படங்கள் வெளிவந்தன. கடந்த வருடம் சந்தானம் நடித்த தில்லுககு துட்டு, ஏ 1 ஆகிய இரண்டு படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்தன. இந்த வருடத்தில் அவருடைய முதல் படமாக வெளிவந்த டகால்டி ஏமாற்றிவிட்டது. சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமார் நடித்து வெளிவந்த நாடோடிகள் எப்படிப்பட்ட வெற்றிப் படம். அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை இப்படி சத்தமில்லாமல் வெளியிட்டது சரியா சமுத்திரக்கனி அவர்களே. முதல் பாகம் பதித்த தடத்தை இரண்டாவது பாகம் லேசாகக் கூட பதிக்கவில்லை. மற்ற இரண்டு படங்களும் எண்ணிக்கையில் கூடிய படங்கள்.


ஜனவரியில் வெளிவந்த 17 படங்களில் ஒன்று கூட வசூல் ரீதியாக பெரிய அளவில் சாதிக்கவில்லை, படத்தை வாங்கியவர்களுக்கு லாபத்தைக் கொடுக்கவில்லை என்பது வருத்தமான விஷயம். இந்த வருடத்தில் இன்னும் 11 மாதங்கள் உள்ளன. அதற்குள்ளாக கடந்த வருடம் போல அல்லாமல் இந்த வருடத்தில் பல வெற்றிப் படங்கள் வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.


ஜனவரி மாதம் வெளியான திரைப்படங்கள்...


ஜனவரி 3


ஆனந்த வீடு, அய்யா உள்ளேன் அய்யா, என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா, காதல் விழிகள், பச்சை விளக்கு, பிழை, தேடு


ஜனவரி 9


தர்பார்


ஜனவரி 15


பட்டாஸ்


ஜனவரி 24


சைக்கோ, ராஜாவுக்கு செக், டாணா


ஜனவரி 31


டகால்டி, மாயநதி, நாடோடிகள் 2, உற்றான்Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
காலத்தை வென்றவர்... காவியமானவர்: ‛மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் ஸ்பெஷல்காலத்தை வென்றவர்... காவியமானவர்: ... எங்கே செல்லும் இந்த பாதை? சங்கடம் தரும் சர்ச்சை சினிமாக்கள் எங்கே செல்லும் இந்த பாதை? சங்கடம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

krishna -  ( Posted via: Dinamalar Android App )
12 பிப், 2020 - 16:54 Report Abuse
krishna vijay padam mattum than hit movie soluvaga april master 500cr soluvaga. eppo MR. MGR SIR movie vanthal kuda lost than soluvaga. but darbar blockbuster movie athu 90 tamil peopleku theriyum, theater ownerku theriyum. more profit all tamilnadu theater owners.
Rate this:
JMK - Madurai,இந்தியா
12 பிப், 2020 - 15:27 Report Abuse
JMK பீகிள் மொக்க படம் ஆனா அது முந்நூறு கோடி வசூலாம் ? அதற்கு ரைடாம் ? ரஜினி வீட்டில் வந்த டிஸ்ட்ரிபியூட்டர் ஒருத்தரும் இப்ப எங்கே இருக்காங்க தெரியல எதை வச்சி தர்பார் படம் தோல்வி எதை வச்சி சொல்லுறீங்க ?
Rate this:
Vyjayanthy. S - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12 பிப், 2020 - 13:15 Report Abuse
Vyjayanthy. S சைக்கோ படம் தர்பாரை விட மிக பெரிய வெற்றி என்று sucess meet ல சொன்னது எல்லாம் பொய்யா ???
Rate this:
R.BHAGYARAJ - coimbatore,இந்தியா
12 பிப், 2020 - 11:47 Report Abuse
R.BHAGYARAJ தர்பார் ஹிட் ...... சில ஏரியாவில் ஓடவில்லை என்றால் .. அதற்காக நோ ஹிட் ஆஹ் ... சென்னை போஸ் ஆபீஸ் 15 CRS... RAJINI KING OF BOX OFFICE... AP/TP 20CR ., ALMOST 300 CR EARN THIS MOVIE..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in