Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2017-ல் கவனிக்க வைத்த புதுமுக நடிகைகள் : ஓர் பார்வை

29 டிச, 2017 - 18:23 IST
எழுத்தின் அளவு:
Debut-Actress-who-are-become-fame-in-2017

ஆண்டுக்கு ஆண்டு படங்களின் எண்ணிக்கை 200-ஐ தொட்டு வருகின்றன. கந்து வட்டி, ஜிஎஸ்டி, அரசியல் பிரச்சனைகளை கடந்து, படங்கள் தொடர்ந்து ரிலீஸாகி வருகின்றன. இந்த 200 படங்களில் பல கலைஞர்களுக்கு ஏற்றமும், பல கலைஞர்களுக்கு சறுக்கல்களும் நிகழ்ந்தன.

2017-ம் ஆண்டில் புதுமுக நடிகைகளின் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும், வெகுசிலரே கவனிக்கப்பட்ட நடிகைகளாக திகழ்ந்தனர். இன்றைக்கு ஹீரோவுக்கு இணையாக ஹீரோயின்களும் உடலை வருத்தி நடிக்க தயாராகிவிட்டனர். பணம், பெயர், புகழை தாண்டி சினிமா நடிகை என்ற பெயருக்காகவும், அந்த புகழுக்காகவும் சலிக்காமல் போராடும் மன நிலையில் இப்போது புதுமுகங்கள் வரத் தொடங்கி உள்ளனர். அப்படி இந்த ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி, மக்களால் கவனிக்கப்பட்ட நடிகைகள் சிலரை இங்கு பார்ப்போம்...

காதல் கண்கட்டுதே அதுல்யா, ப்ருஸ் லீ கீர்த்தி கர்பந்தா, 8 தோட்டாக்கள் அபர்ணா முரளி, காற்று வெளியிடை அதிதி ராவ், ஒரு கிடாயின் கருணை மனு ரவீணா, ரங்கூன் சனா மக்பல், வனமகன் சாயிஷா, இவன் தந்திரன், விக்ரம் வேதா ஸ்ரத்தா ஸ்ரீநாத், மீசைய முறுக்கு ஆத்மியா, காதல் கசக்குதையா, பள்ளி பருவத்திலே வெண்பா, மேயாத மான் ப்ரியா பவானி ஷங்கர், நெஞ்சில் துணிவிருந்தால் மெஹ்ரீன், அண்ணாதுரை டயனா சாம்பிகா, அருவி அதிதி பாலன், சக்க போடு போடு ராஜா வைபவி சாண்டில்யா... ஆகியோர் ரசிகர்களிடம் கொஞ்சம் பாஸ் மார்க் வாங்கி உள்ளனர். இவர்களில் சிலருக்கு தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய படங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

ஒட்டு மொத்த படத்தையும் ஹீரோக்கள் கையிலிருந்து ஹீரோயின்கள் கொஞ்சம் கொஞ்சமாக பறித்து கொண்டு இல்லை கைப்பற்றி கொண்டு வருகின்றனர் என்பதற்கு பெரும் உதாரணம் சமீபத்தில் வெளிவந்த அறம், அருவி போன்ற படங்கள். வழக்கமான சினிமாவான இரண்டு - மூன்று டூயட், சண்டை, கலாய்ப்பு, டபுள் மீனிங் வசனம் இதையெல்லாம் தூக்கி வீசி விட்டு சமூக சிந்தனையை மையமாக வைத்து சாமானிய மக்களின் கதையை படமாக்கி வருகின்றனர். அப்படி வெளிவரும் படங்களை ரசிகர்களும் விரும்புகின்றனர். ஹீரோயின்களை வைத்து படம் பண்ணலாம் என இயக்குநர்களுக்கும் நம்பிக்கை தந்துள்ளனர்.

இந்த வருடம் வெளி வந்து வெற்றி பெற்ற சில ஹீரோயின்களின் மனபதிவுகள் இங்கே...

மீசைய முறுக்கு - ஆத்மிகா
நான் கோவை பொண்ணு. சினிமாவில் நான் வருவேன் என்று என் வீட்டில் கூட எதிர்பார்க்கவில்லை. சென்னை வைஷ்ணவா கல்லூரியில் பிஎஸ்சி படித்து கொண்டு இருந்தேன். ஆதி ஆடிஷன் எடுக்கிறார் என கேள்விப்பட்டு நானும், அதில் பங்கேற்றேன். என் நடிப்பை பார்த்து தேர்வு செய்தார். படம் ரிலீஸாகி முதல்நாள் ஷோ பார்க்க சென்றேன். வாடி புள்ள வாடி பாட்டுக்கு ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தார்கள். அப்போதே படம் பெரிய வெற்றி என புரிந்து கொண்டேன்.

எங்கே போனாலும் என்னை நிலா என்று தான் அழைக்கிறார்கள். இப்படி ஒரு வெற்றியை கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி. அடுத்ததாக அரவிந்த்சாமியுடன் நரகாசுரன் படத்தில் நடித்துள்ளேன். அவசரப்படாமல், நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன். ஒரே நாளில் என் வாழ்க்கை இப்படி ஒரு வெளிச்சதுக்கு வரும் என்று நினைக்கவில்லை.

*ஒரு கிடாயின் கருணை மனு" - ரவீணா
நான் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட். ஐ, அனேகன், கத்தி, 2.O, நயன்தாரா படங்கள் என தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்றவற்றில் 65 படங்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறேன். என் அம்மா ஸ்ரீஜா 500 படங்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். ஆடிஷன் வைத்து என்னை இயக்குநர் சங்கையா தேர்வு செய்தார். நான் மாடர்ன் பொண்ணு, ஆனால் என்னை பக்கா கிராமத்து ரோலில் நடிக்க வைத்தார்.

திருமணம் ஆன புதிதில் ஒரு பெண் எப்படி இருப்பாள் என்பதை இயக்குநர் சொல்லிக் கொடுக்க அப்படியே நடித்தேன். இந்தப்படம் எனக்கு ஒரு புது அனுபவத்தை தந்தது. இந்தப்படத்திற்கு பிறகு நிறைய கிராமத்து கதைகள் வந்தன, ஆனால் தவிர்த்துவிட்டேன். மனதுக்கு நிறைவாக நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன். வரும் காலங்கள் சிறப்பாக அமையும் என நம்புகிறேன்.

பள்ளி பருவத்திலே - வெண்பா

நான் சென்னை பொண்ணு. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, சிவகாசி, கஜினி, கற்றது தமிழ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். படிப்பு முக்கியம் என்பதால் நடிப்புக்கு இடைவெளி விட்டு பத்து மற்றும் பிளஸ் டூ-வை முடித்தேன். ஆந்திரா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு வக்கில் படிக்கிறேன்.

கடந்த ஒன்றரை ஆண்டாக ஏறி - இறங்காத சினிமா கம்பெனி இல்லை. எதிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின்னர் கொஞ்சம் இடைவெளியில் காதல் கசக்குதய்யா, பள்ளிப் பருவத்திலே பட வாய்ப்புகள் கிடைத்தன. இரண்டுமே பள்ளியில் படிக்கும் கேரக்டர். என் நடிப்பை பார்த்து பலரும் பாராட்டினார்கள். மகிழ்ச்சியாக உள்ளது. என்னை அடையாளப்படுத்தும் விதமான கதைகள் வரும் என நம்புகிறேன். நான் மிடிள் கிளாஸ் பொண்ணு தான். அப்பா டிராவல்ஸ் நடத்துகிறார், தங்கை படிக்கிறாள். என் குடும்பத்தை நான் தான் பார்க்கணும். வரும் ஆண்டு எனக்கு சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்.

வன மகன் - சாயிஷா

மும்பையில் இருந்து தமிழுக்கு வந்தேன். வன மகன் படத்தில் மக்கள் எனக்கு கொடுத்த அன்பு, வரவேற்பை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ் மக்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. எங்கிருந்து வருகிறார்கள், என்ன மொழி, இனம் என்றெல்லாம் ரசிகர்கள் பார்ப்பது கிடையாது. அவர்களுக்கு பிடித்துவிட்டால் கொண்டாடுகிறார்கள். என்னை தமிழில் அறிமுகம் செய்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. என் நடனத்தை பார்த்து சமூக வலைதளங்களில் பாராட்டிய விஷயத்தை என்னால் மறக்க முடியாது.

வனமகன் கிடைத்த வரவேற்பால் விஜய் சேதுபதியுடன் ஜூங்கா, கார்த்தியுடன் ஒரு படம், இன்னும் ஒரு படம் என இப்போது பிஸியாக உள்ளேன். இவ்வளவு வெற்றி, அன்பு கொடுத்த தமிழ் ரசிகர்களுக்கும், மீடியாக்களுக்கும் நன்றி. இன்னும் வித்தியாசமான கதையில் வரும் ஆண்டுகளில் நடிப்பேன் என உறுதியாக சொல்கிறேன்.

அருவி - அதிதி பாலன்

சென்னனை பொண்ணு நான். பள்ளி, கல்லூரிகளில் அறியப்படாத நான், ஒரேநாளில் அருவி படம் மூலம் ஒட்டு மொத்த மக்களும் என்னை பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது. பார் கவுன்சில் தேர்வை முடித்துவிட்டு சும்மா அருவி படத்தின் ஆடிசனுக்கு சென்றேன். சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என சத்தியமாக நம்பவில்லை. என்னை இயக்குநர் மட்டும் தேர்வு செய்யவில்லை, ஒட்டுமொத்த அருவி படக்குழுவும் தேர்வு செய்தார்கள்.

அருவி படம் பார்த்த பலரும், என் நடிப்பை பார்த்தவர்கள் முதல் படம் போன்று தெரியவில்லை என்றார்கள். ஒரு அம்மா தன் குழந்தைக்கு அருவி என்று பெயர் வைப்பதாக சொன்னார்கள். அறிமுக படத்திலேயே இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. ரஜினி முதல் பலரும் என்னை பாராட்டியது மகிழ்ச்சி. அருவி படத்திற்காக சென்னை ஆயுர்வேத சென்டரில் ஒரு மாதம் தங்கி எடை குறைத்தேன். வெறும் கஞ்சி மட்டுமே குடித்தேன். நிறைய புத்தகங்கள் படித்தேன். எய்ட்ஸ் நோயாளிகள் பற்றி வீடியோ நிறைய பார்த்தேன், தனிமையில் இருந்தேன். இப்படி இந்த படத்திற்காக நிறைய பயிற்சி எடுத்தேன். இனி என்னால் வழக்கமான சினிமாவில் நடிக்க முடியாது. அழுத்தமான கதாபாத்திரத்தில் மட்டுமே நடிப்பேன். நிறைய கதைகள் தேடி வருகிறது, நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன்.

அண்ணாதுரை டயானா சாம்பிகா

நான் சென்னை பொண்ணு. விஸ்காம் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் வந்து சில விளம்பர படங்களில் நடித்தேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது சின்ன வயது ஆசை. அண்ணாதுரை படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்ததும் சினிமாவிற்கு வந்துவிட்டேன். படத்தை பார்த்து பலரும் பாராட்டினார்கள். ஸ்ரீதேவி, நயன்தாராவின் நடிப்பு மிகவும் பிடிக்கும். இப்போது இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

சக்க போடு போடு ராஜா - வைபவி சாண்டில்யா

சர்வர் சுந்தரம் படத்தில் தான் சந்தானம் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானேன். அப்போது எனக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பு தான் சக்கபோடு போடு ராஜா. எல்லோரும் என்னை பிடித்திருக்கிறது என்று சொல்லும் போது மகிழ்ச்சியாக உள்ளது. சின்னத்திரையிலிருந்து வந்து பெரிய திரையில் சாதித்த சந்தானம் கடும் உழைப்பாளி.

காதல் தேவதை பாட்டை ரசிகர்கள் மிகவும் ரசிக்கிறார்கள். அதற்காக இசையமைப்பாளர் சிம்புவிற்கு நன்றி. தமிழில் நிறைய படங்களில் நடிக்க ஆசை உள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்த நான், இப்போது தமிழை ஓரளவிற்கு புரிந்து கொள்கிறேன், பேசவும் செய்கிறேன். இன்னும் தமிழை நன்றாக கற்றுக்கொண்டு ரசிகர்களுடன் சரளமாக பேசுவேன், சொந்த குரலில் டப்பிங் பேச விரும்புகிறேன். புத்தாண்டில் நல்ல படங்கள் அமையும் என நம்புகிறேன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! சந்திரிகா ரவிதமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! ... 2018 - திரை நட்சத்திரங்களின் புத்தாண்டு சபதங்கள் 2018 - திரை நட்சத்திரங்களின் புத்தாண்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film ONGALA PODANUM SIR
  • ஒங்கள போடணும் சார்
  • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
  • நடிகை : சனுஜா சோமநாத்
  • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
  Tamil New Film Kadhal Munnetra Kazhagam
  Tamil New Film Charlie Chaplin 2
  • சார்லி சாப்ளின் 2
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
  Tamil New Film Kanchana 3
  • காஞ்சனா 3
  • நடிகர் : ராகவா லாரன்ஸ்
  • நடிகை : வேதிகா ,ஓவியா
  • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in