விஜய் - லோகேஷ் கனகராஜ் படத்திற்கு ‛லியோ' டைட்டில்: அக்.,19ல் ரிலீஸ் | ஓணம் கொண்டாட்டமாக வெளியாகிறது துல்கர் சல்மானின் 'கிங் ஆப் கோதா' | ஒரே நேரத்தில் இரண்டு மெகா இயக்குனர்களின் படங்களில் நடிக்கப் போகும் சூர்யா! | திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா! | விஜய் 67 படத்தில் நடிக்க 10 கோடி சம்பளம் வாங்கும் சஞ்சய் தத்! | சாகுந்தலம் படத்திற்காக 30 கிலோ எடை கொண்ட புடவை அணிந்து நடித்த சமந்தா! | சினிமாவை விட்டு விலகினாரா பாண்டிராஜ்?: விவசாயத்தில் தீவிரம் | நானாக பட்டம் போட்டுக் கொள்ள மாட்டேன்: ஆர்ஜே.பாலாஜி | தமிழில் உருவாகும் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் படம் | காளிகாம்பாள் கோவிலில் ஹன்சிகா வழிபாடு |
படம்: டிக் டிக் டிக்
வெளியான ஆண்டு: 1981
நடிகர்கள்: கமல், மாதவி, ராதா
இயக்கம்: பாரதிராஜா
தயாரிப்பு: ஆர்.சி.பிரகாஷ்
பழைய படங்களின் பெயர்களை, புதிய படங்களுக்கும் வைப்பதால், ஏகப்பட்ட தொல்லை. தமிழில் தலைப்புகளுக்காக பஞ்சம், திரைத்துறையினரே?கடந்த, 1981ல், கமல் நடிப்பில் வெளியான, வைரம் கடத்தல் தொடர்பான படம், டிக் டிக் டிக். இதே பெயரில், சமீபத்தில், ஜெயம் ரவி நடிப்பில், விண்வெளி தொடர்பான படம் வெளிவந்தது.
கமல் நடிப்பில் வெளியான, டிக் டிக் டிக் படம், சுவாரஸ்யமானது. கலைமணி எழுதிய கதைக்கு, திகிலும், பரபரப்பும் நிறைந்த திரைக்கதையை வடிவமைத்து, இயக்கியிருந்தார், பாரதிராஜா.
வெளிநாடுகளுக்கு, 'மாடலிங்' தொடர்பாக சென்று வரும் அழகிகள், மர்மமான முறையில் கொலை செய்யப்படுவர். அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை மற்றும் கொலைக்கான காரணங்களையும், புகைப்படக் கலைஞரான, கமல் கண்டறிவார். பெண்களின் உடல்களை, வைரங்கள் கடத்த பயன்படுத்துவது தெரிய வரும்.
இப்படத்தில் இருந்த பரபரப்புக்காகவே, தெலுங்கு மற்றும் ஹிந்தியில், இப்படம், 'ரீமேக்' செய்யப்பட்டது. டிக் டிக் டிக் படத்திற்கு, இளையராஜா இசையில், கண்ணதாசன், வைரமுத்து ஆகியோர் பாடல்கள் எழுதினர். 'நேற்று இந்த நேரம்...' பாடலை, லதா ரஜனிகாந்த் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 'இது ஒரு நிலா காலம், பூ மலர்ந்திட...' ஆகிய பாடல்கள், இன்றும் பலரின் விருப்ப பாடலாக உள்ளன.
இப்படத்தில், மூன்று கதாநாயகியர், நீச்சல் உடையில் தோன்றியது, அன்றைய காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இப்படத்துடன் வெளியான, அந்த ஏழு நாட்கள் பெரும் வெற்றி பெற்றது. டிக் டிக் டிக் படம், முதலுக்கு மோசமில்லை.இப்படத்தை, இப்போது ரீமேக் செய்யலாம். 1981ல் விட்டதை, 2020களில் பிடித்துவிடலாம்.