கோயில் வளாகத்தில் முத்தம் கொடுப்பதா : 'ஆதிபுருஷ்' இயக்குனருக்கு எதிர்ப்பு | நகுல் நடிக்கும் புதிய படம் ‛நிற்க அதற்கு தக' | இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரூ.300 கோடி பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகும் சக்திமான்! | வெளியானது பாவனா 86வது படத்தின் பர்ஸ்ட் லுக்! | மீண்டும் தமிழில் நடிக்கும் ஈஷா ரெப்பா | அகத்தியரின் மருத்துவ ரகசியம் சொல்லும் ‛பெல்' | தமிழில் ஹீரோயின் ஆன மலையாள நடிகை | கனிமொழியுடன் லிங்குசாமி திடீர் சந்திப்பு | கேரளாவில் தியேட்டர்கள் ஸ்டிரைக் |
படம் : மகளிர் மட்டும்
வெளியான ஆண்டு : 1994
நடிகர்கள் : நாசர், ரேவதி, ஊர்வசி, ரோகிணி
இயக்கம் : சிங்கீதம் சீனிவாச ராவ்
தயாரிப்பு : ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
திரைப்படத்தை பொறுத்தவரையில், மாற்றான் தோட்டத்து மல்லிகை மீது, கமலுக்கு விருப்பம் உண்டு. அவ்வகையில், 9 டூ 5 என்ற ஹாலிவுட் படத்தை அடிப்படையாக வைத்து, கமல் தயாரித்த படம் தான், மகளிர் மட்டும். படத்தின் திரைக்கதை, வசனத்தை கமல்ஹாசனும், கிரேஸி மோகனும் இணைந்து எழுதினர்.
அலுவலகத்தில் இருக்கும், மீ டூ பிரச்னையை சமாளிக்க, மூன்று பெண்கள் இணைந்து போராடுவது தான், படத்தின் கதை.நடுத்தர வர்க்க பெண் ஜானகியாக, ஊர்வசி; ஏழைப் பெண் பாப்பம்மாவாக, ரோகிணி; கொஞ்சம் வசதியுள்ள சத்யாவாக, ரேவதி. இவர்கள் மூவருக்கும், அலுவலகத்தில் மேனேஜராக இருக்கும், ஜொள்ளு பார்ட்டி நாசரை எப்படி சமாளிக்கின்றனர் என்பதை, வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க சிரிக்க சொல்லியிருப்பர்.
தயாரிப்பாளர், எஸ்.தாணு இப்படத்தில், தமிழவன் என்ற கதாபாத்திரத்தில், நடித்திருப்பார். கமல், சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். இப்படத்தில், பிணமாக நடித்திருக்கும் நாகேஷ் இடம்பெறும், மூன்று நிமிடங்களும், தியேட்டரில் சிரிப்பலை எழுந்தது.
இப்படத்தில் தான், ஒளிப்பதிவாளர் திரு அறிமுகமானார். தமிழகத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுனரான, வசந்தகுமாரியையும், இப்படத்தில் காட்டியிருந்தனர். இளையராஜா இசையில், கறவை மாடு, மொத்து மொத்துனு... பாடல்கள் ரசிக்கச் செய்தன.
தமிழில் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்ற இப்படம், தெலுங்கு, மலையாள மொழிகளில், டப்பிங் செய்யப்பட்டு, வெளியானது. ஹிந்தியில், லேடீஸ் ஒன்லி எனும் பெயரில், ரீமேக் செய்யப்பட்டது; ஆனால், அப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.அநீதிக்கு எதிராக, மகளிர் மட்டும் போராடினர்!