Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

முத்திரை பதிக்காத முதல் மாதம்...! - 2018 ஜனவரி மாதப் படங்கள் ஓர் பார்வை...

07 பிப், 2018 - 07:35 IST
எழுத்தின் அளவு:
How-is-2018-January-Tamil-Cinema-:-Small-round-up?

2018ம் ஆண்டு பிறந்து ஒரு மாதம் கடந்துவிட்டது. ஆனால், தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஆண்டின் முதல் மாதத்திலேயே வெற்றி என்பது பனி மூட்டம் மறைத்தது போன்று கண்ணுக்குத் தெரியாமலேயே போய்விட்டது.

இந்தப் படம் ஓடிவிடும், அந்தப் படம் ஓடிவிடும் என்று சில படங்களை வெளியீட்டிற்கு முன்பு குறிப்பிட்டுச் சொன்னார்கள். அப்படி சொல்லப்பட்ட படங்கள் கூட வெளியீட்டிற்குப் பின் இவ்வளவுதான் நஷ்டம், அவ்வளவுதான் நஷ்டம் என்று சொல்ல வைத்துவிட்டன. இதுதான் 2018ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் உண்மையான நிலை என கோலிவுட் வட்டாரங்களிலேயே தெரிவிக்கிறார்கள்.

ஆண்டுக்கு சுமார் 200 படங்கள் வரை வந்து கொண்டிருக்கின்றன. அதில் 20 படங்கள் கூட அனைவருக்கும் லாபத்தைத் தரும் வசூலைத் தருவதில்லை. அந்த 200 படங்களில் 75 சதவீதம் சிறிய படங்கள்தான் வருகின்றன. அந்தப் படங்களுக்கு சரியான தியேட்டர்கள் கிடைப்பதில்லை, அவற்றை சரியான அளவில் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில்லை என ஒரு பக்கம் குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதையும் மீறி படங்கள் தயாரிக்க புதுப் புது தயாரிப்பாளர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது இந்த 2018ம் ஆண்டிலும் தொடரும் என்பதை இந்த வருடத்தின் முதல் வார வெளியீடுகளே நிரூபித்துவிட்டன.

முதல் வாரமே ஏமாற்றம்
ஜனவரி 5ம் தேதி “காவாலி, டிசம்பர் 13, ஓநாய்கள் ஜாக்கிரதை, பார்க்க தோனுதே, சாவி, விதி மதி உல்டா” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் சாவி படம் மட்டுமே கொஞ்சம் யதார்த்தமான படமாக அமைந்தது. விதி மதி உல்டா படத்தின் நாயகன் ரமீஸ் ராஜா இதற்கு முன் நடித்த டார்லிங் 2 படமாவது மக்களிடம் கொஞ்சம் சென்றடைந்தது. இந்தப் படத்திற்கு அது கூட நடக்கவில்லை. மற்ற படங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு நாளாவது தியேட்டர்களில் இருந்திருந்தால் அதுவே அந்தப் படங்களுக்குக் கிடைத்த பெரிய வெற்றிதான்.

இனிக்காத சினி பொங்கல்
ஜனவரி 12ம் தேதி பொங்கலை முன்னிட்டு இரண்டு நாட்கள் முன்னதாகவே “குலேபகாவலி, ஸ்கெட்ச், தானா சேர்ந்த கூட்டம்” படங்கள் வெளியாகின. மூன்று படங்களுமே 25வது நாளைக் கடந்துவிட்டது என தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் விளம்பரங்களை வெளியிட்டுள்ளார்கள். ஆனால், படங்களை வாங்கி, திரையிட்டவர்களுக்குத்தான் அந்த மகிழ்ச்சி இல்லை என்று சொல்கிறார்கள். குலேபகாவலி, ஸ்கெட்ச் ஆகிய படங்கள் பெரிய நஷ்டத்தைத் தந்துள்ளதாகவும், தானா சேர்ந்த கூட்டம் சமாளித்துவிடக் கூடிய நஷ்டத்தைத் தந்துள்ளதாகவும் கோலிவுட்டில் செய்தி. வியாபார ரீதியாக எப்படியோ மூன்று படங்களும் மூன்று விதமாக அமைந்து ரசிகர்களை ரசிக்க வைத்தது. இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் மூன்று படங்களுமே மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்திருக்கும்.

ஜனவரி 19ம் தேதி வீரத் தேவன் படம் மட்டுமே வெளிவந்தது. புதுமுக நடிகர்கள் வாராவாரம் அறிமுகமானாலும் அவர்கள் தங்களை ரசிகர்களிடம் அழுத்தமாக அறிமுகப்படுத்திக் கொள்வதை சரியாகவே செய்வதில்லை. அது இந்த ஆண்டிலும் தொடரும் போலிருக்கிறது.

ஜனவரி 26ம் தேதி நிமிர், மன்னர் வகையறா, சரணாலயம் ஆகிய படங்கள் வெளிவந்தன. நிமிர் படம் வெளிவந்த நாளிலிருந்தே நிமிர முடியவில்லை. மன்னர் வகையறா நீளத்தைக் குறைத்து படத்தை சுருக்கியிருந்தால் வசூலில் நிமிர்ந்து நிற்க முடியாதவரைத் தாண்டியிருக்கலாம். சரணாலயம் என்ற படம் வந்ததா என்று பலரும் கேட்பார்கள்.

கல்லா கட்டிய டப்பிங் படங்கள்
அதேசமயம், அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் எடுக்கப்பட்டு, தமிழில் டப்பாகி வௌிவந்த பாகமதி படம் வசூலில் கல்லா கட்டியிருக்கிறது. ஹிந்தி டப்பிங்கான பத்மாவத் படம், சர்ச்சையுடன் வௌிவந்ததால் வசூலை தந்திருக்கிறது. நேரடி தமிழ்ப்படங்களை காட்டிலும் இந்த இரண்டு படங்களும் நல்ல வசூலை தந்ததாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொத்தத்தில் 2018ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் 13 படங்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 5 படங்கள் அதிகமாகவே வந்துள்ளன.

பொங்கலுக்கு மூன்று சீனியர் ஹீரோக்களின் படங்கள் வந்தும் அவை ரசிகர்களை அதிகமாகத் திருப்திப்படுத்தவில்லை. கடந்த சில வருடங்களாகத் தொடரும் பிரச்சனையாக இருக்கும் பைரசி இணையதளம், பார்க்கிங் கட்டணக் கொள்ளை, ஜிஎஸ்டி, கேளிக்கை வரிகளால் உயர்ந்த டிக்கெட் கட்டணங்கள் ஆகியவற்றால் மக்கள் தியேட்டர்களுக்கு வருவது குறைந்தே போய்விட்டது.

மக்களை மீண்டும் தியேட்டர் பக்கம் வரவழைக்க மேலே குறிப்பிடப்பட்ட பிரச்சினைகளை முடிந்த அளவிற்கு சீர் செய்தால்தான் மக்களும் தியேட்டர் பக்கம் வருவார்கள், திரையுலகமும் லாபத்தைப் பெற்று இன்னும் வளர முடியும்.

2017ம் ஆண்டு கடைசியில் சில நல்ல படங்கள் வந்ததால் தமிழ் சினிமாவும் வேறு தடத்தில் பயணிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதை 2018ம் ஆண்டின் முதல் மாதத்தில் வந்த படங்களை வைத்துப பார்க்கும் போது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி, வரும் மாதங்களில் வரும் படங்களாவது தனி முத்திரை பதிக்கட்டும்.

ஜனவரி 2018ல் வெளிவந்த படங்கள்

ஜனவரி 5 : காவாலி, டிசம்பர் 13, ஓநாய்கள் ஜாக்கிரதை, பார்க்க தோனுதே, சாவி, விதி மதி உல்டா

ஜனவரி 12 : குலேபகாவலி, ஸ்கெட்ச், தானா சேர்ந்த கூட்டம்

ஜனவரி 19 : வீரத் தேவன்

ஜனவரி 26 : நிமிர், மன்னர் வகையறா, சரணாலயம்

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் சினிமாவும், தமிழக அரசியலும்...! ஒரு அலசல்தமிழ் சினிமாவும், தமிழக அரசியலும்...! ... மறக்க முடியாத மயிலு மறக்க முடியாத மயிலு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

07 பிப், 2018 - 18:32 Report Abuse
susainathan yearly 200 Tamil movie coming omg whats the entertainment state no other useful work who getting benefits ya mostly director actor acteress co-worker should be reduce the cinema ya invest for the money to companies more entertaining more cinema not good growths
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  Tamil New Film Natpe Thunai
  • நட்பே துணை
  • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
  • நடிகை : அனகா
  • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in