Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

சிம்புவுக்கு விரைவில் கல்யாணம் : விடிவி கணேஷ் பேட்டி

19 மே, 2020 - 13:40 IST
எழுத்தின் அளவு:
Actor-VTV-Ganesh-about-Simbu-Wedding

சிம்பு உடன் பல படங்களில் நடித்தவர் அவரது நண்பரான நடிகர் விடிவி கணேஷ். கொரோனா ஊரடங்கு சமயத்தில் கூட இருவரும் சந்தித்து கொண்டனர். சமீபத்தில் சிம்பு சமையல் செய்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் நடிகர் கணேஷும் உடன் இருந்தார். சிம்பு பற்றி இவர் நமக்கு அளித்த பேட்டி...

* சிம்பு சமீபத்தில் வெளியிட்ட சமையல் வீடியோவில் நீங்களும் இருக்கிறீர்களே
ஓ அதுவா கொஞ்ச நாளைக்கு முன்னாடி எடுத்தது.

* சிம்புவுக்கு எப்போது திருமணம்?
அவர் குடும்பத்திற்கு தகுந்த மாதிரி ஒரு நல்ல பொண்ணு கிடைச்சா கண்டிப்பா பண்ணுவாரு. என்ன பொருத்த வரைக்கும் ரொம்ப ஜாலியான நல்ல பையன். அவருக்கு ஒத்து போற மாதிரி ஒரு பொன்னு கிடைக்கனும்.

* சிம்புவின் அப்பா டி.ஆர்., நன்றாக ஜாதகம் பார்ப்பார். அப்படியிருந்தும் மகனின் திருமணத்தை பற்றி இன்னும் கணிக்காதது ஏன்?
எல்லாத்துக்குமே ஒரு அமைப்பு இருக்கு. சிம்புக்கு எப்போ கல்யாணம் ஆகணும்னு இருக்கோ அப்போ கண்டிப்பா நடக்கும. யாராவது நினைத்து பார்த்திருப்போமா நம்மள வீட்டிலேயே ஆணி அடிச்சு மாதிரி உட்கார வைப்பார்கள் என்று. இது மாதிரி தான் நாம நினைக்காததும் நடக்கும்.

* நீங்க எப்படி வீட்டிலேயே இருக்கீங்க?
ஐயோ அதை ஏன் கேக்குறீங்க, எனக்கு 50 நாள் என்பது 50 வருஷம் போற மாதிரி இருக்கு. நான் கொஞ்சம் கூடுதலா வாழ்ந்த மாதிரியே நினைச்சுட்டு இருக்கேன்

* விண்ணைத்தாண்டி வருவாயா 2 பற்றி சொல்லுங்க?
கவுதம் மேனன் ஏதோ பண்ணிட்டு இருக்காரு. இனிமே தான் அதை பற்றி விரிவாக பேசணும். என்னுடைய அடையாளம் அது. அதில் நாம இல்லாம எப்படி. காத்திருக்கிறேன்.

* சிம்பு சமைக்கிற வீடியோவில் ஒரு டிபன் பாக்ஸ் இருந்துச்சு, உண்மையாகவே சிம்பு சமைச்சாரா?

ஏன் உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் வருது , அவர் தான் சமைக்கிறார். வாட்ஸ் அப்ல ஒரு வீடியோ எனக்கு தினம் அனுப்பி விடுகிறார். இன்னைக்கு என்ன பண்ணேன் சொல்லிடவார். அவங்க வீட்டில கீழே ஒரு கிச்சன், மாடியில ஒரு கிச்சன் இருக்கு. கீழே அவர் தங்கி இருக்காரு. அவரு சமைச்சு மாடிக்கு அவங்க அப்பா அம்மாவுக்கு கொடுத்துவிடுவார். நம்ப முடியவில்லையா உங்களுக்கு. அவங்க அப்பா அம்மாவுக்கு சாப்பாடு கொடுத்து விடுறது அந்த டிபன் பாக்ஸ்ல தான்.

* சிம்பு என்ன விதவிதமாக சமைப்பார்?
சிக்கன், மீன் நல்லா சமைப்பார். விதவிதமான சட்டிகள் வச்சிருக்காரு. ஒரு ஒருபக்கம் வீடியோ பார்ப்பாரு, இன்னொரு பக்கம் அப்படியே சமைப்பார்.. வீட்டில் இப்ப விதவிதமா சமைச்சு அசத்துவார்

* வீட்டுக்குள்ளேயே ஓடி ஓடி ஒரு வீடியோ அனுப்பினாரே அதைப்பற்றி?
இன்னிக்கு என்னங்க உங்க கிட்ட நான் மாட்டிக்கிட்டேன். அவர் வீட்டுக்குள்ளிருந்து, வெளியில எங்கேயும் போய் ஜிம்மில் உடற்பயிற்சி பண்ண முடியாது. வீட்டுக்குள்ளேயே காலையில ரெண்டு ரவுண்டு, மதியம் ரெண்டு ரவுண்டு ஓடுறாரு. கிட்டத்தட்ட வீட்டை சுத்தி வந்தா ரெண்டு அஞ்சு கிலோ மீட்டர் தூரம் கவர் ஆகுதுன்னு சொல்றாங்க, அந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்றார்.. எந்த அளவுக்கு சாப்பிடுகிறாரோ அந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்வார். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். நல்லா சாப்பிடுவது, ஓடுவது, உடற்பயிற்சி செய்வது, நல்லா தூங்குறாரு போதுமா.

* நீங்கள் நடிக்கும் படங்கள் பற்றி?
மிர்ச்சி சிவா உடன் சுமோ என்ற படத்தில் நடித்துள்ளேன். ஜப்பானில் படப்பிடிப்பு நடந்தது. ரிலீஸிற்கு தயாராக உள்ளது. மலையாளத்தில் ஒரு படத்தில் நடிச்சிட்டு இருக்கேன் அப்புறம் நடிகர் ஜீவா கூட ஒரு படம் நடிக்கிறேன்

* ஏன் நிறைய படங்கள் நடிக்கல?
50 படங்களில் எல்லாம் நடிக்கணும் ஆசை இல்லை. நல்ல கதை, நல்ல டைரக்டர் அமைந்தால் போதும். எனக்கு புது இயக்குனராக இருந்தாலும் சரி பழைய இயக்குனராக இருந்தாலும் சரி நல்ல கதை முதலில் அமையனும். அப்படி பார்த்து பார்த்து தான் நான் ஒரு சில படங்களில் நடிக்கிறேன். எல்லா படமுமே வாரி போட்டுக் கொள்வது இல்லை.

* கொரோனா ஊரடங்கில் வீட்டில் ஆண்கள் மனைவிக்கு உதவியாக இருக்குறாங்க, உங்க வீட்டில் எப்படி?
நான் பேசாமல் அமைதியாக இருந்தாலே வீட்ல இருக்கவங்களுக்கு சந்தோஷமாக உள்ளது. நமக்கு எல்லா விஷயமும் தெரியும், ஆனால் நம்மளால சும்மாவே இருக்க முடியாது. சமையல் நான் நல்லா செய்வேன், எனக்கு ஒரு நிமிஷமும் சந்தோசமா கடத்தனும்னு நினைப்பேன். அப்படி இருக்க ஒரு ஆள கூண்டுல போட்டு அடைச்சு வெச்ச மாதிரி அடைச்சு வெச்சா அப்படியே முடங்கிப் போறேன். இதுக்கு சுந்தர் சி கிட்ட கேட்டேன் எப்படி தலைவா நீங்க இந்த மாதிரி நாட்களை கடத்துறிங்கனு, அவரு சொன்னாரு டைம்டேபிள் ஒன்னு போட்டுக்கோ அதுபடி செய், அது ரொம்ப ஈசியா இருக்கும்னு சொன்னார். அதனால நானும் ஒரு டைம் டேபிள் போட்டு எத்தனை மணிக்கு இது பண்ணனும் பாலோ பண்னேன். முதல் ஒரு வாரம் கடுப்பா இருந்தது.. இப்ப கொஞ்சம் பழகி போயிடுச்சு. வாக்கிங் இருந்து எல்லாம் முறைப்படி செஞ்சிடுவேன் ஒருநாள் மிஸ் ஆனாலும் ரொம்ப மனசு வருத்தமா இருக்கு. கொரணா சில நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கு, மாசு இல்லை, ஊர் முழுக்க அமைதியா சும்மா கும்முனு இருக்கு.

* டாஸ்மாக் கடை திறந்தது பற்றி உங்கள் கருத்து?
கொரோனா எப்படி நம் வாழ்க்கையில் ஒரு முக்கியமானது ஆயிடுச்சோ, அது கூட வாழ பழகிவிட்டோமோ, அதேமாதிரி சரக்கை அப்படியே திறந்து விட்டுவிட வேண்டியதுதான். அதை கண்ட்ரோல் பண்ண பண்ண இன்னும் அது மேல வெறி அதிகமாக ஆகும். அப்புறம் மொத்தமா குடிக்க ஆரம்பிச்சுடுவாங்க. நானும் குடிக்கிறவன் தான், ஆனா கொஞ்சம் அளவா குடிப்பேன். பழக்கப்பட்ட குடிகாரன் சத்தமில்லாமல் குடிச்சிட்டு போயிட்டே இருக்க போறான். அத போயி நம்ம ஆளுங்க தான் அதை மிகைப்படுத்தி ஐயோ குடிகாரன் குடிகாரன் சொல்றாங்க.

* உங்க குரல் வளம் பிறவியிலேயே இப்படித்தானா?
இது பிறவியிலே வந்த வாய்ஸ். எந்த மாற்றமும் இல்லை

* சரி கடைசியாக இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. சிம்பு உடன் உங்களுக்கு நல்ல நட்பு இருக்கு ஏன் நீங்க அவருக்கு ஒரு பொண்ணு பார்க்க கூடாது?
பசங்க கூட சுலபமாக நான் பழகிவிடுவேன். பொண்ணுங்க அப்படியில்லை. இந்த வருஷம் சிம்புவுக்கு கல்யாணம் பண்ணனும் என்று அவரோட அப்பா, அம்மா தீவிரமாக பொண்ணு பார்க்கும் முயற்சியை செய்து வருகிறார்கள். அவருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இந்த வருஷமே பொண்ணு அமைந்து திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கு. உங்களை மாதிரி நானும் காத்திருக்கிறேன்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
விரைவில் இதுவும் கடந்து போகும் : சுபிக்ஷாவிரைவில் இதுவும் கடந்து போகும் : ... திருநங்கைகளுக்கு நான் முன்மாதிரியாக இருக்கணும் - 'தர்மதுரை' ஜீவா பேட்டி திருநங்கைகளுக்கு நான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

GNANAM - THENI,பூடான்
20 மே, 2020 - 10:48 Report Abuse
GNANAM INDIAYA VUKU PAYANULLA NEWS
Rate this:
20 மே, 2020 - 08:53 Report Abuse
K. R. RAMAKRISHNAN இவரின் நண்பர்கள் எல்லாம் பேரன் பேத்திகளுடன் வருவார்கள்
Rate this:
Balasubramanian - Bangalore,இந்தியா
20 மே, 2020 - 08:30 Report Abuse
Balasubramanian எல்லாம் சரி அவருக்கு முதல் கல்யாணமா? அறுபதாம் கல்யாணமா? அல்லது இரண்டும் ஒரே நேரத்திலா? அதை சொல்லவில்லையே
Rate this:
20 மே, 2020 - 06:39 Report Abuse
chandran, pudhucherry உண்மையில் இவனை கல்யாணம் பண்ண போற பெண் பல ஜென்மத்தில் பாவம் செய்தவளாகத்தான் இருக்கனும்.
Rate this:
19 மே, 2020 - 18:33 Report Abuse
tata sumo pavam andha ponnu
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in