Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

அஜித் எனும் தனி ஒருவன் : பிறந்தநாள் ஸ்பெஷல்

01 மே, 2019 - 10:27 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-Ajith-kumar

எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தி அவர்களால் அன்பாகவும் மரியாதையாகவும் "தல" என அழைக்கப்படுபவர் நடிகர் அஜித்குமார்.

1971-ம் ஆண்டு மே 1ம் தேதி, பி.சுப்ரமணியம் - மோகினி தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் அஜித் குமார். பள்ளி இறுதி வகுப்பை முடிக்கும் முன்னே படிப்பை நிறுத்திக் கொண்டார். இருசக்கர வாகன மெக்கானிக்காக தனது ஆரம்பகால வாழ்க்கையை துவங்கினார். திரையில் நட்சத்திரமாக வருவதற்கு முன் சில விளம்பரப் படங்களில் நடித்து வந்தார் அஜித்.

முதல் அறிமுகம்
1992 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு திரைப்படமான "பிரேம புஸ்தகம்" என்ற படத்தின் மூலமாக வெள்ளித்திரைக்கு நாயகனாக அறிமுகமானார். 1993 ஆம் ஆண்டு இயக்குநர் செல்வாவின் இயக்கத்தில் வெளிவந்த "அமராவதி" திரைப்படத்தின் வாயிலாக தமிழிலும் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடிகர் அரவிந்த்சாமியுடன் "பாசமலர்கள்", நடிகை ராதிகாவுடன் இணைந்து "பவித்ரா", நடிகர் விஜய்யுடன் இணைந்து "ராஜாவின் பார்வையிலே" ஆகிய படங்களில் துணை கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்தார்.

ஆசை தந்த திருப்பம்
1995 ஆம் ஆண்டு இயக்குநர் வஸந்த் இயக்கத்தில் வெளிவந்த "ஆசை" திரைப்படமே இவருக்கு நாயகன் அந்தஸ்தை உயர்த்தியது. இவருடைய இயல்பான மற்றும் மிகைபடுத்தாத நடிப்பு இவருக்கென ஒரு ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தி தந்தது. தொடர்ந்து "வான்மதி", "கல்லூரி வாசல்", "காதல் கோட்டை", "காதல் மன்னன்", "ரெட்டை ஜடை வயசு", "அவள் வருவாளா" போன்ற திரைப்படங்களின் மூலமாக தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

உயர்த்திய வாலி
1999 ஆம் ஆண்டு இயக்குநர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளிவந்த "வாலி" திரைப்படத்தில் முதன்முதலாக இவர் இரட்டை வேடமேற்று நடித்ததோடு மட்டுமல்லாமல் படம் மிகப்பெரிய வெற்றியும் பெற்று இவருடைய திரைப்பயணத்தில் இப்படம் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது என்றே சொல்லலாம். இதே ஆண்டில் இயக்குநர் சரண் இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் "அமர்க்களம்". இத்திரைப்படத்தின் நாயகி நடிகை ஷாலினியை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் கரம் பிடித்தார்.

தனி ஒருவன் அஜித்
நடிகர் அஜித்துக்கு இன்று(மே 1) பிறந்த நாள். தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் வருகிறார்கள், போகிறார்கள், சில காலம் தாக்கு பிடித்து நிற்கிறார்கள். ஆனால், அஜித் மட்டும் ஏன் தனித்து நிற்கிறார். துணிச்சலுடன் மன்றங்களை கலைத்தார். புரமோசனுக்கு வராமலேயே படங்களை வெற்றி பெற வைக்கிறார். இப்படி பல இருக்கிறது அவரது ஸ்பெஷல் . அவற்றில் சில...

தனது பெயருக்கு முன்னால் எந்த பட்டத்தையும் போட விரும்ப மாட்டார். அமர்க்களம் படத்தில் அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்தவர் சரண். அடுத்து சரண் இயக்கிய அசல் படத்தில் பட்டம் எதுவும் போட வேண்டாம் என அஜித்தே நீக்க சொல்லிவிட்டார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வந்த வெற்றிப்படம் தீனா. படத்தில் "தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது.. நீ ஆடு தலை.. " என்று வசனம் வரும். அன்று முதல் ரசிகர்களுக்கும் தல ஆனார் அஜித்.

ரசிகர் மன்றம் என்ற பெயரில் அப்பாவி இளைஞர்களின் உழைப்பும், பணமும் வீணாவதைக் கண்டு பொறுக்க முடியாமல் புகழின் உச்சியில் இருக்கும்போதே ரசிகர் மன்றத்தை கலைத்தவர்.

தன்னிடம் பணியாற்றும் பணியாளர்களுக்கு தனி காலனி அமைத்து வீடு கட்டிக் கொடுத்த தொழிலாளர்களின் தோழன்.

சிம்பு, ஜீவா, ஆர்யா என தமிழ் திரையுலகின் அடுத்த தலைமுறை நாயகர்கள் பேவரைட் எப்போதும் அஜித் தான். பல ஹீரோக்கள் அஜித் ரசிகர்களாக நடித்து விட்டார்கள்.

பல நாயகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு நாயகியாக இவர் தான் வேண்டும் என்று சிபாரிசு செய்வார்கள். ஆனால் அஜித் எப்போதும் நாயகி விஷயத்தில் தலையிடுவது இல்லை. சுப நிகழ்ச்சிகளுக்கு போகிறாரோ இல்லையோ துக்க நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்து கொள்வார்.

டாப் ஹீரோக்கள் ஏதாவது காயம் பட்டு நடிக்க முடியாமல் போய்விட்டால் கோடிக் கணக்கில் வருமானம் போய்விடுமே என்று நினைப்பார்கள். அதனால் டூப் போட்டு நடிப்பார்கள். ஆனால் அஜித் அப்படியல்ல, முடிந்தவரை டூப் போடாமல் தானே ரிஸ்க் எடுத்து நடிப்பார். டாப்பில் இருக்கும்போதே கார் ரேஸ், பைக் ரேஸ் என ரிஸ்க் எடுத்தவர். "டூப் போடுகிறவரும் மனிதர்தானே அவர் உயிரும் முக்கியம்தானே. கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் எனக்காக சில ஆயிரம் சம்பளம் வாங்கும் அவர் ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும்" என்பார்.

நடிகர்கள் சொத்து சேர்த்து கல்யாண மண்டம், வீடு, நிலம் என வாங்கிக் குவிக்கும்போது தனது பணத்தை தனது குட்டி விமான ஆராய்ச்சிக்கு செலவிடுகிறவர். எந்த பொது இடத்திற்கு போனாலும், அங்கு பொதுமக்களுக்கு என்ன உரிமையோ அதை மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறவர்.

"நான் அஜித் குமார் பேசுகிறேன் .இது நான் பேச உங்களுக்கு உகந்த நேரமா? எனக்காக இரண்டு நிமிடம் ஒதுக்க முடியுமா?" என கேட்டுவிட்டுத்தான் தொலைபேசி, அலைபேசிகளில் பேச ஆரம்பிப்பார்.

சிறு வயதிலிருந்தே ரேஸ்கார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் மிகுந்த நடிகர் அஜித், சென்னை, மும்பை, டில்லி ஆகிய ஊர்களில் நடந்த பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார். 2003 ஆம் ஆண்டு நடந்த "பார்முலா ஆசியா பிஎம்டபுள்யூ சாம்ப்பியன்ஷிப்" பந்தயத்தில் நடிகர் அஜித் பங்குபெற்றார். 2010 ஆம் ஆண்டு நடந்த "பார்முலா2 சாம்ப்பியன்ஷிப்" பந்தயத்திலும் கலந்துகொண்டார்.

பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு 2013 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து பெங்களுரு வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டார்.

உருளைக்கிழங்கு பொரியல், சாம்பார், பிரியாணி சமைப்பதில் எக்ஸ்பர்ட். சூட்டிங் இல்லாத நாட்களில் வீட்டிற்கு நண்பர்களை அழைத்து பிரியாணி விருந்தளிப்பார். படப்பிடிப்பின் கடைசி நாளில் தனது கையால் பிரியாணி சமைத்து அதை தானே குழுவினருக்கு பரிமாறுவார்.

அஜித் மிகச் சிறந்த புகைப்பட கலைஞர். அவர் எடுத்த அரிய புகைப்படங்களை பொக்கிஷமாக வைத்திருக்கிறார். சாதாரண நடிகராக அப்புக்குட்டியை விதவிதமாக படம் எடுத்து கொடுத்தவர்.

படத்தின் வெற்றி, தோல்வி பற்றி கவலைப்பட மாட்டார். தயாரிப்பாளருக்கு லாபமா, நஷ்டமா என்று மட்டும் கேட்பார். நஷ்டம் என்றால் தனது அடுத்த படத்தையும் அவருக்கே கொடுப்பார்.

பொய் பேசத் தெரியாது. புகழத் தெரியாது. அதனாலேயே பொது விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து விடுகிறார்.

தன் மேலாளர், உதவியாளர், பாதுகாவலர் என யாரையும் எளிதில் மாற்ற மாட்டார். தவறு செய்தால் கூட இருமுறை வாய்ப்பு தருவார். அதிலும் மாற்றிக் கொள்ளாவிட்டால் அவருக்கு கணிசமான பணத்தை கொடுத்து விலகி நிற்கச் சொல்வார்.

புத்தாண்டு, கிறிஸ்துமஸ், பொங்கல் மூன்று பண்டிகை நாட்களில் அஜித் வீட்டிலிருந்து நண்பர்களுக்கு பரிசு பொருள் வந்து சேரும்.

Advertisement
கருத்துகள் (32) கருத்தைப் பதிவு செய்ய
அதிகப் படங்களால் மிரண்ட 2019 மார்ச் மாதம்அதிகப் படங்களால் மிரண்ட 2019 மார்ச் ... கோடை விடுமுறை படங்கள் - ஓர் பார்வை கோடை விடுமுறை படங்கள் - ஓர் பார்வை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (32)

kk -  ( Posted via: Dinamalar Android App )
02 மே, 2019 - 07:29 Report Abuse
kk டேய் அவர் ஆரம்பத்தில் இருந்தே பணக்கார வீட்டு பிள்ளை. பைக் மெக்கானிக் அவர் பொழுதுபோக்கு
Rate this:
01 மே, 2019 - 17:25 Report Abuse
dabara gopalan hbd ak
Rate this:
THALA - salem,இந்தியா
01 மே, 2019 - 16:37 Report Abuse
THALA படிக்கும் போதே கண்ணுல இருந்து தண்ணி வருது.........
Rate this:
01 மே, 2019 - 14:57 Report Abuse
Raja Singapore Happy birthday thala ..god bless you
Rate this:
01 மே, 2019 - 13:56 Report Abuse
கண்ணன். ப இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மை டியர் தல
Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in