Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

எனக்கான வாய்ப்பை வேறு யாரும் தட்டிப் பறிக்க முடியாது!

29 நவ, 2019 - 06:55 IST
எழுத்தின் அளவு:
No-one-else-can-catch-my-chances-says-appukutty

கதை நாயகனாக, தனக்கான பாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருபவரும், தேசிய விருது பெற்றவருமான அப்புக்குட்டி, தற்போது எட்டு படங்களை கைவசம் வைத்துள்ளார்; அவருடன் பேசியதிலிருந்து:


உங்களுக்கான அங்கீகாரம் கிடைத்து விட்டதாக நினைக்கிறீர்களா?


இல்லாததையும், கிடைக்காததையும் நினைத்து வருத்தப்படுவதை விட, கிடைப்பதில் சாதிக்க வேண்டும்; எனக்கான வாய்ப்புகள் வருகின்றன. வாழ்க விவசாயி, குஸ்கா படங்கள் விரைவில் வெளி வருகின்றன. வல்லவனுக்கு வல்லவன், பூம் பூம் காளை, வைரி, ரூட்டு, மாயநதி, இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு, பரமகுரு, கல்தா போன்ற படங்கள் கைவசம் உள்ளன.


யாரை உங்கள் போட்டியாளராக நினைக்கிறீர்கள்?


எனக்கு யாருமே போட்டி இல்லை. காமெடியில் சூரி, சந்தானம், யோகிபாபு போன்றவர்கள் எனக்கு போட்டி என, மற்றவர்கள் நினைக்கின்றனர். காமெடியில் இருந்து நாயகனாக மாறியவர்களும், எனக்கு போட்டி என நினைக்கின்றனர். எனக்கு நான் மட்டுமே போட்டி. எனக்கான வாய்ப்பை, மற்றவர் தட்டி பறிக்க முடியாது.


எந்த மாதிரியான வேடத்தில் நடிக்க விரும்புவீர்கள்?


இயல்பான நடிகர் அப்புக்குட்டி என, அனைவரும் கூறுகின்றனர்; நானும் இதைத் தான் விரும்புகிறேன். நல்ல காமெடி மற்றும் உணர்ச்சிகரமான வேடங்களில் நடிக்க வேண்டும். இரண்டு, மூன்று காட்சிகளில் வந்து போகும் பாத்திரம் எனக்கு வேண்டாம். நான் கதாநாயகன் அல்ல; கதை நாயகன். எனக்கான பாத்திரங்களில், எந்த இலக்கும், வரையறையும் கிடையாது. ஒரு இயக்குனர் விரும்பும் நடிகராகவே பயணிக்க விரும்புகிறேன்.


அடுத்தடுத்த படங்களில், உங்களுக்கு என்ன மாதிரியான பாத்திரங்கள்?


விவசாயிகளின் பிரச்னையை உணர்ச்சிகரமாக பேசும் படம், வாழ்க விவசாயி. இதில் நடித்ததில் எனக்கு பெருமை. இதன் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைக்கும். அடுத்ததாக, குஸ்கா படம் வெளியாகிறது. இது என்னுடைய இன்னொரு பரிணாமத்தை காட்டும் படமாக இருக்கும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு: ஆர்.ஜே.பாலாஜிஎனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு: ... படத்தை பார்த்து விட்டு விமர்சனம் செய்யுங்கள்! படத்தை பார்த்து விட்டு விமர்சனம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in