என்மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள்: விஜய் ஆண்டனி | அர்ஜுன் தாஸிற்கு பதிலாக ஆரவ் | உலகின் மிக அழகான பெண்ணுடன் நான் - அசோக் செல்வன் வெளியிட்ட பதிவு! | ராதே ஷ்யாம் இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | திடீரென்று ஹேர் ஸ்டைல் மாற்றிய எமி ஜாக்சன்! | திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில் | 'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் |
படம் : சிங்கார வேலன்
வெளியான ஆண்டு : 1992
நடிகர்கள் : கமல், குஷ்பு, மனோரமா, மனோ, ஜெய்சங்கர், கவுண்டமணி
இயக்கம் : ஆர்.வி.உதயகுமார்
தயாரிப்பு : பாவலர் கிரியேஷன்ஸ்
கிராமத்து படங்கள் இயக்கி வந்த, ஆர்.வி.உதயகுமாருக்கு, கமல் நடிப்பில், ஆக் ஷன் படம் இயக்க ஆசை. ஆனால், அவருக்கு கிடைத்தது, நகைச்சுவை படத்தை இயக்கும் வாய்ப்பு; இதிலும், வெற்றிக் கொடி நாட்டினார். அந்தப் படம் தான், சிங்கார வேலன்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர் தயாரிப்பில், இப்படம் உருவாகியது. தன் குடும்ப படம் என்பதால், பாடல்களிலும், பின்னணியிலும் அசத்தி இருந்தார், இளையராஜா. கதை, திரைக்கதையை, பஞ்சு அருணாசலம் எழுதினார். அப்துல் ரஹ்மான், ஒளிப்பதிவை மேற்கொண்டார்.
தன் தாயின் விருப்பத்திற்காக, சென்னையில் இருக்கும், தன் மாமா பெண்ணை, காதலித்து திருமணம் செய்ய நினைக்கிறார், கமல். சென்னையில் இருக்கும் மனோ, கவுண்டமணி, சார்லி, வடிவேலு ஆகியோர் உதவியுடன், தன் மாமா பெண் யார் என்பதை கண்டுபிடித்து, திட்டமிட்டு, காதல் வலையில் வீழ்த்துகிறார் என்பது தான், கதைக்களம்.
முழுநீள நகைச்சுவை படமான இதில், அட்டகாசமான பாடல்கள், காமெடி வசனங்களும் துாவி, பரிமாறியிருந்தார், இயக்குனர், ஆர்.வி.உதயகுமார். இதில், பாடகர் மனோ, கமலின் நண்பராக நடித்திருந்தார். கமலுடன், வடிவேலு இணைந்து நடித்த முதல் படம் இது தான். தாயம்மா கதாபாத்திரத்தில், மனோரமா ஜொலித்தார்.
இளையராஜாவின் இசையில், போட்டுவைத்த காதல், இன்னும் என்னை, ஓ ரங்கா ஸ்ரீரங்கா, புதுச்சேரி கச்சேரி, சொன்னபடி கேளு, துாது செல்வதாரடி... உள்ளிட்ட பாடல்கள், பெரும் வெற்றி பெற்றன. இப்படம், பாக்ஸ் ஆபிசில் வெற்றி பெற்றது. 2017ல், ரக்வாலா மொஹாபத் கா என, ஹிந்தியில், டப்பிங் செய்யப்பட்டது.