டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார் : அமெரிக்காவில் ஒரு மாதம் ஓய்வு | சமந்தாவின் இன்ஸ்டா முடக்கப்பட்டதா? | வெந்து தணிந்தது காடு - இசை விழா ஆகஸ்ட்டில் நடைபெறுகிறது | பொன்னியின் செல்வன் - நந்தினியாக ஐஸ்வர்யா ராய் | 'தி கிரேமேன்' - பட புரொமோஷனுக்காக ஹாலிவுட் பறந்த தனுஷ் | விஜய்யின் வாரிசு - பிரெஞ்சு படத்தின் தழுவலா? | பார்த்திபனை ஆச்சரியப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | உலக அளவில் சாதனை படைத்த 'கேஜிஎப்' போஜ்புரி | ஜவான் - ஷாருக்கானுக்கும் வில்லன் விஜய் சேதுபதி? | ஷங்கரின் படத்தில் நடனத்திற்கு 1000 பேர், சண்டைக்கு 1200 பேர் |
படம்: அவள் அப்படித்தான்
வெளியான ஆண்டு: 1978
நடிகர்கள்: கமல், ரஜினி, ஸ்ரீபிரியா, சிவச்சந்திரன்
இயக்கம்: சி.ருத்ரய்யா
தயாரிப்பு: ராகமஞ்சரி
'தமிழில், இப்படியான படம் வந்தது, ஆச்சரியம்' என, பிரபல இயக்குனர், மிருணாள் சென் பாராட்டியிருந்தார். பாரதிராஜா, 'எந்த மாதிரியான வேட்கையுடன், நான் சினிமாவுக்கு வந்தேனோ, அதைத் திரும்பிப் பார்க்க வைத்தது, இப்படம்' என்றார். கமல், 'தமிழ் சினிமாவின் அடித்தளத்தையே உலுக்கிய, அந்த படத்திற்காக, இந்த உலகம், இயக்குனர் ருத்ரைய்யாவை என்றும் நினைவுகூரும்' என்றார்.
ஆம்... தமிழ் சினிமாவிற்கு, புத்துயிர் பாய்ச்ச வந்த படம், அவள் அப்படித்தான். ஆனால், மசாலா படங்களில் ஊறிப்போன தமிழ் ரசிகர்கள், அன்று, அப்படத்தை புறக்கணித்தது, வரலாற்று பிழை. இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றிருந்தால், தமிழ் சினிமாவின் போக்கு திசைமாறியிருக்கும்.
தமிழில், கடைசியாக வெளியான, கறுப்பு - வெள்ளைப் படங்களில், இது ஒன்றாகும். கே.ராஜேஷ்வர், வண்ணநிலவன் ஆகியோருடன் இணைந்து, திரைக்கதையை எழுதியிருந்தார், இயக்குனர் ருத்ரய்யா. படத்தின் கதையைப் பற்றி, கூற விரும்பவில்லை. இப்போதாவது பாருங்கள்... இந்த தரமான படத்தை, நாம் ஏன் கொண்டாடாமல், புழுதியில் வீசினோம் என்ற கேள்வி,உங்களுக்குள் எழும்.
தமிழக அரசின் சார்பில், சிறந்த திரைப்படத்திற்கான இரண்டாம் பரிசு பெற்றது. ஒளிப்பதிவு திரைப்படக் கல்லூரியில் படித்த, நல்லுசாமி மற்றும் ஞானராஜசேகரன் ஆகியோர், யாரிடமும் பணி புரியாமல், நேரடியாக இப்படத்தில் களமிறங்கினர்; சிறந்த ஒளிப்பதிவாளர் விருது பெற்றனர். சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசு, ஸ்ரீபிரியாவிற்கு கிடைத்தது.
வணிக ரீதியாக தோல்வி அடைந்தாலும், விமர்சகர்களிடம் பெரும் பாராட்டு பெற்ற படம், அவள் அப்படித்தான். இளையராஜா இசையில், 'உறவுகள் தொடர்கதை...' உள்ளிட்ட பாடல்கள், இன்றும் நம் செவியோரங்களில் ரீங்காரமிடுகின்றன.அவள் அப்படித்தான் படம், சந்தையில் விற்பனை ஆகாமல் போன, நல்லதொரு வீணை!