Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

மும்முனைப் போட்டியில் வெல்லப்போவது யார்? - பொங்கல் படங்கள் ஓர் பார்வை

10 ஜன, 2018 - 15:16 IST
எழுத்தின் அளவு:
3-Movies-clash-in-Pongal-race

2018ம் ஆண்டு பொங்கலுக்கு ஐந்துக்கும் அதிகமான படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியில் மூன்றே மூன்று படங்கள் மட்டுமே தயாராகி, மும்முனைப் போட்டியை உருவாக்கியுள்ளது.

இந்த பொங்கலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோர் இல்லை. அவர்களுக்கு அடுத்து ஒரு கட்டத்தில் பெரிதும் பேசப்பட்ட விக்ரம், சூர்யா ஆகியோர் இந்தப் பொங்கலில் நேரடியாக மோதுகிறார்கள். அதே சமயம் நடிப்பதை ஏறக்குறைய விட்டுவிட்ட பிரபுதேவா 'தேவி' படம் தந்த வரவேற்பால் மீண்டும் முன்னணிக் களத்திற்கு வந்து, இந்த பொங்கலில் மோதலில் இறங்கிவிட்டார்.

'தானா சேர்ந்த கூட்டம்' படம் பொங்கல் வெளியீடு என எப்போதோ அறிவித்தனர். அதன் பின் 'குலேபகாவலி' படத்தை பொங்கல் வெளியீடு என அறிவிப்பு செய்தனர். கடைசியில் அந்தப் போட்டியில் யாருக்கோ 'ஸ்கெட்ச்' போட்டு போட்டியில் குதித்தது 'ஸ்கெட்ச்'. பொங்கலுக்கு வெளியாகும் படங்களின் பலம் என்ன, பலவீனமாக என்ன இருக்கும் என்பது பற்றிய ஒரு கண்ணோட்டம், இதோ...

தானா சேர்ந்த கூட்டம்

நடிப்பு - சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில், தம்பி ராமையா, பிரம்மானந்தம், நந்தா, ஆர்.ஜே. பாலாஜி, ஆனந்தராஜ், சுரேஷ் மேனன், சத்யன், யோகி பாபு, நிரோஷா, சுதாகர், வினோதினி, சிவசங்கர் மாஸ்டர்...
தயாரிப்பு - ஸ்டுடியோ க்ரீன் - கே.ஈ.ஞானவேல் ராஜா
இயக்கம் - விக்னேஷ் சிவன்
இசை - அனிருத்
படம் வெளியாகும் தேதி - 12 ஜனவரி 2018
படத்தின் நேரம் - 2 மணி நேரம் 18 நிமிடம்

'நானும் ரௌடிதான்' வெற்றிப் படத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் படம். 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் இப்படம் ஆரம்பமானது. சூர்யாவை விக்னேஷ் சிவன் இயக்கப் போகிறார் என்றதும் திரையுலகமும் ஆச்சரியத்தில் பார்த்தது. ஆனால், படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி ஹிட்டான பிறகு அந்த ஆச்சரியம் பறந்து போனது.

ஹிந்தியில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஸ்பெஷல் 26' படத்தின் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு தமிழுக்கு ஏற்றபடி பல மாற்றங்களைச் செய்து படத்தை ரீமேக் செய்துள்ளார்கள்.

பத்து வருடத்திற்கு முன்னர் இருந்ததைப் போல மிகவும் இளமையை, எனர்ஜியாக இந்தப் படத்தில் இருக்கிறார் சூர்யா. அவரின் ரசிகையாக இருந்து அவருடனேயே ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்களும், பல நகைச்சுவை நடிகர்களும் படத்தில் இருப்பதால் சுவாரசியத்திற்கும், நகைச்சுவைக்கும் இந்தப் படம் தானாகவே ரசிகர்கள் கூட்டத்தை தியேட்டருக்கு வரவழைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்னேஷ் சிவன், 'நானும் ரௌடிதான்' படத்தைப் போல ஒரு கலகலப்பான படமாக இதைக் கொடுத்திருப்பார் என நம்பிக்கை இருக்கிறது. அதுதான் படத்திற்குப் பலம். சூர்யாவின் முந்தைய சில படங்களுக்கு சரியாகக் கிடைக்காத வரவேற்புதான் இந்தப் படத்திற்குப் பலவீனம்.

ஸ்கெட்ச்

நடிப்பு - விக்ரம், தமன்னா, சூரி, ராதாரவி மற்றும் பலர்.
தயாரிப்பு - மூவீங் பிரேம்
இயக்கம் - விஜய் சந்தர்
இசை - தமன்
படம் வெளியாகும் தேதி - 12 ஜனவரி 2018
படத்தின் நேரம் - 2 மணி நேரம் 30 நிமிடம்

2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பமான படம். சிம்பு நடித்த 'வாலு' படத்தை இயக்கிய விஜய் சந்தர், அந்தப் படத்தின் தாமதமான வெளியீட்டால் மிகவும் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து மீண்டெழுந்து 'ஸ்கெட்ச்' படத்தை ஆரம்பித்து ஒரு வருடத்திற்குள் முடித்துவிட்டு படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துவிட்டார்.

'ஸ்கெட்ச்' என்ற பெயரைக் கேட்டதுமே இது ஒரு அடிதடி, ஆக்ஷ்ன் படம் என்பதைப் புரிய வைக்கும். விக்ரம் நடித்த 'இருமுகன்' படம் வெளிவந்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. அந்தப் படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. மேலும், 'ஸ்கெட்ச்' படத்தை தயாரிப்பாளர் தாணு வெளியிடுவதால் படத்திற்குத் தியேட்டர்கள் கிடைப்பதிலும் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதால் தான் சில சிறிய படங்கள் வெளியாக முடியவில்லை என கோலிவுட்டிற்குள்ளேயே கொஞ்சம் குழப்பம்.

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் விக்ரம். அவர்தான் இந்தப் படத்திற்குப் பலம். படத்தைப் பற்றி இதுவரை எந்த ஒரு நிகழ்வும், இசை வெளியீட்டு விழாவும் நடக்காதது பலவீனம். பாடல்கள் ரசிகர்களை சென்றடையவில்லை என்பதும் படத்திற்கு மைனஸ். அவற்றையெல்லாம் மீறி 'ஸ்கெட்ச்' படத்தின் சக்சஸ், பிக்ஸ் ஆகிவிடுமா என்பதுதான் பெரிய கேள்வி.

குலேபகாவலி

நடிப்பு - பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, ஆனந்தராஜ், சத்யன், ராஜேந்திரன், யோகி பாபு மற்றும் பலர்.
தயாரிப்பு - கேஜேஆர் ஸ்டுடியோஸ் - கோட்டபாடி ஜே. ராஜேஷ்
இயக்கம் - கல்யாண்
இசை - விவேக் மெர்வின்
வெளியாகும் தேதி - 12 ஜனவரி 2018
படத்தின் நேரம் - 2 மணி நேரம் 9 நிமிடம்

தமிழில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் பிரபுதேவா. விஜய், அஜித் ஆகியோருக்கு முன்பாகவே அதிக சம்பளம் வாங்கிய ஹீரோக்களில் முக்கியமானவர். திடீரென நடிப்பதை குறைத்துக் கொண்டு படங்களை இயக்க ஆரம்பித்தார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அவர் இயக்கிய படங்கள் சூப்பர் ஹிட்டாகி வசூலைக் குவித்தன. நடிப்பதையே ஏறக்குறைய விட்டுவிட்டவர் 'தேவி' படத்தின் மூலம் திரும்பி வந்துவிட்டார். இந்த ஆண்டில் பிரபுதேவா நடிக்கும் மேலும் சில படங்கள் வெளிவரலாம்.

இப்படத்தை கல்யாண் இயக்கியிருக்கிறார். இந்தப் படம் காதலும், நகைச்சுவையும், கலந்த ஒரு பேன்டஸி, ஆக்ஷ்ன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பமான படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்து படமும் சீக்கிரமே வெளிவர உள்ளது.

பிரபுதேவா இயக்கிய 'என்றென்றும் காதல்' படத்தில் நாயகியாக நடித்த ஹன்சிகா, பிரபுதேவாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். படத்தின் டீசரும், பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் நகைச்சுவைப் படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. 'குலேபகாவலி' அந்தக் குறையை இந்த ஆண்டில் தீர்த்து வைத்தால் அது வரப்போகும் பல நகைச்சுவைப் படங்களுக்கும் உதவியாக இருக்கும்.

எந்த எதிர்பார்ப்பும் அதிகம் இல்லாதது தான் இந்தப் படத்தின் பலம். 'ஸ்கெட்ச், தானா சேர்ந்த கூட்டம்' அளவிற்கு இந்தப் படத்தின் பிரமோஷன் இல்லை. அதுவே, படத்தின் பலவீனம்.

2018ம் ஆண்டு பொங்கல், தங்களது தனித் திறமைகளால் உயர்ந்த மூன்று ஹீரோக்களுடன் ஆரம்பமாகிறது. உண்மையான திறமையை மட்டுமே பார்த்து ரசிகர்கள் ஆதரவளிக்கும் காலம் இது. இந்த மூன்று தனித் திறமைசாலிகளில் யார் வெற்றி பெறப் போகிறார்கள், எந்த ஸ்கெட்ச்சும் இல்லாமல் யார் கூட்டத்தைச் சேர்க்கப் போகிறார்கள் என்பதற்கு இன்னும் 48 மணி நேரத்தில் தெரிந்துவிடும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in