Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ஒரு பட அசத்தல் : அக்டோபர் படங்கள் ஓர் பார்வை

10 நவ, 2018 - 10:46 IST
எழுத்தின் அளவு:
How-is-October-2018-for-tamil-cinema

2018ம் ஆண்டின் கடைசி இரண்டு மாதங்களில் இருக்கிறோம். இதுவரையிலும் சுமார் 140 படங்கள் வெளியாகியுள்ளன. இன்னும் உள்ள இரண்டு மாதங்களில் 60 படங்கள் வெளியாகி முந்தைய வருடங்களைப் போலவே இந்த ஆண்டும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டுமா என்பது சந்தேகம்தான்.

பெரிய படங்களுக்கு சரியான வெளியீட்டுத் தேதி கிடைக்காமலும், சிறிய படங்களுக்கு வெளியிட தேதியே கிடைக்காமலும் தமிழ் சினிமா தள்ளாடிக் கொண்டுதான் இருக்கிறது. அதே சமயம் வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்கள் எப்போது வந்தாலும் அது வெற்றி பெறும் என்பதை அக்டோபர் மாதம் நன்றாகவே புரிய வைத்துள்ளது.

கடந்த அக்டோபர் மாத்தில் வெளிவந்த 16 படங்களில் ஒரு படம் மிகப் பெரும் வெற்றியையும், இன்னொரு படம் வெற்றியையும் பெற்றது. ஒரு படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது.

மிகப் பெரும் வெற்றிப் படமாக '96' படமும், வெற்றிப் படமாக 'ராட்சசன்' படமும், விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற படமாக 'வடசென்னை' படமும் அமைந்தன. அதே சமயம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'நோட்டா, சண்டக்கோழி 2' ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் தோல்வியைத் தழுவின.

அக்டோபர் 4ம் தேதி விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடித்த '96' படம் வெளிவந்தது. இப்படம் வெற்றி பெறும் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், இந்த அளவிற்கு வெற்றி பெறும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். தியேட்டர்களில் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருந்த இந்த படம் நான்கே வாரங்களில் டிவியில் ஒளிபரப்பானது படக்குழுவினரையே சோகத்தில் ஆழ்த்தியது. '96' படத்தை மட்டும் அதற்குள் டிவியில் ஒளிபரப்பாமல் இருந்தால் அந்தப் படம் 50 நாட்களைக் கடந்து மேலும் சில பல லட்சங்களைத் தந்திருக்கும்.

அக்டோபர் 5ம் தேதி 'நோட்டா, யாகன்' ஆகிய படங்கள் வெளிவந்தன. தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த 'அர்ஜுன் ரெட்டி' நாயகன் விஜய் தேவரகொன்டாவுக்கு 'நோட்டா' படம் நல்ல அறிமுகத்தைத் தரவில்லை. மகேஷ்பாபுவின் தமிழ் என்ட்ரி ராசி போலவே விஜய் தேவரகொன்டா ராசியும் அமைந்துவிட்டது. இனி, இவரும் தமிழ்ப் பக்கம் எட்டிப் பார்ப்பாரா என்பது சந்தேகம்தான். அதே நாளில் வெளிவந்த 'யாகன்' வந்த சுவடு தெரியாமல் போனது.

அக்டோபர் 12ம் தேதி “ஆண் தேவதை, அடங்காப் பசங்க, அமாவாசை, களவாணி சிறுக்கி, கூத்தன், மனுசங்கடா, மூணாவது கண்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'ஆண் தேவதை' படம் மட்டுமே கொஞ்சம் கவனத்தை ஈர்த்தது. மற்ற படங்கள் ஓரிரு காட்சிகளுடன் ஆயுளை முடித்துக் கொண்டது. சிறிய பட்ஜெட் படமென்றாலும் ஒரே நாளில் ஏழு சிறிய பட்ஜெட் படங்கள் மோதிக் கொள்வது நியாயமே கிடையாது.

அக்டோபர் 17ம் தேதி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'வடசென்னை' படம் வெளிவந்தது. வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் வெளிவந்த இந்தப் படம் கடுமையான விமர்சனத்தைச் சந்தித்தது. ஒரு பக்கம் படத்தைப் பாராட்டினாலும், மறுபக்கம் கதாபாத்திர வடிவமைப்பிலும், சில காட்சிகளிலும் இந்தப் படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. வெளியீட்டிற்குப் பின் படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டன. இருப்பினும் இந்தப் படம் கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் சுமாரான வெற்றியை தந்தது. இந்த முதல் பாகத்தின் நிலைமையால் அடுத்த பாகங்கள் உடனடியாக வரும் என்பது சந்தேகம்தான்.

அக்டோபர் 18ம் தேதி 'சண்டக்கோழி 2, எழுமின்' ஆகிய படங்கள் வெளிவந்தன. பத்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'சண்டக்கோழி' படம் போல அதன் இரண்டாம் பாகமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் திரைக்கதையில் எந்தவிதமான விறுவிறுப்பும் இல்லாததால் அப்படிப்பட்ட வெற்றியை இந்தப் படம் பெறவில்லை. 'எழுமின்' படம் சிறுவர்களுக்கான படமாக அமைந்தது.

அக்டோபர் 26ம் தேதி 'ஜீனியஸ், ஜருகண்டி' ஆகிய படங்கள் வெளிவந்தன. இரண்டு படங்களுமே வந்த வேகத்தில் ஜரூராகத் தியேட்டரை விட்டு வெளியேறின.

அக்டோபர் மாத 16 படங்களில், 11 படங்கள் சிறிய பட்ஜெட் படங்கள் தான். சிறிய பட்ஜெட் படங்கள் தான் சினிமாவில் வேலை பார்ப்பவர்களை அதிகமாக வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், தியேட்டருக்கு வந்த பின் அந்தப் படம் வேலை கொடுத்து, சம்பளத்தையும் கொடுத்த தயாரிப்பாளர்களை வாழ வைப்பதில்லை. அதனால், சிறிய பட்ஜெட் படங்களுக்கென்று தனியாக ஒரு ஆலோசனையை வழங்கி, அந்தப் படங்களும் லாபகரமாக ஓட சம்பந்தப்பட்டவர்கள் வழி செய்ய வேண்டும்.

அக்டோபர் மாதம் வெளிவந்த படங்கள்

அக்டோபர் 4 :
96

அக்டோபர் 5 : ராட்சசன், யாகன்

அக்டோபர் 12 : ஆண் தேவதை, அடங்காப் பசங்க, அமாவாசை, களவாணி சிறுக்கி, கூத்தன், மனுசங்கடா, மூணாவது கண்

அக்டோபர் 17 : வடசென்னை

அக்டோபர் 18 : சண்டக்கோழி 2, எழுமின்

அக்டோபர் 26 : ஜீனியஸ், ஜருகண்டி

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நட்சத்திரங்களின் தீபாவளி கொண்டாட்டம்நட்சத்திரங்களின் தீபாவளி ... பொங்கல் படங்கள் ரிலீஸ் சாத்தியமா? - ரஜினி, அஜித் மோதல் சரியா? பொங்கல் படங்கள் ரிலீஸ் சாத்தியமா? - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
12 நவ, 2018 - 12:55 Report Abuse
Vasudevan Srinivasan ஆனானப்பட்ட திரைக்கதை மேதை, திரைக்கதை புலி, திரைக்கதைத் திலகம் கே. பாக்யராஜ் அவர்களே களத்தில் நிற்கமுடியவில்லை.. இந்த சூழ்நிலையில் பழைய எம்.ஜி.ஆர் அவர்கள் பாணியெல்லாம் எடுபடாது..
Rate this:
vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
10 நவ, 2018 - 16:17 Report Abuse
vasumathi 100 சீட் உள்ள சிறிய திரை அரங்கங்களுக்கு சிறு படங்களுக்காக என்று செய்து டிக்கெட் குறைவாக விலை செய்தால் கொஞ்சம் மாற்றம் வரலாம். MGR formula படி பாட்டு சண்டை கதை என்று செய்யுங்கள்,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Asuraguru
  • அசுர குரு
  • நடிகர் : விக்ரம் பிரபு
  • நடிகை : மகிமா நம்பியார்
  • இயக்குனர் :ராஜ்தீப்
  Tamil New Film Sathru
  • சத்ரு
  • நடிகர் : கதிர்
  • நடிகை : சிருஷ்டி டாங்கே
  • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
  Tamil New Film Kallapart
  • கள்ளபார்ட்
  • நடிகர் : அரவிந்த் சாமி
  • நடிகை : ரெஜினா
  • இயக்குனர் :ராஜபாண்டி
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in