Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ஒரே மாதத்தில் ரூ.300 கோடி : 2019, ஜனவரியே அமோக துவக்கம்

12 பிப், 2019 - 11:53 IST
எழுத்தின் அளவு:
2019,-Jan-starts-with-Rs.300-crore

2018ம் ஆண்டு பட வெளியீட்டிலும், வசூலிலும் கொஞ்சம் குறையான ஆண்டாகவே கடந்து போனது. இருந்தாலும் சில நல்ல திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் தரமான எதிர்காலத்தைக் கண்முன் நிறுத்தின.

2019ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் மொத்தம் 8 படங்களே வந்தன. அதற்கு ஒரே காரணம் இரண்டு பெரிய படங்களின் வெளியீடு. ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட', அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களும் பொங்கலை முன்னிட்டு சில நாட்கள் முன்னதாக ஜனவரி 10ம் தேதி வெளியாகி அடுத்த இரண்டு வாரங்களுக்கு வேறு எந்தப் புதிய படங்களும் வெளியாகாத நிலையை உருவாக்கி விட்டது.

இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது என்றே திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு படங்களுக்கும் இடையிலான வசூல் தொகையில் எந்தப் படம் முதலிடத்தைப் பிடித்தது என்பது பற்றி கடுமையான விவாதங்களும், சர்ச்சைகளும் எழுந்தன.

இரண்டு படக்குழுவினருமே அவரவர் படங்கள் இவ்வளவு வசூலித்தது என மிகைப்படுத்தி சொன்னதாகவே பலரும் கருதினார்கள். ஆனாலும், இரண்டு படங்களின் வசூலும் சராசரியாக 150 கோடியைக் கடந்திருக்கும் என்பது ஒரு நம்பிக்கைதான். அதற்கு மேல் எவ்வளவு வசூலித்தது என்பதை சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் தான் அறிவிக்க வேண்டும்.

'பேட்ட' படம் தமிழ்நாடு தவிர மற்ற இடங்களில் 'விஸ்வாசம்' படத்தைவிட அதிக வசூலைப் பெற்றது என்றும், 'விஸ்வாசம்' படம் தமிழ்நாட்டில் 'பேட்ட' படத்தின் வசூலை முறியடித்து முதலிடத்தைப் பிடித்தது என்பதும்தான் பரவலான கருத்து.

'கபாலி, காலா' படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்திற்கு 'பேட்ட' வெற்றியும், 'விவேகம்' படத்திற்குப் பிறகு 'விஸ்வாசம்' வெற்றி அஜித்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்துவிட்டது.

முன்னதாக ஜனவரி 4ம் தேதி “மாணிக், தேவகோட்டை” காதல் ஆகிய படங்கள் வெளிவந்தன. இரண்டு படங்களுமே வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது. வருடத்தின் முதலாக வந்த படங்களின் நிலைமை கவலைக்குரிய ஒன்று.

அடுத்து ஜனவரி 9ம் தேதியன்று 'சிகை' படம் தியேட்டர்களில் வெளியாகாமல் மொபைல் ஆப் தளமான ஜீ 5ல் வெளியிடப்பட்டது. 'பரியேறும் பெருமாள்' படத்தின் வரவேற்புக்குப் பிறகு கதிர் நடித்த 'சிகை' படத்தைத் தியேட்டரில் வெளியிடாமல் மொபைல் தளத்தில் வெளியிட்டது ஆச்சரியம்தான். கடந்த ஆண்டு பிரகாஷ்ராஜ் நடித்த 'சில சமயங்களில்' படமும் 'நெட்பிளிக்ஸ்'ல் வெளியாக இப்படிப்பட்ட புதிய வெளியீட்டை ஆரம்பித்து வைத்தது.

ஜனவரி 25ம் தேதியன்று “சார்லி சாப்ளின் 2, குத்தூசி, சிம்பா” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'சார்லி சாப்ளின் 2' படம் ஓரளவிற்கு ஓடியது. இருப்பினும் முதல் பாகத்தைப் போன்ற நகைச்சுவை இந்தப் படத்தில் இடம் பெறவில்லை. பரத் நடித்த 'சிம்பா' படம் அவருக்கு மீண்டும் ஒரு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. நல்ல கருத்தை வலியுறுத்திய 'குத்தூசி' மக்களிடம் சேராமல் போனது.

ஜனவரி மாதம் வெறும் 8 படங்கள் மட்டுமே வந்தாலும் 'பேட்ட, விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களும் சேர்ந்து சுமார் 300 கோடி வசூலைக் கொடுத்தன. அந்தப் படங்களைப் பார்க்க நிறைய மக்கள் தியேட்டருக்கு வந்தது சினிமாவுக்கு ஆரோக்கியமானது. அது போலவே சிறிய படங்களாக இருந்தாலும், நல்ல படங்களுக்கு மக்கள் ஆதரவளித்தால் மட்டுமே இந்த 2019ம் ஆண்டும் சிறப்பாக அமையும்.

ஜனவரி மாதத்தைப் போல குறைவான படங்கள் வராமல், ஜனவரி மாதத்தைப் போல் வசூல் தரும் படங்களாக வரும் மாதங்கள் அமைந்தால் தமிழ் சினிமாவுக்கு மேலும் சிறப்பாக அமையும்.

ஜனவரி மாதம் வெளிவந்த படங்கள்

ஜனவரி 4 : மாணிக் , தேவகோட்டை காதல்

ஜனவரி 9 : சிகை - மொபைல் ஆப்பில் வெளியீடு

ஜனவரி 10 : பேட்ட, விஸ்வாசம்

ஜனவரி 25 : சார்லி சாப்ளின் 2, குத்தூசி, சிம்பா

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வர்மா - வராத மர்மம் என்ன.?வர்மா - வராத மர்மம் என்ன.? 28 நாளில் 20 படங்கள் - 2019, பிப்ரவரி மாதப் படங்கள் ஓர் பார்வை 28 நாளில் 20 படங்கள் - 2019, பிப்ரவரி மாதப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

JMK - Madurai,இந்தியா
13 பிப், 2019 - 12:57 Report Abuse
JMK பேட்ட தான் முதல் விசுவாசம் எல்லாம் அதற்கு பின்னாடிதான் ? ரஜினி / விஜய் அடுத்தது மூணாவது இடம்தான் தலைக்கு ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in