சினிமாவில் ஒவ்வொரு நாளும் போராட்டமே - ஐஸ்வர்ய லட்சுமி | ரூ.400 கோடி வட்டிக்கு வாங்கி எடுக்கப்பட்ட பாகுபலி : ராணா தகவல் | அடுத்த மாதம் ஜென்டில்மேன் 2 பட இசையை துவங்கும் கீரவாணி | ஆல்கஹால் தேவையில்லை.. டானிக்கே போதும் ; அதா ஷர்மாவின் அதிரடி | ஆந்திர முதல்வர் சுயசரிதையை படமாக்கும் ராம்கோபால் வர்மா | மகேஷ்பாபு படத்தில் மோகன்லாலை இணைக்க முயற்சி செய்யும் ராஜமவுலி | மலையாள பட விழாவில் விஜய் தேவரகொண்டா பட இயக்குனரை விமர்சித்த அல்லு அரவிந்த் | இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து மாறியிருக்கிறது - திரைப்பிரபலங்கள் இரங்கல் | வெற்றிகரமான 'வாரம்' இல்லை, வெற்றிகரமான 'நாட்கள்' மட்டுமே.. | ஆதிபுருஷ் படத்தின் புதிய டிரைலர் அப்டேட் |
படம் : புரியாத புதிர்
வெளியான ஆண்டு : 1990
நடிகர்கள் : ரகுமான், ரகுவரன், சரத்குமார், ரேகா, சித்தாரா
இயக்கம் : கே.எஸ். ரவிக்குமார்
தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ் புதிய பாதை அமைத்த, பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விக்ரமன், அழகான புது வசந்தம் கொடுத்தார். அவரிடம் பணியாற்றிய, கே.எஸ்.ரவிகுமார், திகிலான புரியாத புதிர் தந்தார்!
தயாரிப்பாளர்களின் இயக்குனர் என பெயரெடுத்தவர், கே.எஸ்.ரவிக்குமார். தன் முதல் படத்தை, 29 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில், 30 நாட்களில் முடித்துக் கொடுத்தார். படம், முதலுக்கு மோசத்தை தரவில்லை. இது, 1973ல் ஹிந்தியில் வெளியான, தன்ட் என்னும் திரைப்படத்தைத் தழுவி உருவாக்கப்பட்டது. ரேகா, தன் கணவரான ரகுவரனை, ஏன் கொன்றார்; அந்த ராத்திரியில், ஆனந்த்பாபு அங்கு ஏன் வந்தார்; சிறையில் இருந்து, ரகுமான் ஏன் தப்பி வந்தார்; அவர் சிறைக்குச் செல்ல என்ன காரணம் என்ற பல புரியாத புதிர்களுக்கெல்லாம், விடை கொடுத்திருந்தார், கே.எஸ்.ரவிகுமார்.
இப்படத்தில், மனைவியை கொடூரமாக, 'டார்ச்சர்' செய்யும், 'சைக்கோ' வேடத்தில் ரகுவரன் நடித்திருந்தார். அதுவரை, வில்லனுக்கு என, தமிழ் சினிமா வகுத்திருந்த இலக்கணத்தை, ரகுவரன் உடைத்தெறிந்தார். 'கோட் - சூட்' உடை, அழுத்தமான பேச்சு என, ரசிகர்களை மிரளச் செய்தார். 'ஐ நோ' என்ற ஒரே டயலாக்கை, பல்வேறு விதங்களில் கூறி, தியேட்டரை ஆர்ப்பரிக்கச் செய்தார்.
இப்படத்தில், எப்போதும் பதட்டத்துடனும், பயத்துடனும், குழப்பத்துடனும் நடித்திருக்கிற ரேகாவுக்குத் தான் முதலிடம். அற்புதமான நடிகையை, தமிழ் சினிமா முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என, எண்ணம் தோன்றுகிறது. இன்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த படம், அந்நாளில் வெற்றி பெறவில்லை. தமிழ் சினிமா உலகம், என்றும் புரியாத புதிர் நிறைந்தது!