Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - ஜானி

01 ஜூன், 2020 - 10:00 IST
எழுத்தின் அளவு:
maraka-mudiyuma

வெளியான ஆண்டு: 1980

நடிகர்கள்: ரஜினிகாந்த், ஸ்ரீதேவி


இயக்கம்: மகேந்திரன்


தயாரிப்பு: கே.ஆர்.ஜி.ஆர்ட் பிலிம்ஸ்


தமிழ் சினிமாவில் முதன்முதலில், 'தீம் மீயூசிக்' இடம் பெற்ற படம், ஜானி!பில்லா படத்தில், ரஜினி இரட்டை வேடத்தில் நடித்திருந்தாலும், இருவரும் சேர்ந்திருக்கும் காட்சி, அப்படத்தில் இல்லை. ஒரே பிரேமில், இரு ரஜினி தோன்றிய முதல் படம், ஜானி.மகேந்திரன் இயக்கத்தில் வெளியான இப்படம், பெரும் வெற்றியை சுவைக்கவில்லை என்றாலும், அழகான படம் என்ற வகையில், மறக்க முடியாத தமிழ் சினிமாவில் ஒன்றாகியது.


ஜானி என்ற திருடன்; வித்யாசாகர் என்ற சவர தொழிலாளி எனும், இரட்டை வேடம் ரஜினிக்கு. இரு கதாபாத்திரத்தையும் விட, ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது, ஸ்ரீதேவியின், 'அர்ச்சனா' தான்! மவுனமும், கண்கள் பேசும் காதலும்... அட அட!இப்படத்தில், பியானோவிற்கும் முக்கிய இடம் உண்டு. 'என் வானிலே...' பாடலும், அந்த காட்சியும் அற்புதமாக இருக்கும். இளையராஜா இசையில், கண்ணதாசனும், கங்கை அமரனும் பாடல்கள் எழுதியிருந்தனர். ஒவ்வொன்றும் முத்துக்கள்!


திருடுவதில் வல்லவனான ஜானி, பிரபல பாடகி அர்ச்சனாவின் தீவிர ரசிகன். அர்ச்சனா, தன் காதலை தெரிவிக்க, அதற்கான தகுதி தனக்கு இல்லை எனக் கூறி, ஜானி வெளியேறுகிறான். மறுபுறம், கஞ்சனும், சவர தொழிலாளியுமான வித்யாசாகர், தன் வேலைக்காரியான பாமாவை விரும்புகிறான். அவள், வித்தியாசாகரை ஏமாற்றிவிட்டு, வேறு ஒரு பணக்காரனுடன் ஓட திட்டமிடுகிறாள். இதனால், வித்யாசாகர், அவளை கொன்று விடுகிறான். இந்தக் கொலைப் பழி, ஜானி மீது விழுகிறது. இந்த ஆள்மாறாட்ட கதையில், பரபரப்பு ஏதும் இல்லாமல், இயல்பாக கொடுத்திருந்தார், மகேந்திரன்.


'காற்றில் எந்தன் கீதம்...' பாடல் தான், கிளைமேக்ஸ். கொட்டும் மழையில், 1,000க்கும் மேற்பட்ட குடைகளின் கீழ், ரசிகர்கள் காத்திருக்க, ஸ்ரீதேவி பாடுவது போல, காட்சியை எடுக்க திட்டமிட்டிருந்தார், மகேந்திரன். ஆனால், தயாரிப்பாளர் ஒத்துழைக்காததால், தனியே பாடினார், ஸ்ரீதேவி. ரசனைக்காரன், இந்த ஜானி!ஜானி


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - பில்லாமறக்க முடியுமா? - பில்லா மறக்க முடியுமா? அந்த ஏழு நாட்கள் மறக்க முடியுமா? அந்த ஏழு நாட்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in