Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

28 நாளில் 20 படங்கள் - 2019, பிப்ரவரி மாதப் படங்கள் ஓர் பார்வை

07 மார், 2019 - 10:25 IST
எழுத்தின் அளவு:
28-days,-20-movies-release-in-February-2019

2019ம் ஆண்டின் இரண்டு மாதங்கள் முடிந்திருக்கிறது. முதல் மாதமான ஜனவரி மாதத்தில் பெரிய படங்களான 'பேட்ட, விஸ்வாசம்' வந்த காரணத்தால் அந்த மாதத்தில் மொத்தமாக 8 படங்கள்தான் வெளிவந்தன.

ஆனால், 28 நாட்களே கொண்ட பிப்ரவரி மாதத்தில் 20 படங்கள் வெளிவந்து ஆச்சரியப்படுத்தி இருக்கின்றன. 1, 7, 8, 14, 15, 21, 22 என 7 நாட்கள் பட வெளியீடு நாட்களாக அமைந்தன.

எதிர்பார்க்கப்பட்ட படங்கள் தோல்விப் படங்களாகவும், படுதோல்விப் படங்களாகவும், எதிர்பாராத படங்கள் வசூல் படங்களாகவும், வெற்றிப் படங்களாகவும் அமைந்த மாதமாக பிப்ரவரி மாதம் அமைந்தது.

மாதத்தின் முதல் நாளான 1ஆம் தேதியன்றே “பேரன்பு, பேய் எல்லாம் பாவம், சகா, சர்வம் தாள மயம், வந்தா ராஜாவாதான் வருவேன்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் விமர்சன ரீதியாக ஓரளவிற்குப் பாராட்டப்பட்ட படமாக 'பேரன்பு' படம் அமைந்தது. 19 வருடங்களுக்குப் பிறகு ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த 'சர்வம் தாள மயம்' படம் வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டது என்று சொன்னாலும் உள்நாட்டு மக்களால் ரசிக்கப்படாமல் போனது. தெலுங்கில் வசூலில் சாதனை படைத்த 'அத்தாரின்டிக்கி தாரேதி' படத்தை எதற்கு இவ்வளவு மோசமாக 'வந்தா ராஜாவாதான் வருவேன்' என ரீமேக் செய்தார்களோ தெரியவில்லை.

பிப்ரவரி 7ம் தேதியன்று “தில்லுக்கு துட்டு 2, பொதுநலன் கருதி' ஆகிய படங்கள் வெளிவந்தன. 2018ல் சந்தானம் நடித்து ஒரு படம் கூட வராத நிலையில் அதிக பரபரப்பில்லாமல் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு 2' படம் பெரிய வெற்றியும் பெறாமல், மோசமான தோல்வியும் அடையாமல், முதலுக்கு மோசமில்லை என்ற ரீதியில் ஓரளவிற்கு லாபத்தைக் கொடுத்ததாகத் தெரிவிக்கிறார்கள். 'பொதுநலன் கருதி' தலைப்புக்குப் பொருத்தம் இல்லாத படமாக வந்து போனது.

பிப்ரவரி 8ம் தேதி “அவதார வேட்டை, நேத்ரா, உறங்காப்புலி, வாண்டு” ஆகிய படங்கள் வெளிவந்தன. சினிமா ஆசையில் படங்களைத் தயாரிக்கவும், இயக்கவும், நடிக்கவும் வருபவர்களின் ஆர்வமே இந்தப் படங்கள்.

பிப்ரவரி 14ம் தேதி கார்த்தி நடித்த 'தேவ்' படம் ஒரு எதிர்பார்ப்புடன் வெளியானது. இதற்கு முன் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் வெற்றி கார்த்திக்கு இந்தப் படத்திற்கான வியாபாரத்தை எளிதாக்கி இருந்தது. ஆனால், இந்தப் படத்தை நம்பி வாங்கியவர்கள் பலத்த நஷ்டத்தை அடைந்தார்கள். இந்தக் கதையில் அப்படி என்ன இருக்கிறது என்று எண்ணி கார்த்தி நடித்தார் என்பது தெரியவில்லை. அவருடைய மோசமான தோல்விப் படங்களில் 'தேவ்' படமும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது.

பிப்ரவரி 15ம் தேதி “சித்திரம் பேசுதடி 2, ஏழாவது காதல், காதல் மட்டும் வேணா' ஆகிய படங்கள் வெளிவந்தன. 'உலா' என்ற பெயரில் எடுத்து முடிக்கப்பட்ட படம் சில வருட தாமதங்களுக்குப் பின் 'சித்திரம் பேசுதடி 2' என வெளிவந்தது. சரியான விதத்தில் இந்தப் படத்தை மக்களுக்குக் கொண்டு போய் சேர்த்திருந்தால் இந்தப் படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கும்.

பிப்ரவரி 21ம் தேதி 2018ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்ப் படம் என்ற தேசிய விருதைப் பெற்ற 'டு லெட்' படம் வெளிவந்தது. ஒரு படத்தை உலகம் முழுவதும் பாராட்டினாலும், வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டாலும், அந்தப் படத்தை உள்ளூர் ரசிகர்கள் பார்த்து பாராட்டுவதுதான் சிறப்பு என இந்தப் படத்தின் இயக்குனர் செழியன் தெரிவித்திருந்தார். அது போலவே படத்தை தேடி வந்து விரும்பிப் பார்த்த மக்களும் மறக்காமல் பாராட்டினார்கள்.

பிப்ரவரி 22ம் தேதி “கண்ணே கலைமானே, எல்கேஜி, பெட்டிக்கடை, தேடி வந்த நோய்” ஆகிய படங்கள் வெளிவந்தன. உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடித்த 'கண்ணே கலைமானே' படம் அழுத்தமான கதையில்லாமல் மேலோட்டமாக அமைந்து ஏமாற்றியது. ஆர்ஜே பாலாஜி எழுத்தில் வெளிவந்த 'எல்கேஜி' படம் அவரை நாயகனாகவும் ரசிகர்களை ஏற்றுக் கொள்ள வைத்தது. படத்தில் இடம் பெற்ற அரசியல் கிண்டல்கள் படத்திற்கான வெற்றியைத் தேடிக் கொடுத்தது.

கடந்த சில வருடங்களாக வருடத்திற்கு 200 படங்களுக்கும் மேல் வெளிவந்தது. 2018ல் இரண்டு மாதங்கள் படங்கள் வெளிவராததால் 200ஐத் தொடவில்லை. இந்த வருடத்தில் ஜனவரி மாதத்தில் வெறும் 8 படங்கள் மட்டுமே வந்ததால் இந்த வருடம் 200ஐத் தாண்டாது என்று நினைத்தால் பிப்ரவரி மாதத்தில் 20 படங்கள் வந்து அதை மாற்றிவிட்டது.

மார்ச் மாத முதல் வாரமான கடந்த வாரம் 7 படங்களும், இந்த வாரம் வெளியாக உள்ள 5 படங்களும் அதை ஊர்ஜிதப்படுத்துகின்றன.

படங்கள் அதிக எண்ணிக்கையில் வெளிவருவது பெரிதில்லை, எத்தனை சிறப்பான படங்கள் வெளிவருகிறது என்பதுதான் பெரிது. பிப்ரவரியில் வெளிவந்த 20 படங்களில் 'தில்லுக்கு துட்டு 2, எல்கேஜி' ஆகிய இரண்டே இரண்டு படங்கள்தான் வெற்றி பெற்றுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்.

மார்ச் மாதம் தேர்வு காலம் என்பதால் இந்த மாதமும் பெரிய படங்களை எதிர்பார்க்க முடியாது. ஏப்ரல், மே மாதங்கள் விடுமுறைக் காலம் என்பதால் அதிகமான படங்களை எதிர்பார்க்கலாம்.

அதிகமான படங்கள் வரப் போகிறதா, அனைத்து ரசிகர்களையும் கவரப் போகும் படங்கள் வரப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பிப்ரவரி மாதம் வெளியான படங்கள்

பிப்ரவரி 1 : பேரன்பு, பேய் எல்லாம் பாவம், சகா, சர்வம் தாள மயம், வந்தா ராஜாவாதான் வருவேன்

பிப்ரவரி 7 : தில்லுக்கு துட்டு 2, பொதுநலன் கருதி

பிப்ரவரி 8 : அவதார வேட்டை, நேத்ரா, உறங்காப்புலி, வாண்டு

பிப்ரவரி 14 :
தேவ்

பிப்ரவரி 15 : சித்திரம் பேசுதடி 2, ஏழாவது காதல், காதல் மட்டும் வேணா

பிப்ரவரி 21 : டு லெட்

பிப்ரவரி 22 : கண்ணே கலைமானே, எல்கேஜி, பெட்டிக்கடை, தேடி வந்த நோய்

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஒரே மாதத்தில் ரூ.300 கோடி : 2019, ஜனவரியே அமோக துவக்கம்ஒரே மாதத்தில் ரூ.300 கோடி : 2019, ஜனவரியே ... 'முள்ளும் மலரும்' காளியை மறக்க முடியுமா.? 'முள்ளும் மலரும்' காளியை மறக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

07 மார், 2019 - 16:14 Report Abuse
தமிழ் மாணவன் ஒன்றும் உருப்படியாக இல்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in