Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

வர்மா - வராத மர்மம் என்ன.?

08 பிப், 2019 - 12:08 IST
எழுத்தின் அளவு:
What-happend-in-Varma-issue.?

தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் டாப்பிக் வர்மா தான். இந்தியத் திரையுலகத்தில் இதற்கு முன் இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்க வாய்ப்பில்லை. ஒரு படத்தை அதன் தயாரிப்பாளரே படம் பிடிக்கவில்லை, அதனால் படத்தை வெளியிடவில்லை, நாயகனை மட்டும் மாற்றாமல், வேறு ஒரு இயக்குனர், கலைஞர்கள் ஆகியோரை வைத்து மீண்டும் படப்பிடிப்பை நடத்தி வெளியிட உள்ளோம் என அறிவித்திருப்பது பல மொழி திரையுலகத்தினரையும், சினிமா ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

முன்னணி ஹீரோக்களுக்கு அடையாளம்
தன் முதல் படமான சேது படத்தின் மூலம் நடிகர் விக்ரமுக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் பாலா. அது போலவே நந்தா படம் மூலம் சூர்யாவுக்கும் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். நான் கடவுள் மூலம் ஆர்யாவுக்கும் ஒரு அடையாளம் கிடைக்கக் காரணமாக இருந்தவர் பாலா. அவரது இயக்கத்தில் நடித்த படங்களுக்குப் பிறகே விக்ரம், சூர்யா, ஆர்யா ஆகியோர் தமிழ்த் திரையுலகத்தில் முன்னணி ஹீரோக்களாக நடை போட ஆரம்பித்தார்கள். தேசிய விருதுகள், மாநில விருதுகள், தனியார் விருதுகள் என பல விருதுகளுக்குச் சொந்தக்காரர் பாலா.

விக்ரம் ஆசை
தன் மகன் துருவ பாலா மூலம் அறிமுகமாக வேண்டும் என விக்ரம் விரும்பிக் கேட்டுக் கொண்டதாலேயே தெலுங்குப் படமான அர்ஜுன் ரெட்டி படத்தை பாலா தமிழில் ரீமேக் செய்து இயக்க ஒப்புக் கொண்டார் என்பது உண்மை.

ரீ-மேக் செட் ஆகாது
படத்தை ரீமேக் செய்ய சம்மதிக்கும் போதே, படத்தின் கதையில் தான் சில மாற்றங்களைச் செய்வேன் என பாலா சொன்னதாக ஒரு தகவல் இருக்கிறது. அந்தத் தகவல் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திற்குத் தெரியாது, ஆனால், விக்ரமுக்கு மட்டும் தெரியும் என்கிறது திரையுலக வட்டாரம். அந்த விவரத்தை விக்ரம் தயாரிப்பாளரிடம் சொல்லாமல் மறைத்துவிட்டதாகவும், படத்தின் முதல் பிரதி தயாராகி படத்தைப் பார்த்த பிறகே தயாரிப்பாளருக்குத் தெரிய வந்தது என்கிறார்கள்.

பட ஆரம்பத்திலேயே யார் இசையமைப்பாளர் என்பது குறித்து சர்ச்சை எழுந்து பின்னர் அது பேசித் தீர்க்கப்பட்டது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து படத்தை எப்படியோ முடித்துவிட்டார்கள்.

படம் தந்த அதிர்ச்சி
படத்தைப் பார்த்த சம்பந்தப்பட்டவர்கள், தெலுங்கு அர்ஜுன் ரெட்டி போல படம் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்களாம். வேறு ஒரு தளத்தில், ஒரு கதையில் படத்தை பாலா இயக்கியிருந்தார் என்று தகவல். மேலும் படத்தில் நிறைய ஆபாச காட்சிகள் நிறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. படம் பிப்ரவரி 14 வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென படம் வராது என்று தயாரிப்பாளர் அறிவித்ததற்கான காரணம் என்ன என்பதைப் பலரும் ஆராய்ந்து வருகிறார்கள்.

தயாரிப்பாளர் - பாலா மோதல்
தயாரிப்பாளருக்கும், இயக்குனர் பாலாவுக்கும் நடந்த வார்த்தை மோதல்தான் காரணம் என்கிறார்கள் சிலர். பாலாவின் பேச்சு பிடிக்காமல் அவரைப் பழி வாங்கும் நோக்கத்தில் மொத்த படத்தையும் தூக்கிப் போட தயாரிப்பாளர் முடிவு செய்துவிட்டார் என்று சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் விக்ரம், தயாரிப்பாளரின் பக்கம் சேர்ந்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால், உண்மையில் என்ன காரணம் என்பது தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா, இயக்குனர் பாலா, விக்ரம் ஆகிய மூவருக்கு மட்டும்தான் தெரியும். அதில் ஈகோ மோதலும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

யாராலும் கணிக்க முடியாது
வர்மா படத்தின் டீசர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. அது போலவே கடந்த மாதம் வெளியான டிரைலரும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே அது ஓடுமா, ஓடாது என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஓடாது என்று கணிக்கப்பட்ட படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. ஓடும் என்று கணிக்கப்பட்ட படங்கள் படுதோல்வியைச் சந்தித்துள்ளன.

பல பேருக்கு வலி
படத்தை வெளியிடுவதும், வெளியிடாததும் ஒரு தயாரிப்பாளரின் முடிவு என்றாலும், அந்தப் படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அதில் நடித்தவர்களுக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றமிருக்கும். அந்த வலி எப்போதைக்கும் மறையாது.

தான் அறிமுகமாக உள்ள முதல் படத்திற்கு இப்படி ஆகிவிட்டதே என படத்தின் நாயகன் துருவ் விக்ரம், நாயகி மேகா வருத்தப்படுவார்கள். இந்தப் படம் மூலம் தமிழில் ஒரு திருப்புமுனையைப் பார்த்துவிடலாம் எனக் காத்திருக்கும் ரதன் பெரிய ஏமாற்றமடைவார்.

பாலா இயக்கத்தில் நடித்துவிட்டோம் என பெருமைப்பட்டுக் கொண்டிருந்த ரைசா வில்சன், ஈஸ்வரி ராவ் ஆகியோரும் ஏமாற்றமடைவார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக தன் படத்திற்கும் தனக்குமான இமேஜ் முற்றிலும் பாதிக்கப்படுகிறது என இயக்குனர் பாலா வருத்தப்படலாம்.

மவுனம் கலைப்பாரா பாலா
இந்த விவகாரம் அடுத்து எப்படிப் போகும் என்பது, பாலா ஏதாவது ஒரு அறிக்கை விட்டால் மட்டுமே நடக்கும். அவரும் அமைதி காத்தால் இந்த விவகாரம் அப்படியே அடங்கிப் போகவும் வாய்ப்புள்ளது.

ஆயிரம் சொன்னாலும், ஒரு படைப்பு முற்றிலும் உருவாக்கப்பட்டு, மக்கள் முன் திரையிடப்படாமல் போவது சரியல்ல என்பது படைப்பாளிகளின் பெரும் கவலையாக இருக்கும். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நடந்தால் அதற்கு வர்மா விவகாரம் முன்னுதாரணமாக அமைந்துவிட்டது என்ற பேச்சு கண்டிப்பாக வரும்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
பொன்விழா படங்கள் 3 : கேப்டன் ரஞ்சன் - நடிகர் பெயரில் தயாரான முதல் படம்பொன்விழா படங்கள் 3 : கேப்டன் ரஞ்சன் - ... ஒரே மாதத்தில் ரூ.300 கோடி : 2019, ஜனவரியே அமோக துவக்கம் ஒரே மாதத்தில் ரூ.300 கோடி : 2019, ஜனவரியே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Sankar - Chennai,இந்தியா
09 பிப், 2019 - 14:23 Report Abuse
Sankar பாலா ஒரு சைக்கோ
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
09 பிப், 2019 - 04:51 Report Abuse
meenakshisundaram தயாரிப்பாளரே அணைத்து செலவுகளையும் செயது லாபம் அல்லது நஷ்டம் அடைகிறார் ,எனவே அவரின் கருத்தே நிற்கும். ஆனால் பாலா இன்னொரு படத்தை தழுவி எடுக்கையில் அதன் முக்கிய அம்சங்களில் மாறுதல் செய்வதென்றால் தயாரிப்பாளரை கலந்து கண்டே செயதிருக்க வேண்டும். ஏனென்றால் இது அடுத்தவரின் பணம்.சொந்தக்கருத்தென்றால் அது வேறே. இதற்க்கு முழு பொறுப்பும் பாலாவின் மேலே விழுகிறது.
Rate this:
Shankar S - California,யூ.எஸ்.ஏ
09 பிப், 2019 - 02:15 Report Abuse
Shankar S ஒரு மனிதனின் படைப்புக்கு மதிப்பு கொடுக்காதவங்களால நல்ல படம் கொடுக்க முடியாது. தயவு செய்து வேறு மொழிக்கு செல்லவும். தமிழ் படங்களை தயாரிக்க வேண்டாம்.
Rate this:
09 பிப், 2019 - 01:10 Report Abuse
Praveen Kannan இறைவி படத்தோட director sj surya படம் ரிலீஸ் செய்ய மாட்டார்கள்....
Rate this:
art ahamed - Dubai - Periyakulam,ஐக்கிய அரபு நாடுகள்
09 பிப், 2019 - 00:14 Report Abuse
art ahamed ஹலோ அனைவருக்கும் ஓர் அன்பான வேண்டுகோள் வீணாக குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் இது ஒரு அருமையான படம் இயக்குனர் சகோதரர் பாலா இயக்கத்தில் வெளிவரும் அற்புதமாக திகழக்கூடிய படமாக இருக்கும் யாருடைய உழைப்பும் வீண் போகாது கண்டிப்பாக எவ்வித குழப்பம் இன்றி படம் உலகமெங்கும் வெற்றி நடை போடும் கூடிய விரைவில் திரையிடப்படும் இந்த திரைப்படம் சம்பத்தப்பட்ட அணைத்து கலைஞர் அனைவருக்கும் மற்றும் தயாரிப்பாளர் , இயக்குனர் , டெக்னீஷியன்ஸ் , அனைவருக்கும் இதயம் கனிந்த முன் வாழ்த்துக்கள் என்றும் நல்லன்புடன் Thoufeeq uae
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Bigil
  • பிகில்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :அட்லீ
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in