Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

அந்த ரகசியத்தை சொன்னால் லோகேஷ் கொன்றே விடுவார் - மாளவிகா மோகனன்

05 ஆக, 2020 - 14:28 IST
எழுத்தின் அளவு:
That-is-secret,-if-i-tell-lokesh-will-kill-me-says-Malavika-Mohanan

மாஸ்டர் படத்தின் நாயகி மாளவிகா மோகனன் நேற்று(ஆக.,4) அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அதை முன்னிட்டு ரசிகர்களுடன் டுவிட்டரில் சாட் செய்தார். அப்போது ரசிகர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.

லாக்டவுண் எப்படி போனது?
“குடும்பத்தினருடன் இருக்கும் நேரத்தை மிகவும் விரும்புவேன். எனது குடும்பத்தாருடன் நெருக்கமாக இருப்பேன். இந்த லாக்டவுன் நேரம் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

உங்களுக்கு பிடித்த விஷயம்?
எனக்கு டிராவல் செய்வது பிடிக்கும். புதிய மனிதர்களைப் பார்ப்பது, புதிய இடங்கள், புதிய கலாச்சாரம். மார்ச் மாதம் ஜப்பானுக்குப் போக திட்டமிட்டிருந்தேன், ஆனால் லாக்டவுனால் அது நடக்கவில்லை.

விஜய் பற்றி?
எனது பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்துத் தெரிவித்தார். அவர் எப்போதுமே ஸ்வீட்டானவர். மிக மிக எளிமையான மனிதர், எளிதில் அணுகக்கூடியவர்.




தெலுங்கு சினிமாவில் நடிப்பீர்களா?
இன்னும் எந்தத் தெலுங்குப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. ஆனால், தெலுங்குப் படங்களில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.

கொரோனா பொழுது எப்படி போனது?
இந்த லாக்டவுனில் நண்பர்களுடன் லுடோ விளையாட்டைத்தான் அதிகம் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.

சினிமா பிடித்திருக்கிறதா?
ஒரு நடிகையாக இருப்பது மகிழ்ச்சி படப்பிடிப்புக்குப் போவது மகிழ்ச்சியானது. ஒவ்வொரு நாளும் வித்தியாசமானது, அற்புதமானது, ரிபீட் இல்லாத ஒன்று. புதிய மனிதர்ளுடன் பணியாற்றுவது, புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதும் நடக்கிறது. ஏற்றமும், இறக்கமும் இருக்கும். ஆனால், கண்டிப்பாக போர் அடிக்காது.

மாஸ்டரில் உங்கள் ரோல்?
மாஸ்டர் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் காலேஜ் பற்றியது. எனது பெயரின் முதல் எழுத்து சி. அதற்கு மேல் சொன்னால் இயக்குனர் லோகேஷ் என்னைக் கொன்றுவிடுவார்.

பேட்ட, மாஸ்டர் பட அனுபவம்?
எனது முதலிரண்டு தமிழ்ப் படங்களிலேயே இரண்டு ஐகான்களுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியானது. பேட்ட, மாஸ்டர் படங்களில் பணிபுரிந்த ஞாபகங்கள் மிகவும் அற்புதமானது.




பிடித்த இசையமைப்பாளர்?
நான் ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் தீவிரமான ரசிகை. சென்னை வரும் போதெல்லாம் எனது நண்பர்களிடமும், என்னுடன் பணியாற்றுபவர்களிடமும் அவருடன் ஒரு போட்டோ எடுக்க வேண்டும் எனக் கேட்பேன். ஆனால், அது இதுவரையிலும் நடைபெறாமலே உள்ளது.

பிடித்த இயக்குனர்?
இயக்குனர் வெற்றிமாறனின் பெரிய ரசிகை நான். அவர் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும்.

விஜய்யிடம் பிடித்தது?
“உங்கள் வெற்றியால் அவர்களை வீழ்த்துங்கள், உங்கள் சிரிப்பால் அவர்களை எரித்துவிடுங்கள்,” என்று விஜய் சார் சொன்ன மேற்கொள் எனக்கு ரொம்ப பிடித்தமான ஒன்று,” என ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

மாஸ்டர் படம் வெளிவந்த பிறகு தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாளவிகா வருவார் என எதிர்பார்ப்பு உள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
திருநங்கைகளுக்கு நான் முன்மாதிரியாக இருக்கணும் - 'தர்மதுரை' ஜீவா பேட்டிதிருநங்கைகளுக்கு நான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
07 ஆக, 2020 - 11:01 Report Abuse
RaajaRaja Cholan இவருடைய மூலதனம் என்ன என்பது இவருக்கு நன்றாக தெரிந்துள்ளது
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
06 ஆக, 2020 - 08:40 Report Abuse
Bala Murugan இப்படி உடம்பை காட்டினாள் தான் நடிகை என ஒத்துக்கொள்வார்களா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in