Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2018 - சாதனை படைத்த டீசர்கள், டிரைலர்கள் : விஜய், ரஜினி டாப்

29 டிச, 2018 - 17:35 IST
எழுத்தின் அளவு:
2018-Top-10-teasers-and-Trailers-in-Tamil-cinema

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக டீசர்கள், டிரைலர்கள் ஆகியவை அந்தந்த படங்களுக்கு வெற்றிகரமான முன்னோட்டங்களாக அமைந்து வருகின்றன. அவற்றிற்கான வரவேற்பைப் பொறுத்து, அந்தந்த படங்களின் வியாபார எல்லைகளும் விரிவடைகின்றன.

2017ம் ஆண்டில் வெளிவந்த டீசர்கள், டிரைலர்கள் ஆகியவற்றிற்கான வரவேற்பை விட இந்த 2018ம் ஆண்டில் கிடைத்த வரவேற்பு மிக மிக அதிகம். கடந்த வருடம் சில படங்களின் டீசர்கள், டிரைலர்கள் மட்டுமே ஒரு கோடி பார்வைகளைக் கடந்தன. இந்த வருடம் அது பத்து படங்களுக்கும் அதிகமாகக் கிடைத்திருக்கிறது.

இந்த வருடத்தில் சில படங்களுக்கு டீசர்கள் மட்டுமே வெளியிடப்பட்டன, சில படங்களுக்கு டிரைலர்கள் மட்டுமே வெளியிடப்பட்டன. அதனால், அவையிரண்டுக்குமாக அதிகப் பார்வைகளைப் பெற்று சாதனை படத்துள்ள படங்களின் டீசர்கள், டிரைலர்களைப் பற்றிப் பார்ப்போம்.

1. சர்கார்

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், ஏஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடித்த படம். இந்த ஆண்டில் அதிகமான பார்வைகளையும், லைக்குகளையும் பெற்று சாதனை புரிந்த படம். விஜய் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'மெர்சல்' படம்தான் கடந்த ஆண்டில் சாதனை புரிந்த படமாக இருந்தது. இந்த வருடமும் விஜய் படமான 'சர்கார்' படம்தான் அந்த சாதனையைப் புரிந்துள்ளது. இந்த டீசருக்கு 3 கோடியே 60 லட்சம் பார்வைகளும், 14 லட்சம் லைக்குகளும் கிடைத்துள்ளன. இந்தப் படத்திற்கு டிரைலர் எதுவும் வெளியிடப்படவில்லை.

சர்கார் டீசர் - https://youtu.be/VkkyaodksT4

பார்வைகள் - 36,065,546
லைக்குகள் - 14,25,542



2. காலா



உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ரஜினிகாந்த், நானா படேகர், ஹுமா குரேஷி மற்றும் பலர் நடித்த படம். இப்படத்தின் டீசர் எதிர்பார்த்ததை விட அதிகமான பார்வைகளைப் பெற்றது. 5 லட்சத்திற்கும் கூடுதலான லைக்குகளைப் பெற்ற இந்த டீசர் 3 கோடியே 14 லட்சம் பார்வைகளைப் பெற்றது. டீசருக்குக் கிடைத்த வரவேற்பு டிரைலருக்குக் கிடைக்காமல் போனது ஆச்சரியம்தான்.

காலா டீசர் - https://youtu.be/Wm_vSSlVsV4

பார்வைகள் - 31,457,602
லைக்குகள் - 5,21,060

காலா டிரைலர் - https://youtu.be/mMCEvr3VWqQ

பார்வைகள் - 13,458,842
லைக்குகள் - 2,18,931



3. 2.0



லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்த படம். இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் மிகப் பெரும் சாதனையை யு டியுபில் ஏற்படுத்தப் போகும் படம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அதைப் பொய்யாக்கியது. எதிர்பார்த்த அளவிற்கு பார்வைகளையும், லைக்குகளையும் இந்தப் படம் தமிழில் பெறவில்லை என்றாலும், ஹிந்தியில் பெரிய சாதனையைப் படைத்தது. டீசரை அடுத்து டிரைலரையும் வெளியிட்டார்கள். ஹிந்தியில் வெளிவந்த டீசருக்கு 5 கோடியே 50 லட்சம் பார்வைகளும், டிரைலருக்கு 6 கோடியே 30 லட்சம் பார்வைகளும் கிடைத்துள்ளன. தெலுங்கு டீசருக்கு 1 கோடியே 20 லட்சம் பார்வைகளும், டிரைலருக்கு 99 லட்சம் பார்வைகளும் கிடைத்துள்ளன. தமிழில் எதிர்பார்த்த பெரிய சாதனை இல்லை என்றாலும் மற்ற மொழிகளில் எதிர்பாராத பெரிய சாதனையைப் புரிந்துள்ளது.

2.0 டீசர் - https://youtu.be/7cx-KSsYcjg

பார்வைகள் - 21,588,884
லைக்குகள் - 5,47,441

2.0 டிரைலர் - https://youtu.be/jrETX2eDhL8

பார்வைகள் - 17,104,090
லைக்குகள் - 4,27,564



4. மாரி 2



உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள படம். மூன்று வருடங்களுக்கு முன்பு வந்த முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாக டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து, தனுஷின் யு டியுப் சாதனையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இப்பட டிரைலருக்கு 2 கோடிக்கும் கூடுதலான பார்வைகளும், 5 லட்சம் லைக்குகளும் கிடைத்துள்ளன. இப்படத்திற்கு டீசர் எதுவும் வெளியிடப்படவில்லை.

மாரி 2 டிரைலர் - https://youtu.be/ORZltL9glEA

பார்வைகள் - 21,096,412
லைக்குகள் - 5,49,730



5. சாமி 2



தமீன்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில், ஹரி இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், விக்ரம், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்த படம். இந்த ஆண்டில் வெளிவந்த டிரைலர்களிலேயே அதிகமாகக் கிண்டலடிக்கப்பட்ட டிரைலர் இதுதான். யார் என்ன கிண்டலடித்தாலும், விக்ரம் நடித்த படங்களிலேயே அதிகமான பார்வைகளைப் பெற்ற டிரைலராக இந்த டிரைலர் சாதனை படைத்தது. இந்த டிரைலருக்கு 1 கோடியே 79 லட்சம் பார்வைகள் கிடைத்தன. இப்படத்திற்கு இரண்டாவதாக மற்றொரு டிரைலரையும் வெளியிட்டார்கள். அதற்கு 53 லட்சம் பார்வைகளே கிடைத்தன.

சாமி 2 டிரைலர் - https://youtu.be/ycPfmwVZ5DM

பார்வைகள் - 17,905,529
லைக்குகள் - 2,30,330

சாமி 2 டிரைலர் 2 - https://youtu.be/GguGXG1PBcs

பார்வைகள் - 5,364,432
லைக்குகள் - 1,05,508



6. பேட்ட



சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்கும் படம். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10ம் தேதிதான் வெளிவருகிறது. இருந்தாலும் டீசரும், டிரைலரும் இந்த ஆண்டே வெளியாகிவிட்டதால் இந்த வருடப் பட்டியலில் இடம் பெறுகிறது. இப்படத்தின் டீசரை ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டார்கள். இருப்பினும் எதிர்பார்த்ததை விட வரவேற்பு கொஞ்சம் குறைவுதான். 1 கோடியே 33 லட்சம் பார்வைகளும், 4 லட்சத்து 83 ஆயிரம் லைக்குகள் மட்டுமே கிடைத்தன. ஆனால், டீசரை விட நேற்று வெளியான டிரைலருக்கு வரவேற்பு அதிகமாகவே உள்ளது. தற்போது வரை டிரைலருக்கு 1 கோடியே 13 லட்சம் பார்வைகளும், 5 லட்சத்திற்குக் கூடுதலான லைக்குகளும் கிடைத்துள்ளன. இருப்பினும் விஜய் படமான 'சர்கார்' படத்தின் சாதனையை 'பேட்ட' படத்தால் முறியடிக்க முடியவில்லை.

பேட்ட டீசர் - https://youtu.be/bbMLUadeMnA

பார்வைகள் - 13,359,807
லைக்குகள் - 4,83,068

பேட்ட டிரைலர் - https://youtu.be/FCB0ZfQ9Rzs

பார்வைகள் - 11,361,811
லைக்குகள் - 5,67,184



7. செக்கச் சிவந்த வானம்



மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்த படம். இந்த ஆண்டில் வெளிவந்த ஒரே மல்டி ஸ்டார் படம். அதனால், டிரைலர் பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் ஒரு கோடியே 31 லட்சம் பார்வைகள் மட்டுமே அதன் டிரைலருக்குக் கிடைத்தது. இரண்டாவதாகவும் ஒரு டிரைலரை வெளியிட்டார்கள். அதற்கு 52 லட்சம் பார்வைகள் மட்டுமே கிடைத்தன. இப்படத்திற்கு டீசர் எதுவும் வெளியிடப்படவில்லை.

செக்கச் சிவந்த வானம் டிரைலர் 1 - https://youtu.be/x2q5w-ThJeE

பார்வைகள் - 13,106,310
லைக்குகள் - 3,21,830

செக்கச் சிவந்த வானம் டிரைலர் 2 - https://youtu.be/qDPjDR297Wc

பார்வைகள் - 5,236,099
லைக்குகள் - 1,54,120


8. தானா சேர்ந்த கூட்டம்

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்த படம். இப்படம் இந்த வருடப் பொங்கலை முன்னிட்டு வெளிவந்தாலும், கடந்த வருடமே இதன் டீசர் வெளியானது. சூர்யா நடித்த படங்களிலேயே அதிக பார்வைகள், லைக்குகள் பெற்ற படம் என்ற பெருமையைப் பெற்றது. இப்படத்திற்கு டிரைலர்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

தானா சேர்ந்த கூட்டம் டீசர் - https://youtu.be/hYM_iZII4U4

பார்வைகள் - 12,093,763
லைக்குகள் - 6,30,200



9. வட சென்னை



உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ், ஆன்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்த படம். இந்தப் படத்திற்கு திரைக்கு வருவதற்கு முன்பு மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அது டீசர் வெளியான பிறகு பெரிய ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. வித்தியாசமனா படம் என்ற பெயரைப் பெற்றாலும் தனுஷை அவரது ரசிகர்கள் மாரி போலவே பார்க்க விருப்பப்படுகிறார்கள் என்பதற்கு இந்தப் படத்தின் டீசருக்குக் கிடைத்த வரவேற்பை வைத்தே புரிந்து கொள்ளலாம். 1 கோடியே 11 லட்சம் பார்வைகள் மட்டுமே இந்த டீசருக்குக் கிடைத்தது. இப்படத்திற்காக டிரைலர் எதுவும் வெளியாகவில்லை.

வட சென்னை டீசர் - https://youtu.be/q5GG5HJ1hVk

பார்வைகள் - 11,195,759
லைக்குகள் - 2,26,676



10. டிக் டிக் டிக்



நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் இமான் இசையமைப்பில், ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் மற்றும் பலர் நடித்த படம். இப்படத்தின் டிரைலர் படம் மீதான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதனால் படமும் வெற்றியைப் பெற்றது. டிரைலர் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த படம் என இந்தப் படத்தைத் தாராளமாகச் சொல்லலாம். இப்பட டிரைலருக்கு 1 கோடியே 5 லட்சம் பார்வைகள் கிடைத்தன. இப்படத்தின் டீசருக்கு 47 லட்சம் பார்வைகள் கிடைத்தன. படம் இந்த வருடம் வெளிவந்தாலும் கடந்த வருடத்திலேயே இதன் டீசர், டிரைலர்களை வெளியிட்டுவிட்டார்கள்.

டிக் டிக் டிக் டீசர் - https://youtu.be/UP2PZOVg4Xw

பார்வைகள் - 4,715,047
லைக்குகள் - 1,04,188

டிக் டிக் டிக் டிரைலர் - https://youtu.be/6ug9zvC9pJM

பார்வைகள் - 10,597,488
லைக்குகள் - 1,93,418

மேற்குறிப்பிட்ட டாப் 10 பட்டியலில் இடம் பிடித்த படங்களின் டீசர்கள், டிரைலர்கள் ஆகியவை ஒரு கோடியைக் கடந்து பார்வைகளைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. வேறு சில படங்கள் 1 கோடியை நெருங்கும் அளவிற்கு அருகில் வந்துள்ளன. பல படங்கள் சில லட்சங்கள் பார்வைகளைப் பெற்றுள்ளன. சிலவற்றுக்கு சில ஆயிரங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

டீசர்கள், டிரைலர்கள் ஆகியவற்றிற்கான வரவேற்பும், பார்வைகள், லைக்குகள் ஆகியவை படங்களின் வெற்றிக்கு பெரிய அளவில் உதவாது என்பதை சில படங்கள் நிரூபித்துள்ளன. இருந்தாலும் அதிக விளம்பரப்படுத்த முடியாத சில நல்ல படங்கள் அவற்றின் வரவேற்பால் நல்ல வரவேற்பையும், வசூலையும் பிடித்ததையும் உதாரணமாகச் சொல்லலாம்.

இந்த வருடத்திய சாதனை அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலேயே வெளிவர இருக்கும் 'விஸ்வாசம்' டீசர் அல்லது டிரைலரால் முறியடிக்கப்படலாம் என்பதை இப்போதே சொல்லலாம்.

அடுத்த வருடம் மற்ற முன்னணி நடிகர்களின் படங்களும் அப்படிப்பட்ட சாதனைகளைப் படைக்கப் போவது என்பது உறுதி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in