விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் | கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா | ஹீரோயின் ஆன யு-டியூப் பிரபலம் | 'லியோ' படத்திற்கு இப்போதே முன்பதிவு ஆரம்பம் | ‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு | பதான் இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் - ஹிருத்திக் படத்தை புதுப்பிக்கும் புஷ்பா தயாரிப்பாளர்கள் |
படம் : வால்டர் வெற்றிவேல்
வெளியான ஆண்டு : 1993
நடிகர்கள் : சத்யராஜ், சுகன்யா, கவுண்டமணி, நாசர், ரஞ்சிதா
இயக்கம் : பி.வாசு
தயாரிப்பு : கமலம் மூவீஸ்
கடந்த, 1993ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பாலசந்தரின் ஜாதிமல்லி, பாரதிராஜாவின் கேப்டன் மகள், பாலு மகேந்திராவின் மறுபடியும், விஜயகாந்த் நடித்த கோயில் காளை, பிரபுவின் சின்ன மாப்ளே உட்பட, ஒன்பது படங்கள் வெளியாகின. ஆனால், ஏ, பி, சி என, அனைத்து சென்டர்களிலும், மெகா ஹிட் வெற்றியை பெற்றது பி.வாசு இயக்கத்தில் வெளியான, வால்டர் வெற்றிவேல்!
பி.வாசுவின், கமலம் மூவீஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் படம், இது. தியேட்டரில், 250 நாட்கள் ஓடி, பிளாக் பஸ்டர் படமானது. சத்யராஜின், மார்க்கெட் அளவை, பலமடங்கு உயர்த்தியது. இப்படத்தின் துவக்க விழாவை, பிரமாண்டமாக நடத்தினார் பி.வாசு. ரஜினி, கிளாப் அடிக்க, பிரபு, கேமராவை ஆன் செய்ய, விஜயகாந்த், முதல் காட்சியை இயக்கினார்.
பாலியல் குற்றங்கள் செய்யும் கும்பலைச் சேர்ந்தவர், ஐ.பி.எஸ்., அதிகாரியான சத்யராஜின் தம்பி. இவரை கண்ணால் கண்ட, ஒரே சாட்சி, நடனக் கலைஞரான சுகன்யா. இதனால் வில்லன்கள், சுகன்யாவை தாக்க, அவரின் பார்வை பறிபோகிறது. இந்நிலையில் சத்யராஜ், சுகன்யாவை திருமணம் செய்து கொள்வார்.இதற்கு இடையில், அரசியல்வாதி ராயப்பாவிற்கும், சத்யராஜுக்கும் முட்டல் ஏற்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு பின், சுகன்யாவிற்கு கண் பார்வை தெரிய, அவர், சத்யராஜின் தம்பியை, அடையாளம் காட்டுகிறார். சத்யராஜ், தன் தம்பியை சுட்டுக்கொள்கிறார்.
இளையராஜாவின் இசையில், சின்ன ராசாவே, மன்னவா மன்னவா... உட்பட அனைத்து பாடல்களும், ஹிட் அடித்தன. இப்படம், சிரஞ்சீவி நடிப்பில் எஸ்.பி.பரசுராம் என, தெலுங்கிலும்; கோவிந்தா என, ஹிந்தியிலும், தலவாயி என, கன்னடத்திலும், ரீமேக் செய்யப்பட்டது.
தங்கப்பதக்கம் பெற்றார், வால்டர் வெற்றிவேல்!