Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2018 - யு-டியூபில் டாப் 10 தமிழ்ப் பாடல்கள் ஓர் பார்வை

25 டிச, 2018 - 14:54 IST
எழுத்தின் அளவு:
Most-viewed-in-Youtube-:-Top-10-Tamil-songs-in-2018

2018ம் ஆண்டு வெளிவந்த படங்களில் பல படங்களின் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை என்பது வருத்தமான ஒரு விஷயம். அப்படியே ஹிட்டான ஒரு சில படங்களின் பாடல்களில் ஒரு பாடல் மட்டும் தான் சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளது. அனைத்துப் பாடல்களுக்குமே வரவேற்பு என்று எந்தப் படத்தையும் பெரிதாக குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.

இசை ரீதியாக, பாடல்கள் ரீதியாக இந்த ஆண்டு கொஞ்சம் வறட்சியான ஆண்டு தான் என்று சொல்ல வேண்டும். முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பல படங்கள் வந்தாலும் முந்தைய ஆண்டுகளைப் போல பத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் சூப்பர் ஹிட் வரிசையில் சேருவதே பெரிய விஷயமாக உள்ளது. டாப் 10 பாடல்களைக் கூட தேடிப் பார்த்து, தேடிப் பார்த்துதான் சேர்க்க வேண்டியிருக்கிறது.

இந்த ஆண்டில் வெளிவந்த பாடல்களிலிருந்து யு டியூபில் ரசிகர்களிடம் அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடல்களைத்தான் இந்த டாப் 10 பட்டியலில் சேர்த்திருக்கிறோம். லிரிக் வீடியோ, பாடல் வீடியோ என்று சில பாடல்கள் இருந்தாலும் அதில் எந்த வீடியோ அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறதோ அதைத்தான் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்த விதத்தில் இந்த வருடம் யு டியூபில் முதல் பத்து இடங்களைப் பிடித்த பாடல்கள்...

1. குலேபா.... - குலேபகாவலி

2018ம் ஆண்டின் முதலிடத்தை இளையராஜா இசையமைத்த பாடலோ, ரகுமான் இசையமைத்த பாடலோ பிடிக்கவில்லை. வளரும் இசையமைப்பாளர்களான விவேக் - மெர்வின் இசையமைத்த 'குலேபா...' பாடல் தான் பிடித்திருக்கிறது. வித்தியாசமான டியூனும், நகைச்சுவையான வரிகளும், பிரபுதேவாவின் அற்புதமான நடனமும், இந்தப் பாடலை 'விக்கலு விக்கலு விக்கலு வந்தா தண்ணிய குட்சிக்கம்மா' என குட்டி, சுட்டிகளையும் பாட வைத்த பாடல். கல்யாண் இயக்கத்தில், விவேக் மெர்வின் இசையமைப்பில், கு. கார்த்திக் எழுதி அனிருத், மெர்வின் சாலமோன் பாடிய இந்தப் பாடல் யு டியுபில் இதுவரை 8 கோடி பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. இப்பாடலின் புரோமோ கூட 1 கோடி பார்வைகளைக் கடந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று.



2. வாயாடி பெத்த... - கனா

சிவகார்த்திகேயன் தயாரித்த முதல் படமான 'கனா' படத்தில் அவரும், அவருடைய மகள் ஆராதனாவும் முதல் முறையாக இணைந்து பாடிய 'வாயாடி பெத்த புள்ள' பாடல் யு டியுபில் இதுவரையில் 7 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்தப் பாடல் வெளியான நாளிலிருந்தே பெரும் வரவேற்பைப் பெற்றது. படம் வெளிவந்த பின் இன்னும் அதிகமான வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்திற்கு திபு நைனன் தாமஸ் இசையமைக்க பாடலை ஜிகேபி எழுதியுள்ளார். பாடலை வைக்கம் விஜயலட்சுமியும் பாடியுள்ளார்.



3. சொடக்கு மேல... - தானா சேர்ந்த கூட்டம்

ஒரு பாடலைக் கேட்டதுமே ஆடத் தோன்றும் வகையில் ஒரு சில பாடல்கள் தான் இருக்கும். அந்த விதத்தில் அமைந்துள்ள பாடல் தான் இது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், மணி அமுதவன், விக்னேஷ் சிவன் எழுதி ஆன்டனி தாசன் பாடிய பாடல். இந்தப் பாடல் யு டியுபில் 6 கோடிக்கும் அதிகமான பார்வையைப் பெற்றுள்ளது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வெளிவந்த முதல் சூப்பர் ஹிட் பாடல் என இந்தப் பாடலைச் சொல்லலாம். இப்பாடலின் லிரிக் வீடியோ 5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இவ்விரண்டையும் சேர்த்தால் 11 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று இந்தப் பாடல் தான் முதலிடத்தைப் பிடிக்கும்.



4. சின்ன மச்சான்... - சார்லி சாப்ளின் 2

சினிமா ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த ஆண்டில் பெரிய வரவேற்பைப் பெற்ற பாடல் இது. நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி வந்தவர்கள், டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடம் அறிமுகமாகி, சினிமாவில் பாடிய இந்தப் பாடல் வெளிவந்த சில நாட்களிலேயே கோடி பார்வைகளைப் பெற்று, இப்போது 6 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. அடுத்த ஆண்டில் வெளிவர உள்ள படத்திற்கு இப்போதே இந்தப் பாடல் மூலம் நல்ல வரவேற்பை ஏற்படுத்திவிட்டனர். ஷக்தி சித்ம்பரம் இயக்கத்தில், அம்ரிஷ் இசையமைப்பில், செல்ல தங்கையா எழுதி, செந்தில் கணேஷ், ராஜலட்சுமி பாடிய பாடல் இது.



5. நீயும் நானும்.. - இமைக்கா நொடிகள்

ஹிப்ஹாப் தமிழா பாடல் என்றாலே அதிரடியாகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கி இந்த மெலடி பாடல் ரசிகர்களையும் கவர்ந்தது. காதல் பாடல்கள் என்றாலே அது தனிவிதத்தில் ரசிகர்களைக் கவரும். இந்தப் பாடலும் அப்படியே. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், கபிலன் எழுத, ரகு திக்ஷித், சத்யபிரகாஷ், ஜிதின் ராஜ் பாடிய பாடல் இது. யு டியுபில் 4 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.



6. சிம்டாங்காரன்... - சர்கார்

இந்த ஆண்டில் வந்த பாடல்களில் அதிக சர்ச்சையை ஏற்படுத்திய பாடல் சிம்டாங்காரன ஆகத் தான் இருக்கும். என்ன மொழி இது என பலரையும் கேள்வி கேட்க வைத்த பாடல். புரிந்ததோ இல்லையோ பலரும் பாடிக் கொண்டிருந்தார்கள். யு டியுபில் 3 கோடிக்கும் அதிகமான பார்வைகளை இந்தப் பாடல் பெற்றுள்ளது. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விவேக் எழுத, பம்பா பாக்யா, விபின் அனேஜா, அபர்ணா நாராயணன் பாடிய பாடல். இப்பாடலின் வீடியோவும் 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.



7. ரௌடி பேபி... - மாரி 2


நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ், யுவன் கூட்டணி இணைந்த படம். இந்தப் பாடல் வெளிவரும் போது 'மாரி' படத்தின் தனுஷ், அனிருத் கூட்டணி பற்றி கண்டிப்பாகப் பேசுவார்கள் என எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்படியெல்லாம் நடக்கவில்லை. 'மாரி 2' படத்தின் பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. முதலில் வெளிவந்த இந்த லிரிக் வீடியோ உடனடியாக 1 கோடி பார்வைகளைக் கடந்து, தற்போது 3 கோடியைக் கடந்துள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் தனுஷ் எழுதி, தீ-யுடன் இணைந்து பாடிய பாடல். இப்பாடலின் வீடியோ வெளிவந்தால் அதுவும் பெரிய வரவேற்பைப் பெறும் என இப்போதே சொல்லலாம்.

https://youtu.be/3nauk_scj9U

8. ஒரு குச்சி ஒரு குல்பி... - கலகலப்பு 2

ஹிப்ஹாப் தமிழாவின் டிரேட் மார்க் பாடல். இப்பாடலின் வீடியோ தான் யு டியூபில் 3 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பாடலில் நடனமாடியுள்ள நாயகிகளின் கிளாமர் கூட இந்தப் பாடல் அவ்வளவு பார்வைகளைப் பெற காரணமாக இருக்கலாம். சுந்தர் சி இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், ரோகேஷ், சரவெடி சரண், ஹிப்ஹாப் தமிழா ஆகியோர் எழுத, கானா வினோத், சரவெடி சரண் பாடிய பாடல் இது.



9. மழை குருவி... . செக்கச் சிவந்த வானம்

மணிரத்னம், ஏஆர் ரகுமான் கூட்டணி என்றாலே பாடல்கள் கண்டிப்பாக ஹிட் என்று சொல்வார்கள். இந்தப் படத்திலும் அப்படியே. இந்தப் பாடலில் கூடுதலாக சிம்பு வேறு இருக்க, இந்தப் பாடலுக்கு யு டியுபில் கிடைத்த வரவேற்பு மிகக் குறைவுதான். 2 கோடிக்கும் அதிகமாகத்தான் பார்வைகள் கிடைத்துள்ளது. படம் வெளிவந்த பிறகாவது பார்வைகள் அதிகமாகும் என எதிர்பார்த்தால் படத்திலேயே இந்தப் பாடலைக் குறைத்துவிட்டார்கள். மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில், வைரமுத்து எழுத, ஏஆர் ரகுமான் பாடிய பாடல் இது.



10. குறும்பா... - டிக் டிக் டிக்

அம்மாவுக்கும் மகனுக்கும், அம்மாவுக்கும் மகளுக்கும், அப்பாவுக்கும் மகளுக்கும் பல பாடலகள் உண்டு. ஆனால், அப்பாவுக்கும், மகனுக்குமான பாடல்கள் மிக மிகக் குறைவு. அதனால்தானோ என்னமோ, இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு. நிஜத்தில் அப்பா, மகனாக உள்ளவர்களே சினிமாவிலும் நடித்ததால் இந்தப் பாடலுக்கு கூடுதல் வரவேற்பு. சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், மதன் கார்க்கி எழுத, சித் ஸ்ரீராம் பாடிய பாடல் இது.



2018ல் யு டியூபில் அதிக வரவேற்பைப் பெற்ற 10 பாடல்களில் பல இசையமைப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால், முதலிரண்டு இடங்களை வளரும் இசையமைப்பாளர்களான விவேக் மெர்வின், திபு நைனன் தாமஸ் ஆகியோர் பெற்றிருப்பது ஆச்சரியமே. மேலும், ஏஆர் ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், இமான், ஹிப்ஹாப் தமிழா, அம்ரிஷ் ஆகியோரும் இந்த டாப் 10 பாடல்கள் பட்டியலில் இருக்கிறார்கள். ஏஆர் ரகுமானின் இரண்டு பாடல்கள், ஹிப்ஹாப் தமிழாவின் இரண்டு பாடல்கள் அந்தப் பட்டியலில் உள்ளன.

கணக்கில் வராமல் போன 'கல்யாண வயசு...'

அனிருத் இசையமைப்பில் வெளிவந்த 'கோலமாவு கோகிலா' படத்தின் 'கல்யாண வயசு...' பாடல் கூட 6 கோடி பார்வைகளைக் கடந்த பாடலாக இருந்தது. ஆனால், அந்தப் பாடல் காப்பிரைட் பிரச்சினையால் யு டியூபிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் அந்தப் பாடலும் இந்த டாப் 10 பட்டியலில் இடம் பிடித்திருக்கும்.



டாப் 20 என கணக்கிட்டால் அதன் பின் வரும் பாடல்கள் 1 கோடி பார்வைகளுக்கும் சற்று கூடுதலாக மட்டுமே பெற்றுள்ளன. மற்ற பாடல்கள் 1 கோடிக்கும் குறைவான பார்வைகளைத்தான் பெற்றிருக்கின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்கள் குறைவு தான். அந்தக்குறை அடுத்து வரும் 2019ம் ஆண்டில் இருக்காது என எதிர்பார்ப்போம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in