Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2018ஆம் ஆண்டில் கவனம் ஈர்த்த புதுமுக இயக்குநர்கள்

02 ஜன, 2019 - 14:06 IST
எழுத்தின் அளவு:
10-directors-who-impressed-in-2018-tamil-cinema

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்த் திரைப்படத் துறைக்குள் புதுரத்தம் பாய்ந்து கொண்டிருக்கிறது. அதாவது, புதுமுக இயக்குனர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அவர்களில் ஒருசிலருக்கு மட்டுமே வெற்றிப்பட இயக்குநர் என்ற விலாசம் கிடைக்கிறது. அதன் மூலம் ரசிகர்கள் மற்றும் படாதிபதிகளின் கவனத்தை ஈர்த்தவர்களாக மாறுகிறார்கள். அடுத்தடுத்து படவாய்ப்புகள் கிடைத்து, அவர்களது எதிர்காலமும் உறுதி செய்யப்படுகிறது.

இப்படி படத்துறையில் பலமான அஸ்திவாரம் சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. பல இயக்குநர்கள் முதல் படத்திலேயே காணாமல் போகும் துரதிருஷ்டமும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கு 2018 ஆண்டும் விதிவிலக்கு இல்லை என்பதே உண்மை.

2018-ஆம் ஆண்டில் வெளியான 181 படங்களில் 100க்கும் மேற்பட்ட படங்களை புதுமுக இயக்குநர்களே இயக்கியுள்ளனர் என்பது ஆச்சர்யம் அளிக்கும் புள்ளிவிவரம். இந்த 100 இயக்குநர்களில் எத்தனை இயக்குநர்கள் தனித்தன்மைமிக்க இயக்குனர்களாக மிளிர்ந்திருக்கிறார்கள்? இந்த கேள்விக்கு விடை தேடினால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.வெறும் பத்து இயக்குநர்கள் மட்டுமே வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

லெனின் பாரதி
இந்த பத்து இயக்குநர்களில் முதல்படத்திலேயே இமயம்போல் உயர்ந்து நிற்பவர் மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் இயக்குநர் லெனின் பாரதி. ஆண்டனி என்ற அறிமுக நடிகரை வைத்து எடுக்கப்பட்ட படம் மேற்கு தொடர்ச்சி மலை. சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பு நிலையிலையே முடங்கிக்கிடந்த மேற்கு தொடர்ச்சி மலை படத்தை, ஒருகட்டத்தில் அப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் சேதுபதியே கைவிட்ட நிலையில், லெனின் பாரதியின் பெருமுயற்சியில் அந்தப் படம் வெளியானது. மிகப்பெரிய வணிக வெற்றியையும், மிகப்பெரிய பாராட்டையும் ஒரு சேரப்பெற்று திரையுலகையே அசரவைத்தது. இதன் மூலம் முதல்படத்திலேயே, தமிழ்சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இடம்பிடித்தார் லெனின் பாரதி.

மாரி செல்வராஜ்
பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய, பரியேறும் பெருமாள் கடந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று. இப்படம் பேசும் சாதி அரசியல் காரணமாகவும் மாரி செல்வராஜ் குறிப்பிடத்தக்க இயக்குநராக கவனம் பெற்றிருக்கிறார்.

பிரேம்குமார்
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் பிரேம்குமார். இவர், விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த 96 படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநரானார். 96 படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதன் மூலம், பிரேம்குமார் ஒரு முக்கிய இயக்குநராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

அருண் ராஜா காமராஜ்
சிவகார்த்திகேயன் தயாரித்த, கனா படத்தை இயக்கியவர் அருண் ராஜா காமராஜ். பாடலாசிரியர் மற்றும் பாடகரான இவர், இயக்கிய முதல் படமான கனா, வணிகரீதியில் வெற்றி பெற்றது மட்டுமல்ல, மிகவும் தரமான படம் என்ற பெயரையும் பெற்றுள்ளது. எனவே அருண்ராஜா காமராஜ், 2018ஆம் ஆண்டின் வெற்றிப்பட இயக்குநர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

பி.எஸ் மித்ரன்
விஷாலை வைத்து இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ் மித்ரன், முதல் படத்தில் ஒரு வித்தியாசமான கதையை கையில் எடுத்ததோடு, அதற்கு சுவாரஸ்யமான திரைக்கதையை அமைத்து இரும்புத்திரை படத்தை சுவாரஸ்யமான படமாக இயக்கியிருந்தார். அதுவே அப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இரும்புத்திரை படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அடுத்தப் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் பி.எஸ்.மித்ரன்.

இளன்
ஹரிஷ் கல்யாண், பிக்பாஸ் ரைசா நடிக்க, இளன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கிய படம் பியார் பிரேமா காதல். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்த இந்தப்படம், திருமணம் செய்து கொள்ளாமலே ஒரே வீட்டில் வாழும் லிவிங் டுகெதர் வாழ்க்கையை மையப்படுத்திய படம். சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், வணிகரீதியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன் மூலம் பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளன் கவன ஈர்ப்பை பெற்றிருக்கிறார். அவருக்கு சில புதிய படவாய்ப்புகளும் கிடைத்திருக்கின்றன. பியார் பிரேமா காதல் படத்தை ஹிந்தியிலும் இயக்க இருக்கிறார்.

காளி ரங்கசாமி
இயக்குநர் அஸ்லாம், தயாரிப்பில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் கதாநாயகனாக நடித்த படம் ஒரு குப்பை கதை. துப்புறவுத் தொழிலாளியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டிருந்த இந்தப்படத்தை, காளி ரங்கசாமி என்ற அறிமுக இயக்குனர் இயக்கினார். வணிகரீதியில் வெற்றியைப் பெற்றிருக்க வேண்டிய இந்தப்படம், பைரசி காரணமாக வெற்றியைப்பெற தவறினாலும், மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக பேசப்பட்டது. இதன்மூலம் காளி ரங்கசாமி வெற்றிப்பட இயக்குநராக மாறி இருக்கிறார். வரும்காலங்களில் இவருக்கு படவாய்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

நெல்சன்
நயன்தாராவை கதாநாயகியாக வைத்து நெல்சன் இயக்கிய படம் கோலமாவு கோகிலா. இந்தப் படம் கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன் மூலம் நெல்சன் வெற்றிப்பட இயக்குநராக மாறி இருக்கிறார். இவர் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

ராஜ்குமார்
அட்டகத்தி தினேஷ் நடித்த அண்ணனுக்கு ஜே படத்தை இயக்கியவர் ராஜ்குமார். வெற்றிமாறனின் உதவியாளர் இவர். வணிக ரீதியில் இந்தப்படம் தோல்வி அடைந்தாலும், கவனிக்கத்தக்க படமாக அமைந்தது. இதன்மூலம் ராஜ்குமாரும் கவனத்தை ஈர்த்த இயக்குநராக மாறி இருக்கிறார்.

கார்த்திக் தங்கவேல்
ஜெயம்ரவி நடிப்பில் ஆண்டின் இறுதியில் வெளியான அடங்கமறு படத்தை இயக்கியவர் கார்த்திக் தங்கவேல். அடங்கமறு படத்துக்கு ஆரம்பத்தில் மாறுபட்ட விமர்சனங்கள் இருந்தாலும், கமர்ஷியலாக வெற்றி பெற்றது. எனவே கார்த்திக் தங்கவேல், வெற்றி பெற்ற இயக்குநர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

இவர்களுடைய வரவு தமிழ்சினிமாவுக்கு மேலும் புத்துணர்வைக் கொடுக்கும் என்று நம்பலாம். அதேநேரம், 2018 ஆம் ஆண்டில் அறிமுகமான 100க்கும் மேற்பட்ட இயக்குநர்களில் பத்து இயக்குநர்கள் மட்டுமே தனித்தன்மையுடன் வெளிப்பட்டு வெற்றியடைந்திருக்கிறார்கள் என்பது சற்றே சஞ்சலத்தையும் ஏற்படுத்துகிறது.

வெற்றி பெற்ற இயக்குநர்களின் எண்ணிக்கை இனி வரும் ஆண்டுகளிலாவது அதிகரிக்க வேண்டும் என்பதே நம் ஆசை. அதுதான் தமிழ்சினிமாவின் தரத்தையும் பெருமையையும் உயர்த்த உதவும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
2019ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் ஓர் பார்வை2019ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் ... பேட்ட, விஸ்வாசம் - ஒரு வியாபார ஒப்பீடு பேட்ட, விஸ்வாசம் - ஒரு வியாபார ஒப்பீடு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in