Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ஏமாற்றிய ஏப்ரல், மீண்டும் பேய் ஹிட் : ஏப்ரல் மாதப் படங்கள் ஓர் பார்வை

10 மே, 2019 - 07:55 IST
எழுத்தின் அளவு:
2019-April-month-movie-roundup

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் என்றாலே விசேஷமான மாதம். பொங்கல், தீபாவளி ஆகிய விசேஷ நாட்கள் அளவிற்கு ஏப்ரல் மாதத்தில் வரும் தமிழ்ப் புத்தாண்டு தினமும் பட வெளியீட்டிற்கு விசேஷமான நாளாக இருக்கும்.

ஆனால், இந்த 2019ம் வருடத்தில் ஏப்ரல் மாதம் மொத்தமாகவே ஏமாற்றமான நாளாகவே அமைந்தது. குறிப்பாக 'காஞ்சனா 3' என்ற ஒரே ஒரு படத்தைத் தவிர மற்ற படங்கள் அனைத்துமே அனைவரையும் ஏமாற்றிய படங்களாகத்தான் இருந்தன.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று ஒரு புதிய படம் கூட வெளியாகவில்லை. மாறாக அதற்கு சில நாட்கள் முன்னதாக சில படங்களும், பின்னதாக சில படங்களும் வெளியாகின.

நல்ல நாள் சென்டிமென்ட்டை விட தொடர் விடுமுறை நாள் எது, எந்த நாளில் படங்கள் வெளியானால் வசூல் தொடர்ந்து கிடைக்கும் என அனைவரும் கணக்கு போட்டுத்தான் படங்களை வெளியிடுகிறார்கள்.

ஏப்ரல் 4ம் தேதி 'நட்பே துணை' படம் வெளிவந்தது. தான் முதலில் இயக்கிய 'மீசைய முறுக்கு' படம் கொடுத்த வெற்றியால் மீண்டும் நட்பின் பெருமையை நினைத்து இந்தப் படத்தில் நடித்தார் ஹிப்ஹாப் தமிழா. வெளியீட்டிற்கு முன் இருந்த பரபரப்பு வெளியீட்டிற்குப் பின் காணாமல் போனது.

ஏப்ரல் மாதம் 5ம் தேதி 'கணேசா மீண்டும் சந்திப்போம், குடிமகன், குப்பத்து ராஜா, உறியடி 2' ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் 'குடிமகன்' படம் நல்ல கருத்தைச் சொன்ன படம். வழக்கம் போல கருத்து சொல்லும் படங்களை மக்கள் புறக்கணிப்பதால் இந்தப் படமும் ரசிகர்களால் புறக்கணிக்கப்பட்டது. ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்த படம் என்பதைத் தவிர 'குப்பத்து ராஜா' படத்திற்கு எந்த சிறப்புமில்லை. 'உறியடி' படம் நல்ல விமர்சனத்தைப் பெற்றதால் 'உறியடி 2' படத்தை நடிகர் சூர்யாவே தயாரித்தார். ஆனால், மக்களிடம் கொண்டு செல்லும் வேலையை படக்குழுவினர் சுத்தமாகப் பார்க்கவில்லை. அப்படி செய்திருந்தால் படம் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டியது. 'கணேசா மீண்டும் சந்திப்போம்' படத்தை யார் தியேட்டர் சென்று சந்தித்தார்கள் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏப்ரல் 12ம் தேதி 'கேங்ஸ் ஆப் மெட்ராஸ், ராக்கி தி ரிவென்ஞ்ச், வாட்ச்மேன், ழகரம்' ஆகிய படங்கள் வெளிவந்தன. முதல் மூன்று திரைப்படங்களும் ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டு வெளிவந்த படங்கள். பெயர் மட்டும் வைத்தால் போதுமா அதில் பத்து சதவீதமாவது ஆங்கிலப் படங்கள் போல இருக்க வேண்டாமா. 'ழகரம்' படத்தை பத்து லட்சத்தில் எடுத்து முடித்ததாகச் சொல்கிறார்கள். பத்து தியேட்டரில் கூட படத்தை வெளியிடவில்லை.

ஏப்ரல் 19ம் தேதி 'காஞ்சனா 3, மெஹந்தி சர்க்கஸ், வெள்ளைப் பூக்கள்' ஆகிய படங்கள் வெளிவந்தன. 'காஞ்சனா, காஞ்சனா 2' ஆகிய படங்கள் கொடுத்த அசாத்திய வெற்றி 'காஞ்சனா 3'க்கும் கிடைத்தது ஆச்சரியம்தான். கதையே இல்லாத படம் என பலர் விமர்சனம் செய்தாலும் வசூலில் ஏமாற்றவில்லை. 'மெஹந்தி சர்க்கஸ்' அதிகம் எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றிய படம். அழுத்தமான காதல் இல்லாத காரணத்தால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 'வெள்ளைப்பூக்கள்' நல்ல முயற்சி, விமர்சனம் கிடைத்த அளவிற்கு வசூல் கிடைத்திருக்காது.

எப்ரல் 26ம் தேதி 'அழகரும் ரெண்டு அல்லக்கைகளும், முடிவில்லா புன்னகை' ஆகிய படங்கள் வெளிவந்தன. வழக்கம் போல பட எண்ணிக்கையைக் கூட்டிய படங்கள் இவை.

முதலில் சொன்னது போலவே, 'காஞ்சனா 3' மட்டுமே ஏப்ரல் மாத வெற்றிப் படமாக அமைந்தது. மற்ற படங்கள் நிச்சயம் முதலுக்கு மோசமான படங்களாகத்தான் அமைந்திருக்கும்.

ஏப்ரல் மாதம் தமிழ்ப் படங்கள் ஏமாற்றினாலும் ஹாலிவுட் படமான 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' படம் பல தியேட்டர்காரர்களுக்கு வசூல் ரீதியாக லாபத்தைக் கொடுத்த படமாக இருந்தது. இந்தப் படத்தைக் காரணம் காட்டியே பல படங்களின் வெளியீடுகள் மே மாதம் தள்ளி வைக்கப்பட்டன. இந்த மாதத்தில் அவை என்ன சாதனை செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏப்ரல் மாதம் வெளியான படங்கள்

ஏப்ரல் 4 : நட்பே துணை

ஏப்ரல் 5 : கணேசா மீண்டும் சந்திப்போம், குடிமகன், குப்பத்து ராஜா, உறியடி 2

ஏப்ரல் 12 : கேங்ஸ் ஆப் மெட்ராஸ், ராக்கி தி ரிவென்ஞ்ச், வாட்ச்மேன், ழகரம்

ஏப்ரல் 19 : காஞ்சனா 3, மெஹந்தி சர்க்கஸ், வெள்ளைப் பூக்கள்

ஏப்ரல் 26 : அழகரும் ரெண்டு அல்லக்கைகளும், முடிவில்லா புன்னகை

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
36 வயது, 60 படங்கள் : த்ரிஷாவின் அழகிய சாதனை : பிறந்தநாள் ஸ்பெஷல்!36 வயது, 60 படங்கள் : த்ரிஷாவின் அழகிய ... சுப்பிரமணி, கவுண்டமணி ஆனது எப்படி.? - பிறந்தநாள் ஸ்பெஷல் சுப்பிரமணி, கவுண்டமணி ஆனது எப்படி.? - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
10 மே, 2019 - 17:10 Report Abuse
Mirthika Sathiamoorthi அதென்ன சந்தடி சாக்குள்ள கருது சொல்லும் படங்களை மக்கள் புறக்கணிப்பதால்...கருத்தா சொல்றாங்க கருது சொல்றேங்கரப்பேருல கழுத்தறுத்தா...யார் படத்துல உக்காருவாங்க...மலையாளத்தில் ஒரு படம் பாத்தேன் தீவனடி...புகைப்பிடிப்பதால் வரும் விளைவுகள்...அதை கருத்தா சொல்லாம செம ஜாலியா சொல்லியிருப்பானாக...நம்மலுன்கிட்ட இத கொடுத்தா நான்தான் முகேஷ் பேசுறேன் அப்புடீன்னு படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி போடுவாங்களே விழிப்புணர்வு பிட்டு அந்த மாதிரி எடுத்து ஏண்டா படத்துக்கு வந்தோம்ன்னு ஆக்கிடுவாங்க..ஒரு வேலை நாங்களும் அந்த கருத்து படத்தை ஓடவச்சுட்டோம்ன்னு வைங்க...ஒடனே காஞ்சனாவுக்கப்புறம் பேய் சீசன் மாதிரி கருத்து சீசனா வந்திரும்...நெனச்சு பாருங்க அப்புறம் தமிழ் மக்களோட நிலைமையை...நியாயமா பேசுங்க பாஸ்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in