Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

தொடரும் தடுமாற்றம்.... 2019 ஜுலை மாதப் படங்கள் ஓர் பார்வை

10 ஆக, 2019 - 18:27 IST
எழுத்தின் அளவு:
2019---July-month-movie-report

2019ம் ஆண்டு ஜுன் மாதம் முடிய 104 படங்கள் வரை வெளிவந்தன. ஜுலை மாதத்தில் மேலும் 17 படங்கள் வெளிவந்து அந்த எண்ணிக்கை 120 படங்களைக் கடந்துள்ளன.

120 படங்கள் வெளிவந்தாலும் இன்னமும் 'பேட்ட, விஸ்வாசம், தடம், காஞ்சனா 3, தடம்' ஆகிய படங்களுக்குப் பிறகு வேறு எந்தப் படங்களும் வசூல் ரீதியாக பெரிய லாபத்தைத் தரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

வாரா வாரம் நான்கைந்து படங்கள் வந்தாலும் அவை வசூலுக்கு நல்ல படங்களாக இல்லாமல் போவது துரதிர்ஷ்டவசமாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த சோகத்திற்கு திருப்புமுனையான படம் எப்போது வரும் திரையுலகத்தினரும், ரசிகர்களும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஜுலை 5ம் தேதி “எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல, களவாணி 2, காதல் முன்னேற்ற கழகம், ராட்சசி, வாழ்த்துகள்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'ராட்சசி, களவாணி 2' ஆகிய படங்கள் வெளியானது மட்டும்தான் ரசிகர்களுக்குத் தெரிந்தது. ஜோதிகா நடித்த 'ராட்சசி' படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்தாலும் படத்திற்கான வசூல் சுமாராகவே இருந்தது. 'களவாணி 2' படம் சில பல சர்ச்சைகளுக்குப் பிறகு வெளிவந்தது. முதல் பாகத்தைப் போல இல்லாமல் இந்தப் படம் ஏமாற்றத்தைத் தந்தது.

ஜுலை 12ம் தேதி, “போதை ஏறி புத்தி மாறி, கூர்கா, கொரில்லா, தோழர் வெங்கடேசன், வெண்ணிலா கபடி குழு 2' ஆகிய படங்கள் வெளிவந்தன. யோகி பாபு கதாநாயகனாக நடித்த 'கூர்கா' படம் தனக்கு லாபத்தைக் கொடுத்ததாக படத்தை வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர் அறிவித்தார்.

'கொரில்லா' படம் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தால் ஒன்றுமே செய்யாமல் போய்விட்டது. 'தோழர் வெங்கடேசன்' யதார்த்தமான படமாக இருந்தாலும் கவனத்தை ஈர்க்கவில்லை. 'வெண்ணிலா கபடி குழு 2' படம் முதல் பாகத்தைப் போல் அமையவில்லை. 'போதை ஏறி புத்தி மாறி' போன்ற படங்களை எதற்கு எடுக்கிறார்கள் என்றே புரியவில்லை.

ஜுலை 19ம் தேதி 'ஆடை, கடாரம் கொண்டான், உணர்வு' ஆகிய படங்கள் வெளிவந்தன. வெளியீட்டிற்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்திய 'ஆடை' படம் வெளியீட்டிற்குப் பின் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' படமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 'உணர்வு' படம் வந்த சுவடு தெரியாமல் போனது.

ஜுலை 26ல் 'ஆறடி, ஏ 1, சென்னை பழனி மார்ஸ், கொளஞ்சி' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் சந்தானம் நாயகனாக நடித்த 'ஏ 1' படம் சர்ச்சையை ஏற்படுத்தியதால் படத்திற்கு இலவச விளம்பரம் செய்திகளாக கிடைத்தது. அதுவே படத்திற்கு ரசிகர்களையும் வரவைத்துவிட்டது. வழக்கமான சந்தானம் காமெடி என்பதால் ரசிகர்களும் படத்திற்கு ஓரளவிற்கு வெற்றி தேடிக் கொடுத்துவிட்டார்கள்.

'கொளஞ்சி' படம் அப்பா, மகன் உறவைப் பற்றிய படமாக கிராமத்து கலகலப்புடன் அமைந்தது. இருப்பினும் ரசிகர்களால் கவனிக்கப்படாமல் போனது வருத்தம்தான். 'சென்னை பழனி மார்ஸ்' போன்ற படங்களில் விஜய் சேதுபதியின் பங்கும் இருக்கிறது என்பது ஆச்சரியம்தான்.

ஜுலை மாதம் வெளிவந்த 17 படங்களில் விக்ரம் நடித்த ‛கடாரம் கொண்டான்', சந்தானம் நடித்த 'ஏ 1', யோகி பாபு நடித்த ‛கூர்கா' படங்களை தவிர மற்ற படங்கள் வசூல் ரீதியாக தாக்குப் பிடிக்க முடியவில்லை. எதிர்பார்க்கப்பட்ட படங்களான 'ராட்சசி, களவாணி 2, கொரில்லா, ஆடை' ஆகிய படங்கள் ஏமாற்றத்தையே கொடுத்தன.

இந்த வருடம் முடிவடைய இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் இனிமேலாவது வரும் படங்களில் ஒரு சில படங்களாவது இந்த ஆண்டிற்கான சிறந்த படங்கள் என்று சொல்லிக் கொள்ளும்படியாக வந்தால் மகிழ்ச்சியே.

ஜுலை 2019ல் வெளிவந்த படங்கள்

ஜுலை 5
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல
களவாணி 2
காதல் முன்னேற்ற கழகம்
ராட்சசி
வாழ்த்துகள்

ஜுலை 12
போதை ஏறி புத்தி மாறி
கூர்கா
கொரில்லா
தோழர் வெங்கடேசன்
வெண்ணிலா கபடி குழு 2

ஜுலை 19
ஆடை
கடாரம்கொண்டான்
உணர்வு

ஜுலை 26
ஆறடி
ஏ 1
சென்னை பழனி மார்ஸ்
கொளஞ்சி

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
குறைவான படங்கள், குறைவான ஓட்டம் - ஜுன் மாதப் படங்கள் ஓர் பார்வைகுறைவான படங்கள், குறைவான ஓட்டம் - ... ஜியோவில் உடனே ரிலீஸ்: அலறும் தியேட்டர்கள் ஜியோவில் உடனே ரிலீஸ்: அலறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
11 ஆக, 2019 - 15:19 Report Abuse
A.George Alphonse இந்த சினிமா பேர்கள் ரசிகர்களை வெறுப்பேத்துகிறது.அதுவும் ஒரு காரணம் தான் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in