Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

வந்தது 15, வசூலானது 1 : நவம்பர் மாத படங்கள் ஓர் பார்வை

10 டிச, 2019 - 12:40 IST
எழுத்தின் அளவு:
How-is-November-2019-for-tamil-movies

2019ம் ஆண்டின் கடைசி மாதத்தை நெருங்கி விட்டோம். கடந்த 2018ம் ஆண்டு வெளியான படங்களின் எண்ணிக்கை 200ஐத் தொடவில்லை. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 200ஐத் தொட்டுவிட வாய்ப்புள்ளது.

கடந்த நவம்பர் மாதம் வரையில் 179 படங்கள் வெளியாகியுள்ளன. டிசம்பர் முதல் வாரமான கடந்த வாரம் 4 படங்கள் வெளிவந்தன. இந்த வாரம் 10 முதல் 12 படங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 20 மற்றும் 27 தேதிகளில் 10 படங்களாவது வந்துவிடும். எனவே, 2019 திரைப்படப் பட்டியல் 200ஐத் தொட்டுவிட வாய்ப்புள்ளது.

2019ன் அக்டோபர் மாதத்தில் 14 படங்கள் வெளிவந்திருந்தாலும் அவற்றில் 'அசுரன், பிகில், கைதி' ஆகிய படங்கள் மூலம் மட்டுமே 500 கோடிக்கும் மேலான வசூல் கிடைத்தது. ஆனால், அதற்கடுத்த மாதமான நவம்பர் அந்த வசூல் 50 கோடியைக் கூடத் தொட முடியாமல் போனது துரதிருஷ்டமே.

நவம்பர் மாதத்தில் மொத்தம் 15 படங்கள் வெளிவந்தன. இவற்றில் குறிப்பிடும்படியான படமாக விஷால் நடித்த 'ஆக்ஷன், விஜய் சேதுபதி நடித்த 'சங்கத்தமிழன்', விக்ரம் மகன் த்ருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமான 'ஆதித்ய வர்மா', தனுஷ் நடித்து நீண்ட நாள் கிடப்பில் இருந்து வெளியான 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்கள் முக்கியமான படங்கள். மற்ற படங்கள் அனைத்துமே சிறிய படங்கள் தான்.

நவம்பர் 8ம் தேதியன்று, “பட்லர் பாலு, மிக மிக அவசரம், தவம்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'மிக மிக அவசரம்' படத்திற்கு சரியான தியேட்டர்களைத் தர தியேட்டர்காரர்கள் மறுத்தார்கள் என குற்றச்சாட்டு எழுந்தது. விமர்சன ரீதியாக படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது மட்டுமே இப்படத்திற்கான பெருமையாக அமைந்தது. மற்ற இரண்டு படங்கள் பற்றி குறிப்பிடும்படி எதுவும் இல்லை.

நவம்பர் 15ம் தேதியன்று, “ஆக்ஷன், சங்கத்தமிழன்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இரண்டு படங்களுக்கும் வெளியீட்டிற்கு முன்பாக ஓரளவிற்கு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை இரண்டு படங்களும் ஒட்டு மொத்தமாக ஏமாற்றின. நல்ல காமெடி படங்கள் பலவற்றைக் கொடுத்த இயக்குனர் சுந்தர்.சி, இந்த 'ஆக்ஷன்' படத்தையே ஒரு காமெடி படமாகக் கொடுத்தது ஆச்சரியம். அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் விஷால் மாறுவேடத்தில் வந்து தப்பித்ததைப் பற்றியெல்லாம் சொல்ல முடியாத நகைச்சுவை. விஜய் சேதுபதி நடித்த 'சங்கத்தமிழன்' பல பிரச்சினைகளில் சிக்கி அன்று இரவுக் காட்சியாக சில தியேட்டர்களிலும், மறுநாள் முழுமையாகவும் ரிலீசானது. இந்தப் படத்தில் நடிக்க விஜய்சேதுபதி எப்படி சம்மதித்தார் என்றுதான் ரசிகர்கள் கேள்வி கேட்டார்கள்.

நவம்பர் 22ம் தேதியன்று, “ஆதித்ய வர்மா, கே.டி (எ)கருப்புதுரை, மேகி, பணம் காய்க்கும் மரம், பேய் வால புடிச்ச கதை” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'கே.டி (எ) கருப்புதுரை' படத்தைப் பார்த்தவர்கள் வித்தியாசமாக இருந்தது என பாராட்டினார்கள். இம்மாதிரியான படங்கள் பெயர் வாங்குவதோடு நின்று விடுகிறது. விக்ரம் மகன் த்ருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமான 'ஆதித்ய வர்மா' படம் தான் கடந்த மாதப் படங்களில் வெற்றி பெற்ற படமாக அமைந்தது என கோலிவுட்டில் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் ஷேர் ஆக 5 கோடியும், சாட்டிலைட், டிஜிட்டல் உரிமை மூலம் சுமார் 7 கோடியும், வெளிநாடு, மற்ற மாநிலங்கள் என சுமார் 2 கோடி வரையிலும் கிடைத்ததாகச் சொல்கிறார்கள். ஏற்கெனவே பாலா இயக்கத்தில் உருவான 'வர்மா' படத்தைத் தயாரித்த வகையில் ஏற்பட்ட நஷ்டத்தை கணக்கில் கொள்ளவில்லை என்றால் 'ஆதித்ய வர்மா' படம் தயாரிப்பாளருக்கு லாபத்தைக் கொடுத்துள்ளது. தமிழ் சினிமாவுக்கு நடிக்கத் தெரிந்த ஒரு புதுமுகமாக த்ருவ் விக்ரம் கிடைத்துள்ளார்.

நவம்பர் 29ம் தேதியன்று, “அடுத்த சாட்டை, அழியாத கோலங்கள் 2, எனை நோக்கி பாயும் தோட்டா, மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், தீமைக்கும் நன்மை செய்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'அடுத்த சாட்டை, அழியாத கோலங்கள் 2' ஆகிய படங்களுக்கு ஓரளவிற்கு நல்ல விதமான விமர்சனங்களும், பாராட்டுக்களும் கிடைத்தன. மிகத் தாமதமாக வந்தாலும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்தது. இந்தப் படத்திற்கான ஒவ்வொரு ரூபாய் வசூலும் தயாரிப்பாளருக்கு கடன் பளுவைக் குறைக்கும். பிக்பாஸ் சீசன் 1ல் வின்னர் ஆன ஆரவ் அறிமுகமான 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' சினிமாவில் அவருக்கான வெற்றிகரமான மார்க்கெட்டை உருவாக்கவில்லை என்பது வருத்தமே.

நவம்பர் மாதத்தில் வெளிவந்த 15 படங்களில் ஒரே ஒரு படம் மட்டும் தான் ஓடிய படமாக இருந்தது ஆச்சரியமும், அதிர்ச்சியும் கலந்த தகவல். ஒரு மாதத்தில் வெளியாகும் படங்களில் ஓரிரு படங்கள் மட்டுமே ஓடுகிறது என்பது கடந்த சில வருடங்களாக இருக்கும் நிதர்சனமான உண்மை.

இப்படிப்பட்ட நிலைமை மாற வேண்டும் என படங்களின் உருவாக்கத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். இந்தப்படம் ஓடுமா, ஓடாதா, இப்படி எடுத்தால் ரசிகர்கள் ரசிப்பார்களா, நாம் போட்ட முதலீடு திரும்ப கிடைக்குமா என்று யோசித்து, அலசி ஆராய்ந்து படங்களைத் தயாரிப்பதுதான் சரியாக இருக்கும். ஆனால், அப்படி பலர் செய்வதில்லை என்பது வருத்தமான விஷயம்.

இந்த நிலை வரும் 2020 ஆண்டிலாவது மாறட்டும். 20/20 விளையாட்டு போல பரபரப்பான விதத்தில் 2020ல் தமிழ் சினிமா இருக்கட்டும்.

நவம்பர், 2019 வெளியான படங்கள்

நவம்பர் 8 : பட்லர் பாலு, மிக மிக அவசரம், தவம்

நவம்பர் 15 : ஆக்ஷன், சங்கத்தமிழன்

நவம்பர் 22 : ஆதித்ய வர்மா, கே.டி (எ)கருப்புதுரை, மேகி, பணம் காய்க்கும் மரம், பேய் வால புடிச்ச கதை

நவம்பர் 29 : அடுத்த சாட்டை, அழியாத கோலங்கள் 2, எனை நோக்கி பாயும் தோட்டா, மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், தீமைக்கும் நன்மை செய்

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
அசத்திய அக்டோபர் 2019: ரூ.500 கோடி வருமானம்அசத்திய அக்டோபர் 2019: ரூ.500 கோடி ... ‛டபுள் செஞ்சூரி அடித்த தமிழ் சினிமா : 2019ல் வெளியான படங்கள் பட்டியல் ‛டபுள் செஞ்சூரி அடித்த தமிழ் சினிமா : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Endrum Indian - Kolkata,இந்தியா
12 டிச, 2019 - 16:04 Report Abuse
Endrum Indian சரி இந்த சினிமா வெற்றியடைந்தது இதனால் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம். லாபம் மக்களுக்கு நிச்சயமாக இல்லை. பெரிய லாபம் - தயாரிப்பாளர்களுக்கு, அடுத்து நடிகன்/நடிகை அவ்வளவு தான். அந்த தொழில் துறையில் உள்ளவர்களுக்கு அவர்கள் சம்பளம் கிடைக்கும் அவ்வளவே. யாருக்கு நஷ்டம் - டாஸ்மாக் நாட்டு மக்களுக்கு. குற்றங்கள் பெருகுவது இந்த மாதிரி சினிமா படம் பார்த்துத்தான். டாஸ்மாக் நாட்டு மக்களை அறிவே இல்லாத ஒரு பிரகிருதியாக மாற்றிய பெருமை இந்த மாதிரி சினிமாக்களினால் தான். சினிமாவில் "நான் ஆணையிட்டால் அது நடந்து விடும்" என்பது போல மாய லோகத்தை உருவாக்கி அதையே நிஜம் என்று இந்த ரசிக வெறியர்கள் நினைத்து நாட்டை நாசமாகியது ஒன்றே மிச்சம் இந்த சினிமாவினால்
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
11 டிச, 2019 - 03:54 Report Abuse
J.V. Iyer படம் எடுக்க பணம் இருக்கு. பத்தில் ஒரு படம் தான் வெற்றி என தெரிந்தும் குதிரை மேல் பணம் கட்டுவதைப்போல, சகிக்காத படங்கள் எடுக்கின்றனர். இதற்கு காரணம், கைக்கூலிகள் சும்மா உசுப்பேற்றி ஏத்தி விடுவதை நம்புவது. கருப்பு பணம் வைத்து எடுத்தால் கவலையில்லை. உழைத்தப்பணம்?
Rate this:
babu - Atlanta,யூ.எஸ்.ஏ
10 டிச, 2019 - 19:18 Report Abuse
babu நமது இந்திய பொருளாதாரம் அதலபாதாளத்தில்
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
10 டிச, 2019 - 16:32 Report Abuse
Natarajan Ramanathan ஒரு வருஷத்தில் 52 படங்களுக்கு மேல் தயாரிக்க அனுமதி அளிக்கவே கூடாது.
Rate this:
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
10 டிச, 2019 - 15:09 Report Abuse
தமிழர்நீதி சாராயக்கடைக்கும் , சினிமாவுக்கும் , மருத்துவமனைக்கும் , நீதிமன்றத்திற்கும் தான் இப்பொது மக்கள் கூட்டம் அலைமோதுது . இது தமிழகத்தின் அழிவுக்கான அறிகுறி . போதை , பொழுதுபோக்கு , நோய் , வம்பு என்று பெருகிப்போன தமிழகம் . இதுல ஊழலின் உச்சம் . ஆட்சிஎன்று இதுல சில கோமாளிகள் தமிழகத்தின் அரியணையில்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in