Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

குறைவான படங்கள், குறைவான ஓட்டம் - ஜுன் மாதப் படங்கள் ஓர் பார்வை

11 ஜூலை, 2019 - 11:42 IST
எழுத்தின் அளவு:
analysis-of-june-month-released-movies

2019ம் ஆண்டின் அரையாண்டு காலம் முடிந்துவிட்டது. இந்த அரையாண்டில் சுமாராக 104 தமிழ்ப் படங்கள் வெளிவந்துள்ளன. வினியோகஸ்தர்களின் கணக்குப்படி அனைவருக்கும் லாபம் தந்த படங்களாக பேட்ட, விஸ்வாசம், தடம், காஞ்சனா 3, ஆகிய நான்கு படங்கள்தான் அமைந்தன என்றார்கள்.

எதிர்பார்த்து தோல்வியடைந்த படங்களாக தேவ், 90 எம்எல், சூப்பர் டீலக்ஸ், அயோக்யா, மிஸ்டர் லோக்கல், என்ஜிகே, சிந்துபாத் ஆகிய படங்கள் அமைந்தன.


சிலர் தங்களது படங்களை வெற்றிப் படங்கள் என்று கூறிக் கொண்டு சக்சஸ் மீட்டி கொண்டாடிய நிகழ்வுகளும் வழக்கம் போல நடைபெற்றது. 6 மாத காலத்தில் வெளிவந்த படங்களில் 4 படங்கள்தான் வெற்றி, மீதி 100 படங்கள் தோல்வி என்றால் ஒரு படத்திற்கு சராசரியாக 3 கோடி வைத்தால் கூட 300 கோடி ஆயிற்று. இதில் பெரிய நடிகர்களின் படங்கள் சுமார் 30, 40 கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட படங்களாக இருக்கும். அப்படி சேர்த்தால் அதில் மேலும் ஒரு 200 கோடி நஷ்டம் வந்திருக்கும். மொத்தமாக இந்த அரையாண்டு காலத்தில் சுமார் 500 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.


கோடை விடுமுறை முடிந்து ஜுன் மாதம் வந்தாலே பலரும் படங்களை வெளியிடத் தயங்குவார்கள். இருப்பினும் மேலும் தாமதிக்க முடியாத காரணத்தால் ஜுன் மாதத்தில் சிலர் படங்களை வெளியிட்டார்கள். ஜுன் மாதத்தில் மொத்தம் 13 படங்கள்தான் வெளிவந்தது. இது வழக்கத்தை விட குறைவுதான்.


ஜுன் மாதம் 5ம் தேதி ரகுமான் மற்றும் ஆறு நாயகிகள் நடித்த 7 படம் வெளியானது. இது தமிழ்ப் படமா, தெலுங்குப் படமா என்ற சந்தேகத்தை எழுப்பியதால் ரசிகர்கள் தியேட்டர்கள் பக்கம் வரவில்லை.


ஜுன் 7ம் தேதி “கொலைகாரன், ஜெயிக்க போவது யாரு, ருசித்துப் பார் என்பை” ஆகிய படங்கள் வெளிவந்தன. தொடர்ந்து சில தோல்விப் படங்களைக் கொடுத்து வந்த விஜய் ஆண்டனிக்கு கொலைகாரன் சிறு திருப்புமுனையைக் கொடுத்தது. வசூல் ரீதியாக லாபத்தையும் தரவில்லை, நஷ்டத்தையும் தரவில்லை, கையைக் கடிக்காமல் இருந்திருக்கும் என்கிறார்கள். இருந்தாலும் படம் வெற்றி என சக்சஸ் மீட் கொண்டாடிய படம் கொலைகாரன். மற்ற இரண்டு படங்கள் வெளிவந்ததா இல்லையா என்பதே சந்தேகமாக இருக்கிறது.


ஜுன் 14ம் தேதி “கேம் ஓவர், சுட்டுப் பிடிக்க உத்தரவு, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகிய படங்கள் வெளிவந்தன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேம் ஓவர் படம் மூலம் தமிழ் சினிமா பக்கம் வந்தார் டாப்சி. ஆனாலும், படம் தமிழ் ரசிகர்களைக் கவரவில்லை. சுட்டுப் பிடிக்க உத்தரவு கிளைமாக்சை மட்டும் ரசிக்க வைத்தது. சிவகார்த்திகேயனின் தயாரிப்பாக வெளிவந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் ஒன்றைரை கோடி செலவு செய்து தயாரிக்கப்பட்டு மூன்று கோடி வசூல் செய்தது என்கிறார்கள். அதனால்தான் சக்சஸ் மீட்டும் நடத்தினார்களாம்.


ஜுன் 21ம் தேதி “தும்பா, மோசடி” ஆகிய படங்கள் வெளிவந்தன. தும்பா ஒரு வாரமும், மோசடி ஒரு நாளும் தாக்குப் பிடித்தது. ஜுன் 27ம் தேதி வெளிவர வேண்டிய சிந்துபாத் சிக்கல்களுக்குப் பிறகு மறுநாள் ஜுன் 28ம் தேதி வெளிவந்தது. அன்றைய தினம் மேலும், ஜீவி, தர்ம பிரபு, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்கள் வெளிவந்தன. ஜீவி படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. தர்ம பிரபு மேக்கிங்கில் சொதப்பினாலும் வசனங்களில் கைத்தட்டலைப் பெற்றது. ஹவுஸ் ஓனர் வித்தியாசமான முயற்சி, ஆனால், தமிழ் ரசிகர்கள் இன்னும் அம்மாதிரியான படங்களைப் பார்க்கத் தயாராகவில்லை.


ஜுன் மாதம் வெளிவந்த படங்களில் கொலைகாரன், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகிய இரண்டு படங்கள்தான் போட்ட முதலீட்டை எடுத்திருக்க வாய்ப்புள்ள படங்களாக அமைந்தன. மற்ற படங்கள் பெரும் நஷ்டத்தை எற்படுத்திய படங்கள்தான். ஒவ்வொரு படத்திற்கும் வெளியீடு என்பதுதான் முக்கியமானது. அதோடு, படமும் கொஞ்சமாவது ரசிக்கும்படியாக இருக்க வேண்டும். பலர் அவற்றையெல்லாம் கவனத்தில் கொள்வதேயில்லை.


ஒவ்வொரு படத்திற்கும் பலமான போட்டி இல்லாமல், குறிப்பிட்ட தியேட்டர்கள் கிடைத்தால் மட்டுமே அவை ஓரளவிற்குத் தப்பிக்க முடியும். தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்களும் குறைந்து கொண்டே வருகிறார்கள். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போதுள்ள ஆலோசனைக் குழுவினர், சரியான வெளியீடு பற்றிய திட்டமிடல், தியேட்டர் முன்பதிவுக் கட்டணக் குறைப்பு, பார்க்கிங் இன்ன பிற கட்டணக் குறைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி அதைக் குறைத்தால் மட்டுமே அடுத்த ஆறு மாதங்களில் வெளிவர இருக்கும் படங்கள் ஓரளவிற்கு தப்பிக்க வாய்ப்பிருக்கும்.


காலம் காலமாக உள்ள பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், கடும் விமர்சனம் செய்தால் சட்ட ரீதியான நடவடிக்கை, பத்திரிகையாளர்களை அதிகம் அழைக்க மாட்டோம் என்ற தேவையற்ற கட்டுப்பாடுகளை விதித்தால் அது சினிமாவிற்கு மேலும் பாதகமாக அமையுமே தவிர பாலமாக அமையாது. தமிழ் சினிமா தயாரிக்கும் தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற விரைந்து நடவடிக்கைகள் எடுத்தால்தான் புதிதாக படம் தயாரிக்க மேலும் பலர் வருவர்.




2019 ஜுன் மாதம் வெளிவந்த படங்கள்...




ஜுன் 5


7


ஜுன் 7


ஜெயிக்கப் போவது யாரு, கொலைகாரன், ருசித்துப்பார் என் அன்பை


ஜுன் 14


கேம் ஓவர், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, சுட்டுப்பிடிக்க உத்தரவு


ஜுன் 21


மோசடி, தும்பா




ஜுன் 28


தர்மபிரபு, ஹவுஸ் ஓனர், ஜீவி, சிந்துபாத்


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
இசைக் குடும்பத்திலிருந்து ஒரு நடிகை : பவானி ஸ்ரீஇசைக் குடும்பத்திலிருந்து ஒரு நடிகை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
12 ஜூலை, 2019 - 17:20 Report Abuse
Vasudevan Srinivasan சென்ற ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கி விஜய் நடித்து சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'சர்க்கார்' படத்தில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஒரிஜினல் பெயர் என்று சொல்லப்பட்ட பெயரை பயன் படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் போராட்டமே நடத்திய 'அரசியல்' கட்சிகள் சமீபத்தில் வெளியான 'மோசடி' என்ற படத்தின் விளம்பரங்களில் (நான் படம் பார்க்கவில்லை எனவே படத்தின் டைட்டிலில் எப்படி என்பது தெரியவில்லை) 'மோ(ச)டி' என்று தலைப்பில் சில்மிஷம் (அதாவது ச என்ற எழுத்தை தனிமைப்படுத்தி) செய்திருந்ததை ஏன் 'அரசியல்' கட்சிகள் கண்டுகொள்ளவில்லை..?
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
14 ஜூலை, 2019 - 15:59Report Abuse
Mirthika Sathiamoorthiபதில் ரொம்ப சிம்பிள்….ஒரு படத்தை பார்த்து ...ரசிகனுங்க கொந்தளிச்சு பேன் மிக்ஷி ன்னு போட்டு உடைச்சான்னுங்கா... அந்த படத்தில் உடைக்கப்படும் பொருளெல்லாம் முதல்வர் படம் போட்டிருக்கும்...இதை யாரை குறிப்பிட்டு இருப்பாங்கன்னு நீங்க நெம்புறீங்க? ...இன்னொரு படத்துக்கும் அது மாதிரி எதிர் வினை ரசிகனிடம் இருந்து வந்துச்சா? அத விடுங்க, அப்படியொரு படம் வெளிவந்துச்சான்னு எத்தனைபேருக்கு தெரியும்…? இந்தமாதிரி பிரச்னை ஏற்படுத்தும் காட்சி வச்ச நம்ம படத்துக்கும் எதிர்ப்பு வரும் புபிளிசிட்டி கிடைக்கும் கூட்டம் வரும்ன்னு எதிர்பார்த்து படம் எடுத்தவங்ககிட்டே ஏமாற சொல்றீங்களா? இப்படி ஒரு படத்துக்கு எதிரா போராடுறது, எங்கப்பன் புதருக்குள் இல்லேங்கிற மாதிரி யாராச்சும் அவங்க சொந்த காசுலே சூனியம் வச்சுக்குவாங்களா? இதெல்லாம் ஒரு கேள்வி... ஒண்ணுமே தெரியாத பச்சை மன்னா இருக்கீங்களே…....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in