Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

தமிழ் சினிமாவும், தமிழக அரசியலும்...! ஒரு அலசல்

30 ஜன, 2018 - 14:52 IST
எழுத்தின் அளவு:
Tamil-Cinema-and-Politics

ஒரு பொருளை தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும். ஆனால் ரசிகன், அரசியல்வாதிகளிடம் தான் தொலைத்த நல்ல தலைமையை, தனக்கு பிடித்த, தான் விரும்பிய நடிகரிடம் தேடுகிறான்.

ஒரு நடிகர் அரசியலுக்கு வருவது தவறு இல்லை. அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர்., என சினிமாவுடன் தொடர்புடையது தான் நம் தமிழ்நாட்டு அரசியல். இன்றும் சில முக்கிய கட்சிகள் தங்களது பிரச்சாரத்துக்கு சினிமா நடிகர்களையே நம்பி இருக்கின்ற சூழல். எம்ஜிஆர் தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவராக திகழ்வதற்கு அடித்தளம் போட்டு கொடுத்ததே சினிமா தான்.

ஆபத்து
எம்ஜிஆர் அரசியலுக்குள் நுழைந்த போது, "போகிற போக்கை பார்த்தால் ஜெயலலிதா கூட தமிழ்நாட்டு முதல்வராகி விடுவார் போல..." அப்போது எழுந்த விமர்சனம் இது. ஆனால் அடுத்த முப்பது ஆண்டுகளில் ஜெயலிதா முதல் அமைச்சர் ஆனார். இந்த நாற்காலி இவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற எந்த கட்டாயமும் இங்கு இல்லை. ஆனால் நடிகர்கள் தங்களது சினிமா கவர்ச்சியையும், ரசிக பலத்தையும் மட்டுமே நம்பி அரசியலுக்கு வருவது அவர்களுக்கே ஆபத்தானது. இதோ வரேன், அதோ வரேன், அப்ப வரேன், இப்ப வரேன்னு என்று பூச்சாண்டி காட்டி படங்களை ஒட வைப்பதற்கும், அரசாங்கத்தில் சில சலுகைகள் பெறுவதற்கும் அரசியல் வருகையை பயன்படுத்துவது அதை விட பெரிய ஆபத்து.

மாய வலை
ரேடியோ அடுத்து டிவி, டிவியை தொடர்ந்து இன்டர்நெட், பேஸ்புக், வாட்ஸ்-அப், டுவிட்டர், இன்ஸ்டிராகிராம், என்று சமூக வலைதளங்கள் வந்தன. இதுபோன்ற மாய வலையில் நாம் சிக்கி கொண்டு இருக்கிறோம். தினம் தினம் ஒரு டுவிஸ்ட், ஸ்டன்ட் என்று பரபரப்புக்கு தமிழ் நாட்டில் பஞ்சம் இல்லை. ஊடகங்களுக்கு தீனி போடும் அரசியல்வாதிகள், அரசியல்வாதிகளுக்கு தீனி போடும் ஊடகங்கள்.

யார் மீது குற்றம்?
எதை நோக்கி போகிறது இந்த சமூகம், சாமானியன் தேவைகள் என்ன, அவன் தேவைகள் எப்போது நிறைவேறும், அதை யார் நிறைவேற்றுவார்கள், அவர்களின் கேள்விக்கு பதில் என்ன இப்படி விடைகளை நோக்கி நாம பயணிக்கிறோம். இப்போது நல்ல தலைமை தேவையா, நல்ல தலைவன் தேவையா, ஓட்டுக்கு நீட்டாத நல்ல தொண்டன் தேவையா, யார் மீது குற்றம் சாடுவது? இங்கே நடிகர்கள் நிலைப்பாடு என்ன, அவர்கள் ஸ்திர தன்மை என்ன, ஏன் மாறுகிரார்கள் என்ற கேள்விகளும் உண்டு.

அரசியலில் நட்சத்திரங்கள்
கலைவாணர் என்எஸ்.கிருஷ்ணன், நடிப்பிசை புலவர் ராமசாமி, அண்ணாதுரை என்று அரசியல் பேசாமல் இல்லை. சிலருக்கு அரசியல் பேசுவது எளிது, ஆனால் அரசியலில் இறங்குவது பெரும் கஷ்டம். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலிதா என்று சினிமாவுக்கு தொடர்பு உடையவர்களை மக்கள் ஆதரித்து உள்ளனர்.

எல்லாரும் அரசியல் அனுதாபிகளாக ஆசைப்பட்ட போது எம்ஜிஆர் மட்டும் முதல்வராக ஆசைப்பட்டு அதை நிறைவேற்றினார். அவருக்கு பிறகு ஜெயா வந்தார். சோதனைகளை எல்லாம் சாதனையாக்கி காட்டினார். விமர்சனங்களை கண்டும் அஞ்சவில்லை. ஒரு கட்டத்தில் காங்கிரசும் திமுகவும் அரசியல் சிம்மாசனத்தில் மாற்றி மாற்றி இடம் பிடித்தன. மாற்று கட்சிகளுக்கு இடம் கொடுக்காமல், அதை உடைத்தார்கள் அடுத்து வந்த அதிமுகவினர்.

சிவாஜியாலே அரசியல் நடத்த முடியவில்லை, உணர்ச்சிவசப்பட்ட அரசியல்வாதி எஸ்எஸ்.ராஜேந்திரன் கூட எவ்வளவோ முயற்சித்தும் தனி கட்சி தொடங்க முடியவில்லை. சமீபத்தில் எத்தனை நடிகர்கள் அரசியல் வசனம் பேசினாலும், அரசியலுக்குள் நுழைய முயற்சித்தாலும் வெற்றி பெற முடியவில்லை.

சினிமாவில் பேசும் வீர வசனத்தை வெற்றியை வைத்து கொண்டு அரசியல் செய்ய முடியுமா என்றால் முடியாது. மக்களின் ஆதரவு வேண்டும், அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும். தேர்தலுக்கு முன்னே அங்கே களப்பணி செய்திருக்க வேண்டும். அந்த மக்களின் நம்பிக்கைக்குரிய ஆளாக முதலில் இருக்க வேண்டும். பின் தலைவன் ஆகலாம்.

தடுமாற்றம்
தமிழ் சினிமா நடிகர்கள் பலரும் தனிக்கட்சி தொடங்கியே தடுமாறியவர்கள் பலர். பாக்யராஜ், விஜயகாந்த், சரத்குமார், டிஆர் என்று யாராலும் இந்த அரசியல் களத்தில் தாக்கு பிடிக்க முடியவில்லை. அரசியலோடு தன்னை இணைத்து கொண்ட நடிகர்கள் சோ, எஸ்விசேகர், குமரி முத்து, வடிவேல், நெப்போலியன், மன்சூர் அலிகான், ஆனந்த ராஜ், நடிகைகள் விஜயசாந்தி, நக்மா, குஷ்பு, சிஆர்.சரஸ்வதி போன்றவர்கள் அரசியல் தளங்களில் தன்னை நிறுத்தி கொள்ள முயன்றவர்கள். சிலர் ஜொலித்தார்கள், சிலர் வெறுத்தார்கள்.

வரிசை கட்டும் நடிகர்கள்
சமீபகாலமாக ரஜினி, கமல், விஜய், விஷால், பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் அரசியலுக்கு வருவதற்கான சில அறிகுறிகள் ரசிகனுக்கு தென்படுகிறது. கமல், நவம்பரில் விசில் அடித்தார், ஏரிக்கரை போய் பார்த்தார், டுவிட்டரில் கேள்வியும் கேட்டார். இன்றுவரை கேட்டு வருகிறார். விரைவில் சூறாவளி சுற்றுபயணம் என்கிறார். நாமும் என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

சில நாட்களுக்கு முன் பேசிய ரஜினி, நான் அரசியலில் 96-ல் இருந்து இருக்கேன். இந்த ஆரசியல் எனக்கு புரியும், வந்தால் ஜெயிக்கனும், அதற்கான விவேகம் வேண்டும் என்றெல்லாம் பேசினார். முதற்கட்டமாக நிர்வாகிகள் தேர்வு வரை சென்று இருக்கிறார்.

இவர்களை தொடர்ந்து விஜய்யின் மக்கள் இயக்கம், விஷால் ரசிகர் மன்றம், உதயநிதி, ராகவா லாரன்ஸ், ஜி.வி.பிரகாஷ் என்று அரசியல் அதிரடிக்கு அடுத்தகட்ட நடிகர்களும் தயாராகவே இருகின்றனர். நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்பது இப்போது உள்ள நிலவரம். ஆனால் இந்த களத்தில் தாக்கு பிடிக்க முடியுமா என்பதை மக்கள் முடிவு பண்ண வேண்டுமா இல்லை, நடிகர்கள் முடிவு பண்ண வேண்டுமா என்பது பெரும் குழப்பம்.

பிரச்னைகள் ஏராளம்
கல்வி, மருத்துவம், பொருளாதாரம், பெண் பாலியல் விவகாரங்கள், சமூக பொறுப்பு, சமூக நிகழ்வு, இளைஞர்களின் வேலை வாய்ப்பு, அந்தந்த மாநிலத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி என்ன, கருப்பு பணம் ஒழிப்பு... இப்படி, இப்போதைய தேவைகள் என்ன என்பதை பட்டியலிட்டால் நமக்கே தலை சுற்றும்.

நாட்டுக்கும், மக்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் அவ்வளவு உள்ளது. அவ்வளவு தேவைகள் இங்கே உள்ளது. இந்த தேவைகளை நடிகர்கள் எப்படி சமாளிப்பார்கள். நேர்மையாக செயல்படமுடியுமா, அரசியல் வாதிகள் நடிகர்களுக்கு வழிவிடுவார்களா என்ற ஆயிரம் ஆயிரம் கேள்விகளோடு சாமானிய மக்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள். நடிகர்கள் முடிவு எடுப்பது எவ்வளவு முக்கியமோ அந்த வகையில், மக்கள் தேவைகளை முடித்து வைப்பதும் இங்கே முக்கியம்.

வரும் தலைமுறையினருக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவால் அடிப்படை தேவைகளான குடிநீர் மற்றும் விவசாயம்.

இதை களத்திற்கு வருபவர்கள் என்ன செய்ய போகிறார்கள், எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்று காத்திருப்போம்...!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in