Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

அதிகப் படங்களால் மிரண்ட 2019 மார்ச் மாதம்

13 ஏப், 2019 - 11:34 IST
எழுத்தின் அளவு:
More-movies-released-in-March-2019

2019ம் ஆண்டின் முதல் காலாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. இந்த மூன்று மாதங்களில் சுமார் 55 படங்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 படங்கள் அதிகமாக வந்துள்ளன.

கடந்த 2018ம் ஆண்டில் மார்ச் மாதம் முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் புதிய படங்களை வெளியிடாமல் ஸ்டிரைக் செய்தது. ஏப்ரல் 20ம் தேதிக்குப் பிறகே புதிய படங்கள் வெளிவர ஆரம்பித்தன. எந்த பிரச்சினைகளுக்காக அவர்கள் ஸ்டிரைக் செய்தார்களோ அந்தப் பிரச்சினைகள் இன்னும் அப்படியேதான் உள்ளன என்பது வேறு கதை.

அந்த ஸ்டிரைக் காரணமாகத்தான் கடந்த ஆண்டில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டாமல் போனது. ஆனால், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 50 படங்களுக்கும் அதிகமாக வந்ததால் அடுத்த மூன்று காலாண்டுகளில் 150 படங்களுக்கும் அதிகமாக வரும் என எதிர்பார்க்கலாம்.

மார்ச் மாதத்தைப் பொருத்தவரையில் முந்தைய ஜனவரி, பிப்ரவரி மாதங்களைக் காட்டிலும் அதிகமான படங்கள் வெளிவந்து ஆச்சரியப்படுத்தி உள்ளன. பொதுவாக மார்ச் மாதங்களில் பள்ளி இறுதித் தேர்வுகள் ஆரம்பமாகும். அதனால், புதிய படங்களின் வருகை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மொத்தம் 27 படங்கள் வெளிவந்துள்ளன.

மார்ச் மாதத்தில் பெரிய நடிகர்களின் படங்கள் என்று சொன்னால் விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படம் மட்டும்தான் வெளிவந்தது. மற்ற படங்கள் அனைத்துமே புதுமுகங்கள் அல்லது வளரும் நடிகர்களின் படங்கள்தான். முதல் மூன்று வாரங்களில் வாரத்திற்கு ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்தன. கடைசி வாரத்தில் மட்டும்தான் இரண்டே இரண்டு படங்கள் வந்தன.

மார்ச் 1ம் தேதி “90 எம்எல், அடடே, தாதா 87, பிரிவதில்லை, தடம், திருமணம், விளம்பரம்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் 90 எம்எல் படம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இருந்ததால் படம் ஓடிவிடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், படம் தோல்வியடைந்தது.

ஒரு இடைவெளிக்குப் பிறகு சேரன் இயக்கத்தில் வெளிவந்த திருமணம் படம் எந்த பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை. அருண் விஜய் நாயகனாக நடித்த தடம் படம் மட்டும் பெரிய அளவில் இல்லை என்றாலும் சுமாரான வெற்றியைப் பெற்றது. மற்ற படங்கள் எதுவுமே சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

மார்ச் 8ம் தேதி “பூமராங், கபிலவஸ்து, பொட்டு, சத்ரு, ஸ்பாட்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் அதர்வா நடித்த பூமராங் படம் சுமார் வெற்றியையாவது பெறும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அதுவும் கிடைக்காமல் படம் ஏமாற்றியது. பரத் நடித்த பொட்டு வந்த சுவடு தெரியாமல் போனது. கதிர் நடித்த சத்ரு கொஞ்சம் ஓடியிருக்கலாம், ஆனால், அப்படி ஒரு படம் வந்ததா என்பதே பலருக்த் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். மற்ற படங்கள் வழக்கம் போல எண்ணிக்கையைக் கூட்டிய படங்களே.

மார்ச் 15ம் தேதி “அகவன், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், கில்லி பம்பரம் கோலி, ஜுலை காற்றில், நெடுநல்வாடை,” ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் நெடுநல்வாடை படம் யதார்த்தமான கிராமத்துப் படமாக அமைந்து நல்ல விமர்சனத்தைப் பெற்றது.

படம் வசூலித்ததோ இல்லையோ இயக்குனருக்கு அடுத்த பட வாய்ப்பு கண்டிப்பாகக் கிடைத்துவிடும். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் வெற்றி என்று அவர்களே அடுத்த இரண்டு நாளில் சக்சஸ் மீட்டையும் நடத்தினார்கள். சில நாட்களுக்கு முன்பு 25வது நாள் போஸ்டரையும் வெளியிட்டார்கள். அகவன் அதிகம் கவனிக்கப்படாத படமாகப் போனது. ஜுலை காற்றில் சுருக்கமாகச் சொல்லியிருந்தால் கவனம் ஈர்த்திருக்கும்.

மார்ச் 22ம் தேதி “அக்னிதேவி, எம்பிரான், மானசி, பதனி, பட்டிபுலம், நீர்த்திரை, சாரல் சேட்டக்காரங்க” ஆகிய படங்கள் வெளிவந்தன. அக்னிதேவி பாபிசிம்ஹாவின் சர்ச்சையால் மட்டுமே வெளியில் தெரிந்த படமாக அமைந்தது. மற்ற படங்கள் எத்தனை காட்சிகள் ஓடின என்றுதான் கணக்கெடுக்க வேண்டும்.

மார்ச் 28ம் தேதி “ஐரா” படம் வெளிவந்தது. ஐரா மாதிரியான படங்களில் நயன்தாரா எதற்காக நடித்தார் என்று இன்றும் சிலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மார்ச் 29ம் தேதி சூப்பர் டீலக்ஸ் படம் வெளிவந்து. சூப்பர் டீலக்ஸ் படம் ஆபாசமான கருத்துக்கள் நிறைந்த படமென ஒரு சாரார் விமர்சிக்க, வேறு சிலர் இது ஒரு உலகப் படம் என பாராட்டினர். இருவிதமான விமர்சனங்களை எழுப்பிய படம் வியாபார ரீதியாக வெற்றிபெறவில்லை என்பதே உண்மை.

மார்ச் மாதம் வெளிவந்த 27 படங்களில் ஓரளவிற்கு வசூலைக் கொடுத்த படமாக தடம் படம் மட்டுமே அமைந்தது என்பதுதான் கோலிவுட் தகவல். பலரது பாராட்டுக்களையும் பெற்ற படமாக நெடுநல்வாடை படம் அமைந்தது.

ஏப்ரல் மாதம் தேர்தல் மாதமாக அமைந்துவிட்டதால் பலர் அவர்களது படங்களை மே மாதத்திற்குத் தள்ளி வைத்துவிட்டனர். ஒரு சில முக்கிய படங்கள் மட்டுமே இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், ஏப்ரல் மாதத்தில் குறைவான படங்களையும், மே மாதத்தில் அதிகமான படங்களையும் எதிர்பார்க்கலாம்.

மார்ச் 2019ல் வெளிவந்த படங்கள்

மார்ச் 1 : 90 எம்எல், அடடே, தாதா 87, பிரிவதில்லை, தடம், திருமணம், விளம்பரம்

மார்ச் 8 : பூமராங், கபிலவஸ்து, பொட்டு, சத்ரு, ஸ்பாட்

மார்ச் 15 :
அகவன், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், கில்லி பம்பரம் கோலி, ஜுலை காற்றில், நெடுநல்வாடை

மார்ச் 22 : அக்னிதேவி, எம்பிரான், மானசி, பதனி, பட்டிபுலம், நீர்த்திரை, சாரல் சேட்டக்காரங்க

மார்ச் 28 : ஐரா

மார்ச் 29 : சூப்பர் டீலக்ஸ்

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'முள்ளும் மலரும்' காளியை மறக்க முடியுமா.?'முள்ளும் மலரும்' காளியை மறக்க ... அஜித் எனும் தனி ஒருவன் : பிறந்தநாள் ஸ்பெஷல் அஜித் எனும் தனி ஒருவன் : பிறந்தநாள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

R S BALA - Chennai,இந்தியா
13 ஏப், 2019 - 16:01 Report Abuse
R S BALA தடம் என்ற படம் ஓரளவிற்கு வசூல் தந்ததா? அப்படி ஒரு படம் வந்ததே தெரியாதேப்பா எனக்கு...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in