பிரசாத் ஸ்டுடியோவால் மன உளைச்சல் : விருதுகளை திருப்பி தர இளையராஜா முடிவு | மீனா விடுத்த சவால் | தனுஷ் படத்தில் உஷாரான கார்த்திக் நரேன் | குஷ்பு வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட விஜய் சேதுபதி | 'மாஸ்டர்' - ஹிந்தியில் படுதோல்வியா ? | கமல் துவக்கி வைத்த 'கேங்ஸ்டர் 21' | தெலுங்கில் வெளியான நெடுநல்வாடை | ரசிகரின் வீடுதேடி சென்று சந்தித்த ரக்சிதா | ஜல்லிகட்டு வீரர்களுக்கு தங்க காசு: ராகவா லாரன்ஸ் அறிவிப்பு | ஷங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண், ராம் சரண்? |
சிம்பு உடன் நெருக்கமாக பேசப்பட்ட சுபிக்ஷா நடித்த, மூன்று படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. அவருடன் பேசியதிலிருந்து:
கொரோனா குறித்து உங்கள் அனுபவம்?
வெளியே போகவே பயமாக இருக்கிறது. விரைவில் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்த்துள்ளேன். இந்த நேரத்தில் சுய கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஒவ்வொருவருக்கும் அவசியம்.
புதிதாக நீங்கள் கற்றுக் கொண்டது என்ன?
வீட்டில் செய்யக்கூடிய வேலைகள் அனைத்தையும் கற்றுக் கொண்டேன். ஓரளவு சமையல் செய்ய கற்றுக் கொண்டேன். நானே, போட்டோ ஷூட் எடுக்க கற்றுக் கொண்டேன். சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தேன்.
கூகுளில் உங்களை தேடினால், சிம்பு உடன் உள்ள படமும் வருகிறதே அதைப்பற்றி...?
பிறந்த நாள் விருந்து ஒன்றில் சிம்பு உடன் எடுத்த அந்த படம், சமூக வலைதளங்களில் அதிகம் பரவியது தான், இதற்கு காரணம்.
சிம்புவை பற்றி ஒரு ப்ளஸ், ஒரு மைனஸ் கூறுங்கள்?
சிம்பு பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். மனதுக்குள் இருப்பதை வெளிப்படையாக, நேரடியாக கூறிவிடுவார். எதையும் பின்னாடி பேசமாட்டார். இது அவரது ப்ளஸ். ஆனால், அனைவரும் நல்லவர்கள் கிடையாது அல்லவா... அதனால் அத்தகையவர்களிடம் அவரது ப்ளஸ்ஸே, மைனசும் ஆகிவிடுகிறது.
தற்போது எந்தெந்த படங்களில் நடித்துள்ளீர்கள்?
யார் இவர்கள், வேட்டைநாய், கண்ணை நம்பாதே, கன்னித்தீவு படங்களில் நடித்துள்ளேன். இதில் யார் இவர்கள், வேட்டைநாய் படங்கள் முடிந்து விட்டன.
மற்ற மொழிப்படங்களில் நடிக்க ஆர்வம் உண்டா?
தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளேன். ஊரடங்கு முடிந்ததும் அறிவிப்பு வெளியாகும்.
ஊரடங்கில் கற்றுக் கொண்ட பாடம் என்ன?
தினமும் ஒவ்வொரு பெண்களும், வீட்டில் சமைக்கும் போது எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கின்றனர் என, இப்போது தான் புரிந்தது. இப்போது நானே முழு சமையலும் செய்ய கற்றுக் கொண்டேன். நம் சுற்றுப்புறத்தை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அறிந்தேன்.
திருமணத்திற்கு தயாராகிவிட்டீர்கள்... அப்படித் தானே?
நீங்க வேற... அதெற்கெல்லாம் இன்னும் காலம் இருக்கிறது. வெளியே தனியாக இருக்கும் போது, நமக்கு இதுபோன்ற விஷயங்கள் தெரிந்து இருக்க வேண்டும் அல்லவா; அதற்காக கற்றுக் கொண்டேன்.
ஊரடங்கில் நீங்கள் இழந்தது?
கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். அதை இந்த காலத்தில் இழந்தேன். அதே போல் ஜிம். இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்தமானவை.
கொரோனாவை முற்றிலும் ஒழிக்க நீங்கள் தரும் அறிவுரை?
மக்கள் கையில் தான் இருக்கிறது. கட்டுப்பாட்டுடன் கூடிய சுயபாதுகாப்பு இருந்தால் கொரோனாவை ஒழிக்கலாம். விரைவில் இதுவும் கடந்து போகும்.