Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2019ல் கெட்டி மேளம் கொட்டியவர்கள்

31 டிச, 2019 - 11:02 IST
எழுத்தின் அளவு:
Celebrities-who-are-all-wedding-in-Tamil-cinema-2019

இந்த ஆண்டு பல முன்னணி நடிகர், நடிகைகள் இல்வாழ்க்கையில் தங்களை இணைத்துக் கொண்டார்கள் அதுபற்றிய ஒரு விபரம்...

பல காதல் கிசுகிசுவில் சிக்கியவர் ஆர்யா. தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பெண் தேடி அதிலும் பெண் கிடைக்காதவர் கடைசியாக உடன் நடித்த சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். சாயிஷா, பாலிவுட்டின் கபூர் குடும்பத்தை சேர்ந்தவர். இருவரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள்.

முதல் கணவரை விவாகரத்து செய்த ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா, தொலதிபரும், நடிகருமான விசாகனை 2வதாக திருமணம் செய்தார். விசாகனுக்கும் இது இரண்டாவது திருமணம். உறவினர்கள் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ள எளிய முறையில் நடந்தது.

முதல் மனைவி அமலாபாலை விவாகரத்து செய்த இயக்குனர் ஏ.எல்.விஜய், உறவுக்கார பெண்ணான டாக்டர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார்.


சின்னத்திரையில் இணைந்து நடித்த சஞ்சீவ் - ஆல்யா மானசா இருவரும் ரகசிய திருணம் செய்து கொண்டு பின்னர் அதனை அறிவித்தார்கள்.அடிக்கடி தனது திருமணம் பற்றிய தகவல்களை தானாகவே லீக் செய்து பரபரப்பு கிளப்பி வந்த காமெடி நடிகர் சதீஷ் ஒரு வழியாக சிந்துவை திருமணம் செய்தார்.

ஜோக்கர், மேற்கு தொடர்ச்சி மலை படங்களின் மூலம் அனைவரையும் நடிப்பால் கவர்ந்த காயத்ரி கிருஷ்ணன், மலையாள ஒளிப்பதிவாளர் ஜீவனை திருமணம் செய்து கொண்டார்.

பிரபல நடிகை மேக்னா நாயுடு, போர்ச்சுக்கீசிய டென்னிஸ் வீரரை 3 ஆண்டுக்கு முன்பே திருமணம் செய்து கொண்ட விபரத்தை இந்த ஆண்டு அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.

காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதா தனது நீண்ட நாள் காதலர் மோசஸ் ஜோயலை திருமணம் செய்து கொண்டார்.

மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களின் நாயகி ரிச்சா, தனது அமெரிக்க காதலரை மணந்தார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
2019ல் கண்ணீரில் மிதக்க விட்டு, மண்ணுலகை விட்டு பிரிந்தவர்கள்2019ல் கண்ணீரில் மிதக்க விட்டு, ... 2019 தமிழ் சினிமா: அசத்தியதும்... ஆட்டம் கண்டதும்... 2019 தமிழ் சினிமா: அசத்தியதும்... ஆட்டம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

மணி - புதுகை,இந்தியா
02 ஜன, 2020 - 08:21 Report Abuse
மணி எத்தனைத்தரம் மேளம் எத்தனைதரம் தாலி தாளம்...? புள் சயிசு போட்டோபோட்டு பெருமைப்படுத்துங்க
Rate this:
praba - madurai,இந்தியா
31 டிச, 2019 - 17:30 Report Abuse
praba test
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in