Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

'முள்ளும் மலரும்' காளியை மறக்க முடியுமா.?

02 ஏப், 2019 - 14:56 IST
எழுத்தின் அளவு:
Mullum-Malarum-:-unforgetable-Kaali

தமிழ் சினிமாவில், உச்ச நட்சத்திரம், சூப்பர் ஸ்டார், ஸ்டைல் மன்னன் என குறிப்பிடப்படும் ரஜினிகாந்த்திடம் உள்ள நடிப்புத் திறமையை 41 ஆண்டுகளுக்கு முன்பே அடையாளம் கண்டு, அவரை தான் இயக்குனராக அறிமுகமான முதல் படமான 'முள்ளும் மலரும்' படத்தில் நடிக்க வைத்தவர் இயக்குனர் மகேந்திரன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற ஒரு விழாவில், ரஜினிகாந்த்தை நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலசந்தர், “பிடிச்ச டைரக்டர் தமிழ்ல, என்னைத் தவிர,” எனக் கேட்டதற்கு சிறிதும் யோசிக்காமல் 'மகேந்திரன்' என பதிலளித்தவர் ரஜினிகாந்த். அந்த அளவிற்கு ரஜினிகாந்த் மனதில் இடம் பிடித்த ஒரு இயக்குனராக மகேந்திரன் இருந்தார்.

'முள்ளும் மலரும்' படத்தில் தங்கை மீது அதீத பாசம் கொண்ட, ஒரு பொசசிவ் கதாபாத்திரமாக 'காளி' என்ற அண்ணன் கதாபாத்திரத்தில் அவ்வளவு உயிர்ப்புடன், யதார்த்தமாய் நடித்திருப்பார் ரஜினிகாந்த். 'பாசமலர்' படம் போல ஒரு அண்ணன், தங்கை பாசக் கதையை படமாக்க வேண்டும் என்ற மகேந்திரனின் எண்ணத்திற்கு தங்களது நடிப்பால் சிறப்பித்தவர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஷோபா.

ரஜினிகாந்த் 150 படங்களுக்கு மேல் நடித்தாலும் இன்னமும் அவருடைய நடிப்புக்கு சிறந்த உதாரணமாய் சொல்லப்படும் படங்களில் முதன்மைப் படமாக இருப்பது 'முள்ளும் மலரும்' மட்டுமே. அந்தப் படமும், ரஜினியின் 'காளி' கதாபாத்திரமும், 'கெட்டப் பய சார் இந்த காளி' என்ற வசனமும் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது என்பதற்கு சமீபத்தில் வெளிவந்த 'பேட்ட' படத்தில் இடம் பெற்று ரசிகர்களால் ஆர்ப்பரிக்கப்பட்ட 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்...' பாடலே சாட்சி.

'முள்ளும் மலரும்' படத்தில் ரஜினியின் நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய எத்தனையோ காட்சிகள் இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சியை இன்று பார்த்தாலும் நமக்கு மெய் சிலிர்க்கும். அதற்கு ரஜினியின் அந்த கர்வமான, பெருமையான, திமிரான நடிப்பும் பேச்சும் ஒரு காரணம் என்பது உண்மை.

அண்ணன் காளிக்குத் தெரியாமல், தங்கை வள்ளி, காதலன் சரத்பாபு மற்றும் அவரது ஊரார், உறவினர்களுடன் திருட்டுக் கல்யாணம் செய்து கொள்ள சென்று கொண்டிருப்பார். அப்போது வள்ளியின் கையைப் பிடித்துக் கொண்டு காளி, “வள்ளி, அவங்கதான் என்னை அனாதையாக்கிட்டுப் போறங்கன்னா...நீயுமா...” எனக் கேட்பார்.

காளியின் கையை விலக்கிவிட்டு, வள்ளி, திருமணக் கூட்டத்துடன் நடந்து செல்வார். தங்கை போகிறாளே என்ற கவலையுடன் காளி நின்றிருக்க, சிறிது தூரம் சென்ற வள்ளி, திரும்பவும் ஓடிவந்து அண்ணனைக் கட்டிப்பிடித்து, “நான் போகலணேண்,” என்று அழுவார். அதைப் பார்த்து, கர்வத்துடன், திமிருடன், ஆனந்தத்துடன், பாசத்துடன் கண்கலங்கும் காளியின் நடிப்பைப் பாராட்டிக் கொண்டே போகலாம்.

தங்கையுடன், திருமணக் கூட்டம் முன்பு வந்து நின்று காளி, “இப்ப என்னடங்கடா செய்யப் போறீங்க, புரிஞ்சிக்கிட்டீங்க இல்லை, என் தங்கச்சி.. யாருன்னு... உலகத்துல வேற யாரும் வேண்டாம், என் அண்ணன் ஒருத்தன் போதும்னு காமிச்சிட்டா இல்லை, உங்க மூஞ்சியெல்லாம் எங்கடா வச்சிக்கப் போறீங்க... திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கிற பொண்ணாடா இது.. வள்ளிடா...என் தங்கச்சி...” எனப் பேசும் அந்தக் காட்சியை யு டியூபில் இப்போதும் போய்ப் பாருங்கள்... காளியை, ரஜினிகாந்த்தை, முள்ளும் மலரும் படத்தை, மகேந்திரனை மறக்கவே மாட்டீர்கள்.

'முள்ளும் மலரும்' படம் பற்றி கவிஞர் வாலி எழுதிய கவிதையை இப்போது குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

புதுமைப்பித்தனை புதுப்பித்தான்; செத்த சினிமாவை பிராண வாயு செலுத்தி மீண்டும் பிறப்பித்தான்!

பார்த்தேன் பலமுறை...

மகேந்திரனின் " முள்ளும் மலரும்" ; புரிந்தது மகேந்திரன் தொட்டால் முள்ளும் மலரும்!

- கவிஞர் வாலி.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
28 நாளில் 20 படங்கள் - 2019, பிப்ரவரி மாதப் படங்கள் ஓர் பார்வை28 நாளில் 20 படங்கள் - 2019, பிப்ரவரி மாதப் ... அதிகப் படங்களால் மிரண்ட 2019 மார்ச் மாதம் அதிகப் படங்களால் மிரண்ட 2019 மார்ச் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

JMK - Madurai,இந்தியா
05 ஏப், 2019 - 15:09 Report Abuse
JMK இந்த படத்தில் ரஜினிக்கு பதிலாக விஜய் / அஜித் நடித்தால் படம் வேற லெவெலில் இருந்திருக்கும் ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in