Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2018 - வசூலில் சாதனை படைத்த டாப் 5 படங்கள்

31 டிச, 2018 - 07:58 IST
எழுத்தின் அளவு:
Top-5-collection-movies-in-Tamil-cinema-2018

தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி சீராக இருக்கும்போது மட்டுமே எந்தவொரு தொழிலும் ஆரோக்கியமாக இருக்கும். தேவைக்குமீறி உற்பத்தி இருந்தால் அந்தத் தொழில் தேக்கமடைவதை தவிர்க்கவே முடியாது.

இப்படி ஒரு பிரச்சனையில்தான் நீண்டகாலமாகவே தமிழ்சினிமா சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. போதிய தியேட்டர்கள் கிடைக்காமல் படங்களை வெளியிடமுடியாதநிலையில் ஏராளமான படங்கள் பெட்டிக்குள் முடங்கிக் கிடப்பதற்கு இதுவே அடிப்படையான காரணம். அப்படியும் கோலிவுட்டில் படத்தயாரிப்பு குறையவில்லை என்பது ஆச்சர்யம் இல்லை, வேதனை.

ஒவ்வொருவாரமும் திரைக்குவரும் படங்களின் எண்ணிக்கைக்கும் குறைவே இல்லை. கடந்த ஆண்டுகளைப்போலவே 2018 ஆம் ஆண்டிலும் 175க்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வந்துள்ளன. அவற்றில் எத்தனை படங்கள் வணிகவெற்றியைப் பெற்றன? என்ற கேள்விக்கு விடைதேடினால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

காரணம்... 15 சதவிகித படங்கள் மட்டுமே வணிக வெற்றியைப்பெற்றுள்ளன. அவற்றில் மேற்குத்தொடர்ச்சிமலை, பரியேறும்பெருமாள் ஆகிய இரண்டு படங்களைத் தவிர மற்ற அனைத்தும் முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்கள்.

2018ஆம் ஆண்டில் முன்னணி ஹீரோக்கள் நடிப்பில் வெளியான படங்களின் பட்டியல் இதோ...

ரஜினி (காலா, 2.0), கமல் (விஸ்வரூபம்-2) விஜய் (சர்கார்), சூர்யா (தானா சேர்ந்த கூட்டம்) விக்ரம் (ஸ்கெட்ச், சாமி ஸ்கொயர்), விஷால் (இரும்புத்திரை, சண்டக்கோழி-2), விஜய்சேதுபதி (ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ஜுங்கா, செக்கச்சிவந்தவானம், 96, சீதக்காதி) , பிரபுதேவா (லட்சுமி, குலேபகாவலி, மெர்குரி), சிவகார்த்திகேயன் (சீமராஜா, கனா), ஜெயம்ரவி (டிக் டிக் டிக், அடங்க மறு), தனுஷ் (வட சென்னை, மாரி-2), கார்த்தி (கடைக்குட்டி சிங்கம்),) சிம்பு (செக்கச்சிவந்த வானம்) ஆர்யா (கஜினிகாந்த்) ஜி.வி.பிரகாஷ் குமார் (நாச்சியார், செம), அதர்வா (செம போத ஆகாதே, இமைக்கா நொடிகள்), கௌதம் கார்த்திக் (இருட்டுஅறையில் முரட்டு குத்து, மிஸ்டர். சந்திர மௌலி), ஜெய் (கலகலப்பு-2, ஜருகண்டி), விஜய் ஆண்டனி (காளி, திமிரு பிடிச்சவன்), விஷ்ணுவிஷால் (ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம்), விதார்த் (காற்றின் மொழி, வண்டி), விமல் (மன்னர் வகையறா, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு).

முன்னணி ஹீரோக்கள் நடித்த இந்தப் படங்களில் வணிகவெற்றியைப் பெற்ற டாப் 5 படங்கள் எவை?

1 - 2.0 125 கோடி

சுமார் 500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் உலக அளவில் 1000 கோடி வசூலை நெருங்கியுள்ளது. ஆரம்பத்தில் படத்தின் வசூல் குறைவாக இருந்தாலும், தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் மட்டும் 125 கோடியை வசூல் செய்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் தமிழ்ப்படம் வசூலித்த அதிகபட்ச தொகை இதுதான். அதுமட்டுமல்ல, தமிழ் சினிமா வரலாற்றில் 500 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையையும் 2.0 திரைப்படம் நிகழ்த்தியுள்ளது. தமிழ்ப் படங்களில் உலக அளவில் 289 கோடி ரூபாய் வசூல் செய்து முதல் இடத்தில் இருக்கிறது எந்திரன். தனது எந்திரன் படத்தின் சாதனையை, அதன் 2-ம் பாகமான 2.0 கொண்டே முறியடித்திருக்கிறார் ரஜினி. இதன்மூலம் இன்றைக்கும் ரஜினிதான் சூப்பர்ஸ்டார் என்பது நிரூபணமாகியுள்ளது.

2 - சர்கார் - 120 கோடி

ரஜினிக்குப் பிறகு அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு விடையாக விஸ்வரூபமெடுத்து வருகிறார் விஜய். அண்மைக்காலமாக அவரது படங்கள் வியாபாரத்திலும், வசூலிலும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகின்றன. விஜய் நடித்த சர்கார் படத்தின் தமிழ்நாடு பிசினஸ் 75 கோடி என்பது மிகப்பெரிய சாதனை. தமிழக அளவில் 120 கோடி வசூல் செய்து 2வது இடத்தில் இருக்கிறது சர்கார். அதேநேரம், தமிழ்நாடு அளவில் சர்கார் படத்தின் முதல்நாள் வசூல் 30 கோடி என்ற சாதனையை 2.0 படம் கூட முறியடிக்கவில்லை. தமிழகத்தில் முதல் நாளில் 30 கோடி, மொத்தமாக 120 கோடி, உலகளவில் சுமார் 250 கோடி வசூல் என விஜய்யின் வியாபார எல்லையை பல மடங்கு விஸ்தீரணமாக்கியுள்ளது சர்கார்.

3 - காலா - 70 கோடி

வசூல்ரீதியில் 3ஆவது இடத்தைப் பிடித்திருந்தாலும், ரஜினியின் கேரியரில் காலா சந்தேகமில்லாமல் தோல்விப்படம்தான். குழப்பமாக இருக்கிறதா? தமிழகத்தில் 70 கோடியை வசூல் செய்திருந்தாலும், அப்படத்தின் வியாபாரத்தோடு ஒப்பிடும்போது காலா தோல்விப்படம்தான். காலா படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு சுமார் 50 கோடியை திருப்பிக் கொடுக்கும்நிலைக்கு தள்ளப்பட்டார் தனுஷ். அதற்காகவே தாணுவின் தயாரிப்பில் 3 படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டு 30 கோடி சம்பளத்தை முன்கூட்டியே வாங்கி காலா கடனை அடைத்தார். அதாவது பெரிய தொகையை வசூலித்தாலும் பட்ஜெட், வியாபாரம், வசூல் அடிப்படையில் காலா தோல்விப்படம்தான்.

4 - தானா சேர்ந்த கூட்டம் - 65 கோடி

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில், சுமார் 55 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் தானா சேர்ந்த கூட்டம். அப்படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸை 36 கோடிக்கு வாங்கி வெளியிட்ட பரதன் பிலிம்ஸ் என்ற விநியோகஸ்தருக்கு 25 கோடி ஷேர்தான் கிடைத்தது. எனவே 11 கோடி நஷ்டம். அந்த நஷ்டத்தொகையை அவருக்கு திருப்பிக் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் தயாரிப்பாளர் ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா. இந்தப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி வசூல் செய்திருந்தால் விநியோகஸ்தருக்கு 40 கோடி ஷேர் கிடைத்திருக்கும். 65 கோடியை மட்டுமே வசூலித்ததால் தோல்விப்படமானது. அதேநேரம் வசூல் செய்த தொகையின் அடிப்படையில் டாப் 10 வசூல் படங்களின் பட்டியலில் இடம்பிடிக்கிறது தானா சேர்ந்த கூட்டம்.

5 - சீமராஜா - 50 கோடி

சிவகார்த்திகேயன். சமந்தா நடிப்பில் வெளியான சீமராஜா படத்தின் பட்ஜெட் 60 கோடி. இதில் சிவகார்த்திகேயன் சம்பளம் 18 கோடி. பப்ளிசிட்டி, வட்டி, விநியோக செலவு 8 கோடி சேர்த்தால் சீமராஜாவின் மொத்த தயாரிப்பு செலவு 68 கோடி. 65 கோடியே 50 லட்சத்துக்குத்தான் பிசினஸ் செய்யப்பட்டது. எனவே ரிலீஸுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு 2 கோடியே 50 லட்சம் நஷ்டம். தமிழ்நாடு தியேட்டரிகல் 36 கோடிக்கு விற்கப்பட்டது. ஆனால் ஷேர் கிடைத்ததோ 24 கோடி. எனவே 12 கோடியை திருப்பிக் கொடுக்க வேண்டியநிலை. ஏற்கனவே 2.5 கோடி நஷ்டத்தையும் சேர்த்தால் ரிலீஸுக்குப் பிறகு தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டம் 14.50 கோடி. சீமராஜா படம் தமிழ்நாட்டில் 50 கோடியை வசூல் செய்தும் தோல்விப்படமானது துரதிஷ்டம்தான்.

5 - கடைக்குட்டி சிங்கம் - 50 கோடி

ஐந்தாவது இடத்தை சீமராஜா உடன் கடைக்குட்டி சிங்கம் படமும் பங்குபோட்டுக்கொள்கிறது. அதேநேரம் கடந்த ஆண்டு வெளியான படங்களில் மிகப்பெரிய வெற்றிப்படம் கடைக்குட்டி சிங்கம் படம்தான். காரணம் இந்தப்படத்தின் பட்ஜெட் வெறும் 22 கோடிதான். 22 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கடைக்குட்டி சிங்கம் படம் வசூல் செய்தது 50 கோடி, 68 கோடியில் எடுக்கப்பட்ட சீமராஜா வசூல் செய்ததும் 50 கோடி என்பதையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இப்படத்தின் வெற்றியை புரிந்து கொள்ளலாம். ஏ பி சி ஆகிய மூன்று சென்டர்களிலும் வசூலைக்குவித்த படம் இதுதான்.

வெற்றி படங்கள்

டாப் 5 பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்தப்படங்கள் தவிர, மணிரத்மனம் இயக்கிய செக்கச்சிவந்த வானம் (40 கோடி), பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்த இரும்புத்திரை (30 கோடி), விஜய்சேதுபதி நடித்த 96 (25 கோடி), விஷ்ணுவிஷால் நடித்த ராட்சசன் (15 கோடி), சூர்யாவின் உறவினர் தயாரித்த ஆபாசப்படமான இருட்டு அறையில் முரட்டு குத்து (15 கோடி) ஆகிய படங்களும் 2018 ஆம் ஆண்டில் வசூல் சாதனை படைத்த வெற்றி படங்களின் பட்டியலில் உள்ளன.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
திரும்பிப் பார்ப்போம் 2018 தமிழ் சினிமா : 100 தகவல்கள்திரும்பிப் பார்ப்போம் 2018 தமிழ் ... 2018ல் நடந்த நட்சத்திர திருமணங்கள் 2018ல் நடந்த நட்சத்திர திருமணங்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

ஊர்க்காவலன் - COIMBATORE,இந்தியா
08 ஜன, 2019 - 16:00 Report Abuse
ஊர்க்காவலன் அது என்ன சூர்யாவின் உறவினர் ஏன் அவனுக்கு பேரு இல்லையா சூர்யா பெயரை சொல்லி அந்த படத்தை சம்பந்தபடுத்தி சூர்யா ஓட பெயரை இழிவுபடுத்துவது நியாயம் இல்லை
Rate this:
R Sundar - Coimbatore,இந்தியா
01 ஜன, 2019 - 10:42 Report Abuse
R Sundar ம்... ம்... அளந்து விடறதுக்கு என்ன காசா பணமா... 2.o படத்தின் உண்மையான நிலவரம்... கோவையில் ஒன்பது தியேட்டர்ல இருந்த படம் மூணாவது வாரத்துல நாலு தியேட்டர் ஆயிடுச்சு... அதுவும் தலா ஒரு காட்சியோ ரெண்டு காட்சியோதான்... கேரளாவுல முதல் வாரத்தோட பாதி தியேட்டர்கள்ல எடுத்தாச்சு... படம் ஹிந்தில மட்டும்தான் ஹிட்... மத்த எல்லா எடத்திலயும் பிளாப்... எத வெச்சு 500 Cr 1000 Cr-னு சொல்லறாங்க? எல்லாம் ரீல்
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
31 டிச, 2018 - 17:54 Report Abuse
Vasudevan Srinivasan படங்கள் தயாரிக்கும் செலவு அதிகமாவதற்கு காரணம் தேவை இல்லாத பிரம்மாண்டம் முட்டாள்தனமான பாடல் காட்சிகள் மடத்தனமான சண்டைக்காட்சிகள் இவற்றையெல்லாம் தாண்டி நட்சத்திரங்களுக்கான சம்பளம்.. அது மட்டுமின்றி வசூல் அடிபடுவது தியேட்டர்களின் கெடுபிடிகள் பார்க்கிங் கட்டணக் கொள்ளை, கேன்டீன் கொள்ளை ஒரே மாதிரியான கதைகள் ஒருவரைமுறை இல்லாமல் போறவன் வர்றவனெல்லாம் படமெடுப்பது நடிப்பது.. யதார்த்தம் என்ற பெயரில் கேமராவே பயப்படும் மூஞ்சிகளெல்லாம் நடிக்கும்போது எவன் சார் படம் பார்ப்பான்..
Rate this:
M.A. GANESH - CHENNAI,இந்தியா
31 டிச, 2018 - 15:12 Report Abuse
M.A. GANESH ௨.௦ படம் லீவ் நாளில வரல அப்படி வேண்டும் இந்த சாதனை செஞ்சிருக்கு . உங்களுக்கு புரியலேன்னா பேசவேணாம் ok
Rate this:
31 டிச, 2018 - 15:12 Report Abuse
sura Gopalan 2019ல் விஸ்வாசம் ஆக போகுது புஸ்வாசம்.
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in