Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

தரணி ஆள வா... பிகில் சத்தம் - விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்

22 ஜூன், 2019 - 11:08 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-to-Vijay

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் வாரிசு என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஜய். 16 வயதில் சினிமாவில் அறிமுகமாகி இன்று 60 படங்களை தாண்டி நிற்கிறார் விஜய். விஜய்யின் திரை பயணத்தில் வெற்றி, தோல்வி சம அளவில் தான் இருக்கின்றன. இன்று(ஜூன் 22-ம் தேதி) நடிகர் விஜய் தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தமிழ்த் திரையுலகத்தின் இன்றைய வசூல் நாயகர்களில் முக்கியமானவர் விஜய். தனக்கென மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை உலக அளவில் வைத்திருப்பவர். சிறியவர் முதல் பெரியவர் வரை விஜய்யின் படங்களை ரசித்துப் பார்ப்பவர்கள் அதிகம்.

முழுக்க முழுக்க என்டெர்டெயின்மென்ட் என்பதை மட்டுமே மனதில் கொண்டு தன்னுடைய படங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்தால் மட்டுமே போதும் என்று முடிவெடுத்து அதற்கேற்றபடி நடித்தும் வருகிறார்.

விஜய்யின் திரைப்பயணம் பற்றி ஒரு சின்ன ரீ-வைண்ட்...

தொடர் தோல்வி
குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் விஜய் நடித்திருந்தாலும், 1992-ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் முதல்படமே தோல்வியை கொடுத்தது. அதையடுத்து தனது மகனை விஜய்காந்த் உடன் செந்தூரபாண்டி படத்தில் நடிக்க வைத்தார் எஸ்ஏசி., இந்தப்படம் மூலம் விஜய்யும் ஓரளவுக்கு பேசப்படும் நடிகரானார்.

ஆனாலும், அதன்பின் அவர் நடித்த ரசிகன், தேவா, விஷ்னு, சந்திரலேகா, கோயமுத்தூர் மாப்பிள்ளை படங்களும் தோல்வியை கொடுத்தன. இதனால் பொருளாதார நெருக்கடிக் ஆளானார் எஸ்.ஏ.சி., மகனை ஹீரோவாக்கமால் விடுவதில்லை என்று போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து நடத்தினார் எஸ்.ஏ.சி., அதில் வெற்றியும் பெற்றார்.

திருப்பம் தந்த பூவே உனக்காக
விஜய்யும் தன் பயணத்தை மாற்றினார். விளையாட்டுத் தனமான கேரக்டர்களை விட்டுவிட்டு செண்டிமென்டுக்கு வந்தார். பூவே உனக்காக, வசந்த வாசல், காலமெல்லாம் காத்திருப்பேன், காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் இப்படி அவர் தேர்ந்தெடுத்த பாதை அவருக்கு பெண் ரசிகைகளை உருவாக்கியது. தங்கள் வீட்டின் ஒரு பிள்ளையாக நினைக்கத் தொடங்கினார்.

லவ் டூ ஆக்ஷன்
அதன் பிறகு அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாரானார். மின்சார கண்ணா, லவ்டுடே, கண்ணுக்குள் நிலவு, குஷி, பிரியமானவளே போன்றவை அவரை ரொமாண்டிக் ஹீரோவாக்கியது. இளம் பெண் ரசிகைகளை உருவாக்கிக் கொடுத்தது. அடுத்துதான் ஆக்ஷ்ன் அவதாரத்தை ஆரம்பித்தார். பகவதி, தமிழன், திருமலை, சிவாகாசி, திருப்பாச்சி, கில்லி-யென விஜய் ஆடிய ஆக்ஷ்ன் ஆட்டத்தில் பாக்ஸ் ஆபீஸ்கள் கலகலத்தன.

வசூல் சக்கரவர்த்தி
அழகிய தமிழ் மகன், நண்பன், காவலன் போன்ற படங்களில் வேறு தளங்களில் தன் நடிப்பை நிரூபித்தார். துப்பாக்கி படத்தின் முதல் முதன்முறையாக ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்தார் விஜய். அதன்பின்னர் அவர் நடித்த கத்தி, மெர்சல், சர்கார் போன்ற படங்கள் வசூலில் பெரிய சாதனை படைத்தது அனைவரும் அறிந்தது. இன்று நடிகர் ரஜினிகாந்திற்கு அடுத்தப்படியாக வசூல் சக்கரவர்த்தியாக திகழ்வது விஜய் மட்டுமே. சில ஏரியாக்களில் ரஜினியையும் முந்தியிருக்கிறார் விஜய் என்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

நடனத்தில் வல்லவர்
கத்தி, மெர்சல் மாதிரியான படங்களில் சமூக அக்கறையை விதைத்தார். விஜய் தன் கேரியரை படிப்படியாக எப்படி வடிமைத்துக் கொண்டார் என்பதையே இது காட்டுகிறது. நடிப்பு மட்டுமல்லாது, தென்னிந்திய நடிகர்களில் சிறப்பாக நடனம் ஆடக்கூடிய நடிகர் என பெயரை பெற்றவர். அதுமட்டுமல்ல, தனது படங்களில் 30 பாடல்கள் வரை பாடி பாடகர் என நிரூபித்திருக்கிறார். தற்போது அடுத்தக்கட்டமாக தயாரிப்பாளராகவும் களமிறங்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அசாத்திய வளர்ச்சி
பலமான சினிமா பின்னணி இருந்தாலும் முதல் படமே சூப்பர் ஹிட் அடுத்தடுத்து வாய்ப்பு, நான்காவது படத்தில் கோடியை தாண்டிய சம்பளம் என்ற புலி பாய்ச்சல் விஜய் கேரியரில் இல்லை. தன் சினிமா பயணத்தில் ஒவ்வொரு அடியையும் பக்குவமாக எடுத்து வைத்து வளர்ந்தார். விஜய்யின் இன்றைய வளர்ச்சி சாதாரணமாகக் கிடைத்ததும் இல்லை. அறிமுகமான நாளிலிருந்து படிப்படியாக வளர்ந்து ஏற்றத், தாழ்வுகளுக்குப் பிறகுதான் இப்படி ஒரு நிலையை அவர் அடைந்திருக்கிறார்.

சமூக அக்கறை
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, ஜல்லிக்கட்டு போராட்டம், அனிதா தற்கொலை சம்பவம் போன்ற விஷயங்களில் தனது பங்களிப்பை காட்டி, சமூக அக்கறையிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். வழக்கமாக தனது பிறந்தநாளில் ரசிகர்களை சந்திக்கும் விஜய், கடந்த சில ஆண்டுகளாக தவிர்த்து வருகிறார். இந்தாண்டும் அவர் ரசிகர்களை சந்திக்கவில்லை.

அடுத்தக்கட்டம் அரசியல்?
விஜய்க்கு அரசியல் ஆசை உண்டு. எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவது உறுதி. இதை படங்கள் வாயிலாகவும், தன் பட விழாக்களிலும் மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார். விஜய் ரசிகர்களும் அவ்வப்போது அவரை அரசியலுக்கு அழைத்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் மதுரை ரசிர்கள், விஜய் விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைத்து நகரம் முழுவதும் விதவிதமான போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். மேலும் இந்த ஆண்டு விஜய்யின் பிறந்த நாளுக்கான டி.பி-யை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. அதிலும் அந்த டி.பி.க்கான போஸ்டரில் தரணி ஆள வா தளபதி என்ற வாசங்கள் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிகில் சத்தம்
இந்தாண்டு விஜய் ரசிகர்கள் பிகில் பிறந்தநாளாக கொண்டாடி வருகின்றனர். அட்லீ இயக்கத்தில் விஜய்யின் 63வது படமாக உருவாகி வரும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் நேற்று மாலை வெளியிட்டனர். படத்திற்கு பிகில் என பெயர் வைத்திருக்கின்றனர். விஜய் இரண்டு விதமான வேடங்களில் நடிக்கிறார். நேற்று(ஜூன் 21) காலையிலிருந்தே இந்த முதல் பார்வை வெளியீட்டைப் பற்றி டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் லட்சக்கணக்கான பதிவுகளைப் போட்டார்கள். HBDEminentVijay என்ற ஹேஷ்டேக்கில் மட்டும் 21 லட்சம் டுவீட்டுகள் பதிவிடப்பட்டன. அது 72 லட்சம் பேரைச் சென்றடைந்துள்ளன. அதன் பிறகு மாலையில் படத்தின் பெயரை பிகில் என அறிவித்த சில நிமிடங்களிலேயே அந்தப் பெயர் இந்திய அளவிலும், உலக அளவிலும் டிரென்டிங் ஆனது.

தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். சமூக வலைதளங்களில் முழுக்க ஒரே பிகில் சத்தமாகவும், விஜய்யின் பிறந்தநாள் வாழ்த்து சத்தமும் அதிகளவில் ஒலித்து கொண்டிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
தேர்தல் நிறுத்தம், அடுத்தக்கட்டம் என்ன? : ராதாரவி பேட்டிதேர்தல் நிறுத்தம், அடுத்தக்கட்டம் ... இசைக் குடும்பத்திலிருந்து ஒரு நடிகை : பவானி ஸ்ரீ இசைக் குடும்பத்திலிருந்து ஒரு நடிகை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

agni - chennai,இந்தியா
22 ஜூன், 2019 - 18:59 Report Abuse
agni அந்த முதல் போட்டோ இருப்பவர் மூன்றாவது போட்டோவில் எப்படி மாறி இருக்கிறார்.எத்தனை செலவு சிகிச்சை செய்து தன் முகத்தினை நிறத்தினை,தோற்றத்தினை மாற்றினாரோ? என்ன தான் இப்போது சினிமாவில் வளர்ந்த பின் பெரிய வசனங்கள் பேசினாலும்,பலர் சினிமாவில் தொடக்கத்தில் நடிக்க தன் தோற்றம்,நிறம் அனைத்தையும் முதலில் மாற்ற வேண்டி உள்ளது,சிலர் மட்டுமே தன் இயல்பான தோற்றம் ,நடிப்பில் நடித்து வெற்றி பெறுகின்றனர். பிளாஸ்டிக் சர்ஜரி, மேக்கப் இவையெல்லாம் இல்லாமல் இவர்கள் நடித்திருந்தால் இப்போது இவர்களை யாரும் திரையில் கூட பார்க்க முடியாது.என்ன சொன்னாலும் கோடிகளை சம்பாதிக்க இயல்பினை மறைத்து வேஷம் போடத்தான் வேண்டியுள்ளது
Rate this:
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
22 ஜூன், 2019 - 17:03 Report Abuse
பெரிய ராசு Velan உன்னை மாதிரி ஆட்கள் இருக்கறதனால் தான் நாங்க எல்லாம் நாடோடிகளை போல அமெரிக்காவில் இருக்கின்றோம்
Rate this:
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
22 ஜூன், 2019 - 14:03 Report Abuse
பெரிய ராசு மக்களே நீங்களே சொல்லுங்க குத்தாட்டத்தை தவிர இவனுக்கு என்ன தெரியும். எல்லா கூத்தாடிகளுக்கு ஒரே நோக்கம் முதலமைச்சர் ஆவது தான். இவன் பெயரை ஜோசப் விஜய்னு தெயிரீயாம போடா முடியுமா ??
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
22 ஜூன், 2019 - 13:00 Report Abuse
VELAN S எத்தனையோ நடிகைகளோடு நடித்தாலும் அட்ஜஅஸ்மாண்டில் எந்த நடிகையையும் விஜய் படுக்கைக்கு கூப்பிட்டதில்லை என்று சொல்வார்கள் , பெண்கள் விஷயத்தில் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கிறார் என்று தெரிகிறது , இவரிடம் தனிமனித ஒழுக்கம் உண்டு , அதனால் அரசியலில் விஜய் அரசியலில் வர தயங்காது முயற்சி எடுப்பார் . ஆனால் அதை விட முக்கியமானது , இவர் தமிழ் மக்களின் , கவலை அறிந்து , தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்கும் வண்ணம் சேவை செய்வாரா , என்பது கேள்விக்குறியே .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Seeru
  • சீறு
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ரியா சுமன்
  • இயக்குனர் :ரத்ன சிவா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Dagalti
  • டகால்டி
  • நடிகர் : சந்தானம்
  • நடிகை : ரித்திகா சென்
  • இயக்குனர் :விஜய் ஆனந்த்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in