Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

பொன்விழா படங்கள் 3 : கேப்டன் ரஞ்சன் - நடிகர் பெயரில் தயாரான முதல் படம்

01 பிப், 2019 - 13:45 IST
எழுத்தின் அளவு:
Captain-Ranjans-50th-year

கருப்பு வெள்ளை காலத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு போட்டியாக வளர்ந்தவர் ரஞ்சன். வாள்வீச்சு, சண்டை, ஸ்டைல் ஆகியவற்றில் எம்ஜிஆருக்கு நிகராக வளர்ந்தவர். அவர் நடித்த சந்திரலேகா, நீலமலைத் திருடன், மங்கம்மா சபதம் போன்றவை வெள்ளி விழா படங்கள். சந்திரலேகா படத்தில் வில்லனாக நடித்து, வில்லன் நடிகர்களுக்கு நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கி கொடுத்தவர், எம்ஜிஆருக்காக உருவாக்கப்பட்ட நீலமலைத் திருடன் படத்தில் ரஞ்சன் நடித்தார். தமிழ் சினிமாவின் முதல் ஆக்சன் ஹீரோ என்று அழைக்கப்படுகிறவர் ரஞ்சன்.

நடிகர்களின் பெயரில் திரைப்படம் உருவாவது தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் இதனை தொடங்கி வைத்தவர் ரஞ்சன். 1969 ஆண்டு கேப்டன் ரஞ்சன் என்ற படம் ரஞ்சன் பெயரிலேயே உருவானது. இதனை டி.பி சுந்தரம் இயக்கியிருந்தார். பிலிம் லேண்ட் புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்தது. வனஜா என்பவர் ரஞ்சன் ஜோடியாக நடித்திருந்தார். வேதா இசை அமைத்து இருந்தார். இதில் ரஞ்சன் ஆக்சன் ஹீரோவாக நடித்தார். ஆனால் இந்தப் படம் வெற்றி பெறவில்லை அதுமட்டுமல்ல இதுவே ரஞ்சன் நடித்த கடைசி தமிழ் படம்.

ரஞ்சன் அதிகம் படித்த நடிகர். விமானம் ஓட்டுதல் முதல் குதிரை ஏற்றம் வரை தெரியும். நடனம் பாடல் ஓவியம் என அனைத்து துறைகளிலும் இருந்தார். தமிழ் சினிமாவிலிருந்து பாலிவுட்டுக்கு சென்ற முதல் நடிகரும் ரஞ்சன் தான்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : பொன்விழா ஆண்டில் அடிமைப்பெண்பிளாஷ்பேக் : பொன்விழா ஆண்டில் ... வர்மா - வராத மர்மம் என்ன.? வர்மா - வராத மர்மம் என்ன.?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bhaskaran - Chennai,இந்தியா
02 பிப், 2019 - 03:06 Report Abuse
Bhaskaran எம்ஜியார் துணைநடிகராக நடித்த சாலிவாகனன் படத்தில் வாள்சண்டையில் வேண்டுமென்றே தன்னை தாக்குகிறார் என்று எம்ஜியார் மற்றொரு ஸ்டண்ட் நடிகரான சின்னப்பத்தேவரிடம் வருத்தப்பட்டதாக செய்திகள் உண்டு ,இருக்கரங்களாலும் வாள்வீசிநடிக்கக்கூடிய தமிழ் திரையுலக அந்தக்கால ஹீரோக்கள் ரஞ்சன் எம்ஜியார் பி. உ.சின்னப்பா என்ற மூவர்மட்டும் என்றும் படித்துள்ளேன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in