Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2018ல் பாராட்டுகளைப் பெற்ற படங்கள்

01 ஜன, 2019 - 13:23 IST
எழுத்தின் அளவு:
Most-welcomed-and-congrats-movie-in-2018

2018 ஆம் ஆண்டில் 181 திரைப்படங்கள் வெளியாகின. அவற்றில் 26 படங்கள் மட்டுமே வணிகரீதியில் வெற்றியைப் பெற்றுள்ளன. அதேநேரம், ரசிகர்களின் பாராட்டைப்பெற்ற படங்கள் எவை என்பதையும் பார்க்க தோன்றுகிறது. ஏனெனில் மக்களின் பாராட்டை பெற்ற படங்கள் மட்டுமே திரைத்துறையை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகின்றன.

அதோடு, அப்படத்தை இயக்கிய இயக்குநர்களுக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தருகின்றன. அவர்களின் எதிர்காலத்தையும் உறுதி செய்கின்றன. பல வருடங்கள் கஷ்டப்பட்டு படம் இயக்கும் வாய்ப்பை பெறும் அவர்களுக்கு படங்களின் வெற்றியே அவர்களின் காத்திருப்புக்கும் உழைப்புக்கும் உரிய உண்மையான வெகுமதியாக இருக்கிறது.

அந்த வகையில் 2018-ஆம் ஆண்டில் வெளியான 181 படங்களில் சுமார் 20 படங்கள் மட்டுமே அனைத்து தரப்பு ரசிகர்களுடைய பாராட்டுக்களைப் பெற்றுள்ளன.

பெருமைக்குரிய இரண்டு படைப்புகள்
விஜய் சேதுபதி தயாரிப்பில் லெனின் பாரதி என்ற அறிமுக இயக்குநர் இயக்கிய மேற்கு தொடர்ச்சி மலை, மாரி செல்வராஜ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கிய பரியேறும் பெருமாள் ஆகிய இரண்டு படங்கள் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றன. அதுமட்டுமல்ல இந்த இரண்டு படங்கள் மட்டுமே கடந்த ஆண்டில் வெளியான பெருமைக்குரிய படைப்புகளாக காலத்தைக் கடந்து நிற்கும் படங்களாக இருக்கின்றன.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித் வடசென்னை படம் பாராட்டுப் பெற்றது. அதேநேரம், ஆபாச வசனங்கள் மற்றும் வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்ததால் கடும் விமர்சனத்தையும் சந்தித்தது.

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் ஏ பி சி என அனைத்து செண்டர்களிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கடந்த ஆண்டில் வெளியான படங்களில் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு பெரிய லாபம் கொடுத்த படம் இதுதான்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கிய கனா திரைப்படம் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது. ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்த இந்தப் படம் அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப் பெற்றது.

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்த காற்றின் மொழி திரைப்படமும் பல தரப்பு ரசிகர்களையும் கவரந்தது. துமாரி சுலு என்ற ஹிந்தி படத்தின் ரீமேக்கான இப்படம் குடும்பத்தினருடன் பார்க்கத்தகுந்த படமாக இருந்தது.

கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் படத்துக்கும் பலதரப்பினரிடமிருந்து பாராட்டு கிடைத்தது. நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப்படமாக எடுக்கப்பட்ட இந்தப் படம் தெலுங்கில் மகாநடி என்ற பெயரிலும் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும் வெளியானது.

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படம் மிகப்பெரிய வசூலையும், பாராட்டையும் ஒருசேரப் பெற்றது. 450 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 1000 கோடி வசூலை நெருங்கி வருவதாக சொல்லப்படுகிறது.

ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி திரிஷா நடித்த 96 படமும் அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டது. முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் திரைப்படம் அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கப்பட்ட படங்களில் ஒன்று.

பி.எஸ்.மித்ரன் என்ற புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் விஷால் நடித்த இரும்பு திரைப்படமும் மக்களால் பாராட்டப்பட்டதோடு வணிக ரீதியிலும் வெற்றி பெற்றது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படம் வணிகரீதியில் மிகப்பெரிய தோல்வியடைந்தது. அதேசமயம் ரஜினிகாந்தை வித்தியாசமாக பயன்படுத்தியதற்காக பாராட்டையும்பெற்றது.

இயக்குநர் அஸ்லம் தயாரிப்பில் வெளியான ஒரு குப்பை கதை படம் அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டது. துப்புரவுத் தொழிலாளியின் வாழ்க்கை பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இன்றைய நாகரிகப் பெண்களுக்கு மிகப்பெரிய பாடமாகவும் இருந்தது. வெற்றிமாறன் தயாரிப்பில் அட்டக்கத்தி தினேஷ் நடித்த அண்ணனுக்கு ஜே படமும் ஓரளவு பாராட்டப்பட்ட படம்தான்.

நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படமும் ரசிகர்களால் பாராட்டப் பெற்றது. நயன்தாரா நடித்த மற்றொரு படமான இமைக்கா நொடிகள் படத்துக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அடங்கமறு படமும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. அதற்குமுன் ஜெயம்ரவி நடித்த டிக் டிக் டிக் படமும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த படமாக இருந்தது.

2018 ஆம் ஆண்டில் மேற்கண்ட படங்கள் பல தரப்பினராலும் பாராட்டப்பட்ட படங்களாக இருக்கின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
2019ல் நட்சத்திரங்களின் புத்தாண்டு கொண்டாட்டம்2019ல் நட்சத்திரங்களின் புத்தாண்டு ... 2019ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் ஓர் பார்வை 2019ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in