Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

அசத்திய அக்டோபர் 2019: ரூ.500 கோடி வருமானம்

15 நவ, 2019 - 13:50 IST
எழுத்தின் அளவு:
Rs.500-crore-earning-in-October-for-tamil-cinema

2019ம் ஆண்டில் 10 மாதங்கள் கடந்த நிலையில் அக்டோபர் மாதம் வரை 164 படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஒவ்வொரு வாரமும் சராசரியாக நான்கைந்து படங்களாகவும், ஒரு மாதத்திற்கு பதினைந்து படங்களாகவும் வருகின்றன. கடந்த 10 மாதங்களில் ஜனவரி மாதத்திற்குப் பிறகு அக்டோபர் மாதத்தில் தான் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான படங்கள் வெளிவந்துள்ளன.

அக்டோபர் மாதத்தில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை வெறும் 9 மட்டுமே. அவற்றில் மூன்று படங்களின் மூலம் கிடைத்த வருமானம் 500 கோடியைத் தாண்டியிருக்கும் என்பதுதான் ஆச்சரியம்.

அக்டோபர் 4ம் தேதி வெளிவந்த 'அசுரன்', அக்டோபர் 25ம் தேதி வெளிவந்த 'பிகில், கைதி' ஆகிய படங்களின் மூலம்தான் அந்த 500 கோடி வருமானம் வந்துள்ளது. 'அசுரன்' படத்தின் தியேட்டர் வருமானம், மற்ற உரிமைகள் மூலம் கிடைத்த வருமானம் என தயாரிப்பாளர் தரப்பிலேயே 100 கோடியைக் கடந்ததாகத் தெரிவித்தார்கள்.

அது போலவே 'கைதி' படத்தின் தியேட்டர் வருமானம், மற்ற உரிமைகள் ஆகியவற்றால் 125 கோடி வரை வருமானம் கிடைத்துள்ளதாக தயாரிப்பு வட்டாரங்களிலிருந்து நமக்குக் கிடைத்த தகவல்களை ஏற்கெனவே முதன் முதலில் நாம் செய்தியாகவே வெளியிட்டோம்.

அடுத்து விஜய் நடித்து வெளிவந்த 'பிகில்' படத்தின் வருமானம் 300 கோடியைத் தொட்டிருக்கும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதில் 250 கோடி ரூபாய் தியேட்டர்கள் மூலமும், 50 கோடி ரூபாய் சாட்டிலைட், டிஜிட்டல் உரிமை ஆகியவற்றின் மூலமும் வந்திருக்கும் என்கிறார்கள்.

ஒரே மாதத்தில் இந்த 500 கோடி வருமானம் என்பது இந்த வருடத்தில் இதற்கு முன் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. ஜனவரி மாதத்தில் வெளிவந்த 'பேட்ட, விஸ்வாசம்' ஆகிய படங்கள் மூலம் மொத்தமாக 400 கோடி வரை வருமானம் கிடைத்திருக்கலாம். இரண்டே இரண்டு படங்கள் மூலம் கிடைத்த விதத்தில் அது பெருமைதான் என்றாலும் அவை இரண்டுமே முன்னணி நடிகர்களின் படங்கள், கமர்ஷியல் படங்கள்.

ஆனால், அக்டோபர் மாதத்தில் வெளிவந்த 'அசுரன், கைதி' ஆகிய இரண்டு படங்களுமே கமர்ஷியல் படங்கள் அல்ல. இரண்டுமே கதையை நம்பி மட்டுமே எடுக்கப்பட்ட படங்கள். ஏன், அந்தப் படங்களின் ஹீரோக்களை நம்பி எடுக்கப்பட்ட படங்கள் என்று கூட சொல்ல முடியாது.

'அசுரன்' படத்தில் நடுத்தர வயது கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்ததை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டு கொண்டாடினார்கள். 'கைதி' படத்தில் சிறையிலிருந்து விடுதலையான ஒரு கைதி கதாபாத்திரம், ஜோடி கூட கிடையாது. அப்படியிருந்தும் கார்த்தியின் நடிப்பை அவரது கதாபாத்திரத்தை ரசிகர்கள் சிலாகித்தார்கள். 'பிகில்' படம் மட்டும்தான் ஹீரோவை நம்பி எடுக்கப்பட்ட படம். அதனால் மட்டுமே அந்தப் படம் 300 கோடி வருமானத்தை நெருங்கியது. மற்ற விமர்சனங்களில் 'பிகில்' படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள்தான் அதிகம் வந்தன.

'அசுரன், கைதி' படங்களின் வரவேற்பும், வெற்றியும், வசூலும், தமிழ் சினிமாவை பெருமைப்பட வைத்த படங்களாக அமைந்தன. தென்னிந்திய திரைப் பிரபலங்கள், ஹிந்தி திரைப் பிரபலங்கள் என பலரும் அந்தப் படங்களைப் பார்த்து பாராட்டினார்கள்.

அக்டோபர் 4ம் தேதி 'அசுரன்' படத்துடன் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த '100% காதல்' படம் வெளிவந்தது. இசையமைப்பாளராக 'அசுரன்' படத்தில் வாங்கிய பெயரை, நடிகராக '100% காதல்' படத்தில் கெடுத்துக் கொண்டார் ஜிவி. நல்ல கதைகளைத் தேர்வு செய்தால் மட்டுமே அவர் நடிகராகவும் ஜொலிக்க முடியும் என்பதை சீக்கிரமே புரிந்து கொள்வார் என நினைப்போம்.

அக்டோபர் 11ம் தேதி 'அருவம், பெட்ரோமாக்ஸ், பப்பி' ஆகிய படங்கள் வெளிவந்தன. மூன்று படங்களுமே தோல்விப் படங்களாக அமைந்தன. 'அருவம்' படத்தை பேய்க் கதை எனச் சொல்லி ஏமாற்றிவிட்டார்கள். 'பெட்ரோமாக்ஸ்' படமும் வழக்கமான பேய்க் கதையாக அமைந்து ஏமாற்றியது. இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தால் இளைஞர்கள் வந்து ரசிப்பார்கள் என நினைத்து 'பப்பி' குழுவினர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டார்கள்.

அக்டோபர் 18ம் தேதி 'பௌ பௌ, காவியன்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இரண்டுமே எண்ணிக்கையைக் கூட்டிய படங்கள்.

அக்டோபர் 25ம் தேதி 'பிகில், கைதி' படங்கள் வெளிவந்தன. கமர்ஷியலுக்கு ஒரு படமும், கன்டென்ட்டிற்கு படமும் அமைந்தன.

2019ம் ஆண்டின் முதல் மாதத்தில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு அடுத்த ஒன்பது மாதங்களிலும் தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்கள் அனைத்துமே ஓடுமா, ஓடாதா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தின.

ஆனால், அக்டோபர் மாதம் வந்த 'அசுரன், பிகில், கைதி' ஆகிய படங்கள் எப்படியும் ஓடிவிடும் என்ற ஒரு நம்பிக்கையை வெளியீட்டிற்கு முன்பே ஏற்படுத்தின. அதை ரசிகர்களும் அங்கீகரித்தார்கள்.

சினிமாவில் கமர்ஷியல் படங்களும் வர வேண்டும், வித்தியாசமான படங்களும் வர வேண்டும். வித்தியாசமான படங்களும் கமர்ஷியல் ரீதியாக ஓடிவிட்டால் அதைவிட மகிழ்ச்சி ஏதுமில்லை. அப்படி ஒரு மாதமாக அக்டோபர் மாதம் அமைந்தது ரசிகர்களுக்கான கொண்டாட்டத்தை விட திரையுலகினருக்கான கொண்டாட்டமாகவே அமைந்தது.

அக்டோபர் 2019 வெளிவந்த படங்கள்

அக்டோபர் 4 : 100% காதல், அசுரன்

அக்டோபர் 11 : அருவம், பெட்ரோமாக்ஸ், பப்பி

அக்டோபர் 18 :
பௌ பௌ, காவியன்

அக்டோபர் 25 : பிகில், கைதி

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சகலவல்ல நாயகரே: கமல் 60 ஸ்பெஷல்சகலவல்ல நாயகரே: கமல் 60 ஸ்பெஷல் வந்தது 15, வசூலானது 1 : நவம்பர் மாத படங்கள் ஓர் பார்வை வந்தது 15, வசூலானது 1 : நவம்பர் மாத ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in