Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

செப்டம்பர் மாதம் படங்கள் - சிறிய வெற்றியா, பெரிய வெற்றியா?

15 அக், 2019 - 11:44 IST
எழுத்தின் அளவு:
How-is-September-2019-for-Tamil-Cinema

2019ம் ஆண்டின் மூன்று கால் வருடத்தை செப்டம்பர் மாதத்துடன் கடந்து முடிந்துவிட்டோம். அந்த மாதம் வரை வெளிவந்த நேரடி தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 150ஐக் கடந்து விட்டது. இன்னும் எஞ்சியுள்ள மூன்று மாதங்களில் சுமார் 50 படங்கள் வெளிவந்து இந்த ஆண்டு வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 200ஐ கடக்க வாய்ப்புள்ளது.

செப்டம்பர் மாதத்தைப் பொறுத்தவரையில் வழக்கம் போலவே ஒவ்வொரு வாரமும் சராசரியாக நான்கு படங்களாவது வெளிவந்திருக்கின்றன. அந்த மாதத்தில் மொத்தமாக 14 படங்கள் தான் வந்திருந்தாலும் 4 படங்களாவது எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களாக இருந்தன.

'மகாமுனி, காப்பான், ஒத்த செருப்பு சைஸ் 7, நம்ம வீட்டுப் பிள்ளை' ஆகிய படங்கள் வெளியீட்டிற்கு முன்பாகவே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களாக இருந்தன. ஆனால், அவை நான்குமே முற்றிலும் பாராட்டும் அளவிலான படங்களாக அமையாமல் ஒரு சில குறைகளால் மொத்தப் பாராட்டையும் அள்ளாமல் போய்விட்டன.

செப்டம்பர் 6ம் தேதி 'மகாமுனி, சிவப்பு மஞ்சள் பச்சை, ஜாம்பி' ஆகிய படங்கள் வெளிவந்தன. 'மௌனகுரு' படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வந்த படம் 'மகாமுனி'. வெளியீட்டிற்கு முன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு படம். ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு இல்லாமல் போய் விமர்சகர்களால் மட்டுமே பாராட்டைப் பெற்றது.

'பிச்சைக்காரன்' படத்திற்குப் பிறகு சசி இயக்கத்தில் வெளிவந்த படம் என்பதால் 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்திற்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் ஒரு சராசரியான அக்கா, தம்பி பாசக் கதையைக் கொடுத் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கொஞ்சமாகப் பூர்த்தி செய்தார் இயக்குனர் சசி. யோகி பாபு நாயகனாக நடித்து முன்னர் வெளிவந்த 'தர்மபிரபு, கூர்கா' படங்கள் ஓரளவிற்கு வசூலித்தன. ஆனால், 'ஜாம்பி' படத்தில் எல்லாம் அவர் ஏன் நடித்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

செப்டம்பர் 13ம் தேதி 'என் காதலி சீன் போடுறா, ஒங்கள போடணும் சார், பெருநாளி' ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்தப் படங்களைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. படங்களின் எண்ணிக்கையை கூட்டுவதைத் தவிர இவை வேறொன்றும் செய்யவில்லை.

செப்டம்பர் 20ம் தேதி 'காப்பான், ஒத்த செருப்பு சைஸ் 7, சூப்பர் டூப்பர்' ஆகிய படங்கள் வெளியாகின. 'காப்பான்' படம் மொத்தமாக 100 கோடி வசூலைக் கொடுத்ததாக தயாரிப்பு நிறுவனமே கடந்த வாரம் அறிவித்தது. தொடர் தோல்விகளைக் கொடுத்த சூர்யாவுக்கு இந்தப் படம் ஓரளவிற்கு நிம்மதியைக் கொடுத்தது.

பார்த்திபன் இயக்கம் மற்றும் அவர் மட்டுமே நடித்த 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பைவிட திரையுலகத்தில் உள்ளவர்கள் கொடுத்த வரவேற்பு கூடுதலாகவே இருந்தது. இந்த இரண்டு படங்களும் இன்று 25வது நாளைத் தொட்டுள்ளன. 'சூப்பர் டூப்பர்' படம் வழக்கம் போல எண்ணிக்கையைக் கூட்டிய ஒரு படம்.

செப்டம்பர் 27ம் தேதி 'என்றும் உன் நினைவிலே, கோலா, நமக்குள் நாம், நம்ம வீட்டுப் பிள்ளை, திட்டம் போட்டு திருடுற கூட்டம்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படம் மட்டுமே ஓரளவிற்கு வெற்றிப்படமாக அமைந்தது. சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த முந்தைய சில படங்களைக் காட்டிலும் இந்தப் படம் அவருக்கு வியாபார ரீதியில் ஒரு வெற்றியைக் கொடுத்துள்ளது. மற்ற படங்கள் ஓரிரு காட்சிகளைக் கூடத் தாண்டவில்லை என்பது சோகம்.

செப்டம்பர் மாதத்தில் வெளிவந்த 14 படங்களில் அனைத்து தரப்பிலும், அனைத்து விதத்திலும் பாராட்டுப் பெற்ற படங்கள் என்று முழுமையாக எந்த ஒரு படத்தையும் சொல்ல முடியாது. பெரிய வெற்றி, பெரிய வரவேற்பு என்று எந்தப் படமும் இல்லை என்பதுதான் உண்மை.

விமர்சன ரீதியாக 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் ஒரே ஒருவர் நடித்த முயற்சிக்குப் பாராட்டுக்கள் கிடைத்தது. 'காப்பான்' படம் விவசாயக் கருத்தை வலியுறுத்தியதால் பாராட்டைப் பெற்றது. 'நம்ம வீட்டுப் பிள்ளை' ஒரு அழகான குடும்பக் கதையாகவும், 'சிவப்பு மஞ்சள் பச்சை' அக்கா-தம்பி பாசத்தை மையமாக வைத்து அமைந்ததால் ஓரளவிற்கு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

செப்டம்பர் 2019ல் வெளியான படங்கள்

செப்டம்பர் 6: மகாமுனி, சிவப்பு மஞ்சள் பச்சை, ஜாம்பி

செப்டம்பர் 13: என் காதலி சீன் போடுறா, ஒங்கள போடணும் சார், பெருநாளி

செப்டம்பர் 20: காப்பான், ஒத்த செருப்பு சைஸ் 7, சூப்பர் டூப்பர்

செப்டம்பர் 27:
என்றும் உன் நினைவிலே, கோலா, நமக்குள் நாம், நம்ம வீட்டுப் பிள்ளை, திட்டம் போட்டு திருடுற கூட்டம்

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கு மார்க்கெட்டை இழக்கும் தமிழ்ப் படங்கள்தெலுங்கு மார்க்கெட்டை இழக்கும் ... மாறிய அஜித்.... மாறுவாரா விஜய்...? மாறிய அஜித்.... மாறுவாரா விஜய்...?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
16 அக், 2019 - 06:23 Report Abuse
 nicolethomson பொருளாதார மந்தநிலை என்று யாரோ முனகுவது கேக்குது , இவ்ளோ படங்களுக்கு எவ்ளோ காசு போட்ருக்கானும்
Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
30 அக், 2019 - 13:40Report Abuse
எதிர்க்குரல் சினிமாவும் மந்த கதியில்தான் இருக்கிறது முருகன் போன்ற திருடர்களின் காசை வாரி இறைப்பதால் நஷ்டம் பற்றி யாரும் அலட்டி கொள்ள வில்லை. சதவீதபடி பார்த்தால் பத்து சதவீதமே வெற்றி படங்கள். எழுபது சதவீதம் தோல்வி படங்களே.....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in