Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2020ல் பல சிறப்புகள் இருக்கு: வடிவேலு உட்பட திரை நட்சத்திரங்களின் கனவுகள்

01 ஜன, 2020 - 13:03 IST
எழுத்தின் அளவு:
Celebrities-New-year-Dream

2019ம் ஆண்டு இனிதே விடைபெற்றது. இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம் கிடைத்திருக்கும். வாழ்வில் ஏற்ற, இறக்கங்கள் நிகழ்ந்திருக்கும். தமிழ் திரைப்பிரபலங்களுக்கு எப்படி இருந்தது, பிறந்துள்ள 2020ல் தங்களுக்கு எந்த மாதிரியான கனவுகள், திட்டங்கள் உள்ளன என்பதை இங்கு விவரித்துள்ளார்கள். அவற்றை பார்ப்போம்...

அர்த்தனா
2019ல் நல்லதும் நடந்தது, கெட்டதும் நடந்தது. இந்த உலகத்திலேயே என் மீது பாசமாக இருந்த என் தாத்தா இறந்து போய்விட்டார். அவர் தான் என்னை வளர்த்தார். அவர் இல்லாதது வருத்தமாக உள்ளது. 2020ல் நிறைய நல்ல படங்கள் பண்ண வேண்டும் என்ற ஆசை உள்ளது. தமிழ், மலையாளத்தில் வாய்ப்பு வரணும். மாஸ்டர் டிகிரி படிக்க ஆசை. நடிப்பு விஷயத்தில் இன்னும் நான் வளர்த்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.யோகி பாபு
2019ல் கிட்டத்தட்ட 30 படங்கள் ஓய்வு இல்லாமல் நடித்தேன். ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என நடித்த அநேக படங்கள் பெரிய நடிகர்களின் படங்களாக இருந்தது. 2020 இன்னும் நிறைய நல்ல படங்களில் நடிக்க ஆசை. இந்தாண்டு எனக்கு திருமணம் நடக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து ஆதரவு தரும் ரசிகர்களுக்கு நன்றி.வசுந்தரா
கண்ணே கலைமானே, பக்ரீத் என 2019ல் இரண்டு நல்ல படங்களில் நடித்தது, பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. 2020ல் இன்னும் நல்ல படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.ஸ்ரீகாந்த்
2017, 2018 தொழில் ரீதியாக மன அழுத்தம் இருந்தது. 2019ல் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனேன். நல்ல படங்கள் உடைய ஒப்பந்தம் 2019ல் தான் நடந்தது. இந்தாண்டு அந்த படங்கள் வெளியாகி வெற்றி பெறும் என நம்புகிறேன். முதல் வெளியீடாக மிருகா படம் இருக்கும். நானும் விஜய் ஆண்டனியும் இணைந்து நடித்த காக்கி அதற்கடுத்து வெளியாகும். 2020 எனக்கு ஒரு நல்ல ஆண்டாக அமையும் என நம்புகிறேன். திரைத்துறையில் உள்ளவர்களுக்கும், ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி கடன்பட்டிருக்கேன்.ரித்விகா
2019 சிறப்பாக அமைந்தது. ‛குண்டு வெளியாகி நல்ல பெயரை பெற்று தந்தது. 2020ல் வால்டர், யாதும் ஊரே யாவரும் கேளீர் உட்பட மூன்று படங்கள் ரிலீஸாக இருக்கிறது. 2019ல் டப்பிங் பேச ஆரம்பித்துள்ளேன். அதுவும் எனக்கு சாதகமாக அமையும் என நினைக்கிறேன்.நகுல்
2018, 2019 பல சவால்களை சமாளிக்க வேண்டி இருந்தது. ஓராண்டுக்கு முன் அப்பா இறந்தார், செப்டம்பரில் அம்மா இறந்து போனாங்க. அவங்க பின்னாடியே இருந்தவன், மிகவும் உணர்ச்சிகரமான தருணம் அது. பெற்றோர் ஆசி உடன் 2020 சிறந்த ஆண்டாக அமையும் என நம்புகிறேன். நிறைய கதை கேட்டுள்ளேன். அனைவரின் ஆதரவும் தேவை.ரம்யா பாண்டியன்
2019 சிறப்பாக அமைந்தது. நான் எதிர்பார்க்காத விஷயங்கள் என் வாழ்க்கையில் நடந்தது. ரம்யா பாண்டியன் என்ற ஒரு நடிகை இருக்கிறார் என மக்களுக்கு தெரிய வந்தது. 2020ல் நிறைய படங்கள் பண்ணனும். இது தான் என் முதல் ஆசை. அதற்கான வேலைகளில் இப்போது கவனம் செலுத்துகிறேன். 2019ல் ரசிகர்களின் அளவுக்கு அதிகமான அன்பு கிடைத்தது, அது 2020லும் தொடர ஆசைப்படுகிறேன்.ரேகா
2019ல் பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை. என் மகளை அமெரிக்காவிற்கு படிக்க அனுப்பினேன், அந்த மகிழ்ச்சி மட்டும் தான் உள்ளது. 2019ல் ஏழு படங்களில் நடித்தேன். எல்லோருக்கும் ஒரு தேடல் இருக்கும். ஏதாவது சாதிக்கணும்னு ஓடுறாங்க, தவிர அவர்களுடைய உடம்பை பார்த்துக்க மாட்டுறாங்க. அதனால் தினம் 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்து, உங்கள் உடம்பில் கவனம் செலுத்துங்கள். எனக்கு எந்த தனிப்பட்ட ஆசையும் கிடையாது. என் மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். பின் ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி கொடுக்கணும் இதுதான் இப்போதைக்கு என் ஆசையாக உள்ளது.வடிவேலு
2019ல் தூங்கிய என்னை தட்டி எழுப்பி உட்கார வைத்து இரண்டு சம்பவங்கள் நடந்தது. ஒன்று நேசமணி, மற்றொன்று கமல் 60 விழா. எங்க திரும்பினாலும் டிரெண்ட்டிங் ஆன விஷயம் நேசமணி தான். இப்போதும் அதை மறக்க மாட்டேன். 2019ல் ஒரு பத்திரிக்கையாளர் என்னிடம் வீட்டுல என்ன பண்றீங்க, வெளியில வாங்க என்றார். அவரிடம் நான் அங்க, இங்க போயிட்டு தான் இருக்கேன்னு என்றேன். இல்ல நீங்க படங்களில் நடிக்கணும் என உரிமையாக சண்டை போட்டார். அப்போது எடுத்த வண்டி தான் கமல் 60 விழா என்று சொல்லலாம்,. அந்த ஒரு நிகழ்ச்சி என்னை மீண்டும் திரும்பி பார்க்க வைத்தது.

வந்திருந்த பல தரப்பட்ட மக்களும் என்னுடைய பேச்சைக் கேட்டு சிரிச்சாங்க, ரசிச்சாங்க. அதுவே சந்தோஷமாக இருந்தது. ஒட்டுமொத்த ரசிகர்களும், சமூக வலைதளங்களில் நம்ம பேச்சு தான் டிரெண்டிங். சினிமா என்னை ஒதுக்கவில்லை, நான் தான் ஒதுங்கி இருந்தேன். கமல், ன்னை அவசியம் விழாவுக்கு வரணும் என்று அழைத்தார், அதனால் சென்றேன்.அந்த விழாவின் கதாநாயகன் கமல்ஹாசன், விழாவின் காமெடி நாயகன் வடிவேலு.


சினிமாவில் என் மேல் சில பேருக்கு கோபம், அந்த கோபம் எல்லாம் தனியட்டும் என்று தான் அமைதியாக குடும்ப வேலைகளில் இருந்தேன். 2019ல் எந்த துன்பமும் எனக்கு ஏற்படவில்லை. என் குல தெய்வம் அய்யனார் கூடவே இருந்து என்னை வழி நடத்தினார். 2020 பல சிறப்புகள் நடைபெற உள்ளது, கமல் பட தொடக்கம், இன்னும் பல ரசிகர்கள் என்னை எதிர்பார்க்கலாம்.

வசந்த் ரவி
2019 எனக்கு முக்கியமான ஆண்டு. தரமணி வெற்றிக்கு பின் ‛ராக்கி படத்தில் நடித்தேன். இதற்காக நிறைய உழைத்தேன். ஆனால் 2019ல் ரிலீஸ் செய்ய முடியவில்லை. ஆனால் 2020 தொடக்கத்திலேயே மிகப்பெரிய வெற்றியையும், பெயரையும் ராக்கி படம் தரும் என நம்புறேன். மீடியாவுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. என் போன்ற புதுமுகங்களுக்கு உங்களுடைய ஆதரவு உதவியாக இருக்கும். நிறைய வெற்றிப் படங்களைக் கொடுக்கணும். இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமையும் என வேண்டுகிறேன்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
2019 - அசத்திய அறிமுகங்கள் யார்? யார்?2019 - அசத்திய அறிமுகங்கள் யார்? யார்? பிளாஷ்பேக்: சரோஜாதேவி, ‛நாடோடி மன்னன் ஜோடியானது எப்படி தெரியுமா? - பிறந்த நாள் ஸ்பெஷல் பிளாஷ்பேக்: சரோஜாதேவி, ‛நாடோடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
08 ஜன, 2020 - 12:54 Report Abuse
Vasudevan Srinivasan அனைவரின் கனவுகளும் குறிக்கோள்களும் நல்லபடி நிறைவேற இறைவன் அருளட்டும்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in