Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

36 வயது, 60 படங்கள் : த்ரிஷாவின் அழகிய சாதனை : பிறந்தநாள் ஸ்பெஷல்!

04 மே, 2019 - 10:34 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-Trisha

நடிகை த்ரிஷாவுக்கு இன்றுடன் 35 வயது நிறைவடைந்து 36வது வயது பிறக்கிறது. த்ரிஷா பேரழகியல்ல..., சாவித்ரி போன்று நடிப்பு திலகமும் அல்ல... ஆனாலும் ஆண்டுக்கு 50 ஹீரோயின்கள் அறிமுகமாகும் தமிழ் சினிமாவில் 15 வருடத்திற்கு மேல் ஹீரோயினாகவே நிலைத்து நிற்பதற்கு என்ன காரணம். அதை பார்க்கலாம்...

அப்பா மலையாளி, அம்மா பாலக்காட்டு தமிழச்சி. எனவே த்ரிஷா இரண்டும் கலந்த கலவை. அப்பா ஓட்டல் மானேஜர், அம்மா பியூட்டி பார்லர் நடத்தியவர். படித்தது எத்திராஜ் கல்லூரி. இப்படி சராசரி குடும்பம் தான் த்ரிஷாவுடையது.

அம்மா மகளை அழகாக்கினார். அழகை தக்க வைக்கும் வழிகள் சொன்னார், அதை அழகாக வெளிப்படுத்தும் தந்திரம் கற்றுக் கொடுத்தார். அதனால் மிஸ்.மெட்ராஸ் ஆனார், மிஸ்.இந்தியா போட்டியில் புன்னகை அழகியானார். சினிமா அள்ளி அணைத்துக் கொண்டது.

1999ம் பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் உருவான ஜோடி திரைப்படத்தில், சிம்ரனின் தோழியாக த்ரிஷா நடித்தார். அப்போது அவர் ரிச் கேர்ள் கேட்டகிரி. இதுதான் அவர் முதல் திரைத்தோற்றம். 2002 ஆம் ஆண்டு இயக்குனர் அமீரின் இயக்கத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக “மௌனம் பேசியதே”திரைப்படத்தில் நடித்தார். ஹீரோயினாக அவர் அறிமுகமான முதல் திரைப்படம் இதுவே. பிரியதர்ஷன் இயக்கிய லேசா லேசாவில் ஷோலோ ஹீரோயினாக அறிமுகமானார்.

கமர்ஷியல் நடிகையாக வளர்ந்த த்ரிஷா, விண்ணைத்தாண்டி வருவாயா, அபியும் நானும், கொடி, அரண்மணை, சமீபத்தில் வெளிவந்த 96 என நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்தவர் த்ரிஷா. ரஜினியுடன் நடிக்கவில்லையே என்ற குறை இருந்தது. அதுவும் பேட்ட படத்தின் மூலம் நிறைவேறிவிட்டது. இயக்குனர் “ப்ரியதர்ஷன்” இயக்கத்தில் “காட்டா மேத்தா” எனும் ஹிந்தி படம் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமானார் த்ரிஷா. ஆனால் அந்தப்படம் தோல்வி அடையவே தொடர்ந்து ஹிந்தியில் நடிக்கவில்லை.

த்ரிஷாவிற்கு செல்லப்பிராணிகள் என்றால் கொள்ளை பிரியம், தன் உடல் உறுப்பு தானம் செய்து, தன் சமூக அக்கறையை இன்னும் அழுத்தமாகப் பதித்தார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் விளம்பர தூதராக இருக்கிறார். முன்பு பீட்டா அமைப்பில் தீவிரமாக பணியாற்றினார். தமிழ்நாட்டில் அந்த அமைப்புக்கு எதிர்ப்பு வரவே அதிலிருந்து விலகி விட்டார்.

த்ரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை தனித்துவமிக்கது. அம்மாவும், அப்பாவும் பிரிந்து வாழ்ந்த சூழ்நிலையிலும் அப்பா மீது தீராத பாசம் கொண்டிருந்தார். ஒரு முன்னணி தெலுங்கு ஹீரோவை காதலித்தார். அந்த ஹீரோவின் குடும்பம் இவர்கள் காதலை ஏற்கவில்லை. ஒரு தயாரிப்பாளரை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்றவர். அவரின் இன்னொரு முகம் அறிந்து விலகினார். இப்போதும் தூய அன்புக்கும், காதலுக்கும் ஏங்கும் குழந்தையாகவே இருக்கிறார் த்ரிஷா.

த்ரிஷாவுடன் அறிமுகமான ஹீரோயின்கள் இப்போது அக்கா, அண்ணி, அம்மா கேரக்டருக்கு வந்து விட்டார்கள். ஆனால் த்ரிஷா இப்போதும் ஹீரோயின் தான். காரணம் அவர் மனதையும், உடலையும் எப்போதும் இளமையாக வைத்திருக்கிறார். கொஞ்சம் கால அவகாசம் கிடைத்தாலும் உலகின் ஏதோ ஒரு மூலைக்கு சென்று தன் அடையாளங்களை மறந்து சிறகடித்து பறந்து விட்டு திரும்புவார்.

இந்த ஆண்டு தனது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நட்பு வட்டாரத்துடன் தாய்லாந்தில் கொண்டாடுகிறார் த்ரிஷா. இந்த பிறந்தநாளில் அவர் நடித்துள்ள பரமபதம் விளையாட்டு டிரைலர் இன்று(மே 4) காலை 11மணிக்கு வெளியானது. இதனை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

இன்னும் பறக்கட்டும் இந்த அழகுப் பறவை. வாழ்த்துக்கள் ஜானு.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
கோடை விடுமுறை படங்கள் - ஓர் பார்வைகோடை விடுமுறை படங்கள் - ஓர் பார்வை ஏமாற்றிய ஏப்ரல், மீண்டும் பேய் ஹிட் : ஏப்ரல் மாதப் படங்கள் ஓர் பார்வை ஏமாற்றிய ஏப்ரல், மீண்டும் பேய் ஹிட் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
31 அக், 2019 - 16:34 Report Abuse
skv srinivasankrishnaveni இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் த்ரிஷா இன்னமும் பலரைப்போல குண்டாகாமல் அப்படியே சிக்குன்னு இருக்கே முகத்துல எப்போதும் இருக்கு அழகான புன்னகை நீ ரொம்பவே யதார்த்தமான நடிகை என்பதால் எனக்கு ரொம்பவே பிடிக்கும் உன்னை நீண்ட ஆயுளுடன் சந்தோஷமா வாழ குருவாயூர் அப்பனை வேண்டுகிறேன்
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
07 மே, 2019 - 17:48 Report Abuse
Vasudevan Srinivasan தொழிலில் வெற்றிபெற்ற நீங்கள் (த்ரிஷா) குடும்ப வாழ்க்கையிலும் வெற்றிபெற வேண்டும் விரைவில் இல்லறத்தில் ஈடுபட்டு நல்லறத்தை நிலைநாட்ட வாழ்த்துக்கள்..
Rate this:
oce - tokyo,ஜப்பான்
04 மே, 2019 - 12:57 Report Abuse
oce கோலிவுட் டோலிவுட் மாப்பிள்ளைகள் வேண்டாம். ஹாலிவுட் மாப்பிள்ளயாக பார்த்து திருமணம் செய்யுங்கள். உங்கள் திருமண காலம் இன்னும் நான்கு ஆண்டுகள் செல்லும். அந்த கால நடிகைகள் திருமணம் செய்த பின்னரே நடிப்புத்துறையில் இறங்கினார்கள்.
Rate this:
oce - tokyo,ஜப்பான்
04 மே, 2019 - 12:46 Report Abuse
oce சீக்கிரம் ஒரு கல்யாணத்த பண்ணி புள்ள குட்டிங்கள பெத்துக்கம்மா.
Rate this:
oce - tokyo,ஜப்பான்
04 மே, 2019 - 12:44 Report Abuse
oce 36 படங்களிலும் 16 வயது பெண் போல் நடித்திருப்பார்.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in