Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2018ல் அதிகப் படங்களுக்கு இசையமைத்த சாம் சிஎஸ்

24 டிச, 2018 - 11:44 IST
எழுத்தின் அளவு:
Music-directors-:-Sam-CS-top-in-Tamil-cinema-2018

2018ம் ஆண்டு வெளிவந்த படங்களில் பாடல்கள் சூப்பர் ஹிட் என்று சொல்லுமளவிற்கு பெரிதாக எந்தப் படங்களும் இல்லை. ஒரு சில படங்களில் ஓரிரு பாடல்கள் மட்டுமே ஹிட்டாக அமைந்தன. ஒரு படத்தின் அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட் என்று சொல்லும் அளவில் ஒரு படம் கூட அமையாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமே.

யு-டியூபில் ஒரு பாடல் அதிகப்படியான பார்வைகளைப் பெற்றுள்ளது என்பது மட்டுமே அந்தப் பாடலுக்கான ஹிட் என்பதில் அர்த்தம் இல்லை. தங்களது அபிமான நடிகர்களின் பாடல் சூப்பர் ஹிட்டாக வேண்டும், அது யு-டியுபில் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று பிடிக்காத பாடலைக் கூட அவர்களது ரசிகர்கள் கேட்டு, லைக் போட்டு வருகிறார்கள். அத்தனை கோடி பேர் படம் பார்க்க வந்தால் அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆகிவிடுமே. பின்னர் ஏன் அவர்கள் அனைவரும் படம் பார்க்க வருவதில்லை.



இளையராஜா, ஏஆர் ரகுமான் போன்ற நட்சத்திர இசையமைப்பாளர்கள் இசையமைத்த படங்களின் பாடல்கள் கூட பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு சூப்பர் ஹிட்டான பாடல்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.





சாம் சிஎஸ் டாப்


2017ம் ஆண்டில் வெளிவந்த விக்ரம் வேதா படத்தின் பின்னணி இசை மூலம் தன் பக்கம் தயாரிப்பாளர்களைத் திருப்பிய இசையமைப்பாளர் சாம் சிஎஸ், தான் இந்த 2018ம் வருடத்தில் அதிகப் படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பளார். அவரது இசையில் “தியா, இரவுக்கு ஆயிரம் கண்கள், மிஸ்டர் சந்திரமௌலி, கடிகார மனிதர்கள், லட்சுமி, வஞ்சகர் உலகம், நோட்டா, அடங்க மறு” ஆகிய 8 படங்கள் வெளிவந்துள்ளன.

இந்தப் படங்களில் ஒரு படம் கூட ஹிட் படம் என்று சொல்ல முடியாது. அடங்க மறு படம் இரு தினங்களுக்கு முன்புதான் வெளிவந்தது. அந்தப் படத்தின் வரவேற்பு பற்றி அடுத்த சில நாட்களில் தான் சொல்ல முடியும். 2017ல் விக்ரம் வேதா என்ற ஒரே ஒரு ஹிட்டைக் கொடுத்து இந்த ஆண்டில் 8 படங்களுக்கு இசையமைத்துவிட்டார் சாம் சிஎஸ்.



இரண்டாவது இடத்தில் யுவன்


அடுத்து 7 படங்களுக்கு இசையமைத்து இந்த ஆண்டில் அதிகப் படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. அவருடைய இசையில் “இரும்புத்திரை, செம போத ஆகாதே, பியார் பிரேமா காதல், ராஜா ரங்குஸ்கி, சண்டக்கோழி 2, ஜீனியஸ், மாரி 2” ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் இரும்புத்திரை, பியார் பிரேமா காதல் ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. பாடல்களைப் பொறுத்தவரையில் பியார் பிரேமா காதல், மாரி 2 ஆகிய படங்களின் பாடல்கள் ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றுள்ளன.

சீனியர் இசையமைப்பாளர்களில் இளையராஜா இசையமைப்பில் “நாச்சியார், மேற்குத் தொடர்ச்சி மலை, 60 வயது மாநிறம்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவை மூன்றுமே வியாபார ரீதியாக வெற்றி பெறாத படங்கள்.



ஏஆர் ரகுமான் இசையமைப்பில் “செக்கச் சிவந்த வானம், சர்கார், 2.0” ஆகிய படங்கள் வெளிவந்தன. இப்படங்களின் ஒரு சில பாடல்கள் சூப்பர் ஹிட் வரிசையிலும், சில பாடல்கள் ஹிட் வரிசையிலும் சேர்ந்துள்ளன.



2017ம் ஆண்டில் மூன்று படங்களுக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இந்த வருடம் ஒரு படம் கூட வரவில்லை என்பது அதிர்ச்சியான ஒரு தகவல்.



இமான் இசையமைப்பில் இந்த வருடம் வெளிவந்த பஞ்சு மிட்டாய், டிக் டிக் டிக், கடைக்குட்டி சிங்கம், சீமராஜா ஆகிய படங்களில் டிக் டிக் டிக், கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்கள் பெரிய வெற்றியைப் பெற்ற படங்கள்.



அனிருத் இசையமைத்து இந்த ஆண்டு இரண்டே இரண்டு படங்கள்தான் வெளிவந்தன. தானா சேர்ந்த கூட்டம், கோலமாவு கோகிலா ஆகிய இரண்டு படங்களில் கோலமாவு கோகிலா படம் பெரிய வெற்றியைப் பெற்றது.



கவனம் ஈர்த்த கோவிந்த் வஸந்தா


2018ம் ஆண்டில் கவனம் ஈர்த்த இசையமைப்பாளராக புதியவர் கோவிந்த் வஸந்தா உள்ளார். இவர் இசையமைத்த 96 மற்றும் சீதக்காதி படங்களின் இசைகள் பேசப்பட்டன. 96 படத்தில் இடம்பெற்ற காதலே காதலே பாடலும், அதன் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சீதக்காதி பாடல்கள் ஈர்க்கவில்லை என்றாலும் மனதோடு பயணித்த பின்னணி இசை பேசப்பட்டது. அடுத்தாண்டில் இவர் இன்னும் நல்ல படங்களுக்கு இசையமைத்து பேசப்படுவார் என நம்பலாம்.



மற்ற முன்னணி இசையமைப்பாளர்களும், அவர்களின் படங்களும்...



சந்தோஷ் நாராயணன் : மெர்க்குரி, காலா, பரியேறும் பெருமாள், வட சென்னை

ஜிப்ரான் : விஸ்வரூபம் 2, ராட்சசன், ஆண் தேவதை

பாலமுரளி பாலு :
இருட்டு அறையில் முரட்டு குத்து, டிராபிக் ராமசாமி, கஜினிகாந்த்

சித்தார்த் விபின் : செயல், போத, ஜுங்கா

ஹிப்பாப் ஆதி : இமைக்கா நொடிகள்

வழக்கம் போல பல சிறிய இசையமைப்பாளர்களும், புதிய இசையமைப்பாளர்களும் இசையமைத்த படங்கள் இந்த ஆண்டு வெளிவந்தன. வளரும் இசையமைப்பாளர்கள் சிலர் இசையமைத்த பாடல்கள் முன்னணி இசையமைப்பாளர்கள் இசையமைத்த பாடல்களை விடவும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.



யு டியூப், ரேடியோ, பென்டிரைவ் என காலத்திற்கேற்ப பாடல்களை ரசிக்கும் ரசிகர்களும் அதிகமாகி வருகிறார்கள். ஆனால், ஒரு படத்தில் ஒரு பாடலையாவது சூப்பர் ஹிட்டாக்க வேண்டும் என எந்த இசையமைப்பாளரும் ஒரு கவனத்துடன் இசையமைக்கவில்லை என்பது இந்த வருடத்தின் ஹிட் பாடல்களைப் பார்த்தால் புரியும். ரசிகர்களின் பெரிய வரவேற்பைப் பெற்ற பாடல்களைப் பற்றி வேறு ஒரு கட்டுரையில் பார்ப்போம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in