Advertisement

"தென்னக சார்லி சாப்ளின்" சந்திரபாபு

பயோகிராபி

Comedian Chandrababu

Advertisement

  • இயற்பெயர் - ஜோசப் பிச்சை பனிமயதாசன் பெர்னாண்டோ
  • சினிமா பெயர் - ஜே பி சந்திரபாபு
  • புனைப்பெயர் - தென்னக சார்லி சாப்ளின்
  • பிறப்பு - 05-ஆகஸ்ட்-1927
  • இறப்பு- 08-மார்ச்-1974
  • பிறந்த இடம் - தூத்துக்குடி - தமிழ்நாடு
  • படித்த பள்ளி - செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளி - கொழும்பு
  • பணி- நடிகர் - பின்னணிப் பாடகர் - இயக்குநர்
  • சினிமா அனுபவம் 1947 - 1972
  • துணைவி - ஷீலா (விவாகரத்து)
  • குழந்தைகள் - இல்லை
  • பெற்றோர் ஜோசப் ரோட்ரிக்ஸ் (தந்தை) - ரோஸலின் (தாய்)

போட்டோ

சந்திரபாபு அவர்களின் போட்டோ தொகுப்புகள்

Advertisement

Advertisement

சுவாரஸ்யங்கள்

ஜே பி சந்திரபாபு பற்றிய சுவாரஸ்ய குறிப்புகள்

Left Quote 1957 ஆம் ஆண்டு முதல் "சென்னை சினிமா ரசிகர்கள் சங்கம்" சார்பில் ஆண்டுதோறும் திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டு வந்தது. அதில் நகைச்சுவை நடிகருக்கான முதல் விருதைப் பெற்றவர் நடிகர் சந்திரபாபு. "மணமகன் தேவை" திரைப்படத்திற்காக. Right Quote

Left Quote பெர்ப்யூம் மீது அதிக காதல் கொண்டவர் நடிகர் சந்திரபாபு. அவருக்கு மிகவும் பிடித்த பெர்ப்யூம் சேனல் 5. Right Quote

Advertisement

தொலைபேசி வாயிலாக இவருக்கு அழைப்பு வந்தாலோ, அல்லது இவர் யாரையாவது தொலைபேசி மூலம் அழைத்தாலோ ஹலோ என்று தொடங்காமல் சந்த்ரபாபு என்று தனது பெயரை ஒரு ரசனையோடு கூறி உரையாடலைத் தொடங்குவது இவரது வழக்கம்.

"யார்ட்லிங்" எனும் மேலை நாட்டு பாடும் முறையை ஹிந்தியில், நடிகரும் பின்னணிப் பாடகருமான கிஷோர் குமார் அவ்வப்போது தனது பாடல்களில் பயன்படுத்தி வந்தார். தமிழ்ப் பாடல்களில் இந்த யார்ட்லிங் முறையைக் கொண்டு வந்த பெருமை நடிகர் சந்திரபாபுவையே சாரும்.

சந்திரபாபு கார் ஓட்டுவதில் கூட பிறரிடம் இருந்து வித்தியாசப்பட்டிருந்தார். தனது பியட் காரை அவ்வப்போது தனது முழங்கைகளாலே ஸ்டியரிங்கைப் பிடித்து, வளைத்து, திருப்பி ஓட்டுவது பார்ப்போரை பிரம்மிக்கச் செய்யும் வண்ணம் இருக்கும்.

யாரையும் சார் என்று அழைக்கும் வழக்கம் நடிகர் சந்திரபாபுவிடம் இருந்ததில்லை. அந்தஸ்தில் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவர்களது பெயர்களுக்கு முன்னால் மிஸ்டர், மிஸ், மிஸஸ் என சேர்த்து அழைப்பதே அவரது வழக்கமாக இருந்தது.

அந்தக் காலத்தில் கேசவப் பெருமாள்புரம் என்றிருந்த, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடு ஒன்று கட்டினார் நடிகர் சந்திரபாபு. இரண்டு மாடிகளைக் கொண்ட அந்த வீட்டின் தரைதளத்தில் இருந்து இரண்டாவது தளத்திற்கு காரிலேயே செல்லும்படி கட்டியிருந்தார்.

1958 ஆம் ஆண்டு நடிகர் சந்திரபாபுவிற்கு "நடிகமணி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. அப்போது அமைச்சராக இருந்த லூர்தம்மாள் சைமன் இப்பட்டத்தை அவருக்கு அளித்தார்.

நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை தமிழ் சினிமா உலகிற்கு கொண்டுவந்த பெருமை இவருக்குண்டு. தன்னைப் பார்த்து பிறர் அறிந்து கொள்ளும் வகையில் மேற்கத்திய பாணியில், புதிய நாகரீகத்தில் உடை அணிவது இவரது வழக்கம்.

ஷூட்டிங்கின் போது பச்சைக் கேரட் மற்றும் வெள்ளரித் துண்டுகளை தட்டில் வைத்து சாப்பிடும் வழக்கம் நடிகர் சந்திரபாபுவிடம் இருந்தது.

ஒரு நகைச்சுவை நடிகர் பாடிய சோகப் பாடல்கள் பெரிய அளவில் ரசிக்கப்பட்டது சந்திரபாபுவின் பாடல்கள் என்றால் அது மிகையல்ல.

என்னைப் புரிந்து கொண்டவர்கள், முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. ஏன், என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாக புரிந்து கொண்டதில்லை என்று தான் சொல்லுவேன். எனவே, மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னால் நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. அதேசமயம் சிரிப்பை அடக்குவதற்கும் கஷ்டமாக இருக்கிறது. என்று அடிக்கடி கூறுவார் நடிகர் சந்திரபாபு.

கே.பாலாஜி தயாரிப்பில் நடிகர் சிவாஜி கணேசன் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் "ராஜா". இப்படத்தில் நடிகர் சந்திரபாபு 3 வேடங்களில் நடித்திருப்பார்.

நடிகர் சந்திரபாபு நடிப்பில் கடைசியாக வந்த திரைப்படம் கே.பாலாஜி தயாரித்து, நடிகர் சிவாஜி கணேசன் நடித்த "நீதி". வெளியான ஆண்டு 1972

நடிகர் சந்திரபாபுவும், நடிகை மனோரமாவும் இணைந்து நடித்து முதல் படம் "போலீஸ்காரன் மகள்". படத்தை இயக்கியவர் இயக்குநர் ஸ்ரீதர்.

வரலாறு

Actor Chandrababu

Advertisement

கொழும்பு நகரில் தனது பள்ளிப் படிப்பை முடித்த நடிகர் சந்திரபாபு, தனது குடும்பத்தினருடன் 1943 ஆம் ஆண்டு இளைஞர் சந்திரபாபுவாக ஏராளமான சினிமா கனவுகளுடன் சென்னை நகரில் கால் பதித்தார். தனது தந்தையின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவரும், தினமணியில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தவருமான எழுத்தாளர் புதுமைபித்தனிடம் சென்றார் சந்திரபாபு. அவர் மூலமாக கலைவாணி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தில் நடிகராக சேர்ந்தார்.

 

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் இயல்புடைய சந்திரபாபு, ஏதோ ஒரு விஷயத்தில் தனது கருத்தை அழுத்தந் திருத்தமாக கூற, சந்திரபாபு யாரையும் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுடன் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. ஜெமினி ஸ்டூடியோ தான் அவரது கடைசி நம்பிக்கையாக இருந்தது.

 

அங்கேயும் தோல்வி காண, ஒரு நாள் ஸ்டூடியோ உள்ளேயே வாயில் நுரை தள்ளிய நிலையில் நடிகர் சந்திரபாபு சுருண்டு மயங்கி விழுந்திருந்தார். விஷம் அருந்தியிருந்த சந்திரபாபுவை ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமானார். சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காததால் விஷம் அருந்திய சந்திரபாபுவிற்கு, 1947 ஆம் ஆண்டு அம்பிகா பிலிம்ஸ் தயாரித்து, மணிக்கொடி எழுத்தாளர் பி எஸ் ராமையாவின் கதை, வசனம், இயக்கத்தில் தீபாவளி திருநாளில் வெளியான "தன அமராவதி" திரைப்படம் தான் தனது உயிரை விட்டாவது பெற நினைத்த அவரது முதல் பட வாய்ப்பு.

 

அதன் பிறகு இயக்குநர் பி ஆர் பந்துலுவின் தயாரிப்பு இயக்கத்தில் வெளி வந்த "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" என்ற முழுநீல நகைச்சுவைப் படத்தில் நடிக்கும் வாய்ப்போடு பின்னணிப் பாடும் வாய்ப்பும் கிடைத்து தனது சொந்தக் குரலில் "ஜாலி லைஃப் ஜாலி லைஃப்" என்ற பாடலையும் பாடியிருந்தார். இதன்பின் அன்றைய முன்னணி நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என அனைவரின் படங்களிலும் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.

 

இவரது நகைச்சுவை நடிப்பிற்காகவே படங்கள் ஓடிய காலமும் உண்டு. "தட்டுங்கள் திறக்கப்படும்" என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநர் அவதாரமும் எடுத்தார். இவ்வாறு பன்முகத் தன்மை வாய்ந்த ஒரு தலைசிறந்த கலைஞன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, அதோடு மதுவையும் அருந்தியதால் உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு , 1974 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாள் தனது 46 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

திரைப்படங்கள்

ஜே பி சந்திரபாபு நடிப்பில் வெளிவந்த தமிழ் படங்கள் :

1 தன அமராவதி - 1947

2 மோகன சுந்தரம் - 1951

3 சின்னதுரை - 1951

4 மூன்று பிள்ளைகள் - 1951

5 குசுமலதா (முதல் இலங்கைத் தமிழ்ப்படம்) - 1951

6 கண்கள் - 1953

7 அழகி - 1953

8 லக்ஷ்மி - 1953

9 வாழப்பிறந்தவள் - 1953

10 கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - 1954

11 சுகம் எங்கே - 1954

12 ரத்தக் கண்ணீர் - 1954

13 ராஜி என் கண்மணி - 1954

14 அந்தமான் கைதி - 1954

15 குலெபகாவலி - 1955

16 நல்லதங்காள் - 1955

17மாமன் மகள் - 1955

18 மிஸ் நிர்மலா - 1955

19 ஒன்றே குலம் - 1956

20 குலதெய்வம் - 1956

21 மர்மவீரன் - 1956

22 புதுமைப்பித்தன் - 1957

23 மகாதேவி - 1957

24 மணமகன் தேவை - 1957

25 புதையல் - 1957

26 மணமாலை - 1957

27 சமயசஞ்சீவி - 1957

Advertisement

28 பத்தினி தெய்வம் - 1957

29 காத்தவராயன் - 1958

30 சபாஷ் மீனா - 1958

31 நாடோடி மன்னன் - 1958

32 பதிபக்தி - 1958

33 நான் சொல்லும் ரகசியம் - 1959

34 பாண்டித் தேவன் - 1959

35 சகோதரி - 1959

36 மரகதம் - 1959

37 பொன்னு விளையும் பூமி - 1959

38 கவலை இல்லாத மனிதன் - 1960

39 பெற்ற மனம் - 1960

40 விடிவெள்ளி - 1960

41 ஸ்ரீவள்ளி - 1961

42 குமாரராஜா - 1961

43 அன்னை - 1962

44 பந்தபாசம் - 1962

45 போலீஸ்காரன் மகள் - 1962

46 பாதகாணிக்கை - 1962

47 செந்தாமரை - 1962

48 யாருக்குச் சொந்தம்? - 1963

49 கடவுளைக் கண்டேன் - 1963

50 ஆண்டவன் கட்டளை - 1964

51 தட்டுங்கள் திறக்கப்படும் - 1966

52 பறக்கும் பாவை - 1966

53 வாலிப விருந்து - 1967

54 நிமிர்ந்து நில் - 1968

55 அடிமைப் பெண் - 1969



பாடல்கள்

ஜே பி சந்திரபாபு பாடிய பாடல்கள் பாடல் முதல்வரி

S.No. பாடல் படம் இசையமைப்பாளர்
1 போடா ராஜா பொடி நடையாலே சின்னதுரை டி ஜி லிங்கப்பா
2 ஆளு கனம் ஆனா மூளை காலி கண்கள் எஸ் வி வெங்கட்ராமன் - ஜி ராமனாதன்
3 ஒன் டூ த்ரி அழகி பி ஆர் மணி
4 ஜாலி லைஃப் ஜாலி லைஃப் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி டி ஜி லிங்கப்பா
5 சந்தோஷம் வேணுமென்றால் சுகம் எங்கே? விஸ்வநாதன் ராமமூர்த்தி
6 ஐ லவ் யூ ஐ லவ் யூ ஆசையானேனே உன்மேலே அந்தமான் கைதி ஜி கோவிந்தராஜுலு நாயுடு
7 உல்லாசமாகவே உலகத்தில் வாழவே பெண் ஆர் சுதர்சனம்
8 அச்சு நிமிர்ந்த வண்டி குலேபகாவலி விஸ்வநாதன் ராமமூர்த்தி
9 கோவா மாம்பழமே மாமன் மகள் எஸ் வி வெங்கட்ராமன்
10 தில்லானா பாட்டுப் பாடி புதுமைப்பித்தன் ஜி ராமனாதன்
11 தந்தனா பாட்டுப் பாடணும் மகாதேவி விஸ்வநாதன் ராமமூர்த்தி
12 பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி மணமகன் தேவை ஜி ராமனாதன்
13 உனக்காக எல்லாம் உனக்காக புதையல் விஸ்வநாதன் ராமமூர்த்தி
14 ஹலோ மை டியர் ராமி புதையல் விஸ்வநாதன் ராமமூர்த்தி
15 பேப்பர் ஐயா பேப்பர் சமயசஞ்சீவி ஜி ராமனாதன்
16 ஆத்துக்குப் பாலம் அவசியம் பத்தினி தெய்வம் விஸ்வநாதன் ராமமூர்த்தி
17 தந்தானே தந்தானே காத்தவராயன் ஜி ராமனாதன்
18 ஜிகுஜிகு அட ஜிகு ஜிகு காத்தவராயன் ஜி ராமனாதன்
19 ஏறுங்கம்மா சும்மா ஏறுங்கம்மா சபாஷ் மீனா டி ஜி லிங்கப்பா
20 தடுக்காதே என்னை தடுக்காதே நாடோடி மன்னன் எஸ் எம் சுப்பையா நாயுடு
21 இந்த திண்ணைப் பேச்சு பதிபக்தி விஸ்வநாதன் ராமமூர்த்தி
22 ராக் அன்ட் ரோல் பதிபக்தி விஸ்வநாதன் ராமமூர்த்தி
23 விளையாடு ராஜா விளையாடு நான் சொல்லும் ரகசியம் ஜி ராமனாதன்
24 நீ ஆடினால் பாண்டித்தேவன் சி என் பாண்டுரங்கன்
25 சொல்லுறத சொல்லிப்புட்டேன் பாண்டித்தேவன் சி என் பாண்டுரங்கன்
Advertisement
26 நான் ஒரு முட்டாளுங்க சகோதரி ஆர் சுதர்சனம்
27 குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே மரகதம் எஸ் எம் சுப்பையா நாயுடு
28 பிறக்கும் போதும் அழுகின்றாய் கவலை இல்லாத மனிதன் விஸ்வநாதன் ராமமூர்த்தி
29 கவலை இல்லாத மனிதன் கவலை இல்லாத மனிதன் விஸ்வநாதன் ராமமூர்த்தி
30 மனதிற்குகந்த மயிலே பெற்றமனம் எஸ் ராஜேஸ்வரராவ்
31 பாடிப் பாடி பாடி வாடி வானம்பாடி பெற்றமனம் எஸ் ராஜேஸ்வரராவ்
32 ஐயோ மச்சான் மன்னாரு ஸ்ரீவள்ளி ஜி ராமனாதன்
33 ஒண்ணுமே புரியல உலகத்திலே குமாரராஜா டி ஆர் பாப்பா
34 என்னைப் பார்த்த கண்ணு குமாரராஜா டி ஆர் பாப்பா
35 மூடினாலும் திறந்தாலும் குமாரராஜா டி ஆர் பாப்பா
36 ஆண் ஒன்று பாட குமாரராஜா டி ஆர் பாப்பா
37 புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை அன்னை விஸ்வநாதன் ராமமூர்த்தி
38 எப்போ வச்சுக்கலாம் பந்தபாசம் விஸ்வநாதன் ராமமூர்த்தி
39 பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது போலீஸ்காரன் மகள் விஸ்வநாதன் ராமமூர்த்தி
40 தனியா தவிக்கிற வயசு பாதகாணிக்கை விஸ்வநாதன் ராமமூர்த்தி
41 தாங்காதம்மா தாங்காது செந்தாமரை விஸ்வநாதன் ராமமூர்த்தி
42 என்னைத் தெரியலையா யாருக்குச் சொந்தம்? கே வி மஹாதேவன்
43 ஓஹோ மேரி புல்புல் யாருக்குச் சொந்தம்? கே வி மஹாதேவன்
44 கொஞ்சம் தள்ளிக்ணும் கடவுளைக் கண்டேன் கே வி மஹாதேவன்
45 உங்கள் கைகள் உயரட்டும் கடவுளைக் கண்டேன் கே வி மஹாதேவன்
46 சிரிப்பு வருது சிரிப்பு வருது ஆண்டவன் கட்டளை விஸ்வநாதன் ராமமூர்த்தி
47 கண்மணி பாப்பா தட்டுங்கள் திறக்கப்படும் எம் எஸ் விஸ்வநாதன்
48 ஒன்னரைக் கண்ணு டோரியா வாலிப விருந்து ஆர் சுதர்சனம்
49 புடிச்சாலும் புடிச்சா நிமிர்ந்து நில் எம் எஸ் விஸ்வநாதன்
50 நம்பள் கி பியாரி மஜா பாதுகாப்பு எம் எஸ் விஸ்வநாதன்