Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2019ல் நட்சத்திரங்களின் புத்தாண்டு கொண்டாட்டம்

01 ஜன, 2019 - 10:55 IST
எழுத்தின் அளவு:
Celebritiesh-New-year-celebration

2019-ம் ஆண்டு புத்தாண்டு பிறந்ததையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் புத்தாண்டை ஆடி, பாடி வரவேற்று கொண்டாடினர். திரைநட்சத்திரங்கள் புத்தாண்டை எப்படி வரவேற்கின்றனர், கொண்டாடுகின்றனர் என்பதை இங்கு பார்ப்போம்...!

சாய் தன்ஷிகா : புத்தாண்டை கோவையில், யோகி டா படத்தின் படப்பிடிப்பில் கொண்டாடுகிறேன். பொதுவாக புத்தாண்டுக்கு தர்கா போவேன், பாபா கோவில் போவேன். இந்தாண்டு அந்த திட்டம் உள்ளது.

ஜனனி ஐயர் : புத்தாண்டையொட்டி கோவையில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளேன். மதியத்திற்கு பிறகு சென்னை வந்து குடும்பத்தோடு கொண்டாட போகிறேன். ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளேன். 2019 ஆண்டு இன்னும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்.

சாயிஷா : மும்பையில் குடும்பத்தோடு புத்தாண்டை கொண்டாடுகிறேன். கடந்தாண்டு ஓய்வே இல்லாமல் நிறைய படங்களில் நடித்து வந்தேன். இந்தாண்டு, சற்று ஓய்வெடுக்கலாம் என நினைக்கிறேன். 2019ல் நல்ல படங்கள் அமையும் என நம்புகிறேன்.

ஹன்சிகா : இந்தாண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டு எல்லாமே அமெரிக்காவில் தான். ஒவ்வொரு ஆண்டும் அங்கு போய்விடுவேன். இந்தாண்டும் எனது கவனம் எல்லாம் எனது குழந்தைகள் மீது தான் இருக்கிறது. 2019 இன்னும் நிறைய கடமைகளும், பொறுப்புகளும் உள்ளது.

த்ரிஷா : புத்தாண்டை சுவிட்சர்லாந்தில் கொண்டாட இருந்து, கேன்சலாகிவிட்டது. படப்பிடிப்பால் என்னால் போக முடியவில்லை. அம்மா, நண்பர்களுடன் சென்னையில் தான் புத்தாண்டை கொண்டுகிறேன். 2018ல் நிறைய நல்ல விஷயங்கள் நடந்தது. 96 படம் மிகப்பெரிய வெற்றி தந்தது. 2019 இன்னும் நிறைய படங்கள் அமையும், நல்ல பெயரையும், இடத்தையும் கொடுக்கும் என நம்புகிறேன்.

டயானா சாம்பிகா : சென்னையில் தான் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டம். சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க, 2019ல் ஒரு நாளை கூட வீணாக்காமல், கடுமையாக உழைக்க வேண்டும் என எண்ணியுள்ளேன்.

அர்த்தனா : கேரளாவில என்னுடைய வீட்டில் தான் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டம். அப்பா, அம்மா, தங்கையுடன் ஜாலியா சந்தோஷமாக கொண்டாடுகிறேன். 2018ல் கடைக்குட்டி சிங்கம் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. 2019ல் வெண்ணிலா கபடிக்குழு 2 மூலம் நல்ல இடம் கிடைக்கும் என நம்புகிறேன். நிறைய நல்ல படங்கள் பண்ண வேண்டும் என்கிற ஆசை உள்ளது.

ஆனந்தி : குடும்பத்தோடு ஐதராபாத்தில் தான் இந்தாண்டு கொண்டாட்டம். எம்பிஏ., தேர்வு இருப்பதால், வெளிநாட்டுக்கு செல்லவில்லை. பொதுவாக வெளிநாடு சென்று கொண்டாடுவது பிடிக்காது. குடும்பத்தோடு கொண்டாடுவது தான் பிடிக்கும். 2018ல் பரியேறும் பெருமாள் மிகப்பெரிய வெற்றியை தந்தது. 2019ல் இன்னும் நல்ல படங்கள் வரும் என நம்புகிறேன்.

நதியா : என்னோட பசங்கள் அமெரிக்காவிலிருந்து விடுமுறைக்காக வந்துள்ளார்கள். அதனால் இந்தாண்டு மும்பையில் தான் புத்தாண்டு கொண்டாட்டம். வெளியில் போய் கொண்டாடுவது எனக்கு பிடிக்காது. வீட்டில் குழந்தைகள், குடும்பத்தோடு பேசி, உணவு உண்டு பொழுதை கழிக்கவே பிடிக்கும். தமிழ் படங்கள் மட்டுமல்ல நிறைய நல்ல படங்களில் நடிக்க ஆசை இருக்கு. குடும்பத்தில் எல்லோரும் எனக்கு முக்கியம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

யாஷிகா ஆனந்த் : 2018ல் நல்ல பெயர் கிடைத்தது. 2019 புத்தாண்டை கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கொண்டாட்டம். 2019, சிறப்பான ஆண்டாக அமையும் என்று நம்புகிறேன். அதோடு ஜிம்முக்கு போய் உடலை பிட்டாக வைக்க ஆசைப்படுகிறேன்.

ஓவியா : எனக்க பிடித்தவர்கள் எல்லோரும் சென்னையில் தான் இருக்கிறார்கள், ஆகையால் இந்தாண்டு சென்னையில் தான் புத்தாண்டு கொண்டாட்டம். நிறைய படங்களில் நடிக்கும் ஆசையில்லை, தேர்ந்தெடுத்த படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். 2018ல் மூன்று படங்களில் நடித்திருக்கிறேன், 2019ல் இந்த படங்கள் ரிலீஸாகும். தமிழ் மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
2018ல் தமிழ் சினிமாவில் தொலைந்த ரூ.325 கோடி2018ல் தமிழ் சினிமாவில் தொலைந்த ரூ.325 ... 2018ல் பாராட்டுகளைப் பெற்ற படங்கள் 2018ல் பாராட்டுகளைப் பெற்ற படங்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in