Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

காலத்தை வென்றவர்... காவியமானவர்: ‛மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் ஸ்பெஷல்

17 ஜன, 2020 - 10:44 IST
எழுத்தின் அளவு:
MGR-Birthday-Special

இலங்கையின் கண்டியில் 1917 ஜன., 17ல் பிறந்தார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முக திறமை கொண்டவர். தந்தையின் வேலை நிமித்தமாக கேரளாவில் குடியேறினார். தந்தை மறைவுக்கு பின், தாய்மற்றும் சகோதரருடன் தமிழகத்தின் கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். வறுமையால் படிப்பை தொடர முடியாமல் தவித்த எம்.ஜி.ஆர்., வருமானத்திற்காக சகோதரர் சக்ரபாணியோடு இணைந்து நாடகங்களில் நடித்தார்.

அயராத உழைப்பு, கவர்ந்திழுக்கும் சிரிப்பு, கனிவான பார்வை, கருணை உள்ளம், உயர்ந்த கருத்துக்களை மட்டுமே பிரதிபலிக்கும் பிடிவாதம் என பல்வேறு பரிணாமங்களில் ஜொலித்தார். சினிமாக்களில் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதையும், நல்வழிப்படுத்துவதையும் ஒரு கொள்கையாக கொண்டிருந்தார்.
சினிமாவில் வெற்றிக்கொடி
எம்.ஜி.ஆர்., நடித்த முதல் படம் சதிலீலாவதி, 1936ல் வெளிவந்தது. 1947ல் வெளிவந்த ராஜகுமாரி படம் புகழை ஈட்டித் தந்தது. 1971ல்ரிக் ஷாக்காரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். நாடோடிமன்னன், அடிமைப்பெண்,உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை தயாரித்தார். அவர் நடித்த மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் திரைப்படம் மூலம் அரசியல்வாதியாக தன்னை அடையாளம் காட்டினார்.

அரசியல் களம்

தி.மு.க., வின் உறுப்பினர், பொருளாளராக பணியாற்றினார். 1967ல் எம்.எல்.ஏ., ஆனார்.
அண்ணாதுரை மறைவுக்குப்பின், அப்போதைய முதல்வர் கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட தி.மு.க.,வில் இருந்து விலகினார்.

தமிழக முதல்வர்

பின் 1972 அக்.,17ல் அ.தி.மு.க.,வை தொடங்கினார். போட்டியிட்ட முதல் சட்டசபை தேர்தலில் (1977) இவரது கட்சி வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர்., முதல்வரானார். 1980ல் இரண்டாவது முறை முதல்வரானார். 1984 தேர்தலில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பிரசாரத்தில் ஈடுபட முடியாவிட்டாலும், மக்களிடம் பெற்றிருந்த செல்வாக்கால் வெற்றி பெற்று மூன்றாவது முறை முதல்வரானார். 1987வரை 10 ஆண்டுகள் தொடர்ந்துமுதல்வராக இருந்த இவர்,பதவியில் இருக்கும் போதே உடல்நலக்குறைவால் 1987டிச., 24ல் மறைந்தார்.
பாரத ரத்னா
சத்துணவு திட்டம், இலவச வேஷ்டி சேலை போன்ற பல்வேறு மக்கள் நல திட்டங்களை எம்.ஜி.ஆர்., அறிமுகப்படுத்தினார். மறைவுக்குப் பின் இவருக்கு, 1988ல் நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

நடிகர் டூ முதல்வர்
இந்தியாவில் முதன்முதலாக நடிகராக இருந்து முதல்வரானவர் இவரே.

தமிழுக்கு சிறப்பு
எம்.ஜி.ஆர்., தமிழ் மொழி வளர்ச்சியிலும் அதிக கவனம் செலுத்தினார். 1981ல் மதுரையில் ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டை நடத்தினார்.


எம்ஜிஆர்., பயோடேட்டா
பெயர் : மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் அலைஸ் எம்ஜிஆர்.,
பிறந்த தேதி : 17.01.1917
பிறந்த இடம் : கண்டி, இலங்கை
பெற்றோர்கள் : கோபால மேனன் - சத்தியபாமா
மனைவி(கள்) : தங்கமணி(1942-ல் இறப்பு), சதானந்தவதி(1962-ல் இறப்பு), விஎன் ஜானகி(1996-ல் இறப்பு)
மகன் : சுரேந்திரன்(வளர்ப்பு மகன்)
சினிமா பயணம் : 1935 - 1978
முதல் படம் : சதிலீலாவதி
தமிழக முதல்வர் : 3 முறை (1977, 1980 மற்றும் 1984)
விருது : பாரத ரத்னா விருது(இறப்புக்கு பின் 1988), தேசிய விருது (ரிக்ஷாக்காரன் படம் (1971))

இறப்பு : 24.12.1987
எம்ஜிஆர்., கடந்து வந்த பாதை
1917 ஜன. 17: எம்.ஜி.ஆர்., பிறந்தார்.
1936 : தமிழ் சினிமாவில் அறிமுகம்.
1947 : அவரின் முதல் வெற்றிப்படமான ராஜகுமாரி வெளியானது.
1953 : தி.மு.க., வில் சேர்ந்தார்.
1956 : முதல் முறையாக திரைப்பட இயக்குனரானார்.
1960 : பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுப்பு.
1962 : சட்டசபை மேலவை உறுப்பினரானார்.
1967 : முதல் முறை எம்.எல்.ஏ., ஆனார்.
1967: எம்.ஆர். ராதாவால் கழுத்தில் சுடப்பட்டார்.
1969 : தி.மு.க., பொருளாளராக பொறுப்பேற்பு.
1971 : இரண்டாவது முறை எம்.எல்.ஏ., ஆனார்.
1972 : தி.மு.க.,வில் இருந்து விலகி அ.தி.மு.க., என்ற தனிக்கட்சி துவக்கினார்.
1972 : ரிக்சாக்காரன் படத்திற்காக தேசிய விருது வென்றார்.
1974: சென்னை பல்கலை மற்றும் அமெரிக்காவின் உலக பல்கலை ஆகியவை கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின.
1977 : ஜன., 30ல் முதல் முறையாக தமிழக முதல்வரானார்.
1984 : சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்..
1987 : டிசம்பர் 24 அதிகாலை மறைந்தார்.
1988 : மறைவுக்குப் பின், பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

2017 ஜன. 17: எம்.ஜி.ஆரின் நுாறாவது பிறந்த தினம்.


எம்.ஜி.ஆர்., நடித்து வெளிவந்த திரைப்படங்கள்
1.சதிலீலாவதி - துணை நடிகர்
2.இரு சகோதரர்கள் - துணை நடிகர்
3.தக்ஷயக்ஞம் - துணை நடிகர்
4.வீர ஜெகதீஷ் - துணை நடிகர்
5.மாய மச்சீந்திரா - துணை நடிகர்
6.பிரகலாதா - துணை நடிகர்
7.வேதவதி அல்லது சீதா ஜனனம் - துணை நடிகர்
8.அசோக் குமார் - துணை நடிகர்
9.தமிழறியும் பெருமாள் - துணை நடிகர்
10.தாசிப்பெண் - துணை நடிகர்
11.ஹரிச்சந்திரா - துணை நடிகர்
12.சாலி வாகணன் - துணை நடிகர்
13.மீரா - துணை நடிகர்
14.ஸ்ரீமுரகன் - துணை நடிகர்
15.ராஜகுமாரி - கதாநாயகன்
16.பைத்தியக்காரன் - துணை நடிகர்
17.அபிமன்யூ - துணை நடிகர்
18.ராஜமுக்தி - துணை நடிகர்
19.மோகினி - துணை நடிகர்
20.ரத்னகுமார் - துணை நடிகர்
21.மருதநாட்டு இளவரசி - கதாநாயகன்
22.மந்திரி குமாரி - கதாநாயகன்
23.மர்மயோகி - கதாநாயகன்
24.சர்வாதிகாரி - கதாநாயகன்
25.அந்தமான் கைதி - கதாநாயகன்
26.குமாரி - கதாநாயகன்
27.என் தங்கை - கதாநாயகன்
28.நாம் - கதாநாயகன்29.ஜெனோவா - கதாநாயகன்
30.பணக்காரி - கதாநாயகன்
31.மலைக்கள்ளன் - கதாநாயகன்
32.கூண்டுக்கிளி - கதாநாயகன்
33.குலேபகாவலி - கதாநாயகன்
34.அலிபாபாவும் 40 திருடர்களும் - கதாநாயகன்
35.மதுரைவீரன் - கதாநாயகன்
36.தாய்க்குப் பின் தாரம் - கதாநாயகன்
37.சக்கரவர்த்தித் திருமகள் - கதாநாயகன்
38.ராஜராஜன் - கதாநாயகன்
39.புதுமைப்பித்தன் - கதாநாயகன்
40.மகாதேவி - கதாநாயகன்
41.நாடோடி மன்னன் - கதாநாயகன்
42.தாய் மகளுக்குக் கட்டிய தாலி - கதாநாயகன்
43.பாக்தாத் திருடன் - கதாநாயகன்
44.ராஜா தேசிங்கு - கதாநாயகன்
45.மன்னாதி மன்னன் - கதாநாயகன்
46.அரசிளங்குமரி - கதாநாயகன்
47.திருடாதே - கதாநாயகன்
48.சபாஷ் மாப்ளே - கதாநாயகன்
49.நல்லவன் வாழ்வான் - கதாநாயகன்
50.தாய் சொல்லைத் தட்டாதே - கதாநாயகன்
51.ராணி சம்யுக்தா - கதாநாயகன்
52.மாடப்புறா - கதாநாயகன்
53.தாயைக் காத்த தனயன் - கதாநாயகன்
54.குடும்பத் தலைவன் - கதாநாயகன்
55.பாசம் - கதாநாயகன்56.விக்கிரமாதித்தன் - கதாநாயகன்
57.பணத்தோட்டம் - கதாநாயகன்
58.கொடுத்து வைத்தவள் - கதாநாயகன்
59.தர்மம் தலைகாக்கும் - கதாநாயகன்
60.கலையரசி - கதாநாயகன்
61.பெரிய இடத்துப் பெண் - கதாநாயகன்
62.ஆனந்த ஜோதி - கதாநாயகன்
63.நீதிக்குப் பின் பாசம் - கதாநாயகன்
64.காஞ்சித் தலைவன் - கதாநாயகன்
65.பரிசு - கதாநாயகன்
66.வேட்டைக்காரன் - கதாநாயகன்
67.என் கடமை - கதாநாயகன்
68.பணக்காரக் குடும்பம் - கதாநாயகன்
69.தெய்வத்தாய் - கதாநாயகன்
70.தொழிலாளி - கதாநாயகன்
71.படகோட்டி - கதாநாயகன்
72.தாயின் மடியில் - கதாநாயகன்
73.எங்க வீட்டுப் பிள்ளை - கதாநாயகன்
74.பணம் படைத்தவன் - கதாநாயகன்
75.ஆயிரத்தில் ஒருவன் - கதாநாயகன்
76.கலங்கரை விளக்கம் - கதாநாயகன்
77.கன்னித்தாய் - கதாநாயகன்
78.தாழம்பூ - கதாநாயகன்
79.ஆசை முகம் - கதாநாயகன்
80.அன்பே வா - கதாநாயகன்81.நான் ஆணையிட்டால் - கதாநாயகன்
82.முகராசி - கதாநாயகன்
83.நாடோடி - கதாநாயகன்
84.சந்திரோதயம் - கதாநாயகன்
85.தாலி பாக்கியம் - கதாநாயகன்
86.தனிப்பிறவி - கதாநாயகன்
87.பறக்கும் பாவை - கதாநாயகன்
88.பெற்றால்தான் பிள்ளையா - கதாநாயகன்
89.தாய்க்குத் தலைமகன் - கதாநாயகன்
90.அரசகட்டளை - கதாநாயகன்
91.காவல்காரன் - கதாநாயகன்
92.விவசாயி - கதாநாயகன்
93.ரகசிய போலீஸ் 115 - கதாநாயகன்
94.தேர்த்திருவிழா - கதாநாயகன்
95.குடியிருந்த கோயில் - கதாநாயகன்
96.கண்ணன் என் காதலன் - கதாநாயகன்
97.புதிய பூமி - கதாநாயகன்
98.கணவன் - கதாநாயகன்
99.ஒளி விளக்கு - கதாநாயகன்
100.காதல் வாகனம் - கதாநாயகன்
101.அடிமைப் பெண் - கதாநாயகன்
102.நம் நாடு - கதாநாயகன்
103.மாட்டுக்கார வேலன் - கதாநாயகன்
104.என் அண்ணன் - கதாநாயகன்
105.தலைவன் - கதாநாயகன்
106.தேடிவந்த மாப்பிள்ளை - கதாநாயகன்
107.எங்கள் தங்கம் - கதாநாயகன்
108.குமரிக் கோட்டம் - கதாநாயகன்
109.ரிக்ஷாக்காரன் - கதாநாயகன்
110.நீரும் நெருப்பும் - கதாநாயகன்
111.ஒரு தாய் மக்கள் - கதாநாயகன்
112.சங்கே முழங்கு - கதாநாயகன்
113.நல்ல நேரம் - கதாநாயகன்
114.ராமன் தேடிய சீதை - கதாநாயகன்
115.நான் ஏன் பிறந்தேன் - கதாநாயகன்
116.அன்னமிட்ட கை - கதாநாயகன்
117.இதய வீணை - கதாநாயகன்
118.உலகம் சுற்றும் வாலிபன் - கதாநாயகன்
119.பட்டிக்காட்டுப் பொன்னையா - கதாநாயகன்
120.நேற்று இன்று நாளை - கதாநாயகன்
121.உரிமைக்குரல் - கதாநாயகன்
122.சிரித்து வாழ வேண்டும் - கதாநாயகன்
123.நினைத்ததை முடிப்பவன் - கதாநாயகன்
124.நாளை நமதே - கதாநாயகன்
125.இதயக்கனி - கதாநாயகன்
126.பல்லாண்டு வாழ்க - கதாநாயகன்
127.நீதிக்குத் தலைவணங்கு - கதாநாயகன்
128.உழைக்கும் கரங்கள் - கதாநாயகன்
129.ஊருக்கு உழைப்பவன் - கதாநாயகன்
130.நவரத்தினம் - கதாநாயகன்
131.இன்று போல் என்றும் வாழ்க - கதாநாயகன்
132.மீனவ நண்பன் - கதாநாயகன்
133.மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - கதாநாயகன்
134.அவசர போலீஸ் 100 - துணை நடிகர்
135.நல்லதை நாடு கேட்கும் - துணை நடிகர்


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: சரோஜாதேவி, ‛நாடோடி மன்னன் ஜோடியானது எப்படி தெரியுமா? - பிறந்த நாள் ஸ்பெஷல்பிளாஷ்பேக்: சரோஜாதேவி, ‛நாடோடி ... 2020 ஜனவரி மாதத் திரைப்படங்கள் - ஆரம்பமே இப்படியா... 2020 ஜனவரி மாதத் திரைப்படங்கள் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18 ஜன, 2020 - 06:14 Report Abuse
skv srinivasankrishnaveni இவரும் சரி ஜெயலலிதாவும் சரி மிகவும் அண்ணாவும் சரி எல்லாமே சி எம் ஆகவே மரணம் அடைந்தார்கள் மெரினாபீச்லேயே சமாதியும் ஆனாங்க . காமராசரை தோக்கடிச்சு சி எம் ஆனார் அண்ணாதுரை அவர் மரணத்திலேயே தன்னை சி எம் ஆக்கிண்டாறு முக.இந்த சி எம் களெல்லாம் சாகும்வரை சி எம் ஆகவே தான் இருந்தாங்க முக தவிர
Rate this:
17 ஜன, 2020 - 22:23 Report Abuse
ஸாயிப்ரியா அனைத்து மக்களின் மனதில் அன்பை மட்டுமே விதைத்தவர். கேட்காமலும் உதவி செய்பவர். நிகரில்லா தலைவர். இன்னமும் பலதலை முறைகளின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டே இருப்பவர். மனதில் நின்ற மாமனிதர்.
Rate this:
oce - tokyo,ஜப்பான்
17 ஜன, 2020 - 16:33 Report Abuse
oce புரட்சி தலைவர் மனதளவில் ஒரு ஆழ் கடல். செயலளவில் இமயத்திற்கும் உயரமானவர்.
Rate this:
Paramasivam Murugappan - Chennai,இந்தியா
17 ஜன, 2020 - 13:47 Report Abuse
Paramasivam Murugappan தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவன் வாழ்க அவர் புகழ்
Rate this:
மேலும் 0 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in