Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

பேட்ட, விஸ்வாசம் - ஒரு வியாபார ஒப்பீடு

05 ஜன, 2019 - 13:00 IST
எழுத்தின் அளவு:
Petta-vs-Viswasam-:-How-is-Business.?

2019ம் ஆண்டின் ஜனவரி 10ம் தேதி, தமிழ்த் திரையுலகத்திற்கு ஒரு முக்கியமான நாள் என்று தான் சொல்ல வேண்டும். பாக்ஸ் ஆபிசில் பெரும் ஓபனிங் உள்ள இரண்டு ஹீரோக்கள் அன்று நேருக்கு நேர் மோதிக் கொள்ள உள்ளார்கள்.

ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட', அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம்' இரண்டு படங்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இரண்டு படங்களையும் ஒரு சில நாள் இடைவெளியில் வெளியிட சிலர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. அதற்குக் காரணம் 'ஈகோ' என திரையுலகிலேயே கிசுகிசுக்கிறார்கள்.

போட்டா போட்டி
இரண்டு படங்களின் டிரைலர்களும் ஒன்றுக்கொன்று போட்டியாக உருவாக்கப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளன. அது தொடர்பாக பல மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.

இன்றைய நிலையில் இரண்டு படங்களையுமே தங்கள் தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர்களும் விரும்பி வருகின்றனர். ஆனால், சிங்கிள் ஸ்கிரீன் வைத்துள்ளவர்கள் 'விஸ்வாசம்' படத்தை வெளியிடவே விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சன் பிக்சர்ஸ் தயாரித்த படம் 'பேட்ட' என்றாலும், அந்தப் படத்தை விளம்பரப்படுத்த அவர்களின் அனைத்து டிவிக்கள், ஆப்கள் என பல வழிகளில் அவர்கள் செய்தாலும் 'பேட்ட' டிரைலர் சாதனையை 'விஸ்வாசம்' டிரைலர் சாதாரணமாக முறியடித்தது வியாபார வட்டாரங்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்பதிவு விறுவிறு
இரண்டு படங்களுக்குமான முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்பதிவு ஆன்லைன் இணையதளங்கள் மூலம் பார்க்கும் போது, படம் வெளியாகும் முதல் நாளில்தான் இதுவரை முன்பதிவு ஆரம்பித்த தியேட்டர்களின் முன்பதிவு முடிந்திருக்கிறது. அதற்கடுத்த ஒரு வாரத்திற்கு இரண்டு படங்களுக்குமே டிக்கெட்டுகள் கிடைத்து வருகின்றன.

மூன்றாவது முறை

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 'பேட்ட' படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மூலமாக படத்தை வினியோக முறை அடிப்படையில் படத்தை வெளியிட்டு வருவதாகத் தகவல். வினியோகஸ்தர்களிடமிருந்து சுமார் 40 முதல் 50 கோடி வரையில் டெபாசிட்டைப் பெற்றுக் கொண்டு படத்தை வினியோகம் செய்து வருகிறார்களாம்.

ரஜினியின் படமே 'அவுட்ரேட்' முறையில் விற்கப்படாமல் போவது சமீப காலங்களில் இது மூன்றாவது முறை என சிலர் வருத்தப்படுகிறார்கள். ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படம்தான் கடைசியாக அவுட்ரேட் மற்றும் எம்ஜி முறையில் வினியோகம் செய்யப்பட்ட படம். 'காலா, 2.0' படங்களும் அவுட்ரேட் முறையில் விற்கப்படவில்லை.

பேட்ட வியாபாரம் என்ன.?
'பேட்ட' படத்தின் தெலுங்கு உரிமை 14 கோடி, கேரளா, கர்நாடகா உரிமை 18 கோடி, வெளிநாட்டு உரிமை 35 கோடி, மற்றும் வட இந்திய உரிமை என மொத்தமாக சுமார் 130 கோடி முதல் 140 கோடி ரூபாய் வரை வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

'பேட்ட' படம் தமிழைத் தவிர, தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாவதால் முதல் நாள் வசூலைப் பொறுத்தவரையில் 'விஸ்வாசம்' படத்தை விட நிச்சயம் அதிகமாகத்தான் வசூலாகும்.

விஸ்வாசம் வியாபாரம் என்ன.?
'விஸ்வாசம்' படத்தை அதன் தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து சுமார் 47 கோடி ரூபாய் பெற்று 'அறம்' படத்தைத் தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள். அவர்கள் படத்தை எம்ஜி முறையில் வினியோகம் செய்துள்ளார்கள்.

செங்கல்பட்டு ஏரியா 11 கோடி வரையிலும், கோவை ஏரியா 10 கோடி வரையிலும் விற்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல். படத்தை வினியோகம் செய்த வரையிலேயே கேஜேஆர் ஸ்டுடியோஸ் 5 கோடி வரை லாபத்தைப் பார்த்துவிட்டதாகத் தகவல்.

அஜித்திற்கு பலம்
தியேட்டர் வட்டாரங்களில் பலரும் 'விஸ்வாசம்' படத்தை வெளியிடுவதில்தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்களாம். இளம் ரசிகர்கள் பலரும் அஜித் படத்தை விரும்பிப் பார்ப்பார்கள், அவர்கள் தான் தியேட்டர்களுக்கு அதிகம் வருகிறார்கள் என்பதால்தான் இவ்வளவு வரவேற்பாம்.

ரஜினி டாப்
மற்ற மாநிலங்களில் 'பேட்ட' படம் அளவிற்கு 'விஸ்வாசம்' படத்திற்கு வரவேற்பு இருக்க வாய்ப்பில்லை. கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கூட 'பேட்ட' அளவிற்கு 'விஸ்வாசம்' படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்கிறார்கள். அதில் பெங்களூரு மட்டும் விதிவிலக்கு.

யாருக்கு எப்படி சாதகம்.?
மேலே சொன்ன இரண்டு படங்களின் வியாபாரத்தை பார்க்கும்போது உலகளவில் பேட்ட படத்தின் வசூல் நிச்சயம் டாப்பில் இருக்கும் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். காரணம் ரஜினிக்கு மற்ற மாநிலங்களிலும் ஒரு குறிப்பிட்ட மார்க்கெட் உள்ளது. ஆனால் அஜித்திற்கு அப்படி இல்லை. இருந்தபோதும், தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் அஜித்தின் விஸ்வாசம் படம் பேட்டயை முந்த வாய்ப்பு இருக்கிறது என விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்ட்டிமென்ட் யாருக்கு சாதகம்

ரஜினிகாந்த்தையே எதிர்த்து அஜித் அதிக வசூல் பெற்றுவிட்டார் என்று 10ம் தேதிக்குப் பிறகு தகவல் வந்தால் அது அஜித்தின் இமேஜை இன்னும் வளர்க்க உதவும். 'விஸ்வாசம்' படத்தை எந்தக் காரணம் கொண்டும் தள்ளி வைக்கக் கூடாது என அஜித் தரப்பில் சொல்லப்பட்ட தகவலை இதனுடன் சேர்த்துப் பார்த்தால் உண்மை புரியும்.

இரண்டு படங்களிலும் ஆக்ஷன் பிரதானமாக இருந்தாலும் சென்டிமென்ட் என்பதுதான் இரண்டு படங்களுக்கும் இடையே உள்ள ஒரே ஒற்றுமை. அந்த சென்டிமென்ட் யாருக்கு கை கொடுக்கிறதோ அவர்களுக்குத்தான் வெற்றி.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
2018ஆம் ஆண்டில் கவனம் ஈர்த்த புதுமுக இயக்குநர்கள்2018ஆம் ஆண்டில் கவனம் ஈர்த்த புதுமுக ... பிளாஷ்பேக் : பொன்விழா ஆண்டில் அடிமைப்பெண் பிளாஷ்பேக் : பொன்விழா ஆண்டில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
19 ஜன, 2019 - 18:22 Report Abuse
Vasudevan Srinivasan ஒரு படத்தின் வியாபாரம் மற்றும் வசூல் என்பது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோரின் பிரச்சினை ஏன் தேவை இல்லாமல் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் இதை விவாதப் பொருளாக்குகின்றன.. இது அபத்தம்..
Rate this:
raji - CHENNAI,இந்தியா
06 ஜன, 2019 - 12:57 Report Abuse
raji தற்போது ரஜினியைத் தாக்கியும் மற்றவர்களை (அவரின் இமேஜில் பாதி கூட இல்லாத விஜய் அஜித் போன்றோரை) தூக்கியும் நிறுத்த முயற்சிக்கிறது. என்ன காரணமோ?
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
06 ஜன, 2019 - 10:21 Report Abuse
Mirthika Sathiamoorthi ரஜினிக்கும் அஜித்துக்கும் ரசிகர்கள் இருந்தாலும் மினிமம் கேரண்ட்டி எனும் முறையில் பார்த்தால் அது ரஜினிதான்...உதாரணத்துக்கு டிசம்பர் 12 லிங்கா படம் வெளியானது படம் தோல்வி என்றபோதும் கிறிஸ்த்துமஸ் தினமான பண்டிகை நாட்களில் மாயாஜாலில் 3 காட்சிகள் திரையிடப்பட்டது [ லிங்கா தோல்விக்கு கிறிஸ்த்மஸ் நாளில் வெளியாகாததும் ஒரு காரணம் என கூறப்படுகிறது )...இவ்வளவு ஏன் 2.௦ அதே பண்டிகை நாளில் சத்தியம் திரை அரங்கில் 4 காட்சிகள் திரியிடப்பட்டது...இதற்க்கு காரணம் பண்டிகை நாளில் ரஜினிக்கு வரும் கூட்டம்....இதுமட்டுமல்ல பேட்ட ஒரு மல்டி ஸ்டார் மூவி [ சசிகுமார் விஜயசேதுபதி...]...ரஜினி எபோழுதும் வெற்றிக்கு உறுதியான ஆயுதங்களுடன் களம்காணுவார்...அது நாயகியாகட்டும் இயக்குனர் ஆகட்டும் உடன் நடிக்கும் நடிகர்களாகட்டும்...தான் நடிக்கும் படத்தை தனது தோள்களில் மட்டும் சுமக்கும் வழக்கம் குறைத்து வெகுநாளாகிவிட்டது....பண்டிகை நாளில் இருபடங்களும் வெளியாவதால் இரண்டும் வசூலிக்கும் இங்கு அஜித் ரசிகர்களின் போட்டி என்பது முதல்நாள் வசூல் சாதனை அதை பற்றி மட்டுமே வெற்றியை பற்றி அல்ல... { சிவாவுடன் மறுபடியும் அஜித் இணைந்தபோது நொந்து அதிர்ச்சி அடைந்ததை அஜித் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள் ]
Rate this:
GANESAN - DUBAI,இந்தியா
05 ஜன, 2019 - 13:25 Report Abuse
GANESAN அஜித் சார் படு பயங்கரமான ரிஸ்க் எடுக்கிறார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். மோதுறது மலையோட, நெட்ஒர்க் டீம் வெற்றி பெற்றால் மாஸ் தான் தல சார்
Rate this:
Chris -  ( Posted via: Dinamalar Android App )
05 ஜன, 2019 - 13:23 Report Abuse
Chris Dinamalar karpanai abaaram.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Bigil
  • பிகில்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :அட்லீ
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in