Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

இசைக் குடும்பத்திலிருந்து ஒரு நடிகை : பவானி ஸ்ரீ

22 ஜூன், 2019 - 17:28 IST
எழுத்தின் அளவு:
GV-Prakash-sister-Bhavanisri-interviews

விஜய்சேதுபதி நடித்து வரும் க/பெ ரணசிங்கம் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் உடன்பிறந்த தங்கையான பவானி ஸ்ரீ. விஸ்காம் பட்டதாரியான இவர், ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம், ப்ரியதர்ஷன் இயக்கிய சில நேரங்களில் ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

உதவி இயக்குநராக பணியாற்றிய பவானி ஸ்ரீ அரிதாரம் பூசி நடிகையாக மாறியது எப்படி? பவானி ஸ்ரீ பேசுகிறார்......

நடிப்பு ஆர்வம் எப்படி.?
“நடிப்பு மீது சின்ன வயதிலிருந்தே ஆசை என்று சொல்ல மாட்டேன். அதன் மீது சின்னதாக ஆர்வம் இருந்ததே தவிர நாமும் நடிகையாக வேண்டும் என்ற ஆசை, கனவு எல்லாம் எனக்கு இல்லை. கல்லூரியில் விஸ்காம் படிச்சிக்கிட்டிருக்கும்போது ஒரு செமஸ்டரில் ஷார்ட் பிலிம் மேக்கிங் பற்றிய சப்ஜெக்ட் வந்தது. அதை பண்ணும்போதுதான் எனக்கு நடிப்பில் ஆர்வமே வந்தது.

கல்லூரி முடித்த பிறகு இயக்குநர் விஜய்யிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக சேர்ந்து, இது என்ன மாயம் படத்தில வேலை பார்த்தேன். அதற்கப்புறம் பிரியதர்ஷன், சில நேரங்களில் படம் பண்ணியபோது அதில் வேலை பார்த்தேன். இது என்ன மாயம் படத்தில வொர்க் பண்ணிக் கொண்டிருக்கும் போது பிரியதர்ஷன் சார் படத்துக்கு பெண் உதவி இயக்குநர் வேண்டும் என்ற கேட்டதால் விஜய் சார் என்னை அங்கே சேர்த்துவிட்டார்.

என்னோட நண்பர்கள் அவங்களோட ஷாட் பிலிம்ல நடிக்கும்படி கூப்பிடுவாங்க. அவங்களுக்காக பண்ண ஆரம்பிச்சேன். அதுக்கக்கறம் எனக்கே ஆர்வம் அதிகமாகிடுச்சு. நடிகை அமலா, ஒரு தெலுங்கு வெப்சீரிஸ் பண்ணாங்க. அதில் அவங்களோட சின்ன வயது கேரக்டரில் நான் நடிச்சேன். அப்படி நடிக்க ஆரம்பிச்ச பிறகு கலைராணி, நடத்துகிற ஆக்ட்டிங் கிளாஸ்ல சேர்ந்து முறையாக ஆக்டிங் கத்துக்கிட்டேன்.”

நடிக்கிறேன் என்று சொன்னதும் குடும்பத்தில் என்ன சொன்னார்கள்.?
என்னுடைய நடிப்பு ஆர்வத்துக்கு என் குடும்பத்தில உள்ள எல்லோருமே ரொம்ப என்கரேஜ் பண்ணினாங்க. அப்பாவுக்குத்தான் ஆரம்பத்துல விருப்பமில்லை. நடிப்பு எல்லாம் வேண்டாம்னு சொன்னார். நடிப்பில் நான் உறுதியாக இருக்கிறதைப்பார்த்துட்டு பிறகு சமாதானமாகிவிட்டார். என்னோட சித்திங்க இரண்டு பேரும் எல்லா வேலன்டைன்ஸ் டேவுக்கும் மியூஸிக் வீடியோ பண்ணுவாங்க. அப்படி பண்ணும்போது அதில என்னைத்தான் நடிக்க வைப்பாங்க. ஸோ.. நான் நடிக்க வந்ததில அவங்களுக்கும் ஹேப்பிதான்.

அண்ணன் ஜிவி பிரகாஷ் என்ன சொன்னார்.?
எல்லாரையும்விட எனக்கு அதிகமாக சப்போர்ட் பண்ணினது என்னோட அண்ணன் ஜி.வி.பிரகாஷ் தான். இந்த துறைக்கு வரணும்னு உறுதியா இருந்தால் முழுசா இறங்கி பண்ணிடுன்னு சொன்னார். அதுமட்டுமல்ல, நடிப்பில் உன்னோட முழுத்திறமையை செலுத்தி நடிக்கணும் என்றும் சொன்னார். எனக்கு ஏதாவது குழப்பம் இருந்தாலும் தீர்த்து வைப்பார். பல விஷயங்களில் அவர் எனக்கு அறிவுரை பண்ணுவார். அண்ணியும் ரொம்ப சப்போர்ட்டா இருப்பாங்க. க/பெ ரணசிங்கம் படத்தின் ஷூட்டிங்குக்காக நான் ராமநாதபுரத்துக்கு கிளம்பியபோது என் கூடவே வந்து முதல் இரண்டு நாள் பார்த்துக்கிட்டாங்க.”

முதல் படமே விஜய் சேதுபதி எப்படி?
முதல்பட வாய்ப்பே விஜய்சேதுபதி உடன் க/பெ ரணசிங்கம்... நினைத்துப்பார்த்தால் எனகே வியப்பாக இருக்கிறது. இந்தப்பட வாய்ப்பு எனக்குக் கிடைத்ததற்கு அண்ணன் ஜி.வி.பிரகாஷ் நடிச்ச அடங்காதே படத்தின் இயக்குநர் சண்முகத்துக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் எங்களுடைய குடும்ப நண்பர். எனக்கு நடிக்கும் ஆசை இருப்பதை அறிந்த அவர், அறம் படத்தில் கோபி நயினார் சாருக்கு உதவி இயக்குநராக இருந்த விருமாண்டியிடம் படம் பண்ணப்போறார்னு தெரிஞ்சு, அவர்கிட்ட என்னைப் பத்தி சொல்லி இருக்கார். அதை ஞாபகத்தில் வச்சிருந்து இந்த ரோலுக்கு என்னை நடிக்க வைக்கலாம்னு சண்முகம் சார்கிட்ட சொல்லியிருக்கார் விருமாண்டி.

சினிமாவுல நடிக்கணும்ங்கிற ஆசை எனக்கு இருந்தாலும், நல்ல படங்களில் நல்ல கேரக்டர்களில் நடிக்கணும்கிறதுதான் என்னோட ஆசை. இன்னொரு விஷயம்... என் குடும்பத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. அதை காப்பாத்த வேண்டிய ரெஸ்பான்ஸிபிலிட்டி எனக்கு இருக்கு. இந்தபடத்தோட கதையை விருமாண்டி சொன்னாங்க. நான் ஆசைப்பட்ட மாதிரியே கதையும் என்னோட கேரக்டரும் இருந்ததால் உடனே நடிக்க ஒத்துக்கிட்டேன்.”

தமிழில் மட்டும் தான் நடிப்பீர்களா?
க/பெ ரணசிங்கம் படத்தில் நடிப்பது தெரிய வந்ததும் நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு வருகிறது. அதில் சில படங்களில் நான் நடிக்க வாய்ப்பு இருக்கிறது. தமிழ்ப்படங்களில் மட்டும்தான் நடிக்க வேண்டும் என்ற கொள்கை இல்லை. மற்ற மொழிப்படங்கள் வந்தாலும் நல்ல கேரக்டராக, எனக்கு பிடிச்ச கதையாக இருந்தால் நிச்சயம் பண்ணுவேன். எனக்கு தெரியாத மொழியானாலும் ஓகேதான். வெப்சீரிஸ் பண்ணும்போது எனக்கு தெலுங்கு தெரியாதுதான். அர்த்தம் என்னன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு நடிச்சேன்.

இசை ஆர்வம் இல்லையா?
இசைக்குடும்பத்திலிருந்து நடிக்க வந்ததினால் உங்களுக்கு இசை ஆர்வம் இல்லையா என்று பலரும் கேட்கிறார்கள். இசை என் ரத்தத்திலேயே இருக்கிறது. அதனால் ஆர்வம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. என் அண்ணன் இசையில் நிறைய ஆல்பங்களில் ஹார்மணி எல்லாம் பாடிக்கிட்டுதான் இருந்தேன். அந்த டைம்ல எனக்கு கான்ஸன்ட்ரேஷன் இல்லவே இல்லை. பாடுவதற்கு ரொம்பவே வெட்கப்படுவேன். அதனால் மியூசிக்கை கண்ட்டினியூ பண்ண முடியலை. ஆனா ஏன் மியூஸிக் கத்துக்கலன்னு இப்ப நான் உண்மையாகவே பீல் பண்றேன். சீக்கிரமே பாட்டு கத்துக்கலாம்னு இருக்கேன். பாட்டு கத்துக்கிறது கூட பாடகியா வர்றதுக்காக இல்ல. சும்மா கற்று வைத்துக் கொள்ளலாமேன்னு தான்.”

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தரணி ஆள வா... பிகில் சத்தம் - விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்தரணி ஆள வா... பிகில் சத்தம் - விஜய் ... குறைவான படங்கள், குறைவான ஓட்டம் - ஜுன் மாதப் படங்கள் ஓர் பார்வை குறைவான படங்கள், குறைவான ஓட்டம் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Seeru
  • சீறு
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ரியா சுமன்
  • இயக்குனர் :ரத்ன சிவா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Dagalti
  • டகால்டி
  • நடிகர் : சந்தானம்
  • நடிகை : ரித்திகா சென்
  • இயக்குனர் :விஜய் ஆனந்த்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in