Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

டிஜிட்டல் மார்க்கெட்டில் தமிழ் சினிமா உயர்கிறது - ஜீவா

06 பிப், 2020 - 23:38 IST
எழுத்தின் அளவு:
Tamil-cinema-is-rising-in-digital-market-place-says-Actor-Jeeva

ஜீவா நடித்துள்ள சீறு படம், இந்த வாரம் வெளியாகிறது. படம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நம்மிடையே ஜீவா பேசியதாவது:

சீறு படத்தை பற்றி சொல்லுங்கள்?
கமர்ஷியலான சமூக பிரச்னையை பற்றி பேசுகிற படம். தலைப்புக்கு ஏற்ப விறுவிறுப்பாக இருக்கும். மயிலாடுதுறையில், கேபிள் டிவி யில் உள்ளூர் பிரச்னை குறித்து பேசும் பாத்திரம் எனக்கு. ஒரு பிரச்னையில் சிக்குவதால், ஊரிலிருந்து நகரத்திற்கு வந்து, எதற்காக சீறினேன் என்பதே கதை. பெண்களுக்கான படமாகவும் இருக்கும்.

படத்தின் நாயகியை பற்றி...
நாயகி ரியா, முதல் முறையாக தமிழில் நடிக்கிறார். வெறும் பாட்டுக்கு மட்டுமே வராமல், கதையின் முக்கியத்துவத்தில் அவரும் இருப்பார்.

பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளதே?

இதற்கு, இசையமைப்பாளர் இமான் சாருக்கு தான் சல்யூட் அடிக்க வேண்டும். மாற்றுத்திறனாளி திருமூர்த்தி, செவ்வந்தி என்ற பாடலை பாடியுள்ளார். முக்கியமான கட்டத்தில் வரும் அந்த பாடல், பெரிய ஹிட் ஆகியுள்ளது. படமாக பார்க்கும் போது, அதற்கான அர்த்தம் அனைவருக்கும் புரியும்.

அடுத்து வரும் படங்கள்?

கபடியை மையமாக வைத்து தயாராகும் களத்தில் சந்திப்போம் என்ற படத்தில், அருள்நிதியுடன் இணைந்து நடிக்கிறேன். ராஜு முருகனின் ஜிப்ஸி, ஹிந்தி படமான, 83 போன்ற படங்கள் வர உள்ளன.

83 படத்தை பற்றி கூறுங்கள்?

இந்திய கிரிக்கெட் அணி, உலக கோப்பையை கைப்பற்றியது பற்றிய கதை. அந்த, 25 நாள், அங்கு என்ன நடந்தது என்பதே கதை. கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் பாத்திரத்தில் நடித்துள்ளேன். இதை ஹிந்தி படமாக பார்ப்பதை விட, ஒரு இந்தியப் படமாக தான் பார்க்க வேண்டும். படத்தின் பாத்திரத்திற்கு பொருந்தக்கூடியவர்கள் இதில் நடித்துள்ளனர்.

படத்திற்காக, 1983ல் நடந்த உலக கோப்பை போட்டியின் பதிவை பார்த்தோம். அதில் இடம் பெற்றதற்கும், படப்பிடிப்பில் எடுத்த காட்சிக்கும் வித்தியாசமே இல்லை. ஓராண்டுக்கு மேல் படத்திற்காக பின்னணியில் வேலை பார்த்துள்ளேன். அதன் தரம் படத்தில் தெரியும். இந்த மாதிரி ஜாலியான செட்டில் நான் இருந்ததே இல்லை.

நடிகராக ஜீவாவின் பயணம் எப்படி?
ஏற்ற இறக்கம் எப்போதும் அனைவருக்கும் உண்டு. 36 வயதில் கூட, 26 வயதுள்ளவராக நடிக்கிறேன். இது நடிகராக மட்டுமல்ல, அனைத்து துறையினருக்கும் ஏற்ற இறக்கம் உண்டு. கேமரா முன்னால் நாங்கள் இருப்பதால் அது வெளிப்படையாக தெரிகிறது. இன்னும் புதுமையான கதைகள் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

தமிழ் சினிமா பற்றி உங்கள் கருத்து?

தமிழ் படங்களுக்கு பல மாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. அதை ஜிப்ஸி படத்திற்காக பல மாநிலங்களுக்கு படப்பிடிப்புக்கு சென்ற போது உணர்ந்தேன். நல்ல கதையம்சம் இருப்பதை வரவேற்கின்றனர். தமிழ் சினிமாவின் வியாபாரமும் டிஜிட்டல் மார்கெட்டில் உயர்ந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் தெரிந்த நடிகையருக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை - ஆஷாதமிழ் தெரிந்த நடிகையருக்கு வாய்ப்பு ... பாஸ்போர்ட் கிடைத்தால் உலகம் சுற்றுவேன்: நடிகர், ‛போண்டா மணி உற்சாகம். பாஸ்போர்ட் கிடைத்தால் உலகம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in