Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

தேர்தல் நிறுத்தம், அடுத்தக்கட்டம் என்ன? : ராதாரவி பேட்டி

19 ஜூன், 2019 - 17:34 IST
எழுத்தின் அளவு:
Nadigar-Sangam-Election-Stop-:-Radharavi-interview

சட்டசபை, பார்லிமென்ட் தேர்தல்களுக்கு நிகராக தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் களம் பரபரப்பாக இருக்கிறது. நாசர் தலைமையில் பாண்டவர் அணி, கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி என இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. நடிகர் சங்கதேர்தல் களத்தை இந்தளவுக்கு சூடாக்கியதில் ராதாரவிக்கு பங்கு உண்டு. அவரோ இந்தமுறை தேர்தலி போட்டியிடவில்லை.

நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டதால் நீதிமன்றத்திவ் வழக்குத் தொடர்ந்துள்ள ராதாரவி, “நடிகர் சங்கத்தேர்தல் நிச்சயமாக நடக்காது” என்று சொல்லி வந்தார். அதன்படி தற்போது நடிகர் சங்கத்தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பாண்டவர் அணி தன் அதிருப்தியை தெரிவித்துள்ளது. ராதாரவியோ இந்த விஷயத்தில் அரசு நியாயமாக நடந்திருப்பதாக சொல்கிறார். அவர் கூறுகையில்

“கமல்ஹாசன் டிரஸ்ட் கமிட்டி மீட்டிங்க்கு வரவே இல்லை. வீட்டில போய் அவர்கிட்ட கையெழுத்து வாங்கிருக்காங்க. அது பெரிய குற்றம். மூணு கமிட்டி மீட்டிங்க்கு தொடர்ந்து வரலைன்னா அவங்க பதவி போயிடும். அதுதான் சட்டம். கருணாஸ் கமிட்டி மீட்டிங்க்கு வரவேயில்லை. அவரை ஏன் நீக்கலை? செகரேட்டரி விஷால் 16 கமிட்டி மீட்டிங்க்கு வரலை. 16 மீட்டிங்க்கு வரலைன்னா செகரேட்டரியாக இருந்தாலும் நீக்கப்படணும்.

அது மட்டுமல்ல, அவர் நடத்தின மூணு பொதுக்குழுவும் கூட செல்லாது. பொதுக்குழுவில அதை மட்டும்தான் நடத்தணும். அதுல புரட்சி தலைவர் பேர்ல ஒரு பங்க்ஷன், பழைய நடிகர், நடிகைகளை வரவழைச்சு சிவாஜி பேர்ல கேடயம் வழங்கும் பங்ஷன். இதெல்லாம் செய்ய கூடாது. தப்பு. இந்த விஷயத்தில் அரசு நியாயமாக நடந்திருக்கிறது” என்கிற ராதாரவி தற்போது தேர்தல் நிறுத்தப்பட்டநிலையில் தன்னுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி சொல்கிறார்...

“நிச்சயமா நான் அட்டாக் கமிட்டி போடுங்கன்னு ரிஜிஸ்டாரர்கிட்ட கேட்கப்போறேன். ரிஜிஸ்டரார் அன்டர்டேக் பண்றதுக்கு எல்லா உரிமையும் இருக்கு. அவர் கணக்கு பார்த்து சொல்லணும். கடந்த 9 மாசத்துக்கு கணக்கே கொடுக்கலையே விஷால். ஜெனரல் பாடி போட்டு கேட்கலையே? அதை கேட்டுட்டுதான் தேர்தல் அறிவிக்கணும்.”

· ஒரு பக்கம் நடிகர் சங்க தேர்தலுக்கு தடை கேட்டு வழக்குப்போட்டுவிட்டு... இன்னொருபக்கம் நாடக நடிகர்கள் கிட்ட வாக்கு சேகரிக்கிறீங்க?
நியாயத்தை நிலைநாட்டணும். அநியாயக்காரன் ஜெயிக்கக்கூடாது. ஐசரி கணேஷூக்கு வாக்களிக்க வேண்டும். அதனால் நான் மக்களைப் பார்த்து தயார் பண்ணிட்டு வந்திருக்கேன். எப்படி இருந்தாலும் ஐசரி கணேஷ் தான் செயலாளர். பொருளாளர் பதவிக்கு பிரசாந்த் வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாகிடுச்சு.. அவரும் பெரிய கோடீஸ்வரன். அவர் வந்து நின்னா கரெக்ட்டா இருக்கும். கார்த்திக்கு கரெக்ட்டான எதிர்ப்பு வேணுமே...”

· இந்தமுறை நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அமைதியாக இருப்பதற்கு என்ன காரணம்?
எனக்கு தெரியாது. அவர் ஒரு கட்சியினுடைய தலைவர் இல்லையா? அதனால் அமைதியாக இருக்கலாம். அவர் ஏன் பேசலை... எதற்கு பேசலைன்னு நீங்க அவரைத்தான் கேட்கணும். ஆனாலும் அவர் பாக்யராஜ் அணிக்கு ஆதரவு தெரிவிச்சு இருக்கார்.

· கடந்த தேர்தலில் உங்களை வீழ்த்திய விஷாலை வீழ்த்துவதற்கான நேரமே இதுதானே. என்னதான் கட்சி தலைவரா இருந்தாலும் இந்த நேரத்தில் அமைதியாக இருப்பது உங்களுக்கு சரி என்று தோன்றுகிறதா?
நான் 9 வருஷம் அவர் கூட இருந்தவன். அவர் கண் பார்வையைப் பார்த்தே குரலுடைய ஏற்ற இறக்கத்துலயே அவர் கோவத்துல இருக்காறா இல்லையான்னு சொல்லுவேன். அவர்கிட்ட இப்பவும் நான் பேசிக்கிட்டுதான் இருக்கேன். சைலண்ட்டா இருக்கறது எதுக்குன்னு எனக்கு தெரியலை.

· விஷாலுக்கு எதிராக ராதிகாவை முன்னிறுத்தி ஒரு அணியை உருவாக்குவது போல ஒரு தகவல் வந்ததே...
பிக்பாஸ்ல ராதாரவி கலந்துக்கப்போறார்னு சொன்ன மாதிரி... இது வதந்திதான். யாருமே அப்படி ஒரு முயற்சி பண்ணலை

· அண்மையில் அதிமுகவில் சேர்ந்தபோது உங்களை ஜேகே ரித்தீஷ் அழைத்ததாக சொன்னீர்கள். ஜேகே ரித்தீஷ்.. முன்பு உங்களுக்கு எதிரி. எப்போது இருவரும் நண்பரானீர்கள்? எதிரிக்கு எதிரி நண்பனா?
அவர் எப்போதும் என்னுடைய நண்பர்தான். அவருடன் நாயகன் படத்தில் நான் நடித்தபோது, சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்ற தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினார். அதற்கு முன் சிலபேரிடம் ஏமாந்திருந்தார். அப்போது நான் பெப்சியில் பொறுப்பில் இருந்ததால் அத்தனை சங்கங்களுக்கும் நன்கொடை கொடுக்க வைத்தேன். அதன் மூலம் சினிமாவில் ஜே.கே.ரித்தீஸ் பேசப்பட்டார். நான் அவர்மீது எவ்வளவு அன்பும் மரியாதையும் வைத்திருந்தேனோ... அதே அளவுக்கு அவரும் என் மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தார்.

கடந்த முறை நடிகர் சங்கத் தேர்தலில் அவர் என்னைவிட்டு விலகியது கூட அரசியல் காரணத்துக்காகத்தனே தவிர தனிப்பட்டமுறையில் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. அரசியல் அழுத்தத்தினால்தான் அவர் என்னைவிட்டுப் போனார். நான் அதிமுகவில் இருந்தபோது அவர் திமுகவில் இருந்தார். நான் திமுகவில் இருந்தபோது அவர் அதிமுகவில் இருந்தார். ஆனாலும் எங்களுக்குள் அரசியல்பேதம் இருந்தது கிடையாது. நடிகர் சங்கத்தேர்தலில் சரத்குமாருக்கு எதிராக அதிமுகவில் சில வியூகங்கள் அமைக்கப்பட்டன. அதனால்தான் ரித்தீஷ் எங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்.

· திமுக தரப்பிலிருந்து யாருமே உங்களை தொடர்பு கொள்ளவில்லையா?
அவங்க நியாயமாக என்னைக் கூப்பிட்டு விளக்கம் கேட்டிருக்கணும். அப்படி பண்ணலை அவங்க. ரெண்டாங்கட்ட தலைவர்கள் சில பேர் பேசினாங்க. அவங்க பேர் சொல்ல விரும்பலை. இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தைச் சொல்லணும். விஷாலைக் கூப்பிட்டுப் பேசுகிறார் ஸ்டாலின். விஷால் யார்? திமுக உறுப்பினரா? திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரா? அவரை கூப்பிட்டுப் பேசுகிறவர்களுக்கு என்னை ஏன் கூப்பிட்டு பேசணும் என்று தோன்றவில்லை?

· அதிமுகவே இரட்டைத் தலைமை இன்னபிற பிரச்சனைகளில் கலகலத்துக் கிடக்கிறது. இந்த நேரத்தில் அதிமுக போனது புத்திசாலித்தனமான முடிவா?
புத்திசாலித்தனமான முடிவோ இல்லையோ அது பற்றி நான் யோசிக்கவில்லை. உழைப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கிற இடம். தலைமை சிங்கமா.. ஆடடா என்றுதான் பார்க்க வேண்டும். இங்கே உழைப்பவனுக்கு மரியாதை கிடைக்கும். எதிர்பார்த்ததைவிட அதிகமாக என்னுடைய விசுவாசத்தை நான் காட்டுவேன்.

· அடிக்கடி கட்சி மாறுவது உங்கள் மீதான நம்பக்கத்தன்மையை கேள்விக்குள்ளாக்காதா?
தனியாகப்போனால் கட்சித்தாவல். கூட்டமாகப்போனால் கூட்டணியா? என்னங்க இது அநியாயமா இருக்கு? என்மேல் நம்பகத்தன்மைபோயிடும் என்றால் கூட்டமாப்போய் கூட்டணி வக்கிறாங்களே அவங்க மேல் எப்படி நம்பகத்தன்மை வரும்? ஒரு கட்சியைப் பிடிக்குது வர்றோம். பிடிக்காமல் போகும்போது வெளியே போறோம். இந்த தடவை அவங்களுக்கு என்னைப் புடிக்கலை. நீக்கிட்டாங்க. இதில் கட்சித்தாவல் என்பது எங்கே வருகிறது?

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கோடிகளைக் கொட்டாத கோடை - மே மாதப் படங்கள் ஓர் பார்வைகோடிகளைக் கொட்டாத கோடை - மே மாதப் ... தரணி ஆள வா... பிகில் சத்தம் - விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் தரணி ஆள வா... பிகில் சத்தம் - விஜய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Naan Sirithal
  • நான் சிரித்தால்
  • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
  • நடிகை : ஐஸ்வர்யா மேனன்
  • இயக்குனர் :இராணா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Seeru
  • சீறு
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ரியா சுமன்
  • இயக்குனர் :ரத்ன சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in