Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2019 - அசத்திய அறிமுகங்கள் யார்? யார்?

01 ஜன, 2020 - 12:55 IST
எழுத்தின் அளவு:
Debut-celebrities-who-inspired-in-2019-tamil-cinema

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் எண்ணற்ற புதுமுகங்கள் அறிமுகமாவார்கள். அதிலும் டிஜிட்டலுக்கு சினிமா மாறிய பிறகு எந்த ஒரு வரையறையும் இல்லாமல் பலரும் சினிமா எடுக்க வந்துவிடுகிறார்கள். அதில் சிலர் தரமான படங்களைக் கொடுத்து முத்திரை பதிக்கிறார்கள். சிலர் தவறான படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் தரத்தையும் தடம் மாற்றி விடுகிறார்கள்.

2019ல் அறிமுகமான இயக்குனர்கள், இசையமைப்பார்கள், நடிகர்கள், நடிகைகளில் தங்களது திறமை மூலம் கவனத்தை ஈர்த்த ஒரு சிலரைப் பற்றிப் பார்ப்போம்.

அறிமுக இசையமைப்பாளர்கள்

தன் அறிமுகப் படத்திலேயே, ஒரு வெற்றிப் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் யார் இவர் என்ற கவனத்தை ஈர்த்த இசையமைப்பாளர் அருண் ராஜ். மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்து வெளிவந்து வெற்றி பெற்ற 'தடம்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அருண் ராஜ்.

'தடம்' இசையமைப்பாளர் அருண்ராஜைத் தவிர வேறு எந்த அறிமுக இசையமைப்பாளரும் வெற்றி பெற்ற படங்களுக்கு இசையமைக்கவில்லை.

பாடல்களை ஹிட்டாக்கியவர் என்ற விதத்தில் அறிமுக இசையமைப்பாளரான ஷபீர் அவர் இசையமைத்த 'சகா' படத்தின் 'யாயும்...' பாடலின் மூலம் நன்கு அறிமுகமானார். இந்த வருடத்தின் டாப் 10 பாடல்களில் அந்தப் பாடலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.

அறிமுக இயக்குனர்கள்

இந்த ஆண்டில் எண்ணற்ற புதுமுக இயக்குனர்கள் அறிமுகமானார்கள். சிலர் கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, நட்சத்திர அந்தஸ்து இல்லாத படங்களைக் கொடுத்து தங்களது திறமையைப் பதிவு செய்தார்கள். கமர்ஷியல் ரீதியாக பெரிய வசூலைப் பெறவில்லை என்றாலும் இந்த இயக்குனர்கள் அவர்களது அடுத்தடுத்து படங்களில் அதையும் பெறுவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்கள்.

இந்த ஆண்டுக்கான அறிமுக இயக்குனர்களில், “செழியன் (டூலெட்), எல்கேஜி (கேஆர் பிரபு), செல்வகண்ணன் (நெடுநல்வாடை), பார்த்திபன் தேசிங்கு (நட்பே துணை), சரவண ராஜேந்திரன் (மெஹந்தி சர்க்கஸ்), விவேக் இளங்கோவன் (வெள்ளை பூக்கள்), பரத் நீலகண்டன் (கே 13), வி.ஜே. கோபிநாத் (ஜீவி), சை.கௌதம் ராஜ் (ராட்சசி), ஜான்சன் ( ஏ 1), மாரிமுத்து (தொரட்டி), பிரதீப் ரங்கநாதன் (கோமாளி), ஜெகதீசன் சுபு (பக்ரீத்), அதியன் ஆதிரை (இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு), ஸ்ரீசெந்தில் (காளிதாஸ்) ஆகிய இயக்குனர்கள் ஒரு நம்பிக்கை விதையை விதைத்திருக்கிறார்கள்.

இவர்களில் ஒரு சிலர் கமர்ஷியல் ரீதியான படங்களைக் கொடுத்தவர்கள். மற்றவர்கள் வித்தியாசமான சினிமாவை எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் படமெடுத்தவர்கள். அதில் சிலருக்கு வசூல் கிடைக்காமல் வரவேற்பு மட்டுமே கிடைத்திருக்கலாம். அது எதிர்வரும் காலங்களில் கிடைக்கும். அதற்கான அடித்தளத்தை தங்களது முதல் படங்களில் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அறிமுக நடிகைகள்


ஒரு வருடத்தில் அறிமுகமாகும் இயக்குனர்கள், நடிகர்கள் ஆகியோர் எண்ணிக்கையை விட நடிகைகளின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும். இந்த வருடமும் அதே போல் எண்ணற்ற புதுமுகங்கள்.

ஆனால், தங்களது நடிப்பாலும், அழகாலும் அடுத்து மேலும் பயணிப்பார்கள் என்று சிலர் மட்டுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார்கள்.

மேகா ஆகாஷ் (பேட்ட), அஞ்சலி நாயர் (நெடுநல்வாடை), பாலக் லால்வானி (குப்பத்து ராஜா), ஷாலினி பாண்டே (கொரில்லா), லிஜிமோள் ஜோஸ், காஷ்மீரா (சிவப்பு மஞ்சள் பச்சை), மஞ்சு வாரியர் (அசுரன்), சம்யுக்தா ஹெக்டே (வாட்ச்மேன்), பனிதா சாந்து (ஆதித்ய வர்மா), டிகங்கனா சூர்யவன்ஷி (தனுசு ராசி நேயர்களே), கல்யாணி பிரியதர்ஷன்(ஹீரோ) ஆகியோர் குறிப்பிட வேண்டியவர்கள்.

இவர்களில் சிலரது படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன, சிலரது படங்கள் கவனிக்க வைத்தன, சிலரது படங்கள் கவனிக்க வைக்கவில்லை என்றாலும் அவர்கள் கவனிக்க வைத்தார்கள்.

அறிமுக ஆண்டிலேயே அதிகப் படங்களில் நடித்தவர்களாக இருவர் உள்ளனர். மேகா ஆகாஷ், “பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா” ஆகிய படங்களில் நடித்துள்ளார். சம்யுக்தா ஹெக்டே “வாட்ச்மேன், கோமாளி, பப்பி” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கதாபாத்திரம் மற்றும் நடிப்பைப் பொறுத்தவரையில் மற்ற அறிமுகங்களை ரொம்பவே பின்னுக்குத் தள்ளி 'அசுரன்' படத்தில் அறிமுகமான மஞ்சு வாரியர் முதலிடம் பிடிக்கிறார். தமிழுக்குத்தான் இவர் புதுமுகம் இல்லை. ஆனால், மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்துவிட்டார். அதனால், இவரை கணக்கில் கொள்ளலாமா என சந்தேகம் எழுப்புபவர்களுக்கு 'நெடுநல்வாடை' அஞ்சலி நாயர் தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்தவராகத் தாராளமாக சிறந்த அறிமுக நடிகையாகத் தேர்வு செய்யலாம்.

அறிமுக நாயகர்கள்

சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவது சாதாரண விஷயமல்ல. ஒரு பக்கம் வாரிசு நடிகர்களும் வருவார்கள், மறுபக்கம் எந்தப் பின்னணியும் இல்லாத திறமைசாலிகளும் வருவார்கள். யாராக இருந்தாலும உண்மையான திறமை இருந்தால் மட்டுமே இங்கு வெற்றி பெற முடியும்.

இந்த வருடத்திய குறிப்பிடத்தக்க அறிமுக நாயர்களில், இதற்கு முன் ஒரு சிறிய கதாபாத்திரங்களில் நடித்துவிட்டு நாயகர்களாக அறிமுகமானவர்களில் கவின் (நட்புனா என்னானு தெரியுமா), ரியோ ராஜ் (நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா) ஆகியோர் இருக்கிறார்கள். இருவருக்குமே டிவி பின்னணி தவிர வேறு பின்னணி இல்லை.

நகைச்சுவை நடிகர்களாக இருந்து இந்த வருடத்தில் ஹீரோவாக உயர்ந்தவர்களில் ஆர்ஜே பாலாஜி (எல்கேஜி), யோகி பாபு (தர்மபிரபு) முக்கியமானவர்கள்.

வாரிசு நடிகர்களில் விக்ரம் மகன் த்ருவ் விக்ரம் 'ஆதித்ய வர்மா' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறப்பாக நடித்தார் என அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். இவரின் அடுத்த படம்தான் இவரது பலம் என்ன என்பதை நிரூபிக்கும். இருப்பினும் இந்த ஆண்டு அறிமுகமானவர்களில் அதிக வெளிச்சம் பட்டு கொஞ்சம் முன்னணியில் இருக்கிறார் த்ருவ்.

சினிமா உலகம் என்பது ஒரு கடல். இதில் நீச்சலடிக்கும் ஆசையில் நிறைய பேர் வந்து குதிப்பார்கள். சுறாக்களும், திமிங்கலங்களும் நம்மைச் சுற்றி வரும். எதிரே பெரும் அலை வரும். எல்லாவற்றையும் எதிர்கொண்டு வெற்றியைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல.

தோல்வி வந்தாலும் துவளாமல் இலக்கை நோக்கி நகர்பவர்களே வெற்றியடையவார்கள். இந்த வருட புதுமுகங்களில் எத்தனை பேர் அவர்கள் இலக்கை நோக்கிச் செல்வார்கள் என்பது அடுத்த ஆண்டில் தெரிந்துவிடும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
2019 - டாப் 10 டிரைலர்கள் எவை ?2019 - டாப் 10 டிரைலர்கள் எவை ? 2020ல் பல சிறப்புகள் இருக்கு: வடிவேலு உட்பட திரை நட்சத்திரங்களின் கனவுகள் 2020ல் பல சிறப்புகள் இருக்கு: வடிவேலு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in