பயோகிராபி
Advertisement
- இயற்பெயர் - கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா
- சினிமா பெயர் - கே எஸ் சித்ரா
- புனைப்பெயர்- "சின்னக் குயில்"
- பிறப்பு - 27-ஜுலை-1963
- பிறந்த இடம் - திருவனந்தபுரம் - கேரள மாநிலம்
- பணி - பின்னணிப் பாடகி
- சினிமா அனுபவம் - 1979-லிருந்து
- கணவர் - விஜயசங்கர்
- குழந்தைகள் - நந்தனா (இறப்பு)
- பெற்றோர் - கிருஷ்ணன் நாயர் - சாந்தகுமாரி
- உடன் பிறந்தவர்கள் - கே எஸ் பீனா - கே மகேஷ்
விருதுகள்
சிறந்த பின்னணிப் பாடகிக்கான "தமிழ் நாடு மாநில அரசு விருது" நான்கு முறை கிடைக்கப் பெற்றார்.
சிறந்த பின்னணிப் பாடகிக்கான "கேரள மாநில அரசு விருது" பதினைந்து முறை கிடைக்கப் பெற்றார்.
சிறந்த பின்னணிப் பாடகிக்கான "ஆந்திர மாநில அரசு விருது" ஆறு முறை கிடைக்கப் பெற்றார்.
சிறந்த பின்னணிப் பாடகிக்கான "கர்நாடக மாநில அரசு விருது" இரண்டு முறை கிடைக்கப் பெற்றார்.
சிறந்த பின்னணிப் பாடகிக்கான "தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது" ஐந்து முறை கிடைக்கப் பெற்றார்.
1986ல் சிந்து பைரவி படத்தில் இடம் பெற்ற பாடறியே படிப்பறியே பாடலுக்காக முதல் தேசிய விருது பெற்றார்.
1987 ஆம் ஆண்டு சிறந்த பின்னணிப் பாடகிக்கான "தேசிய விருது" மலையாளப் படத்திற்காக வழங்கப்பட்டது.
Advertisement
1989 ஆம் ஆண்டு சிறந்த பின்னணிப் பாடகிக்கான "தேசிய விருது" மலையாளப் படத்திற்காக வழங்கப்பட்டது.
1996 ஆம் ஆண்டு சிறந்த பின்னணிப் பாடகிக்கான "தேசிய விருது" "மானாமதுர மாமரக் கிளையிலே" பாடலுக்காக வழங்கப்பட்டது.
1997 ஆம் ஆண்டு சிறந்த பின்னணிப் பாடகிக்கான "தேசிய விருது" ஹிந்தி படத்திற்காக வழங்கப்பட்டது.
2004 ஆம் ஆண்டு சிறந்த பின்னணிப் பாடகிக்கான "தேசிய விருது" "ஒவ்வொரு பூக்களுமே" பாடலுக்காக வழங்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் உயரிய விருதான "பத்மஸ்ரீ விருது" வழங்கி கௌரவிக்கபட்டார்.
Advertisement
போட்டோ
"சின்னக் குயில்" சித்ரா அவர்களின் போட்டோ தொகுப்புகள்
துளிகள்
"சின்னக் குயில்" சித்ரா பற்றிய தகவல்கள்
பேராசிரியர் கே ஓமனக்குட்டி என்பவரிடம் முறையாக இசை பயின்றார் கே எஸ் சித்ரா.
சினிமா பாடல்களன்றி பின்னணிப் பாடகர் கே ஜே ஏசுதாஸ் உடன் இந்தியா மட்டுமன்றி அயல்நாடுகளிலும் எண்ணற்ற மேடை கச்சேரிகளில் பங்கு கொண்டு பாடியிருக்கின்றார்.
Advertisement
திரையிசை தவிர்த்து ஏராளமான கர்நாடக சங்கீதம் மற்றும் பக்திப்பாடல்களை பாடி ஆல்பங்களாக வெளியிட்டுள்ளார்.
தென்னகத்தின் "சின்னக்குயில்" அல்லது "கேரளத்தினின்டே வானம்பாடி" என்ற அடைமொழி இவருக்குண்டு.
தேசிய அளவில் திறமை வாய்ந்தோருக்கான உதவித் தொகை பெற நேர்முகத் தேர்வுக்கு சென்றபோது, இரண்டு வருடம் சங்கீதம் கற்றிருக்க வேண்டும் என்று குழுவினர் கூற, 13 வயதே ஆன சின்னக்குயில் சித்ரா தோடி ராகத்தின் சிக்கலான ஸ்வரங்களை பாடி, அவர்தம் தகுதியை நிரூபித்து, ஏழு வருட உதவித் தொகையை பெற்றார்.
சித்ரா தமிழில் பாடிய முதல் டூயட் பாடல் "பூஜைக்கேத்த பூவிது" என்ற "நீதானா அந்தக்குயில்" படப்பாடல். இவரோடு இணைந்து பாடிய அந்த ஆண்குரல், பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர், பின்னணிப் பாடகர் என பன்முகத் தன்மை வாய்ந்த கங்கை அமரன்.
எந்த மொழிப் பாடலானாலும், மொழியை சிதைக்காமல், தெளிவான உச்சரிப்போடு, கதாபாத்திரத்தின் தன்மை புரிந்து உணர்வுபூர்வமாக பாடும் ஒரு சில பாடகிகளில் சித்ராவும் ஒருவர்.
பிரபல கர்நாடக இசை பாடகர் திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் நினைவைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், "மை ட்ரிப்யூட்" என்ற தொகுப்பில் அவர் பாடி சாகாவரம் பெற்ற "குறை ஒன்றும் இல்லை", "பாவயாமி ரகுராமம்", "காற்றினிலே வரும் கீதம்" ஆகிய பாடல்களை சித்ரா பாடியுள்ளார்.
சித்ரா ஒரு இசை நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற போது, இவருடைய மகள் நந்தனா அங்கே உள்ள ஒரு நீச்சல் குளத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத சித்ரா, சிலகாலம் பாடாமல் ஒதுங்கியும் இருந்தார்.
லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹால்ல் லதாமங்கேஷ்கருக்குப் பின் இசைநிகழ்ச்;சியில் பாடிய பெண் பாடகி சித்ரா ஒருவரே.
வரலாறு
Advertisement
கேரளாவை பிறப்பிடமாகக் கொண்ட பின்னணிப் பாடகி சித்ராவின் தந்தை கிருஷ்ணன் நாயர் வானொலிப் பாடகராகவும், தாயார் சாந்தகுமாரி சிறந்த வீணை இசைக் கலைஞராகவும் இருந்தபடியால், நல்ல இசை பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்த சித்ராவிற்கு சிறுவயதிலேயே இசையின் மீது தாக்கம் அதிகமிருந்தது.
தனது ஐந்து வயதிலேயே அகில இந்திய வானொலியில் பாடியும் உள்ளார். இவரது தந்தை கிருஷ்ணன் நாயரே இவருக்கு முதல் இசை குருவாகவும், ஆசானாகவும் இருந்திருக்கின்றார். பள்ளிப் பருவத்திலேயே பின்னணிப் பாடகர் கே ஜே ஏசுதாஸ் உடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்ற சித்ரா, 1979 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்பட இசை அமைப்பாளர் எம் ஜி ராதாகிருஷ்ணன் மூலம் திரைப்படத்தில் பின்னணிப் பாடும் வாய்ப்பு பெற்று தனது திரையிசைப் பயணத்தைத் தொடங்கினார்.
இசைத் துறையில் பி ஏ இளங்கலையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்ற சித்ரா, கேரள பல்கலைக்கழகத்தில் தனது எம் ஏ முதுகலையிலும் தேர்ச்சி பெற்றார். ரவீந்திரன், ஷியாம், ஜெர்ரி அமல்தேவ், கண்ணனூர் ராஜன் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் பல மலையாளத் திரைப்படங்களில் பாட வாய்ப்பு கிடைத்து பாடவும் செய்தார்.
1986 ஆம் ஆண்டு இசைஞானி இளையராஜாவின் இசையில், ஆர் செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த "நீதானா அந்தக் குயில்" திரைப்படத்தில் "பூஜைக்கேத்த பூவிது" என்ற பாடலை பாடியதன் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு பின்னணிப் பாடகியாக அறிமுகம் செய்து வைக்கப் பட்டார்.
இதனைத் தொடர்ந்து கீதாஞ்சலி, "பூவே பூச்சூடவா", "சிந்து பைரவி" என இளையராஜாவின் இசையில் பல தேனினும் இனிய பாடல்களைப் பாடி தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்ததோடு "சின்னக்குயில்" சித்ரா என அன்போடும், மரியாதையோடும் அழைக்கப்பட்டார். "சிந்து பைரவி" திரைப்படத்தில் "பாடறியேன் படிப்பறியேன்", "நானொரு சிந்து காவடி சிந்து" ஆகிய பாடல்களை சிறப்பாக பாடியதற்காக இதே ஆண்டில் "தேசிய விருது" வழங்கியும் கௌரவிக்கபட்டுள்ளார்.
இசை அமைப்பாளர் கே வி மகாதேவன் இசையமைத்த "பிரளயம்" என்ற திரைப்படத்தின் வாயிலாக பின்னணிப் பாடகியாக தெலுங்கு திரையுலகிற்கும் அறிமுகமானார். கே வி மகாதேவன், எம் எஸ் விஸ்வநாதன், குன்னக்குடி வைத்தியநாதன், வி குமார், இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், கங்கை அமரன், சந்திரபோஸ், தேவா, வித்யாசாகர், எஸ் ஏ ராஜ்குமார், மரகதமணி, மணிஷர்மா, சிற்பி, பரத்வாஜ், ஆதித்யன், பாலபாரதி, யுவன் சங்கர் ராஜா என தமிழிலும், நதீம் ஷ்ரவண், அனுமாலிக், ராஜேஷ் ரோஷன், நிகில் வினய் என ஹிந்தியிலும் இவர் பின்னணிப் பாடாத இசையமைப்பாளர் களே இல்லை எனும் அளவிற்கு, தென்னிந்திய மொழிகளன்றி ஹிந்தி, பெங்காளி, ஒரியா, குஜராத்தி, துளு, பஞ்சாபி, ராஜஸ்தானி, உருது, சமஸ்கிருதம், படுகா எனவும் சிங்களம், மலாய், அரபு, லத்தீன், ஆங்கிலம் மற்றும் ஃப்ரஞ்ச் என்று அயல்நாட்டு மொழிகளிலும் ஏறத்தாழ 25000க்கும் மேல் பாடல்களைப் பாடி தனக்கென ஒரு தனி இசை சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவர் 'சின்னக்குயில்' சித்ரா.
டூயட்
"சின்னக் குயில்" சித்ரா டூயட் பாடல்கள்
S.No. | பாடல் | படம் | பாடகர் | இசைஅமைப்பாளர் |
---|---|---|---|---|
1 | குயிலே குயிலே பூங்குயிலே | ஆண்பாவம் | மலேசியவாசுதேவன் | இளையராஜா |
2 | புல்வெளி புல்வெளி | ஆசை | உன்னிகிருஷ்ணன்,கிளின்டன் | தேவா |
3 | வா வா அன்பே அன்பே | அக்னி நட்சத்திரம் | கே ஜே ஏசுதாஸ் | இளையராஜா |
4 | தோம் தோம் தித்தித்தோம் | அள்ளித்தந்த வானம் | ஹரிஹரன் | விதயாசாகர் |
5 | உன் பார்வையில் ஓர் ஆயிரம் | அம்மன் கோயில் கிழக்காலே | கே ஜே ஏசுதாஸ் | இளையராஜா |
6 | மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு | அண்ணாநகர் முதல் தெரு | எஸ் பி பாலசுப்ரமணியம் | சந்திரபோஸ் |
7 | அண்ணாமலை அண்ணாமலை | அண்ணாமலை | எஸ் பி பாலசுப்ரமணியம் | தேவா |
8 | ரெக்க கட்டி பறக்குதடி | அண்ணாமலை | எஸ் பி பாலசுப்ரமணியம் | தேவா |
9 | நகுமோ தேன்; தருமோ | அருணாச்சலம் | எஸ் பி பாலசுப்ரமணியம் | தேவா |
10 | தேவனின் கோயிலில் | அறுவடைநாள் | இளையராஜா | இளையராஜா |
11 | உன்ன பார்த்த நேரம் | அதிசயப் பிறவி | மலேசியா வாசுதேவன் | இளையராஜா |
12 | சேலையில வீடுகட்டவா | அவள் வருவாளா | உன்னி கிருஷ்ணன் | எஸ் ஏ ராஜ்குமார் |
13 | சங்கீத ஸ்வரங்கள் | அழகன் | எஸ் பி பாலசுப்ரமணியம் | மரகதமணி |
14 | தங்கமகன் இன்று | பாட்ஷா | எஸ் பி பாலசுப்ரமணியம் | தேவா |
15 | அழகு அழகு நீ நடந்தால் | பாட்ஷா | எஸ் பி பாலசுப்ரமணியம் | தேவா |
16 | உயிரே உயிரே வந்து என்னோடு | பம்பாய் | ஹரிஹரன் | ஏ ஆர் ரஹ்மான் |
17 | சின்னக் கண்ணன் தோட்டத்து | செந்தூரப் பூவே | எஸ் பி பாலசுப்ரமணியம் | மனோஜ் கியான் |
18 | கண்;கள் ஒன்றாக கலந்ததா | சேரன் பாண்டியன் | மனோ | சௌந்தர்யன் |
19 | ஒரு மந்தாரப் பூ | சின்ன ஜமீன் | மனோ | இளையராஜா |
20 | ஜாமம் ஆகிப் போச்சு என் மாமா | சின்ன வீடு | மலேசியா வாசுதேவன் | இளையராஜா |
21 | கொட்டுக்களி கொட்டு நாயணம் | சின்னவர் | எஸ் பி பாலசுப்ரமணியம் | இளையராஜா |
22 | முத்தமிழ் கவியே வருக | தர்மத்தின் தலைவன் | கே ஜே ஏசுதாஸ் | இளையராஜா |
23 | அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி | டூயட் | எஸ் பி பாலசுப்ரமணியம் | ஏ ஆர் ரஹ்மான் |
24 | ராசிதான் கை ராசிதான் | என் ஆசை மச்சான் | எஸ் பி பாலசுப்ரமணியம் | தேவா |
25 | உயிரே உயிரின் ஒளியே | என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு | கே ஜே ஏசுதாஸ் | இளையராஜா |
26 | பாரிஜாத பூவே | என் ராசாவின் மனசிலே | எஸ் என் சுரேந்தர் | இளையராஜா |
27 | திறக்காத காட்டுக்குள்ளே | என் சுவாசக் காற்றே | உன்னி கிருஷ்ணன் | ஏ ஆர் ரஹ்மான் |
28 | குயிலு குப்பம் குயிலு குப்பம் | என் உயிர்த் தோழன் | மலேசியா வாசுதேவன் | இளையராஜா |
29 | மதுர மரிக்கொழுந்து | எங்க ஊரு பாட்டுக்காரன் | மனோ | இளையராஜா |
30 | வாலாட்டும் ஊர்க் குருவி | என்னை விட்டுப் போகாதே | மனோ | இளையராஜா |
31 | சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி | என்னப் பெத்த ராசா | மனோ | இளையராஜா |
32 | ஒரு ஜீவன் அழைத்தது | கீதாஞ்சலி | இளையராஜா | இளையராஜா |
33 | துள்ளி எழுந்தது பாட்டு | கீதாஞ்சலி | இளையராஜா | இளையராஜா |
34 | காதல் கவிதைகள் | கோபுர வாசலிலே | எஸ் பி பாலசுப்ரமணியம் | இளையராஜா |
35 | நீ போகும் பாதையில் | கிராமத்து மின்னல் | மலேசியா வாசுதேவன் | இளையராஜா |
36 | வா வா வஞ்சி இளமானே | குரு சிஷ்யன் | எஸ் பி பாலசுப்ரமணியம் | இளையராஜா |
37 | ஒரு காதல் தேவதை | இதயதாமரை | எஸ் பி பாலசுப்ரமணியம் | சங்கர் கணேஷ் |
38 | ஒ...ப்ரியா ப்ரியா | இதயத்தை திருடாதே | மனோ | இளையராஜா |
39 | அம்மாடி இதுதான் காதலா | இது நம்ம ஆளு | எஸ் பி பாலசுப்ரமணியம் | கே பாக்யராஜ் |
40 | தொடத் தொட மலர்ந்ததென்ன | இந்திரா | எஸ் பி பாலசுப்ரமணியம் | ஏ ஆர் ரஹ்மான் |
41 | ஓ... பூமாலை | இனிய உறவு பூத்தது | மனோ | இளையராஜா |
42 | கம்பன் எங்கு போனான் | ஜாதி மல்லி | எஸ் பி பாலசுப்ரமணியம் | மரகதமணி |
43 | சோலை இளங்குயில் | காவலுக்கு கெட்டிக்காரன் | மனோ | இளையராஜா |
44 | தில்பரு ஜானே | கலைஞன் | மனோ | இளையராஜா |
45 | விழிகளில் கோடி அபிநயம் | கண்சிமிட்டும் நேரம் | எஸ் பி பாலசுப்ரமணியம் | வி எஸ் நரசிம்மன் |
46 | எங்கே என் கவிதை | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | ஸ்ரீநிவாஸ் | ஏ ஆர் ரஹ்மான் |
47 | கனவே கலையாதே | கண்ணெதிரே தோன்றினாள் | உன்னி கிருஷ்ணன் | தேவா |
48 | இந்த மான் உந்தன் சொந்த மான் | கரகாட்டக்காரன் | இளையராஜா | இளையராஜா |
49 | குடகு மலை காற்றில் வரும் | கரகாட்டக்காரன் | மனோ | இளையராஜா |
Advertisement |
||||
50 | சிலுக்கு தாவணி காத்துல பறக்குது | கரிமேடு கருவாயன் | கிருஷ்ணசந்திரன் | இளையராஜா |
51 | பூங்காவியம் பேசும் ஓவியம் | கற்பூர முல்லை | கே ஜே ஏசுதாஸ் | இளையராஜா |
52 | தென்மேற்கு பருவக்காற்று | கருத்தம்மா | உன்னி கிருஷ்ணன் | ஏ ஆர் ரஹ்மான் |
53 | ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா | கட்டபொம்மன் | எஸ் பி பாலசுப்ரமணியம் | தேவா |
54 | தென்றல்தான் திங்கள்தான் | கேளடி கண்மணி | கே ஜே ஏசுதாஸ் | இளையராஜா |
55 | சேலை கட்டும் பெண்ணுக்கொரு ஆசை | கொடி பறக்குது | எஸ் பி பாலசுப்ரமணியம் | அம்சலேகா |
56 | ஓ... காதல் என்னை காதலிக்கவில்லை | கொடி பறக்குது | எஸ் பி பாலசுப்ரமணியம் | அம்சலேகா |
57 | கூடலூரு குண்டுமல்லி | கும்பக்கரை தங்கையா | மலேசியா வாசுதேவன் | இளையராஜா |
58 | தோடி ராகம் பாடவா | மாநகரக் காவல் | கே ஜே ஏசுதாஸ் | சந்திரபோஸ் |
59 | சங்கத் தமிழ் கவியே | மனதில் உறுதி வேண்டும் | கே ஜே ஏசுதாஸ் | இளையராஜா |
60 | கண்ணா வருவாயா | மனதில் உறுதி வேண்டும் | கே ஜே ஏசுதாஸ் | இளையராஜா |
61 | ஏதோ நடக்கிறது | மனிதன் | கே ஜே ஏசுதாஸ் | சந்திரபோஸ் |
62 | என் மேல் விழுந்த மழைத்துளியே | மே மாதம் | பி ஜெயசந்திரன் | ஏ ஆர் ரஹ்மான் |
63 | புது ரூட்டுலதான் | மீரா | கே ஜே ஏசுதாஸ் | இளையராஜா |
64 | ரம் பம் பம் ஆரம்பம் | மைக்கேல் மதன காமராஜன் | எஸ் பி பாலசுப்ரமணியம் | இளையராஜா |
65 | மானாமதுரை மாமரக் கிளையிலே | மின்சாரக் கனவு | ஸ்ரீனிவாஸ், உன்னிமேனன் | ஏ ஆர் ரஹ்மான் |
66 | கல்யாணத் தேன் நிலா | மௌனம் சம்மதம் | கே ஜே ஏசுதாஸ் | இளையராஜா |
67 | அந்த நிலாவத்தான | முதல் மரியாதை | இளையராஜா | இளையராஜா |
68 | குலுவாலிலே முத்து வந்தல்லோ | முத்து | உதித் நாராயண் | ஏ ஆர் ரஹ்மான் |
69 | யாரும் விiளாயாடும் தோட்டம் | நாடோடி தென்றல் | மனோ | இளையராஜா |
70 | நீ ஒரு காதல் சங்கீதம் | நாயகன் | மனோ | இளையராஜா |
71 | பூஜைக்கேத்த பூவிது | நீதானா அந்தக் குயில் | கங்கை அமரன் | இளையராஜா |
72 | ஏத்தமய்யா ஏத்தம் | நினைவே ஒரு சங்கீதம் | மலேசியா வாசுதேவன் | இளையராஜா |
73 | மலையோரம் மயிலே விளையாடும் குயிலே | ஒருவர் வாழும் ஆலயம் | மலேசியா வாசுதேவன் | இளையராஜா |
74 | சித்திரை மாதத்து நிலவு வருது | பாடு நிலாவே | மனோ | இளையராஜா |
75 | சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு | பாண்டிநாட்டு தங்கம் | மனோ | இளையராஜா |
76 | உன் மனசில பாட்டுதான் இருக்குது | பாண்டிநாட்டு தங்கம் | எஸ் பி பாலசுப்ரமணியம் | இளையராஜா |
77 | நீதான் என் தேசிய கீதம் | பார்த்தாலே பரவசம் | பல்ராம் | ஏ ஆர் ரஹ்மான் |
78 | திருடிய இதயத்தை திருப்பி | பார்வை ஒன்றே போதுமே | பரணி | பரணி |
79 | தென்பாண்டி தமிழே | பாசப் பறவைகள் | கே ஜே ஏசுதாஸ் | இளையராஜா |
80 | அன்பே நீ என்ன அந்;த கண்ணனோ | பாண்டியன் | மனோ | இளையராஜா |
81 | வெள்ளி கொலுசுமணி | பொங்கி வரும் காவேரி | அருண்மொழி | இளையராஜா |
82 | அடிச்சேன் காதல் பரிசு | பொன்மனச் செல்வன் | மனோ | இளையராஜா |
83 | காதல் ஊர்வலம் இங்கே | பூக்களைப் பறிக்காதீர்கள் | எஸ் பி பாலசுப்ரமணியம் | டி ராஜேந்தர் |
84 | பாராமல் பார்த்த நெஞ்சம் | பூந்தோட்ட காவல்காரன் | மனோ | இளையராஜா |
85 | இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன் | பூவரசன் | எஸ் பி பாலசுப்ரமணியம் | இளையராஜா |
86 | ஒரு கிளியின் தனிமையிலே | பூவிழி வாசலிலே | கே ஜே ஏசுதாஸ் | இளையராஜா |
87 | நேத்து ஒருத்தர ஒருத்தரு பார்த்தோம் | புதுப்பாட்டு | இளையராஜா | இளையராஜா |
88 | குருவாயூரப்பா குருவாயூரப்பா | புதுப் புது அர்த்தங்கள் | எஸ் பி பாலசுப்ரமணியம் | இளையராஜா |
89 | சிங்கலத்து சின்னக் குயிலே | புன்னகை மன்னன் | எஸ் பி பாலசுப்ரமணியம் | இளையராஜா |
90 | கம்மாக்கரை ஓரம் | ராசாவே உன்ன நம்பி | மலேசியா வாசுதேவன் | இளையராஜா |
91 | மழை வருது மழை வருது குடை கொண்டு வா | ராஜா கைய வச்சா | கே ஜே ஏசுதாஸ் | இளையராஜா |
92 | சித்தகத்தி பூக்களே | ராஜகுமாரன் | எஸ் பி பாலசுப்ரமணியம் | இளையராஜா |
93 | மீனம்மா மீனம்மா | ராஜாதி ராஜா | மனோ | இளையராஜா |
94 | உன் நெஞ்ச தொட்டு சொல்லு | ராஜாதி ராஜா | பி சுசிலா | இளையராஜா |
95 | முத்தமிழே முத்தமிழே முத்தச்சந்தம் ஒன்று | ராமன் அப்துல்லா | எஸ் பி பாலசுப்ரமணியம் | இளையராஜா |
96 | மாருகோ மாருகோ மாருகயி | சதி லீலாவதி | கமல்ஹாசன் | இளையராஜா |
97 | மகராஜனோடு ராணி வந்து சேரும் | சதி லீலாவதி | உன்னி கிருஷ்ணன் | இளையராஜா |
98 | செந்தூரப்பாண்டிக்கொரு ஜோடிக் கிளி | செந்தூரப்பாண்டி | எஸ் பி பாலசுப்ரமணியம் | தேவா |
99 | இதோ இதோ என் பல்லவி | சிகரம் | எஸ் பி பாலசுப்ரமணியம் | எஸ் பி பாலசுப்ரமணியம் |
100 | ஆலோலங் கிளி தோப்பிலே | சிறைச்சாலை | எஸ் பி பாலசுப்ரமணியம் | இளையராஜா |
101 | செம்பூவே பூவே உன் மேகம் நான் | சிறைச்சாலை | எஸ் பி பாலசுப்ரமணியம் | இளையராஜா |
102 | ஆனந்தம் பொங்கிட பொங்கிட | சிறைப் பறவை | கே ஜே ஏசுதாஸ் | இளையராஜா |
103 | அடி வான்மதி என் பார்வதி | சிவா | எஸ் பி பாலசுப்ரமணியம் | இளையராஜா |
104 | இரு விழியின் வழியே நீயா | சிவா | எஸ் பி பாலசுப்ரமணியம் | இளையராஜா |
105 | நீலக் குயிலே சோலைக் குயிலே | சூரசம்ஹாரம் | அருண்மொழி | இளையராஜா |
106 | நான் என்பது நீயல்லவோ | சூரசம்ஹாரம் | அருண்மொழி | இளையராஜா |
107 | விழாமலே இருக்க முடியுமா | ஸ்டூடன்ட் நம்பர் 1 | எஸ் பி பி சரண் | மரகதமணி |
108 | விழியில் புது கவிதை படிப்போம் | தீர்த்தக்கரையினிலே | மனோ | இளையராஜா |
109 | தென்றல் வரும் தெரு எது | தென்றல் வரும் தெரு | கே ஜே ஏசுதாஸ் | இளையராஜா |
110 | புத்தம் புது பூமி வேண்டும் | திருடா திருடா | எஸ் பி பாலசுப்ரமணியம் | ஏ ஆர் ரஹ்மான் |
111 | கள்ளத்தனமாக கன்னம் வைத்த | உள்ளே வெளியே | மனோ | இளையராஜா |
112 | காலாங்காத்தாலே ஒரு பாடம் கேட்பேனே | உள்ளம் கவர்ந்த கள்வன் | கே ஜே ஏசுதாஸ் | இளையராஜா |
113 | இதழில் கதை எழுதும் | உன்னால் முடியும் தம்பி | எஸ் பி பாலசுப்ரமணியம் | இளையராஜா |
114 | சொர்க்கத்தின் வாசற்படி | உன்னை சொல்லி குற்றமில்லை | கே ஜே ஏசுதாஸ் | இளையராஜா |
115 | மாளவிகா மாளவிகா மனம் பறித்தாய் | உன்னைத் தேடி | ஹரிஹரன் | தேவா |
116 | ஒரு மைனா மைனாகுருவி | உழைப்பாளி | மனோ | இளையராஜா |
117 | கண்களில் என்ன ஈரமோ | உழவன் | எஸ் பி பாலசுப்ரமணியம் | ஏ ஆர் ரஹ்மான் |
118 | நீ ஆண்டவனா தாய் தந்தைதான் | வானமே எல்லை | எஸ் பி பாலசுப்ரமணியம் | மரகதமணி |
119 | ஏ... ஓரு பூஞ்சோலை ஆளானதே | வாத்தியார் வீட்டு பிள்ளை | எஸ் பி பாலசுப்ரமணியம் | இளையராஜா |
120 | நீலக்குயிலே நீலக்குயிலே | வைகாசி பொறந்தாச்சு | எஸ் பி பாலசுப்ரமணியம் | தேவா |
121 | ஏ... அய்யாசாமி | வருஷம் 16 | எஸ் பி பாலசுப்ரமணியம் | இளையராஜா |
122 | ரவிவர்மன் எழுதாத கலையோ | வசந்தி | கே ஜே ஏசுதாஸ் | சந்திரபோஸ் |
123 | கண்ணுக்குள் நூறு நிலவா | வேதம் புதிது | எஸ் பி பாலசுப்ரமணியம் | தேவேந்திரன் |
124 | வா வா வா கண்ணா வா | வேலைக்காரன் | மனோ | இளையராஜா |
125 | பூங்காற்று உன் பேர் சொல்லும் | வெற்றிவிழா | எஸ் பி பாலசுப்ரமணியம் | இளையராஜா |
126 | ஆலப்போல் வேலப்போல் | எஜமான் | எஸ் பி பாலசுப்ரமணியம் | இளையராஜா |
சோலோ
"சின்னக் குயில்" சித்ரா தனிப்பாடல்கள்
S.No. | பாடல் | படம் | கவிஞர் | இசைஅமைப்பாளர் |
---|---|---|---|---|
1 | நின்னுக்கோரி வரனும் | அக்னி நட்சத்திரம் | வாலி | இளையராஜா |
2 | உன்னோடு வாழாத | அமர்க்களம் | வைரமுத்;து | பரத்வாஜ் |
3 | தத்தித்தோம் வித்தைகள் | அழகன் | கே பாலசந்தர் | மரகதமணி |
4 | கண்ணாளனே எனது கண்ணை | பம்பாய் | வைரமுத்து | ஏ ஆர் ரஹ்மான் |
5 | மழையின் துளியில் ஸ்வரம் | சின்னதம்பி பெரியதம்பி | கங்கை அமரன் | கங்கை அமரன் |
6 | ஒரு கடிதம் எழுதினேன் | தேவா | எஸ் ஏ சந்திரசேகர் | தேவா |
7 | வண்ண பூங்காவனம் | ஈரமான ரோஜாவே | முத்துலிங்கம் | இளையராஜா |
8 | ஆடியிலே சேதி சொல்லி | என் ஆசை மச்சான் | கங்கை அமரன் | தேவா |
9 | கருப்பு நிலா | என் ஆசை மச்சான் | வாலி | தேவா |
10 | ஏ.. சத்திரச் சிட்டுக்கள் | என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு | முத்துலிங்கம் | இளையராஜா |
11 | கத்திச் சண்டை போடாமலே | ஜல்லிக்கட்டு | கங்கை அமரன் | இளையராஜா |
12 | சொல்லத்தான் நினைக்கிறேன் | காதல் சுகமானது | விவேகா | லவ்டுடே சிவா |
13 | கற்பூர முல்லை ஒன்று | கற்பூர முல்லை | வாலி | இளையராஜா |
14 | வந்ததே ஓ குங்குமம் | கிழக்கு வாசல் | ஆர் வி உதயகுமார் | இளையராஜா |
15 | காற்றோடு குழலின் | கோடைமழை | புலமைபித்தன் | இளையராஜா |
16 | உல்லாச பூங்காற்று | கோலங்கள் | வாலி | இளையராஜா |
17 | நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா | மாவீரன் | வாலி | இளையராஜா |
18 | பூந்தென்றலே நீ பாடிவா | மனசுக்குள் மத்தாப்பூ | ராபர்ட் ராஜசேகர் | எஸ் ஏ ராஜ்;;;;குமார் |
19 | கண்ணின் மணியே கண்ணின் மணியே | மனதில் உறுதி வேண்டும் | வாலி | இளையராஜா |
Advertisement |
||||
20 | குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் | மெல்லத் திறந்தது கதவு | வாலி | எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா |
21 | ஒரு ராஜா வந்தானாம் | மௌனம் சம்மதம் | கங்கை அமரன் | இளையராஜா |
22 | குத்தம்மா நெலலு குத்;து | பாடு நிலாவே | வாலி | இளையராஜா |
23 | பூவே பூச்சூடவா | பூவே பூச்சூடவா | வைரமுத்து | இளையராஜா |
24 | சின்னக்குயில் பாடும் பாட்டு | பூவே பூச்சூடவா | வைரமுத்து | இளையராஜா |
25 | பட்டாச சுட்டு சுட்டு போடட்டுமா | பூவே பூச்சூடவா | வைரமுத்து | இளையராஜா |
26 | ஏலேலங் குயிலே அடி ஏலேலங் குயிலே | புது மனிதன் | பி வாசு | தேவா |
27 | சொந்தம் வந்தது வந்தது இந்த சுகமே | புதுப்பாட்டு | வாலி | இளையராஜா |
28 | ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் | புன்னகை மன்னன் | வைரமுத்து | இளையராஜா |
29 | வான் மேகம் பூப்பூவாய் தூவும் | புன்னகை மன்னன் | வைரமுத்து | இளையராஜா |
30 | ஒரு தாலிவரம் கேட்டு வந்தேன் | புருஷ லக்;ஷணம் | காளிதாசன் | தேவா |
31 | காலை நேர ராகமே | ராசாவே உன்ன நம்;;பி | கங்கை அமரன் | இளையராஜா |
32 | புதிதாய் கேட்கும் புத்தம்புது கீhத்தனம் | ராமன் அப்துல்லா | ரவிபாரதி | இளையராஜா |
33 | பாளையத்து பொண்ணு நான் சின்னையா | ராசுக்குட்டி | கே பாக்யராஜ் | இளையராஜா |
34 | ஜானகி தேவி ராமனைத் தேடி | சம்சாரம் அது மின்சாரம் | வைரமுத்து | சங்கர், கணேஷ் |
35 | உன்னைக் கண்ட பின்புதான் என்னை | சிகரம் | வைரமுத்து | எஸ் பி பாலசுப்ரமணியம் |
36 | பாடறியேன்; படிப்பறியேன் | சிந்துபைரவி | வைரமுத்து | இளையராஜா |
37 | நானொரு சிந்து காவடி சிந்து | சிந்துபைரவி | வைரமுத்து | இளையராஜா |
38 | தென்மதுரை சீமையிலே மீனாட்சி கோவிலிலே | தங்கமான ராசா | கங்கை அமரன் | இளையராஜா |
39 | கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே | தீர்த்தக்கரையினிலே | இளையராஜா | இளையராஜா |
40 | இன்னிசை பாடிவரும் | துள்ளாத மனமும் துள்ளும் | வைரமுத்து | எஸ் ஏ ராஜ்குமார் |
41 | சிறகில்லை நான் கிளியில்லை | வானமே எல்லை | வைரமுத்து | மரகதமணி |
42 | நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம் | வானமே எல்லை | வைரமுத்து | மரகதமணி |
43 | சந்தோஷம் காணாத நாளுண்டா | வசந்தி | வைரமுத்து | சந்திரபோஸ் |
44 | புத்தம் புது ஓலை வரும்; | வேதம் புதிது | வைரமுத்து | தேவேந்திரன் |
45 | காலம் இளவேனிற் காலம் | விடிஞ்சா கல்யாணம் | வாலி | இளையராஜா |
46 | ஒயிலா பாடும் பாட்டுல | சீவலப்பேரி பாண்டி | வைரமுத்து | ஆதித்யன் |
47 | என்ன கதை சொல்லச் சொன்னா | அண்ணாநகர் முதல் தெரு | புலமைபித்தன் | சந்;திரபோஸ் |
48 | ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே | ஆட்டோகிராஃப் | சேரன் | பரத்வாஜ் |
49 | ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுதான் | இதயத்தை திருடாதே | வாலி | இளையராஜா |
50 | தூளியிலே ஆடவந்த | சின்ன தம்பி | வாலி | இளையராஜா |